பிறப்புக்கும் – இறப்புக்கும்  நடுவே…..!?

in 2024 ஜனவரி

பிறப்புக்கும்இறப்புக்கும்  நடுவே…..!?

N. மர்யம், ஒரத்தநாடு

மனிதர்கள் பல விசயங்களை மறந்தது போல் கீழ்கண்ட வி­யங்களையும் மறந்து விடுகிறார்கள். 

அது என்னவென்றால் :

1. இறையருளால் இந்த உலகத்திற்கு நாம் உயிருடன்  வந்தது  அடுத்தவர்கள்

2. முதன்முதலில் நம்மை குளிப்பாட்டியதும் அடுத்தவர்கள்

3. இறுதி குளியல் குளிப்பாட்டப் போவதும் அடுத்தவர்களால்

4. நமக்கு பேர்  வச்சதும்  அடுத்தவர்கள்

5. நமக்கு கல்வியைத் தந்ததும் அடுத்தவர்கள்

6. நமக்கு உணவு, உடை, இருப்பிடம் தந்ததும் அடுத்தவர்கள்

7. நமக்கு மரியாதை கொடுப்பதும் அடுத்தவர்கள்

8. நம்மை கப்ரில் அடக்கம் செய்ய போவதும் அடுத்தவர்கள்

மேலும்இறைவனால்பூமியில்வாழஇடம்கொடுத்தது

மேகம் மழையை கொடுத்தது

சூரியன் வெளிச்சம் கொடுத்தது

காற்று, நீர், நெருப்பு கொடுத்தது

ஆடு, மாடு, ஒட்டகம், மீன், தாவரங்கள் என  நமக்கு  உணவு  கொடுத்தது

ஆக எல்லாமே இறைவனின் ஏற்பட்டாலும் அடுத்தவர்களாலும் நமக்கு கொடுக்கப் பட்டது.

நாம் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டோம், இப்போது நாமும் கொடுக்க வேண்டும். அதுவே பண்பு. (Given together and growth together) ஏனெனில் வாங்குவது தர்மம் அல்ல; கொடுப்பதுதான் தர்மம்; எனவே  நாமும்  கொடுக்கவேண்டும்.

எதை கொடுப்பது? எப்படி கொடுப்பது? யாருக்கு  கொடுப்பது?

பணம் இருந்தால் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுங்கள்.

பதவி இருந்தால் அதன் பயனை பிறருக்கு கொடுங்கள்,

ஞானம் (அறிவு) இருந்தால் பிறருக்கு கல்வியை கொடுங்கள்.

வாங்குவதும், கொடுப்பதும்தான் வாழ்க்கை.

வந்தான் வாழ்ந்தான், சென்றான் என்பது  மட்டும்  வாழ்க்கை  அல்ல.’

ஏனெனில் எல்லோருக்கும் தேதி குறிக்கப்பட்டுவிட்டது. முன்பதிவு முடிந்துவிட்டது. இந்த முன்பதிவை கேன்ஸல் செய்யவோ வேறு தேதியில் மாற்ற (Reservation) செய்யவோ முடியாது.

எனவேதான் பின்தேதியில் வருபவர்கள் முன்தேதியில் செல்பவர்களுக்கு கப்ரில் இடம் ஒதுக்கி கொடுக்கிறார்கள். அதுவரை பேர் சொல்லி அழைத்தவர்கள் முன்பதிவு தேதி தெரிந்துவிட்ட பின்பு அவரை பேர் சொல்லி அழைப்பதில்லை. அதாவது உயிர் இருக்கும் வரை அந்த உடலுக்கு பெயர் ……………..) அதுவே உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு பெயர் மையித்/பிணம்/ Body முரண்பாடா என்றால் இல்லை. இதுவே எதார்த்தம். எனவேதான் இறப்பைப் பற்றி இறைவன்  கூறும்பொழுது;

ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்கும். மறுமை நாளில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட் டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப் பப்பட்டவர் வெற்றி பெற்றுவிட்டார். இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப  இன்பமேயன்றி  வேறில்லை.” அல்குர்ஆன் 3:185

உங்களுக்கு நாம் வழங்கியவற்றை உங்களுக்கு பின்னால் விட்டுவிட்டு உங்களை ஆரம்பத்தில் நாம் படைத்ததுபோல் தன்னந்தனியாக நம்மிடம் வந்திருக்கிறீர்கள். அது மட்டுமல்ல, நீங்கள் யாரை எல்லாம் பாதுகாவலர்கள் என்று நம்பி இருந்தீர்களோ, அவர்கள் இப்போது உங்களிடம் இல்லை. அவர்களுடன் இருந்த உங்கள் தொடர்பும் அறுந்துவிட்டது. நீங்கள் கற்பனை செய்தவை உங்களை விட்டும் மறைந்துவிட்டன. அல்குர்ஆன் 6:94

மேற்கண்ட இரண்டு வசனத்தில் அல்லாஹ் ஐந்து விசயங்களை நினைவு கூறுகின்றான்.

