ஹஜ் செய்வது அன்றும் இன்றும்!
B.A. முகம்மது புகாரி, பெங்களூர்
ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று. இது உடல் வலிமையும், பொருளா தாரமும் போதுமான அளவிற்கு உள்ளவர்கள் மீது கடமையாகும்.
ஹஜ் காலத்தில் மக்காஹ் நகரில் ஹஜ் செய்வது சிறிது கஷ்டமானதுதான் என்றாலும் எவ்வளவுதான் விஞ்ஞான முன்னேற்றங்கள் நவீன வசதிகள் ஏற்பட்டிருந்தாலும் சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது.
எனவே ஹஜ் செய்ய வேண்டியவர்கள் ஓரளவு நல்ல உடல் நலத்துடன் கூடிய வயதிலேயே செய்வது எளிதாக, சிறப்பாக, திருப்தியாக செய்வதற்கு தோதாக இருக்கும். வயதான காலத்தில் சென்றால் சிரமப்பட்டு அடுத்தவர்கள் உதவியுடன் தான் செய்யமுடியும். ஹஜ்ஜில் உள்ள சிரமங்கள் காலத்திற்கேற்ப மாறுமே ஒழிய நீங்காது.
முன்பெல்லாம் சுமார் 40 ஆண்டுகளுக்கு களுக்கு முன் (என் அனுபவத்தில்) அன்றிருந்த நிலையில், அந்த நாட்டு (சவுதி) அரசு வெறும் சட்டம் ஒழுங்கு மற்றும் குடிநீர், குப்பை நீக்கம், போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தது. அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து வருடா வருடம் ஏதாவது அசம்பாவிதம், உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வந்தது, அரசு என்ன முயன்றும் உயிர் பலிகளை தடுக்கமுடியவில்லை.
எனவே இன்று ஹஜ்ஜில் போக்குவரத்திலும், மற்றவற்றிலும் கடுமையான கட்டுப் பாடுகளை விதித்திருக்கிறது. அது பன்னாட்டு ஹாஜிகளுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்கிறது. மொழி தெரியாத பாமர மக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
ஹஜ்ஜுடைய குறைந்தது ஐந்து நாட்களும் மினா, அரஃபா, முஸ்தலிஃபா ஆகிய ஹஜ் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று வருவதில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாட்களில் ஹாஜிகள் தினந்தோறும் பல கி.மீ. தூரம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
8வது (நாள் பிறை) : அன்று காலையில் மக்காவிலிருந்து ஹாஜிகள் மினாவிற்கு செல்ல வேண்டும். பல லட்சம் பேர் அப்படி காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மினா செல்லும்போது மிகுந்த போக்குவரத்து நெரிசலினால் மினா செல்ல அன்று மதியம் ஆகிவிடும். எனவே தற்போது ஏழாம் பிறை அன்று மாலை இரவே மினாவிற்கு பள்ளியில் சிரமம் இன்றி விரைவில் சென்று விடுகிறார்கள். ஹஜ் சர்வீஸ் நடத்துபவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள்.
9வது நாள் :காலையில் மினாவிலிருந்து அரஃபா செல்ல வேண்டும். அப்போதும் இதேபோன்று 8வது நாள் இரவே அரஃபாத் சென்றுவிடுகிறார்கள். போக்குவரத்து சிரமம் இல்லாமல். அரஃபாத் மாலை மஃரிபுக்கு பிறகு ஹாஜி வாகனங்கள் முஸ்தலிஃபா செல்வதற்கு அரசு ஒரு முறையை வைத்து ஒவ்வொரு பகுதியாக வானங்களை அனுமதித்து முஸ்தலிபா செல்லவிடுகிறார் கள். அப்படி செல்வதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகிறது. ஆனால் ஹாஜிகள் முஸ்தலிஃபா செல்ல காலை 3 மணி கூட ஆகிவிடுகிறது. இந்த வருடம் என் அனுபவத்தில் 3மேணிக்கு முஸ்தலிஃபா சென்று மஃரிப், இஷாவை தொழுக வேண்டியதாகி விட்டது.
சிறிது நேரத்தில் பஜ்ர் தொழுதுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு ஹாஜிகள் மினாவிற்கு நடந்தே வரவேண்டிய சூழல். காவல்துறை அதற்கு வாகனங்களை முற்றிலும் அனுமதிக்கவில்லை. முன்பெல்லாம் வாகனம் அனுமதிக்கப்பட்டது. வாகனங்களில் போனவர்கள் பஜ்ருக்கு முன்பே மினா வந்து விடுவார்கள். இப்போது இதெல்லாம் சாத் தியம் இல்லாமலும் போகிறது. அப்போது மட்டும் சுமார் 5 கி.மீ. ஹாஜிகள் நடப்பதை தவிர்க்க இயலவில்லை.
இதில் இன்னொரு சிரமம் உள்ளது. அதாவது ஹஜ் சர்வீஸைச் சேர்ந்தவர்கள் அவரவர் ஹாஜிகளை அழைத்துச் செல்லும் போது முன்னால் ஏதேனும் அடையாளம் காட்டி அழைத்துச் செல்கிறார்கள். நல்ல உடல் நலம் உள்ளவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று விடுகிறார்கள். கடுமையான கூட்ட நெரிசலில் பின் தங்கியவர்கள் மொழி தெரியாதவர்கள், மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மினா டென்டுக்கு வருவதில் மிகப்பெரிய சிரமம் ஏற்படுகிறது. ஹஜ் சர்வீஸில் செல்பவர் இந்த முக்கிய மான சந்தர்ப்பத்தில் ஆரம்பம் போன்று குரூப் இறுதியிலும் சிலர் அடையாளங்கள் காட்டி கவனமாக அழைத்துச் செல்ல வேண்டும். சிலர் இதில் கவனம் செலுத்தவில்லை. அந்த நேரத்தில் முதன் முறை அப்படிச் செல்பவர்கள் ரோட்டையே பார்க்க முடியாத அளவிற்கு எங்கும் மனிதர்கள் இருப்பதால் ரோட்டில் மேடு பள்ளங்களே தெரியாத அளவிற்கு நிலைமை உள்ளது. அதிலும் தமிழ் மட்டும் தெரிந்த ஹாஜிகள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகிறார்கள்.
10ஆம் நாள் (நகருடைய நாள்) :மினா டென்டிற்கு வந்தபின் அன்று மதியத்திற்குள் பெரிய ஷைத்தானுக்கு மட்டும் கல்லெறியும் கடமையை செய்ய வேண்டும். ஷைத்தானுக்கு கல் எறிவது முன்பெல்லாம் கல் எறிந்துவிட்டு அதே ரோட்டில் வேறு ஓரமாக திரும்பிவிடலாம் டென்டுக்கு. ஆனால் உயிர் பலிகள் தொடர்ந்து இந்த கும்பலின் போது ஏற்பட்டதால் தற்போது, கல்லெறிய வருபவருக்கும் திரும்புவர்களுக்கும் காவல் துறை ஒருவழி பாதையாக ஆக்கி விட்டது. அரை கி.மீ. தூரத்தில் கல்லெறிந்து அப்படியே திரும்பியவர்கள் தற்போது திரும்பும் போது ஒருவழி பாதை காரணமாக சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து டென்டுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம். இங்கும் அதிகப்படியான நடை.
பிறகு தலை மொட்டையடித்து விட்டு (குர்பானி பெரும்பாலும் ஹாஜி, அரசிடம் டோக்கனை வாங்கி கடமையை முன்பே நிறைவேற்றிவிடுகிறார்கள்) எனவே மொட்டையடித்த பின் அன்றைய தினமே முடிந்தவர்கள் மக்காஹ் சென்று தவா புஸ்ஸியாரா, சயீ செய்து இஹ்ராமிலிருந்து விடுதலையாகி விடுகிறார்கள். பல தடைகள் முடிவுக்கு வருகின்றன. ஆக இதெல்லாம் 10ஆம் நாள் நிறைவேற்ற மினாவில் மிகுந்த நடைக்கு ஹாஜிகள் ஆளாகிறார்கள்.
