மாதக் கூலிக்கு மார்க்கப் பணி செய்வது சரியா?
K. சர்புத்தீன்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும், அருள்வளமும் உண்டாகட்டும்.
இஸ்லாமிய சமூகம் பல்வேறான கூட்டங்களாக மக்கள் பிரிந்து கிடக்கிறார்கள்.
எந்த கூட்டமானாலும் சரி பெரும்பாலும் தலைமையில் இருப்பவர்கள் செல்வத்தில் பொருளாதாரத்தில் செழிப்பவர்களாகவும், இவர்களுக்கு கீழ் கட்டுப்பாட்டில் இமாமத், தஃவா செய்வோர் பெரும்பாலும் ஏழைகளாக இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.
இஸ்லாமிய சமூகத்தில் ஊதியத்திற்கு இமாமத், அழைப்பு பணி செய்யக்கூடிய பலர் வறுமையில் இருப்பதையும் பொருளாதார தன்னிறைவற்றவர்களாக இருப்பதையும் நாம் காண்கிறோம்.
இவர்களில் பெரும்பாலானோர் இந்த நிலையை அடைந்ததற்கு காரணம் இமாமத், அழைப்புப் பணிக்கு மாதச் சம்பளம் வாங்கியதே காரணம்.
தங்கள் குடும்பங்களை நடத்துவதற்குரிய போதிய வருமானங்களை இவர்கள் பெறுகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
கொஞ்சம் அதிகமாக சம்பளம் கேட்டால் உடனே நீங்கள் அல்லாஹ்விற்காக இந்த பணி செய்கிறீர்களா அல்லது ஊதியத்திற்காக செய்கிறீர்களா? என ஜாடை மாடையாக கேட்டு வாயடைத்து விடக்கூடிய காட்சிகளை நாம் பார்க்கிறோம்.
இவர்களும் இல்லை இல்லை நாங்கள் அல்லாஹ்விற்காகத்தான் செய்கிறோம் என கூறி திருப்தியடைந்து கொள்கிறார்கள்.
உண்மையில் இவர்கள் திருப்தியடைந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் ஏமாற்றப் படவே செய்கிறார்கள் அல்லது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளவும் செய்கின்றனர்.
போதிய நேரம் இவர்களுக்கு கிடைத்த போதிலும் அந்த நேரத்தில் உழைக்காமல் நேர விரயம் செய்ததும் ஆகும்.
ஒரு மனிதன் சுய மரியாதை இழப்பதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இமாமத், தஃவா பணி செய்வோருக்கு சம்பளத்தை அதிகம் கொடுங்கள் என்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல.
உலகக் கூலியில்லாமல் மறுமைக் கூலிகளுக்காக மட்டுமே மார்க்கப்பணி செய்ய ஒவ்வொருவரையும் உருவாக்க வேண்டும் என்பது தான் கட்டுரையின் நோக்கமாகும்.
உலகத்தில் பெறக்கூடிய ஊதியங்களுக்காக (கூலிக்காக) குர்ஆன் மற்றும் நபி வழியை கற்றல், கற்பித்தல், இமாமத் செய்தல், பாங்கு சொல்லுதல், அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் அழைப்புப் பணி செய்தல் போன்றவை கூடாத செயலாகும்.
முஸ்லிம் சமுதாயத்தில் தோன்றிய பித்அத்களுக்கெல்லாம் மூலக்காரணம் மார்க்கப் பணிக்கு கூலி வாங்குதல் என்ற வழிகெட்ட சிந்தனைப் போக்கே ஆகும்.
சம்பளம் வாங்கிக் கொண்டு மார்க்கப் பணி செய்வதால் தான் ஒழுங்கான முறையில் சத்தியத்தை கூறுவதில் தடை ஏற்படுகிறது.
என்ன தடை?
தன்னுடைய கூலியில் தடை ஏற்பட்டுவிடும் என்ற நோக்கத்தில் கூலி வாங்கும் பலர் சத்தியத்தை பேசுவதற்கு அஞ்சுகின்றனர்.
