மனிதர்கள் அந்த இறைவனையன்றி வேறு புகலிடத்தைக் காணவே மாடட்டார்கள்!

in 2024 பிப்ரவரி

மனிதர்கள் அந்த இறைவனையன்றி வேறு புகலிடத்தைக் காணவே மாடட்டார்கள்!

S.H. அப்துர் ரஹ்மான்

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும். படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட் டும்.

அந்த  ஒரே  இறைவன்  பெயரால்

இவ்வுலக  வாழ்க்கைக்கு  ஓர்  உதாரணம்!

இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் அவர்களுக்கு நீர் கூறுவீராக! அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது. பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய்விடுகிறது. மேலும், எல்லாப் பொருளின் மீதும் அந்த இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.”

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவை யாகவும்  இருக்கின்றன.”

ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர். அவர்களை ஒன்று சேர்ப்போம். (அந்நாளில்) நாம் ஒருவரையும்  விட்டு வைக்கமாட்டோம்.”

அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள். நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள். ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்தமாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள் (என்று சொல்லப்படும்)

இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும். அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர். மேலும் அவர்கள். “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ, பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே! என்று கூறுவார்கள். இன்னும் அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள். ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும்  அநியாயம்  செய்யமாட்டான்.”

அன்றியும், “ஆதமுக்கு சிரம் பணியுங்கள்என்று நாம் வானவர்களிடத்தில் கூறியதை நினைவு கூர்வீராக. அப்போது சாத்தானைத் தவிர அவர்கள் சிரம் பணிந்தார்கள். அவன் மறைவான இனத்தைச் சேர்ந்தவனாக  இருந்தான். அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறிவிட்டான். ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறார்கள். அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது  மிகவும்  கெட்டதாகும்.”

வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ள வில்லை! வழிகெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக்  கொள்ளவுமில்லை.”

எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள். இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை  நாம்  ஏற்படுத்துவோம்.”

இன்னும் குற்றவாளிகள் (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள். தாங்கள் அதில் விழப் போகிறவர்கள் என்பதைத் தெரிந்து கொள்வார்கள். அதிலிருந்து தப்ப மாற்றிடம்  எதையும்  காணமாட்டார்கள்.”

இன்னும் நிச்சயமாக நாம் இந்த இறை நூலில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனி தர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே  இருக்கின்றான்.” 

மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும் தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவதையும் தடை செய்வதெல்லாம் முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல்  ஆகியவை  தவிர  வேறில்லை.”

இன்னும், நாம் தூதர்களை நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை. எனினும் இறை மறுப்பாளர்களே பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள். என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக்  கொள்கின்றனர்.”

எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும் அவர்களுடைய செவிக ளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம். ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின்பால் அழைத்தாலும் அவர்கள் ஒருபோதும் நேர்வழியடைய மாட்டார்கள்.”

உம் இறைவன் மிகப் பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான். ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு. அப்போது அவனையன்றி புகலிடத்தைக்  காணவேமாட்டார்கள்.”

மேலும் அவ்வூர்வாசிகளை அவர்கள் அக்கிரமம் செய்தபோது நாம் அழித்தோம். ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு)க் குறிப்பிட்ட) தவணையை நாம் ஏற்படுத்தி யிருந்தோம்.” (18:45-59)

இன்னும் எந்த விசயத்தைப் பற்றியும்நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்என்று நிச்சயமாக கூறாதீர்கள். “அந்த இறைவன் நாடினால்என்று சேர்த்துச் சொன்னால் அன்றி; (தவிர) (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவுபடுத்திக் கொள்வீ ராக. இன்னும், “என்னுடைய இறைவன், நேர்வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விசயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும் என்றும்  கூறுவீராக! 18:23,24)

அவனையன்றி வேறு புகலிடம் காணமாட்டீர்கள்:

“…வானங்களிலும், பூமியிலும் மறைவாய் இருப்பவை அந்த இறைவனுக்கே உரியனவாகும். அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன், தெளிவாய்க் கேட்பவன், அவனையன்றி அவர்களுக்கே உதவி செய்வோர் எவருமில்லை. அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை என்று நீர் கூறும்.”

இன்னும் உம்முடைய இறைவனின் இறைநூலிலிருந்து உமக்கு இறை ஓசை மூலம் அருளப்பட்டதை நீர் வாசித்து வருவீராக. அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை, இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.”

எவர் தம் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பிவிடாதீர். இன்னும் எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிப்படாதீர். ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின்பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு  மீறியதாகி விட்டது.”

இன்னும் நீர் கூறுவீராக! “இந்தச் சத்தியம் (இறைநூல்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதுஆகவே விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும் அநியாயக்காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம். (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.”

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்)கூலியை நாம் நிச்சயமாக வீணாக்கமாட்டோம்.”

(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும் ஸுன்துஸ் இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடை களை அவர்கள் அணிந்திருப்பார்கள். அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்ந்து மகிழ்ந்து இருப்பார்கள். (அவர்களுடைய) நற்கூலி மிகவும் பாக்கிய மிக்கதாயிற்று. (அவர்கள்) இளைப்பாறுமிடமும்  மிக  அழகியதாயிற்று.”  (18:26-31)

அத்தகைய அழகிய நற்செயல் செய்து அதற்கு (நற்) கூலியை அந்த ஒரே இறைவனி டம் பெற்று என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதியை அடையும் பாக்கியம் நம் அனைவர்களுக்கும் கிடைக்க துஆ செய்வானாக.

—————

 

இஸ்லாமிய மார்க்கத்தில் பண்டிகைகள்! 

அஹமத் இப்ராஹீம்

மனிதர்கள் உருவாக்கிய எந்த விழாக்களிலும் சில நன்மைகளும், மிகப் பெரும் தீமைகளும், அதேபோன்று மிகப் பெரும் ஆரோக்கிய கேடுகளும் மிகுதியாக இருக்கத்தான்  செய்யும்.

உதாரணமாக முஸ்லிம்கள் தவிர மற்ற எல்லா மதத்தினரும் அவரவர்களின் மத விழாக்களை பட்டாசு வெடித்து கொண் டாடுகின்றனர். 

அவ்வாறு பட்டாசு வெடிப்பதன் மூலம் மனிதர்களுக்கும் பறவை இனங்களுக்கும் (சுற்றுப்புற சூழல்களுக்கு மாசு ஏற்பட்டு) மிகப் பெரிய ஆரோக்கிய கேடுகள் ஏற்படு கின்றன என்பது அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்  அறிக்கையாகும்.

ஆனால் அல்லாஹ்வின் மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டே இரண்டு  விழாக்கள்  மட்டுமே  உள்ளன.

அவை,  (ஈதுல் ஃபித்ர்)  ஈகைத்  திருநாள் !

(ஈதுல்  அழ்ஹா)  தியாகத்  திருநாள்!

மேற்கண்ட இரு பெருநாட்களில் ஏழை எளியவர்களுக்கு ஈந்து எல்லோரும் மகிழ்ச்சியாக வயிறார உண்டு கொண்டாடும் கொண்டாட்டமே இஸ்லாமிய விழாக்களாகும்.

இந்த விழாக்களில் சுற்றுப்புறச் சூழல் மாசு ஆவதில்லை. காரணம் மனிதர்களுக்கும் பறவையினங்களுக்கும் தீங்கிழைத்து, சுற்றுப்புறச் சூழலை மாசடையச் செய்து நுரையீரல் நோயை உண்டாக்கி, மனிதர்கள் கடினமாக உழைத்து மனைவி மக்களை காப்பாற்ற வேண்டி சம்பாதித்த காசை கரியாக்கும் பட்டாசுகளை வாங்கி வெடிப்பதில்லை. மாறாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் எங்கும் அவர்கள் பூசும் வாசனைத் திரவியங்களின்  நறுமணங்கள்.

முஸ்லிம்களின் அண்டை வீட்டார்களும் அவர்கள் மாற்று மதத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களும் மகிழ்ச்சியுடன் இருக்கும்படியான விருந்தோம்பல்கள் ஏராளம்!  ஏராளம்!!

இஸ்லாமிய மார்க்கத்தில் சிறந்தது எது என்ற கேள்விக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களின்  தெளிவுரை.

ஒருவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம்இஸ்லாத்தில் சிறந்தது எது?’ எனக் கேட்டதற்கு, (பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்றார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அறிவித்தார். புகாரி:12, அத்தியாயம்:2 ஈமான்  எனும்  இறை  நம்பிக்கை.

மேற்கண்ட நபிமொழியினை அப்படியே பின்பற்றும் முஸ்லிம்கள் தங்களது உறவினர்களுக்கும் மற்ற பிற ஏழைகளுக்கும் அண்டை வீட்டார்களுக்கும் அவர்கள் மாற்று மதத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களுக்கும் விருந்து உணவளித்து கொண்டாடும் இஸ்லாமிய திருவிழாக்கள் தான்  உண்மையான  திருவிழாக்களாகும்.

அது இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமே உண்டு!

—————–

அறிந்து கொள்வோம்! 

மர்யம்பீ, குண்டூர் 

1. மரணத்தைத் தவிர மற்ற  எல்லா நோய்களுக்கும்  எந்த பொருளில் நிவாரணம் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?

கருஞ்சீரகம்.  முஸ்லிம்: 4452

2. எந்த பழத்தை அதிகாலையில் உண்பதால் வி­ முறிவு ஏற்படும் என்று நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

அஜ்வாபேரீட்சம்பழம்.  முஸ்லிம் 4159

3. நபி(ஸல்) அவர்கள் எந்த நோய்க்கு தேனை  பரிந்துரை  செய்தார்கள்?

வயிற்றுப்போக்கு.  முஸ்லிம் : 4454

4. எத்தனை இருள்களுக்குள் குழந்தை தாயின் வயிற்றில் உள்ளது என்று அல்லாஹ்  கூறுகிறான்.

மூன்று.  அல்குர்ஆன் 39:6

5. எந்தெந்த நபிமார்களின் மனைவிகளுக்கு சொர்க்கம் இல்லை என்று அல்லாஹ்  கூறினான்?

நூஹ்(அலை), லூத்(அலை)  அல்குர்ஆன் 66:10

6. எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு நிலத்தை அபகரிக்கின்றவன் கழுத்தில் எது வளையமாக மாட்டப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? 

ஏழுபூமிகள்அளவில்நிலம்.   புகாரி:3195

7. இறை நிராகரிப்பாளர்கள் மண்ணறைகளிலிருந்து எப்படி வெளியாவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?

வெட்டுக்கிளிகளைப்போல்.     அல்குர்ஆன் 54:7

8. முஃப்லிஹுன் என்றால் யார் என அல்லாஹ் கூறுகிறான்?

வெற்றியாளர்.  அல்குர்ஆன் 59:9

9. இறை அருளை விட்டு தூரமான சமுதா யத்தார் யார் என அல்லாஹ் கூறுகிறான்?

ஆது  மற்றும்  ஸமூது  சமூகம். அல்குர்ஆன்11:60,68

10. ஷிஐப்(அலை) எந்த நகரத்து தூதர் என அல்லாஹ்  கூறுகிறான்?

மத்யன்வாசிகள்.  அல்குர்ஆன் 11:84

11. அளவு நிலுவையை நீதியான முறையில் நிறைவேற்றும்படி கூறிய நபி யார் என அல்லாஹ்  கூறுகிறான்?

ஷிஐப் (அலை).   அல்குர்ஆன் 11:84,85

12. நயவஞ்சகர்களை அல்லாஹ் எப்படி கூறுகிறான்?

பொய்யர்கள்.  அல்குர்ஆன் 63:1

13. பெரிதும் வெறுப்புடைய செயல் எது என்று  அல்லாஹ்  கூறுகிறான்?

செய்யாததை  கூறுவது. அல்குர்ஆன் 61:3

14. அஸ்ஸப் உல் மஸானீ என்று எதை நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

திரும்பதிரும்பஓதப்படும்அல்ஃபாத்திஹா.   புகாரி: 4474

15. சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போன்று இருப்பதாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?

நயவஞ்சகர்கள்.   அல்குர்ஆன் 63:4

16. மற்றவர்கள் புரிந்து கொள்வதற்காக நபி (ஸல்) அவர்கள் வார்த்தைகளை எப்படி கூறுவார்கள்?

மும்முறை  கூறுவார்கள்.      புகாரி : 95

17. அபூஜஹ்ல் எந்த போரில் கொல்லப் பட்டான்?

பத்ருப்போரில்.  புகாரி: 3141

18. யார் மீது சத்தியம் செய்யலாம் என நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்?

அல்லாஹ்வின்மீது.  புகாரி  :  2679

19. இறை நம்பிக்கையாளர்கள் தாம் செய்த பாவங்களை எவ்வாறு கருதுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

மலைகளைப்போன்றுபாரமாக.    புகாரி : 6308

20. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்கள் (இடப்புறத்தார்) மீது எது இருப்பதாக அல்லாஹ்  கூறுகிறான்?

மூடப்பட்ட  நெருப்பு.   அல்குர்ஆன் 90:19,20

 

Previous post:

Next post: