முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியது ஏன்?

in 2023 டிசம்பர்

முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியது ஏன்?

(ATTITUDE, SKILL, KNOWLEDGE)

அய்யம்பேட்டை  நஜ்முதீன்

இறைவனின் முதல் திருவாக்கு; ஓதுவீராக!   அல்குர்ஆன் 96:1

எதை ஓதவேண்டும்? ஏன் ஓதவேண் டும்?  தெரிந்ததையா?  தெரியாததையா?

முதன்முதலில் அருளப்பட்ட குர்ஆன் வசனத்தில்நீர் ஓதுவீராகஎன்று அல்லாஹ் சொல்கிறான்;  அதாவது  நீர் படிப்பீராக!’  என்கிறான்.

பொதுவாக எதையயான்றையும் படிக்கவேண்டும் என்றால் ஏற்கனவே அவர் படித்தவராக இருந்திருக்க வேண்டும் அல்லது சொல்லி தருவதற்கு ஆசிரியர் இருக்க வேண்டும்.

முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் படிக்காதவர் என்பதால் ஓத (படிக்க) சொன்ன வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் எனக்கு படிக்க தெரியாது என்று சொன்னதாக ஹதீதில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. (அது உண்மையும் கூட)

படிக்க தெரியாதவருக்கு படித்தவர் யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும். இதுவே இயல்பு, அல்லது ஒரு ஆசிரியரைக் கொண்டு படிக்கத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

அதாவது நான் படிக்காதவன், (படிக்கவும் தெரியாது. எனவே என்ன செய்ய வேண்டும் என்பதாக நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீயில்(அலை) அவர்களிடம் (ஆலோசனை கேட்பது போல்) குர்ஆன் கூறுகிறது)

அப்போது ஜிப்ரீல்(அலை) சொல்கிறார்கள்; “உம்மை படைத்த இறைவன் பெயரால் ஓதுவீராக (படிப்பீராக)’ என்று.

இப்போது நபி(ஸல்) அவர்களுக்கு ஆசிரியராக அல்லாஹ் கிடைத்துவிட்டான். உலக ஆசிரியர்களையும், அல்லாஹ்வையும் ஒன்றாக கருதவேண்டாம். இவை உவமையாக சொல்லப்பட்டது. இப்போது அந்த (ஆசிரியர்) அல்லாஹ் என்ன சொல்கிறான். “உமக்குஎழுதுகோலைக் கொண்டு கற்றுத் தருவேன்  என்றும்.      அல்குர்ஆன் 96:4

நீ அறியாததை எல்லாம் கற்றுத் தருவேன் என்றும் அல்லாஹ் கூறுகிறான். (நபிக்கு  மட்டுமல்ல)   அல்குர்ஆன் 96:5

எதை படிக்க வேண்டும்? ஏன் படிக்க வேண்டும் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களை மட்டும் பார்த்து கூறவில்லை. உலக மனித சமுதாயம் முழுவதற்கும் சேர்த்து  கூறுகிறான்.  அது  என்ன?

தாலிக்கல் கித்தாப்இந்த குர்ஆனை படியுங்கள்  என்று  கூறுகிறான்.   அல்குர்ஆன் 2:2

அப்படியானால்  அதை  ஏன்  படிக்கவேண்டும்?

(ஃபாத்திஹா ஓதி பார்சல் அனுப்புவதற்கும்; பரக்கத்திற்காகவுமா; நிச்சயமாக இல்லை) அதற்கு அல்லாஹ்வே  மூன்று  பதிலையும்  சொல்கிறான்.

1. இது(குர்ஆன்) நேர்வழி காட்டும் என்கிறான்.

2. அதுமட்டுமல்லஇந்த குர்ஆனில் எந்த சந்தேகமும் இல்லைஎன்றும் கூறுகிறான்.

3. அடுத்து  இந்தகுர்ஆன்  யாருக்கு  வழிகாட்டும்  என்றும்  கூறுகிறான்.

அதாவது  அறிவுள்ளவர்களுக்கு (அஞ்சுவோருக்கு)  வழிகாட்டும்  என்கிறான். 

அப்போ  அறிவுள்ளவர்  என்ன  செய்யவேண்டும்?