கூலியாட்கள் மார்க்கத்தை உள்ளது உள்ளபடி சொன்னால் வருமானம் தடைபட்டு விடும் என்பதற்காக சத்திய இஸ்லாத்தை மார்க்கத்தை மறைக்கின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத மார்க்கப் பணிக்கு கூலி வாங்கும் செயல்முறை பித்அத் (புதுமை) ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் தொழுகை, இகாமத், பாங்கு, இமாமத், தஃவா, குர்ஆனை கற்றல், கற்பித்தல் போன்ற அனைத்தும் நடந்தேறியிருக்கின்றன. ஆனால் இமாமத் திற்காகவோ பாங்கு சொல்வதற்காகவோ தஃவா பணி செய்வதற்காகவோ நபி(ஸல்) அவர்கள் கூலி கொடுத்ததாகவோ அல்லது கூலி வாங்கிக் கொண்டு ஸஹாபாக்கள் மார்க்கப் பணி செய்ததற்காகவோ எவ்வித ஆதாரமும் இல்லை.
மார்க்கத்தை வைத்து பிழைக்கலாம் என்ற வழியை எங்கிருந்து எடுத்தீர்கள்?
அல்லாஹ்வின் சாபம், வானவர்களின் சாபம், இன்ன பிற மக்களின் சாபத்தை எல்லாம் பெற்றுத்தரும் அமல்களை எல்லாம் அழித்துவிடக்கூடிய ´ர்க், பித்அத்கள் அனைத்தும் உருவானதற்கு மூலகாரணமே கூலிக்கு மார்க்கப்பணி செய்யவேண்டும் என்ற இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தை உருவாக்கியதே ஆகும்.
கொடுக்கும் கூலிகளும், தீனிகளும் போதவில்லை என்பதற்காகத்தானே பலவாறாக சம்பாதிக்கும் வழிமுறைகளை ஆலிம் உலமாக்கள் என்ற போர்வையில் இருக்கும் கூலிகள் உண்டாக்கியிருக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது போன்று மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்தாமல் ஒவ்வொருவரும் மறுமையின் நன்மையை நாடி கூலி வாங்காமல் தஃவா செய்தல், குர்ஆனை கற்றல் கற்பித்தல், இமாமத் பணி செய்தல் போன்றவைகளை செய்தால் இவ்வளவு அனாச்சாரங்கள் உருவாகியிருக்குமா?
மார்க்கப் பணிக்கு கூலி வாங்குதல் கூடாது என்பதற்கான பல ஆதாரங்களை குர்ஆன், ஹதீதில் இருந்து நம்மால் அறிய முடிகிறது.
அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் தனது அழைப்புப் பணி (தஃவா)க்காக கூலி வாங்கியதில்லை மார்க்கத்தை வைத்து பிழைக்கவில்லை.
நூஹ் நபி பிரச்சாரம் செய்தபோது இந்த அழைப்புப் பணிக்காக நான் உங்களிடம் எந்த கூலியும் கேட்கவில்லை என்று கூறுகிறார்கள்.
ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்துவிட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை). ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்க வில்லை. எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன் (என்று கூறினார். (அல்குர்ஆன் 10:72)
அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற் காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத் துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந் தப் பொருளையும் கேட்கவில்லை; என்னு டைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்க ளிடம்) இல்லை; எனவே ஈமான் கொண்ட வர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பி னும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக் கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன். (அல்குர்ஆன் 11:29)
அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர் களிடம் கூறியபோது; “நீங்கள் (அல்லாஹ் வுக்கு) அஞ்சமாட்டீர்களா?’
நிச்சயமாக உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப்பெற்ற நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
இதற்காக, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை, நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடம் இருக்கிறது. (அல்குர்ஆன் 26:106-109)
நூஹ்(அலை) அவர்கள் தனது பிரச்சார பணியை செய்தபோது நான் இந்த பிரச் சாரப் பணியை செய்வது உலக ஆதாயத் திற்காகவோ கூலிக்காகவோ இல்லை. என் இறைவனிடத்திலே தான் எனக்கான கூலி இருக்கிறது என்று பறைசாற்றுகிறார்கள்.
ஆது சமூகத்தாரிடம் ஹுத்(அலை) அவர்கள் பிரச்சாரம் செய்தபோது இந்த பிரச்சாரத்திற்காக நான் உங்களிடத்தில் எந்த கூலியையும் கேட்கவில்லை என்று கூறுகிறார்கள்.
“ஆது‘ சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹுதை(நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்; என்னு டைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங் கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
“என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப் படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர் களா? (என்றும்) (அல்குர்ஆன் 11:50-51)
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹுத்: “நீங்கள் (இறைவனை) அஞ்சமாட்டீர்களா?’ என்று கூறியபோது:
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக் கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங் கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 26:124-127)
கூலிக்காக நீர் பிரச்சாரம் செய்பவரில்லை என யூசுஃப்(அலை) அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்.
இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலி யும் கேட்பதில்லை. இது அகிலத்தார் அனை வருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 12:104)
ஸமூத் கூட்டத்தாருக்கு அனுப்பப்பட்ட நபி ஸாலிஹ்(அலை) அவர்கள் இந்த அழைப் புப்பணிக்காக உங்களிடத்தில் நான் எந்த கூலி யும் கேட்கவில்லை என்று கூறுகிறார்கள்.
ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர் களைப் பொய்ப்பித்தனர்.
அவர்களிடம் அவர்களுடைய சகோதர் ஸாலிஹ்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட் டீர்களா?’ எனக் கூறியபோது.
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக் குரிய (இறை) தூதன் ஆவேன்.
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங் கள்; எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.’
மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 26:141-145)
லூத்(அலை) அவர்கள் தன் சமூகத்திடம் இந்த அழைப்புப் பணிக்காக எந்த கூலியும் உங்களிடத்தில் கேட்கவில்லை என்று கூறு கிறார்கள்.
லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர் களைப் பொய்ப்பித்தனர்.
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர் களா?’ என்று கூறியபோது,
“நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக் குரிய (இறை) தூதனாவேன்.
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 26:160-164)
ஷிஐப்(அலை) அவர்கள் தன் மக்களிடம் நான் கூலிக்காக இந்த சத்தியப் பிரச்சாரத்தை செய்பவன் இல்லை என்று பறைசாற்றுகிறார் கள். தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப்படுத்தினார்கள்.
ஷிஐப் அவர்களிடம்; “நீங்கள் (இறை வனுக்கு) அஞ்சமாட்டீர்களா?’ எனக் கூறிய போது;
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக் குரிய (இறை) தூதனாவேன்.
“ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது. (அல்குர்ஆன் 26:176-180)
குர்ஆனை பிரச்சாரம் செய்ததற்காக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூலி வாங்கிய தில்லை என அல்லாஹ் கூறுகிறான்.
இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சய மாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவை களும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேச மான (திக்ரை) குர்ஆனை அளித்தோம். எனி னும் அவர்கள் தங்களிடம் வந்த (திக்ரை) குர் ஆனை புறக்கணிக்கின்றனர்.
அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட் கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலா னது; இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்.
மேலும், நிச்சயமாக நீர் அவர்களை, ஸிராத் தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர். (அல்குர்ஆன் 23:71-73)
இன்னும் (நபியே!) நாம் உம்மை நன்மாரா யங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிகத்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.
“அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலி யையும் கேட்கவில்லை விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர்வழியை ஏற் படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர‘ என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் 25:56-57)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நான் கூலிக் காக பிரச்சாரம் செய்பவனில்லை என்று கூறு கிறார்கள்.
“நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு வியத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டி ரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித் துப் பாருங்கள்‘ என்று (நபியே!) நீர் கூறும்; உங் கள் நண்பருக்கு பைத்தியம் ஏதுவுமில்லை; உங் களுக்குக் கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல் லாமல் அவர் வேறில்லை‘.
கூறுவீராக; “நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை; அது உங்க ளுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை. அவன் எல்லாப் பொருட்கள்மீதும் சாட்சியாக இருக்கின்றான்‘.(அல்குர்ஆன் 34:46-47)
அல்லாஹ் அனுப்பிய எந்த நபிமார்களும் தங்களுடைய மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்தவில்லை.
(நபியே!) நம் தூதர்கள் ஓர் ஊர்வாசிகளி டம் வந்த (போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே(அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத் தினோம்; ஆகவே, “நிச்சயமாக நாங்கள் உங்களி டம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்‘ என்று அவர்கள் கூறினார்கள்.
(அதற்கு அம்மக்கள்) “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர் ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர் களேயன்றி வேறில்லை‘ என்று கூறினார்கள்.
(இதற்கு அவர்கள்) “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்‘ என்று கூறினார். (அல்குர்ஆன் 36:13-16)