இதெல்லாம் ஒரு அதிசயமா?
A.N திருச்சி
இந்திய முஸ்லிம்களில் பலர் இறைவன் ஒருவன்தான் என்ற நம்பிக்கையில் உண்மை யாக இருந்தாலும் மற்றும் குர்ஆன் தான் என ஏற்றுக்கொண்டாலும் மனோ இச்சைகளையும், மத புரோகிதர்களின் சொல்களையும், செயல்களையும் பலர் நம்பத்தான் செய்கிறார்கள். இந்த நம்பிக்கை தமிழகத்தில் பரவலாக இருக்கிறது.
அதாவது :
தமிழகத்தில் உள்ள பல பள்ளிவாசல்களில் அதிசயங்கள் (னிணூயூணூளீஸிசி) என ஒரு கண்ணாடி பிரேம்களில் சில போட்டோக்களை அல்லது பிளக்ஸ்போர்டுகளில் சில போட்டோக்களை (படங்களை) தொங்கவிட்டிருப்பார்கள். (இது நான்கு மத்ஹபுக்கு உட்பட்ட பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ள பல பள்ளிவாசல்களில் மட்டும் இதை காணலாம்) அத்தகைய படத்தில் உள்ள அதிசயங்கள் உண்மை என்றும் இது இஸ்லாம் இறை மார்க்கத்தில் உள்ள ஆதாரம் என்றும் சிலர் நம்புகிறார்கள். அல்லது நம்ப வைக்கப்படுகிறார்கள். (தமிழகத்தின் ஜமாத்துல் உலமா சபையும் இதை கண்டு கொள்வதில்லை, தடுக்கவும் இல்லை)
பல பாமர மக்கள் வழிகாட்டி நூலான குர்ஆனை ஓதினாலும் (படித்தாலும்), தொழுதாலும் இந்த அதிசயங்கள் என்ற படங்கள் மீதும் நம்பிக்கை வைக்கிறார்கள். சில பொய்யர்களின் செயலால் பலகீனமான இத்தகைய நம்பிக்கைக்கு முஸ்லிம்கள் பலர் ஆளாக்கப்படுகிறார்கள்.
உண்மையில் “இதெல்லாம் ஒரு அதிசயமா? என்றால் நிச்சயமாக இல்லை.
ஏனெனில் இதேபோன்ற அதிசயங்கள் ஏனைய இதர மதத்தினரும் அவர் அவர்களுக்குரிய நம்பிக்கை அடிப்படையில் சில படங்கள் (போட்டோக்கள்) சர்ச்சிலும், கோயில்களிலும் தொங்கவிட் டுள்ளார்கள். அதை பார்க்கும் பலர் அந்த மதத்தினரும் அவைகளை நம்புகிறார்கள். அதன் விளைவு தனது கடவுள் கொள்கை சரிதான் என நம்பிக்கையில் வாழ்கிறார்கள்.
இவை எதுவும் உண்மை அல்ல. இருப்பினும் எல்லா மதங்களிலும் இஸ்லாம் மார்க்கம் உள்பட பாமர மக்கள் மீது போலி நம்பிக்கையை புரோகிதர்களால் விதைக்கப்படுகிறது.
இறைவன் மீதும், இறைதூதர் மீதும் பெரும் பொய்யை கூறுபவர்களுக்கு கேடுதான் என இறைவன் தன் வழிகாட்டும் நூலில் (குர்ஆனில்) கூறியிருப்பதை பார்க்க கீழ்கண்ட வசனங்களை படியுங்கள்.
“நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள். அவர்கள் இறைநூலைக் கொண்டு (ஓதும்போது அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து) அதுவும் இறை நூலிள்ளது தான் என நீங்கள் எண்ணிக்கொள்ளும் பொருட்டு, தங்கள் நாவுகளைச் சாய்த்துக் கொள்கின்றனர். “அது இறை நூலில் உள்ளதல்ல, அது இறைவனிடமிருந்து (வந்தது)’ என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அது இறைவனிடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும், அறிந்துகொண்டே அவர்கள் இறைவன் மீது பொய்யைக் கூறுகிறார்கள்.” (3:78)
“பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் ஷைத்தான்கள் இறங்குகிறார்கள்.
“தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே.” (26:222,223)
“எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து இன்னும் உண்மையை அது தன்னிடம் வந்தபோது பொய்ப்பிப்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) நிராகரிப்பாளர்களுக்கு நரகில் தங்குமிடம் தான்!” (39:32)
(சத்தியத்தைப் புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான். (45:7)
சுமார் 1445 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம் என இறை வழி காட்டும் நூலில் (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளது. பார்க்க : வசனம் 5:3
மேலும் குர்ஆன் மட்டுமே இறைநூல் என்பதற்கும் பல வசனங்களின் மூலம் இறைவன் பறைசாற்றுகின்றான். உதாரணமாக:
அவைகள் வருமாறு :
1. மனித உடலின் தோல்களில்தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன. (4:56)
2. விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கம். (6:125)
3. கடல்கள் ஒன்றோடன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது. (25:53)
4.இரு கிழக்குகள், இரு மேற்குகள் உள்ளன என்று கூறி பூமி உருண்டை என்பதை நிரூபிக்கிறது. (37:5)
5. விரல் ரேகை மனிதனின் முக்கிய அடையாளம். (75:4)
6. தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை அதன் வயிற்றிலிருந்தே தேன் வெளியாக்கிறது. (16:69)
7. உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்தி லும் ஜோடி உண்டு. (13:3)
8. வான்மழை எவ்வாறு உருவாகிறது என் பது பற்றி முழு விபரத்துடன் விளக்குகிறது. (24:43)
9. இரும்பு பூமியல் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது. (57:25)
10. மனிதன் குரங்கிலிருந்து மனிதனாக மாறவில்லை என்பதற்கு. (3:59)
11. தாய்பால் ஊட்டுவதன் நன்மை. (2:233)
அல்குர்ஆன் (இறைநூல் தான்) என்பதற்கான சான்றுகள் பல உள்ளன.
1. குர்ஆனில் முரண்பாடு இல்லை என்றும் முரண்பாட்டை காட்டமுடியாது என்றும் அறைகூவல். (4:82)
2. குர்ஆனைப் போல் (யாராலும் எந்த தவறும் இல்லாத நூலை) இயற்ற முடியாது என்பதற்கு. (2:23-24)
3. குலப் பெருமை இஸ்லாத்தில் இல்லை. (49:13)
4. கடவுளை (இறைவனை) யாரும் பார்க்கவில்லை, பார்க்க முடியாது என கூறி இடைத்தரகர்களின் பொய்யை அம்பலப் படுத்தி உள்ளது. (2:55)
5. தீண்டாமையை வேரறுக்கும் இறை நூல். (80:1-12)
மேற்கண்டவைகள் அல்லாமல் இன்னும் பல சான்றுகள் உள்ளன. எனவே பொய்யான அதிசயங்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.