இறைவன் சொன்ன இறையாட்சியும்!
மனிதர்கள் செய்யும் மக்கள் ஆட்சியும்!!
S.H. அப்துர் ரஹ்மான்
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும். படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட் டும். அந்த ஒரே இறைவன் பெயரால்…
இறைவனின் ஆட்சியைக் குறித்த நம்பிக்கைகள் முன்பு அனுப்பிய இறை தூதர்களால் யூதம், கிறிஸ்தவம் ஆகியவற்றின் இறை நூல்களில் காணப்படுகின்றன. யூதர்களின் நம்பிக்கைப்படி, கடவுளே உலகத்தின் அரசர் ஆவார். அவர் என்றென்றும் ஆட்சி செய்கிறார். நீதித் தலைவர்கள் காலம் வரை, இஸ்ரவேலர்கள் கடவுளை மட்டுமே அரசராக நம்பி வாழ்ந்து வந்தனர்.
கிறித்தவத்தில் இறையாட்சி என்பது உண்டு இதை விண்ணக இறைவனின் ஆட்சி என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடு கிறது. விண்ணகம் வாழும் இறைவனின் ஆட்சி இந்த மண்ணகத்தில் மலர வேண்டும் என்பதே கிறிஸ்தவர்களின் இலக்கு. இறைவனின் திருஉள்ளப்படி செயல்படுவோரே இறையாட்சியில் பங்கு பெறுவர் என்று இயேசு கற்பித்திருக்கிறார்.
இறைவனின் நிலையான ஆட்சி பற்றி பழைய ஏற்பாட்டின் பல பகுதிகள் பின் வருமாறு விவரிக்கின்றன.
தோபித்து நூல் : “என்றும் வாழும் இறைவனே போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார், இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார். பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை.’ (5)
யோபு நூல்: “ஆட்சியும் மாட்சியும் இறைவனுக்கே உரியன; அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டு வார்.'(6),
திருப்பாடல்கள் நூல்: “ஆட்சி இறைவனுடையது; பிற இனத்தார் மீதும் அவர் ஆட்சி புரிகின்றனர்.’ (7)
“இறைவனே, எமதுஅரியணை; உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.’ (8),
“இறைவன் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; இறைவனின் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.’ (9)
இறையாட்சி என்றால் என்ன?
இந்த உலகத்தில் நடப்பது போல அல்லாமல், இங்கு இறைவனின் விருப்பப்படியே அனைத்தும் இருக்க வேண்டும். அதுவே இறையாட்சியில் அனைவரும் இறைவனின் சட்டத்தை பின்பற்றி இறை அடிமைகளாக வாழ வேண்டும்.
இஸ்லாத்தில் இறையாட்சி :
இஸ்லாத்தில் இறையாட்சி பற்றி இறைநூல் கூறுகிறது. நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அந்த இறைவனுக்கே உரியது. அந்த இறைவனையன்றி உங்க ளுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில் லையா?” (இறைநூல் 2:107 என்று கூறுகிறது.
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி இறைவனுக்கே உரியது; இன்னும் இறை வன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (இறைநூல் 3:189)
இதன்மூலம் அனைத்து இறைத் தூதரும் கூறியது நடைமுறைப்படுத்தி காட்டியது இறையாட்சிதான் என்று புரிகிறது. இறையச்சம் இல்லாத மனிதர்களே இறையாட்சிக்கு எதிரானவைகளாக இருப்பார்கள். அவர்களிடம் ஆட்சி தரப்பட்டால் என்னவாகும் என்று இறைவன் கூறுகிறான்.
இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாக மாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்கமாட்டார்கள். (இறைநூல் : 4:53)
இறையாட்சியின் அடிப்படை :
இறைவன் ஒருவனே அவனையே வணங்கவேண்டும், ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அவனுக்கே உரியது, அவனது சட்டங்களே இறுதியானதாகும், அதற்கு கட்டுப்பட்டு நடப்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இறைவனின் அரசியல் கொள்கையானது நான்கு அடிப்படை அம்சங்களில் உருவாக்கப்பட்டுள்ளது!
ஒன்று” ஆட்சியுரிமை இறைவனுக்குரிய தாகும்‘.
அதாவது உலகில் ஆட்சி புரிபவர் இறை வனின் பிரதிநிதியாக இருந்து அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்களை இறை வரம்பிற்குட்பட்ட வகையில் நிறை வேற்ற உரிமை பெற்றவர். இதனை அவர் மீறும்போது அவர் பாவியாக மாறுகின்றார்.
மேலும் இங்கு ஆட்சி புரிபவர் இறை நம்பிக்கை, நல்லொழுக்கம், நற்பண்பு போன்ற பல பண்புகளை கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகும். இவை பற்றி இறைநூல் 44, 47வது வசனங்கள் விளக்கு கின்றது.
இரண்டாவது அம்சம்:
“இறைவனால் வழங்கப்பட்டது மக்கள் பிரதிநித்துவமாகும். அது ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ உரித்துடையதல்ல என்பதாகும்.’
ஆனால் மனிதர்கள் விரும்புவது மக்கள் ஆட்சி மனிதர்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன் அடிப்படையில் நிறுவப்படும் ஆட்சி மக்கள் ஆட்சி. காலத் திற்கு ஏற்ப மாற்றம் செய்தும் அது நிறைவு அடையவில்லை. படைத்த இறைவனின் ஆட்சியும் அவனது சட்டங்கள் மட்டுமே மனிதர்கள் வாழ்க்கைக்கு சரியானதாக இருக்கமுடியும். மனிதன் குறைந்த அறிவு தான் வழங்கப்பட்டுள்ளான் அவனது அறிவு உலக ஆட்சிக்கு சட்டதிட்டம் வகுக் கும் அளவு இல்லை. எனவே இறைவன் எல்லா தூதருக்கும் வழிகாட்டியபடி இறை தூதர்கள் கூறியபடி படைத்த இறைவனின் ஆட்சியை நிறுவ இறை விருப்பத்துடன் மனிதர்கள் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
தூதரே! நீர் கூறுவீராக! “”மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அந்த இறைவனின் தூதராக இருக்கிறேன். வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது. அவனைத் தவிர நாயன் வேறு யாருமில்லை. அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான். ஆகவே, அந்த இறைவனின் மீதும், எழுதப்படிக்கத் தெரியாத அவன் தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், அவரும் அந்த இறைவனின் மீதும் அவன் வசனங்களின் மீதும் நம்பிக்கை கொள்கிறார். அவரையே பின்பற்றுங்கள். நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.” (இறைநூல் 7:158)