இந்த குர்ஆனையும், இதற்கு முன்பு தூதர்களுக்கு இறைவாக்குகள் அருளப்பட்டது என்பதையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் கட்டளையான தொழுகையை நிலைநாட்ட வேண்டும், உங்களிடமுள்ள செல்வத்தை ஏழைகளுக்கும், நல்ல வழியிலும் செலவிட வேண்டும். அவர்களே அறிவுள்ளவர்கள் (அஞ்சுபவர்கள்) என்றும் அவர்கள் மட் டுமே வெற்றியும் பெறுவார்கள் என்று அல்லாஹ்  கூறுகிறான்.  அல்குர்ஆன் 2:1-5

அல்லாஹ்வே ஆசிரியராக இருந்து உலகில் சிறந்த மனிதர்களில் ஒருவராக உள்ள நபி(ஸல்) அவர்களை மாணவனாக தேர்ந்தெடுத்து அவர்களும் ஜிப்ரையில்(அலை) மூலம் சுமார் 23 ஆண்டுகள் சிறுக சிறுக அல்லாஹ் அருளியதை(கற்று தந்ததை) நபி(ஸல்) அவர்கள் கற்றார்கள், தான் கற்றதை எதையும், மறக்காமல், மறுக்காமல், மறைக்காமல் அப்படியே மனிதர்களுக்கு  கற்றுக்கொடுத்தார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க குர்ஆனை (வழிகாட்டும் நூலை) அனைவரும் படித்திருக்க வேண்டும், குறிப்பாக தன்னை முஸ்லிம் என்று சொல்லி கொள்பவர்கள் அவசியம் படித்திருக்க  வேண்டும்.

நடந்தது  என்ன?

1. அது (குர்ஆன்) படித்தால் விளங்காது,

2. அது பல பொருளை தரக்கூடிய புத்தகம்

3. அதை மதரஸாவிற்கு சென்றுதான்  படிக்க வேண்டும்.

4. அதற்கு இடைத்தரகர்கள் (நாங்கள்) வேண்டும்.

5. அதில் உள்ளதை அப்படியும் பொருள் எடுத்துக் கொள்ளலாம். (இறந்தவர்களி டமும் கேட்கலாம்) இப்படியும் பொருள் எடுத்துக் கொள்ளலாம். (இறைவனிடமும் கேட்கலாம்) என்று உள்ளது.

எனவே அதை படித்தால் உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்று ஒரு கூட்டம்  இன்றளவில்  கூறி  வருகிறது.

அதுமட்டுமல்ல;

குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள்ஓது வீராக!’ என்பதற்கு விரிவான பொருளை கொடுக்காமல் விலகி சென்றதும் சமுதாயம் கல்வியில் பின் தங்கியதற்கு மூலம் காரணம் ஆகும். அதுவே அறிவை தேட குர்ஆனை படிப்பீராக; அறிவை வளர்க்க குர்ஆனை படிப்பீராக என்ற விளக்கத்தையும் கொடுத்திருந்தால் சமுதாயம் அரபி மொழியில் மட்டும் ஓதாமல் (படிக்காமல்) தாய்மொழியின் உதவி கொண்டு சிந்தித்து படித்திருக்கும். ஏனெனில் அறியாதவற்றை  அறிந்து கொள்ள  அறிவுதான்  தேவை.

அதாவது  (ASK)  தேவை :

A for ATTITUDE =    அணுகுமுறை

S for SKILL =    திறமை

K for KNOWLEDGE =  அறிவு

குர்ஆனை அணுகும் முறையும் தவறாக உள்ளது; அதில் கூறப்பட்டுள்ளவைக் கொண்டு திறமையையும் வளர்க்கவில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக குர்ஆன் அறிவு கடலாக உள்ளது.  அதை  பயன்படுத்தவில்லை.

இந்த மூன்றையும் சேர்த்து எப்போ பாடமாக குர்ஆன் சொல்லிக் கொடுக்கப்படுமோ (படிக்கப்படுமோ)  அப்போதுதான்  முஸ்லிம்  சமுதாயம்  கல்வியில்  முன்னேறும்.

கல்வியில் முன்னேறினால் வேலை வாய்ப்பில்  முன்னேறும்.

வேலை வாய்ப்பு பெருகினால் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும்.

மேற்கண்ட இரண்டையும் கொண்டு அறிவில் சமுதாயம் முன்னேறும்.

எந்த சமுதாயம் அறிவில் முன்னேறி உள்ளதோ அதுவே உலகை ஆளும் வலிமையை  பெறும்.

Previous post:

Next post: