விமர்சனம் : டிசம்பர் 2023, அந்நஜாத். இப்லீஸை வழிகெடுத்தது. கட்டுரை பக்கம் 15, 16, சிறு திருத்த விளக்கம் :
மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று: அல்லாஹ்வை நாடிச் செல்லக்கூடிய நேரான வழி. மற்றொன்று: கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்தி விடுவான். (அல்குர்ஆன் 16:9)
அவர்களை மயக்கி, (அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக) அதன் பக்கம் அவர் களைச் செல்ல வைத்தான். அவ்விருவரும் அம்மரத்(தின் பழத்)தைச் சுவைக்கவே, அவ் விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அதுசமயம் இறைவன் “அம் மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக் கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களி ருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்குக் கூறவில்லையா?’ என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான். (அல்குர்ஆன் 7:22)
அல்லாஹ்வே நேர்வழி (இஸ்லாம்) தவறிய வழி (கணக்கற்ற கோணல்வழி) கொண்டு மனிதனை சோதித்து சுவன நரகவாசிகளை (நிர்ணயித்து விட்டவனாக அவர்களைக் கொண்டே தகுதியாக்கி) தரம் பிரிக்கும் சூட்சுமதாரி. அவன் நாடியதே யார் தூய வராவதும் வழிகேட்டிலாவதும். (16:9)
(நீங்கள் எழுதிய இந்த வசனம் குர்ஆன் உள்ளபடி இல்லை)
ஷைத்தானும் அல்லாஹ் உருவாக்கிய மானுடர் நமக்கான சோதனைக்கான எதிரியான (வழிகெட்ட நரகிற்கான) படைப்பே (7:22) அதனால் மேலதிக விளக்கங்களால் புதுவித குழப்பம் வேண்டாமே. அல்லாஹ் நேர்வழியிலாக்கு வான், வழிகெடுத்தான், கெடுப்பான் புவிக்கான இறுதித் தீர்ப்பு நாள் வரை. இது அவன் ஒருவனின் தீர்ப்பு முடிவுக்குட்பட்டதே. யாரும் அவனை கட்டுப்படுத்த குறை காண, கேள்வி கேட்க முடியாதே. அவன் தீர்ப்பு அவனன்றி யாரும் மாற்ற முடி யாதே. ஷைத்தான் எப்படி அல்லாஹ்விடம் எதிர்கேள்வி கேட்டாலும் அங்கே பிரதானம் “தான் என்ற தலைகணமே‘(அல்லாஹ் மிகவும் வெறுப்பதே). அணுவளவு தலைகணமும் நரகிலாக்குமே. உலகில் அதன் உருவங்கள் பலப்பல. பணம், பதவி, இல்லம் இவை சார்ந்த கிளைகள் கணக்கற்றவை நம்மை நரகிலாக்க. இவையில்லாமல் தனியயாரு மானுடம் நன்மைகளால் சுவனத்தி லாக்க வழிநடத்தும் சூட்சுமதாரி அல்லாஹ் மட்டுமே. அதை இறுதி வரை தன் ரகசியத்தில் பேணுபவன் அவன் மட்டுமே. ஷைத்தான் அவனுடன் நரகிலாகும் ஆதம்(அலை) மூலம் உருவான மானுட கூட்டமும் அவன் ரகசியமே. அதனால் ஷைத்தானின் தவறோ அல்லாஹ்வின் தவறோ என்ற கற்பனை தேவையா? குழம்பவேண்டாமே. அல்லாஹ்வின் முடிவு, ஆளுமை, தாத் சிஃபத் என பல நாம் தலை யிடமுடியாத நுட்பங்களின் சூட்சுமமே. அவனை அடிபணிந்து சரியாக சிந்திப்போமே. மறுமை வெற்றியே நம் தகுதியாக அல்லாஹ் ஆக்குவானாக. ஹமீத் அலி
விளக்கம் : தாங்கள் பல ஆண்டுகளாக “அந்நஜாத்தின்‘ வாசகர் என்று குறிப்பிட்டுள் ளீர்கள், மிக்க மகிழ்ச்சி, அல்ஹம்துலில்லாஹ்.
இப்லீஸின் பெருமைதான் அவன் வழிகெட்டதற்கு காரணம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு அக்கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருந்தோம். தாங்களும் அனுப்பிய செய்தியில் அதுவே பிரதான காரணம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள தாக குறிப்பிட்டிருந்தீர்கள்.
எனவேதான் இப்லீஸை அல்லாஹ் வழி கெடுக்கவில்லை, இப்லீஸ் தனது செயலினால் (அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படியாததினால்) தன்னைத்தானே நாசமாக்கி கொண்டான் என்பதே சரியானது என்ற அடிப்படையில் மொழி பெயர்ப்பில் உள்ள தவறை சுட்டி காட்டியிருந்தோம்.
அல்லாஹ்வின் முடிவு, ஆளுமையில் எவரும் குறுக்கிடமுடியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே வேளையில் அனைத்து அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உள்ளது என்ற நம்பிக்கையுடையவர்கள் இதில் குழப்பம் செய்து கொள்ள தேவையில்லை.
அல்லாஹ் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) குற்றம் புரியாதவர்களை வழிகேட்டில் விடுவதில்லை என்பதற்கு கீழ்கண்ட வசனமே சாட்சி.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைர் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள். ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன என்ன நாடுகிறான்?’ என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்லவழிப்படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்)) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.
(அல்குர்ஆன் 2:26)
மேற்கண்ட வசனத்தில் “இதன்மூலம் வழி கெடுப்பான்‘ என்று கூறப்பட்டதற்கு பல மொழி பெயர்ப்பாளர்கள் “இறைநெறி நூலின் மூலம்‘ என்று தவறான பொருள் கொண்டுள்ளனர்.
ஏனெனில் மேற்கண்ட வசனத்தில் ஒரு உதாரணத்தை (கொசுவைப் பற்றி) கூறி விட்டு அதன் பிறகுதான் “இதன்மூலம் வழி கெடுப்பான்‘ என்று கூறியுள்ளான். எனவே “இதன்மூலம்‘ என்பதற்கு “இவ்வுதாரணத்தின் மூலம்‘ என்று மொழி பெயர்த்திருந்தால் அதுவே சரியானதாக இருந்திருக்கும். இந்த நெறிநூல் வழிகாட்டும் நூலே தவிர வழி கெடுக்கும் நூல் அல்ல.
அடுத்து அதே வசனத்தில் “குற்றம் புரிவோரைத் தவிர‘ (மற்றவர்களை) இதன் மூலம் வழிகேட்டில் விடுவதில்லை என்பதையும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இப்லீஸ் குற்றம் புரிந்தான் (கீழ்படிய மறுத்தான்). எனவேதான் அவன் வழிகேட்டில் செல்ல அல்லாஹ் தடுக்காமல் விட்டுவிட்டான் என்பதே சரியானதாகும்.