மினாவில் இயலாதவர்கள், டாக்ஸிகள் பயன்படுத்த வழியே இல்லை அனைத்தும் வெயிலில் நடக்கவேண்டியிருப்பதால் ஹாஜிகள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.
இப்படியே 11ஆவது 12ஆவது இரு நாட்களும் மினாவில் மதியத்துக்கு பின் வெயில் இரவு ஹாஜிகள் முன்பு ஷைத்தானுக்கும் (ஏழு கல் அடித்து) தண்டனைக்கு தொடங்க வேண்டும் இதில் வயதானவர்கள், சிறியவர்கள், பெண்கள் போன்றோர் மற்றவர்களிடம் கற்களை கொடுத்தனுப்பவும் மார்க்கத்தில் சலுகை உள்ளது.
1970, 80களில் இந்த நிலை மாறுபட்டிருந்தது. எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அரை கி.மீ. தூரத்தில் கல்லெறிந்து விட்டு அதே அரை கி.மீ. தூரத்திலேயே திரும்பி விடலாம். ஆனால் பல திசையிலிருந்து அந்த இடத்திற்கு வந்து திரும்புவதால் உயிர்ப் பலிகள் ஏற்பட்டது. அதை தவிர்க்கத்தான் கடுமையான இந்த கட்டுப்பாடு.
ஒட்டுமொத்தமாக மினா பகுதி முழுவதையும் அரசு தன் கட்டுப்பாட்டால் வைத்து எங்கிருந்தும் வாகன போக்குவரத்துக்கு தடை உள்ளது. காவல் வாகனம் மட்டுமே செல்கிறது. முன்பு வெளிநாட்டிலிருந்து வரும் ஹாஜிகளுக்கு மட்டுமே அரசு முஅல்லிம்கள் மூலமாக டென்ட் ஏற்பாடு செய்யும், தற்போது அரசின் நேரடி கட்டுப் பாட்டின் (கார்ப்பரேன் போன்று) டென்ட் ஏற்பாடுகள் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. முன் உள்நாட்டிலிருந்து வருபவர்கள் அவர்களாகவே மினா அரஃபாத் தில் ஏற்பாடுகள் செய்து கொள்வார்கள் இன்று அவர்களும் ஆன்லைனில் பதிவு செய்வதால் அவர்களுக்கு டென்ட் ஒதுக்குகிறது. ஆக தானாக யாரும் மினா அரஃபாத்தில் தங்கமுடியாத அளவிற்கு கட்டுப்பாட்டில் இவ்விடங்கள் தற்போது இருக்கின்றன.
ஆனால் அதன் மூலம் அசம்பாவிதம் உயிர்ப்பலிகள் தற்போது தவிர்க்கப்படு கிறது. ஆக எந்தக் காலமானாலும் எவ்வளவு நவீன கண்டுபிடிப்புகள், வசதிகள் இருந் தாலும் ஹஜ் கடமையை நிறைவேற்ற, பொறுமையும், உடல் வலிமையும் தேவைப் படுகிறது என்பதை ஹஜ்ஜுக்கு செல்வோர் முன்பே புரிந்து நல்ல மனநிலையை, புரி தலை ஏற்படுத்திக் கொண்டால் கஷ்டங்கள் பெரிதாக தெரியாது.
அடுத்து முற்காலத்தில் கப்பல் போக்குவரத்து ஹஜ்ஜிற்கு இருந்தது. சுமார் 8-10 நாட்கள் பயணம் செய்து பெரும்பாலானவர்கள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். சுமார் 1982 வரை–இந்நிலை தற்போது அனைத்துமே விமானப் போக்குவரத்தாக மாறி கப்பல் பயணச் சிரமம் தற்போது தவிர்க்கப்படுகிறது.
முன்பெல்லாம் ஹஜ் கமிட்டி மூலமாக மட்டுமே ஹாஜிகள் வருவார்கள். மக்காஹ், மினாவில் ஹாஜிகளே முஅல்லிம்கள் உதவியுடன் ரூம்கள் வாடகை எடுத்துக் கொண்டு, அவர்களே சமைத்துண்டு ஹஜ்ஜை நல்லபடியாக நிறைவேற்றுவார்கள். குறைந்த செலவே ஆகும். தற்போது இதே ஹஜ் கமிட்டி சிறிது நல்லமுறையில் வீடுகள் ஏற்பாடு செய்து ஹாஜிகளுக்கு ஒதுக்குவதாக தெரிகிறது. ஆனால் 7 கி.மீ. தூரத்தில் அஜீஸியா என்ற இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். மக்கள் ஹரம் ரீபிற்கு ஹஜ் சம்பந்தமான தவாபு, சயீ, தவாபுல் விதா இதற்கு மட்டும் வந்து செல்ல வேண்டும். மற்றபடி ஹரம் சரீஃபிற்கு வந்து தொழ விரும்பினால் தனியாக வாடகை வாகனங்களில் வந்து செல்லலாம். மற்றபடி ஹஜ்ஜை எந்த குறையுமில்லாமல் நிறைவேற்றலாம்.
சுமார் 4 லட்சம் செலவாகிறது. மேலும் சிறிது செலவாகலாம் அவரவர் விருப்பத் தைப் பொருத்து இந்திய ஹஜ் கமிட்டி இன்னும் குறைந்த செலவில் ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாக சொல்கிறது. ஆனால் எந்த அளவுக்கு சாத்தியமாகிறது என்று தெரி யாது. முன்பெல்லாம் ஹஜ் கமிட்டி மூலம் தங்குவது ஹரமுக்கு மிக அருகில் தங்குவார்கள். ஆனால் மிகவும் நெருக்கமாக 1அறையில் 5 பேரிலிருந்து 10 பேர் வரை தங்குவார்கள். சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டு ஹாஜிகள் அருகில் தங்கி அதிக அமல்கள், ஹரமில் நடைபெறும் 1 லட்சம் மடங்கு நன்மையுள்ள தொழுகை இவைகளை விரும்புவார்கள்.
இதற்கு மாற்றாக தனியார் ஹஜ் சர்வீஸ்கள் ஏற்பாடு செய்கின்றன. இந்த வருடம் 6 லட்சத்திலிருந்து சுமார் 8 லட்சம் வரை செலவில் ஏற்பாடு செய்தார்கள். 6 லட்சத்திற்கு ஹரமிலிருந்து சுமார் ¾, டிகி.மீ. தூரத்தில் தங்குமிடம் இருக்கும். பெரும்பாலும் தமிழக உணவைப் போன்ற உணவுகள் கொடுப்பார்கள். ஹாஜிகள் சமைக்க வேண்டியதில்லை.
சுமார் 8 லட்சம் வாங்குபவர்கள் கஃபா பள்ளிக்கு மிக அருகில் அதாவது ஹரம் வெளி தொழுமிடம், மற்றும் தார் ரோடு கடந்தால் தங்குமிடம் என்ற நிலையில் ஹோட்டல்களில் ஓரளவு நல்ல முறையில் அறைகள் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் தமிழ்நாட்டு உணவு போன்ற உணவுகள் கொடுக்கிறார்கள். சத்தான உணவு தாராள மாக கொடுக்கிறார்கள். சில இடங்களில் குறை சொல்லப்படுகிறது. இந்த தனியார் ஹஜ் சர்வீஸ்கள், கொரோனாவுக்கு முன்பு வரை சுமார் 4-4டி லட்சம்தான் வசூலித்தார்கள். தற்போது மிகவும் உயர்ந்துவிட்டது. ஆனால் தங்குமிடம், உணவு ஓரளவு நன்றாக உள்ளது. சில நேரங்களில் நேரடியான தமிழக உணவுகள் இல்லை.
இந்த சர்வீஸ் நிறுவனங்கள் கஃபாவிற்கு மிக அருகில் தங்குமிடம் ஏற்பாடு செய்வதால் இந்த அளவு செலவாகிறது. கொஞ்சம் தூரத்தில் ஏற்பாடு செய்தால் இதே தரத்தில் லட்சங்களை குறைத்து 8ஐ 6ஆக கூட ஆக்கலாம் என்ற நிலை மக்காவில் உள்ளது. ஏகப்பட்ட ஹோட்டல்கள், புதுக் கட்டிடங்கள் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக உலகிலேயே நம் தமிழ் நாட்டு ஹாஜிகள் கஃபாவிற்கு மிக அருகிலேயே தங்குவதை விரும்புகிறார்கள். அஜீஸியாவில் தற்போது நிறைய வானுயரக் கட்டிடங்கள் இருக்கின்றன. மக்காவுக்கு ஒரு சாட்டிலைட் சிட்டி போன்று அரசாங்கம் அஜீஸியாவை டெவலப் செய்கிறது. ஹஜ் செய்யும் இடங்களுக்கு அருகிலும் அஜீஸியா இருப்பதால் அதிகமான ஹாஜிகள் வருங்காலத்தில் அங்கு தங்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
ஹஜ் செய்ய கடமைப்பட்டவர்கள், ஹஜ் செய்ய ஆசைப்படுபவர்கள் அனைவரும் ஓரளவு இளம் வயதிலேயே நல்ல உடல் நலத்தோடு ஹஜ் செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
ஹஜ்ஜுடைய ஐந்து நாட்களில் 4 நாட் கள், மினாவுடைய டென்டில் தங்க வேண் டும். மினாவில் 4 நாட்கள் தங்கும் இடங்கள் மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. ¾அடி அகலம் மட்டுமே உள்ள படுக்கைகள் ¾அடிஉயர ஸோபா போன்ற மடித்து வைக் கும் முறையில் உள்ளது. நெருக்கமாக அடுத் தடுத்து போடப்பட்டு அதற்கு செல்ல வேண்டிய பாதையும் மிகவும் குறுகலாக இருக்கிறது.
அடுத்து அரபாத்திலும் இதே போன்ற அமைப்பில்தான் உள்ளது. டென்ட் சைடு களிலும் அடைக்கப்பட்டு பு.ளீ. வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பகலில் வெயில் நேரத்தில் வியர்க்கவும் செய்கிறது. இந்த டென்ட்களில் ABCஎன்ற 3 தரத்தில் அமைத்திருக்கிறார்கள். வெவ்வேறு கட்டணங்கள். பெரும்பாலும் C தான் இருக்கிறது. பு,யக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டுமாம். C டென்டில் ஒரு அறையில் சுமார் ஆண்கள் 40 பேரும், அறையில் சுமார் 30 பேரும், புல் சுமார் 26 பேரும் தங்க ஏற்பாடுகள் இருக்கிறது. ஏர்கூலர் மட்டுமே. பு.யல் A/C. வைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் டென்ட் இரண்டு மூன்று பகுதிகள் ஒன்றாக ஆக்கப்பட்டு மிகவும் நெருக்கமாக அதே 1¾அடி அகல படுக்கைகள் தொடர்ந்து போடப்பட்டு செல்லும் வழிகள் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையில் மோசமாக உள்ளது நான் பார்த்தது தரத்தில் பு.ய,ல் சிறிது நன்றாக இருக்கும் என்றார்கள்.
ஆக இந்த ஐந்து நாட்களும் தங்குமிடங்கள் மிக நெருக்கமாகத்தான் இருக்கும். கழிவறைகள், குளிக்கும் அறைகள் கியூதான். நினைத்த நேரங்களில் உடனே கழிவறைகள், ஒழு செய்யும் வாய்ப்பு கிடைக்காது. பு,ய, டென்டுகள் குறைவாகத் தான் உள்ளது. முன்னரே எவர்கள் பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
எனவே, அவரவர் பொருளாதாரம், உடல்நிலை, மனநிலை இவற்றைப் பொறுத்து முன்னதாக கொஞ்சம் விசாரித்துக் கொள்வது நல்லது. ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்கள் முன்பு ஹஜ் கமிட்டியில் சென்று வந்தவர்களையும், தனியார் ஹஜ் சர்வீஸ் செல்பவர்கள், முன்பு தனியார் ஹஜ் சர்வீஸில் சென்று வந்தவர்களையும் அனுப வங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. அப்போதுதான் சிரமமின்றி ஹஜ் செய்ய முடியும். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)