தலையங்கம் :
மிண்ணனு வாக்குப்பதிவை நம்பலமா?
அரசியல் என்பது சாக்கடை, அங்கு நல்லவர்கள் இருக்க முடியாது என்று காலம் காலமாக பேசபடுகிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் இதனால் ஏற்படும் விளைவு என்னவென்றால், “நாடு கெடுவது கெட்டவர்களால் அல்ல, நல்லவர்கள் ஓதுங்கி (அமைதியாக) இருப்பதால்தான்” என்று நிரூபணமாகி வருகிறது.
முன்பு சில அரசியல்வாதிகள் மீது நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தது போல் இப்போது மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதும் நம்பகத்தன்மை இல்லாமல் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. ஜனநாயக நாட்டின் தேர்தல் எதற்காக என்றால்? மக்கள் விரும்பும் வேட்பாளர்களை வெற்றிபெற வைத்து, வெற்றி பெரும் வேட்பாளர்களின் கட்சி பெரும் பான்மை பெற்று ஆட்சியில் அமரவேண்டும் என்பதே ஆகும்.
அதாவது மக்களாச்சி முறையின் தத்துவம் இதுவே ஆகும்.
ஆனால் இப்போது தேர்தல் ஆணையத்தின் மீதும், தேர்தல் நடைமுறையில் இருக்கும் EVMன் மீதும் மக்கள் மத்தியில் ஒருவித சந்தேகத்தையும், வெறுப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அதாவது தேர்தல் ஆணையம் சில அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் (INDIAN ELECTION COMMISSION) என்பது 1950ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்படி பிரிவு 324படி நிறுவப்பட்டது. இந்த விதியின்படி தேர்தல் ஆணையத்திற்கு குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) குடியரசுத் துணை தலைவர் (உதவி ஜனாதிபதி), நாடாளுமன்றம், மற்றும் மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தவும், கட்டுப்படுத்தவும், மேற்பார்வை இடவும் அரசியல் அமைப்பு அதிகாரம் வழங்கி இருக்கிறது. அதாவது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் தேர்தல் ஆணையத்திற்கு முக்கிய பங்கு உண்டு என்பதாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடை முறையில் இருந்துவந்த வாக்குசீட்டு முறையில் சில குறைபாடுகளும் இருந்தன. அவை என்னவென்றால்:
1. கள்ள ஓட்டுகள் போடுவது,
2. ஓட்டு பெட்டிகளை மாற்றுவது,
3. ஓட்டு எண்ணிக்கையின் போது ஏற்படும் தாமதம்,
4. தேர்தல் முடிவு அறிவிப்பதில் தாமதம்,
5. இழுபறி நிலைகளினால் பல வழக்குகள்,
6. ஓட்டு பெட்டிகளை பாதுகாத்தல்,
7. செல்லும் ஓட்டு, செல்லாத ஓட்டு என்று தீர்மானித்தலில் குளறுபடிகள்,
மேலும் சில பிரச்சனைகளை முன் வைத்து தேர்தல் ஆணையம் EVM தான் சிறந்தது என வாதிடுகிறது. எவ்வாறு என்றால்,
வாக்காளர்களின் ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, வாக்காளர்தான் தேர்வு செய்ய விரும்பும் சின்னத்தின் பொத்தானை அழுத்தியவுடன் “பீப்‘ என்ற சத்தம் வாக்கு பதிவாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்தும். இந்த முறை படித்த, படிக்காத மக்கள் அனைவருக்கும் எளிதாக இருக்கிறது. மேலும் இத்துடன் VVPAT ¨ÐD VOTER VERIFIABLE PAPER AUDIT TRAIL என்ற இயந்திரமும் சில சிVனிவுடன் இணைக்கப்பட்டுள்ன. இதன்மூலம் வாக்காளர் தனது வாக்குதான் விரும்பிய வேட்பாளருக்கே சென்றது என்பதையும் அறிந்து கொள்ளலாம். எனவே EVMதான் சிறந்தது என்பது தேர்தல் ஆணையத்தின் வாதம்.
ஆனால் சிVனிஐ விரும்பாத மக்களின் வாதம் என்னவென்றால்:
சிVனிஐ தவிர்த்துவிட்டு வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்தலாம் என்பதுதான். ஏன் என்றால்: சிVனி நடை முறைப்படி பாதுகாப்பானது என்று கூறப்பட்டாலும் இதனை “ஹேக்கிங் செய்து‘ Automatic 10 முதல் 20 சதவீதம் வரை விழும் வாக்குகளை தேர்தல் கமிசனுக்கு தெரிந்தோ, தெரியாமலோ சிலர் தாங்கள் தீர்மானிக்கின்ற சின்னத்திற்கு மாற்றி விழ வைக்க முடியும் என்பதுதான் இன்றுள்ள EVM மீதுள்ள சந்தேகம்.
இதற்கு உதாரணமாக கடந்த பல மாநில தேர்தலில் சில மாநிலங்களில் முன்பு வெற்றி பெற்ற வேட்பளர்கள் குறைந்த வித்தியாசத்தில் (10 மிலி 20 சதவீதம்) தோல்வியுற்று வெற்றி வாய்ப்பை இழந்திருப்பதால் EVM மீது பல சந்தேகங்களை கூறியுள்ளனர்.
அதாவது மேற்படி (ஹேக் செய்வதை) வாக்கு மாற்றி வேறு சில குறிப்பிட்ட சின்னத்திற்கு பதிவானது போல் செய்வதை, வாக்குச் சாவடி மையங்களில் இருந்து கொண்டுதான் செயல்படுத்த வேண்டும் என்பது இல்லை. ஏற்கனவே EVMல் உள்ள சிப்–ல் பதிவான வாக்கு களிலிருந்து Automatic ஆக 10-20 சதவீதம் வாக்குகளை மாற்றிக்கொள்ள முடியும் என்பதுதான் இதில் உள்ள மிகப் பெரிய குற்றச்சாட்டு.
ஆனால் இதனை தேர்தல் ஆணையம் மறுத்து EVMகளை “ஹேக்‘ செய்யமுடியாது எனக் கூறிவருகிறது.
இதற்கு தீர்வுதான் என்ன?
இறை நூலான அல்குர்ஆனிலும், மற்றும் இறுதி தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முறையிலும் ஒரு விசயத்தில் சந்தேகம் என்று வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
“இறை நம்பிக்கையாளர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள், ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன” அல்குர்ஆன் 49:12
பொதுவாக சந்தேகம் கொள்வதை மார்க்கம் தடுக்கவில்லை, மாறாக அதிகமாக சந்தேகம் கொள்வதும், சந்தேகமானதை பின்பற்றுவதும் தான் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளன.
அதாவது ஒரு மனிதருக்கு அல்லது ஒரு குழுவினருக்கு அல்லது ஒரு சமுதாயத்திற்கு அல்லது ஒரு பொருளின் மீது எந்த செய்தி கிடைத்தாலும் அந்த செய்தி கிடைத்த வழி நம்பகமானதா? இல்லையா? என்று பார்ப்பது நமது கடமையாகும். அதுவே நம்பகமானது இல்லை என்றால் முடிவு எடுப்பதற்கு முன்பு சரியானதா? இல்லையா? என்று நான்கு உறுதி செய்து கொள்வது நல்லது.
அரசு இவ்விருமுறைகளிலும் மக்களுக்கு சந்தேகம் இருப்பதால் இரண்டையும் தவிர்த்து இதைவிட சரியான சந்தேகம் இல்லாத புதிய வாக்கு அளிப்பு முறையை அறிமுகப்படுத்துவது இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வாக அமையும்.