1. ஒவ்வொரு உயிரும் மரணத்தை சந்தித்தே  தீரும்.

2. நல்லவர்களுக்கு சுவர்க்கம் கூலியாக வழங்கப்படும்.

3. இந்த  உலகம்  அற்பமானது.

4. எப்படி படைத்தோமோ அது போலவே திரும்ப  வருவீர்கள்.

5. நீங்கள் யாரை எல்லாம் பெரிய மகான், அவ்வுலியா என்று கற்பனை செய்திருந்தீர் களோ, பரிந்துரை செய்வார்கள் என்று நினைத்தீர்களோ அவர்கள் உங்களுடன் வரவில்லை, வரவும் முடியாது, வரவும் மாட்டார்கள்.

அதாவது மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள், வாழ தெரியாமல் போன சாமியார்கள்கிட்ட போயும், இறந்தவர்களிடம் போயும் எப்படி வாழ்வது என்று ஆலோ சனையும்,  உதவியும் கேட்கின்றார்கள்)

மனிதர்களின் வினோத செயலில் இதுவும்  ஒன்று.

மனித பிறப்பில் எந்த வேறுபாடும் இல்லை; ஆனால் இறப்பில் வேறுபாடு உண்டு. 

அதாவது பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவே என்ன செய்தோம் என்பதில்தான் வேறுபாடு. சுருக்கமாக சொல்வதாக இருந்தால் எல்லாவற்றையும் மறுமை வாழ்வில் கிடைக்கும் வெற்றியைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. ஏனென்றால் வெறும் மரணத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று இருக்குமே யானால் நல்அமல்களுக்கும், நல்லவனாக வாழ்ந்ததற்கும் அர்த்தம் (பயன்) இல்லாமல்  போய்விடும்.

இறைவன் நீதியாளன்: எந்தவொரு ஆத்மாவையும் அநீதமாக தண்டிக்கவோ அல்லது நற்கூலியை வழங்காமல் இருக்கவோ மாட்டான். அதே வேளையில் இறை கட்டளைக்கு மாறாக நடந்தவர்களையும் இணை வைத்தவர்களையும் தண்டிக்காமல் இருக்கமாட்டான்.

விடியாத  பொழுதுமில்லை,

மரணமில்லாத  வாழ்வுமில்லை

அறுந்துபோன செருப்புக்கு கூட வீட்டில் ஒர் இடம் உண்டு.

ஆனால் இறந்துபோன மனிதனுக்கு மண்ணறை தான் வீடு

எனவே,

வயதாகி விட்டதே என்று வருத்தப்பட வேண்டாம் வயதும்(ஆயுள்) வாழ்வும் ஏற் கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று.

இன்றைய சில அலோபதி மருந்துகளை உண்டும், அலோபதி மருத்துவர்களின் ஆலோசனையும் கேட்ட பிறகும் சுமார் அறுபது(60) வயதுக்கு மேல் நீங்கள் இருப்பது என்பது உங்களுக்கு கிடைத்த போனஸே எனவே இறைவனுக்கு மேன்மேலும் நன்றி கூறுங்கள்.

1. நீங்கள்  தங்குவதற்கு  ஓர்  இடம்  கிடைத்ததற்கு

2. இன்றைய உணவு கிடைத்ததற்கு

3. அன்பான குடும்பம் கிடைத்ததற்கு

4. நல்ல ஆரோக்கியம் கிடைத்ததற்கு

5. ஆடைகள் கிடைத்ததற்கு

6. அன்பும், ஆதரவும் காட்ட யாராவது இருப்பதற்கு

அடுத்து,

A. அமைதியை  கடைபிடியுங்கள்

B. மனதளவில் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்,

C. எதிர்மறையாக மற்றும் வாழ்க்கைப் பற்றி பயம் காட்டுபவர்களிடம் நெருக்கம் காட்டாதீர்கள். (குறிப்பாக டி.வி. பார்ப்பதை தவிருங்கள்)

D. நோய்நொடி என்றால் அந்த காலம் போல் மிகுந்த அக்கறையுடன் உறவும், நட்பும் கவனிக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள், இறை நூலை (குர்ஆனை) மொழிப் பெயர்ப்புடன் படியுங்கள்!  சிந்தியுங்கள்!

அறிந்து கொள்வோம்! 

மர்யம்பீ, குண்டூர்

1. பூமியிலுள்ள எந்தெந்த மஸ்ஜிதுகளில் நன்மையை எதிர்பார்த்து பயணம் மேற்கொள்ள வேண்டும்?

கஅபா, மஸ்ஜிதுந் நபவீ, ரீலியா (அல் அக்ஸா)  முஸ்லிம் : 2700

2. அதான் சப்தத்தை ஷைத்தான் செவியுற் றால் எந்த இடம் வரை வெறுண்டோடு வான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள்?

ரவ்ஹா  என்ற  இடம்  வரை. முஸ்லிம் : 632

3. பகலின் வெப்பம் குறைந்த பஜ்ர், அஸர் தொழுகைகளை முறையாக தொழுகிற வரின் நிலை என்ன என்பதை நபி(ஸல்) அவர்கள்  கூறுகிறார்கள்?

சுவர்க்கத்தில்  நுழைவார்.  புகாரி : 574

4. எப்போது பதில் ஸலாம் கூறலாகாது?

சிறுநீர் கழிக்கும்போது. முஸ்லிம் : 606

5. தனியாக தொழுவதை விட ஜமாத் தொழுகையில் எத்தனை மடங்கு சிறந்தது?

27 மடங்கு. புகாரி : 645

6. ஸுஜுதுடைய அடையாளம் பற்றி அல்லாஹ்  கூறும்  வசனம்  எது?

அவர்களுடைய  முகங்களில் சஜ்தாவுடைய அடையாளமிருக்கும்.     (அல்குர்ஆன் 48:29)

7. முளர் கூட்டத்தினருக்காக நபி(ஸல்) கேட்ட  துஆ  என்ன?

இறைவாஉன்பிடியைஇறுக்குவாயாக. புகாரி: 804

8. ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்று (தொழுகையில் ஸமீ அல்லாஹு  லிமன் ஹமிதா என்று கூறும்போது) கூறி னால் என்ன நடக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

30க்கும் மேற்பட்ட வானவர்கள் இதை பதிவு செய்கிறார்கள்.  புகாரி :799

9. போரில் கிடைக்கும் வெற்றிப் பொருட் கள் (அன்ஃபால்) யாருக்குச் சொந்தம் என அல்லாஹ் கூறுகிறான்?

எனக்கும், என்னுடைய தூதருக்கும். அல்குர்ஆன் 8:1

10. மீன் வயிற்றில் இருக்கும்போது யூனுஸ் நபி  கேட்ட  துஆ  என்ன?

உன்னைத்தவிரவணக்கத்திற்குரியவன்வேறுயாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன்.       அல்குர்ஆன் 21:87

11. என்னால் தெளிவாக பேசமுடியாது. ஆகவே என்னுடன் ஹாருனையும் அனுப் புவாயாக என்று துஆ செய்த  நபி  யார்?

மூஸா(அலை) அல்குர்ஆன் 26:13

12. முஃமினான ஒழுக்கமுள்ள பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறவர் களின் நிலை என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?

இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள். அல்குர்ஆன் 24:23

13. தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப் பவர்கள் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறு கிறான்?

ஜகாத்தை  தவறாது  கொடுத்து  வருவார்கள். அல்குர்ஆன் 23:4

14. கஹ்ஃபு  என்றால்  என்ன?

குகை. அல்குர்ஆன் 18:2

15. அல்லாஹ் தான் எவ்வாறு கவனிப்பதாக கூறுகிறான்?

நுணுக்கமாக  கவனிப்பவன். அல்குர்ஆன் 67:14

16. யாசிப்போரை என்ன செய்ய வேண்டாம் என்று அல்லாஹ் கூறுகிறான்?

விரட்டாதீர். அல்குர்ஆன் 93:10

17. யாருடைய இரண்டு கைகளும் நாச மடைக  என  அல்லாஹ்  கூறினான்?

அபூலஹிபின்.  அல்குர்ஆன் 111:1

18. தப்பத்  என்றால்  என்ன?

அழிந்துவிட்டது. அல்குர்ஆன் 111:2

19. யார் யாரெல்லாம் அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டிருக் கிறார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ள வையும். அல்குர்ஆன் 61:1

20. வகாலத் என்றால் என்ன?

கொடுக்கல்வாங்கல்களுக்காகபிறருக்குஅதிகாரம்  வழங்குதல்.     புகாரி:பாடம் 40

Previous post:

Next post: