முஸ்லிம்-முஸ்லிமீன்-முஸ்லிமன்-முஸ்லிமத்தின்-

in 2024 ஏப்ரல்

முஸ்லிம்முஸ்லிமீன்முஸ்லிமன்முஸ்லிமத்தின்

முஸ்லிமத்தன்முஸ்லிமைனி என்பது குறித்து

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2024  மார்ச்  தொடர்ச்சி….

உமர்(ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டபோது, “நபி(ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்தால் உங்களை விடவும் சிறந்த முஸ்லிமான துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தரமுடியும்என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த(த் திருக்குர்ஆன் 66:5வது) இறைவசனம் அருளப்பட்டது. (புகாரி : 4916, 402, 4481, தஃப்சீர் இப்னு கஸீர்: 9:501-516)

அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களும் அவ்வாறே நமக்குக் கட்டளையிட்டுள் ளார்கள்”:

ஹாரிஸ் அல்அஷ்அரீ(ரழி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்யார் அறியாமைக்கால வழக்கப்படி (பிறரை) அழைக்கிறாரோ அவர் நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டி ஊர்ந்து செல்பவர்களில் (அல்லது எரிபொரு ளாகிய கற்களில்) ஒருவராக இருப்பார்என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் 

அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பு நோற்று, தொழுகையை நிறைவேற்றினாலுமா?” என்று கேட்க அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்ஆம்! அவர் நோன்பு நோற்று, தொழுகையைக் கடைப்பிடித்தாலும் சரியேஎன்று பதிலளித்தார்கள். பின்னர் நபியவர் கள்முஸ்லிம்கள்” “இறை நம்பிக்கையாளர்கள்” “அல்லாஹ்வின் அடியார்கள்என எவ்வாறு அல்லாஹ் உங்களுக்குப் பெயர் சூட்டியிருக்கின்றானோ அவ்வாறே (நீங்களும்) அழையுங்கள் என்று கட்டளையிட்டார்கள். (திர்மிதி, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 6:137,143) இன்னும்;

முஸ்லிம்களுக்குநன்மாராயமாகவும் அல்குர்ஆன்  அருளப்பட்டுள்ளது:

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த அந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர் சாட்சியை அவர்களுக்கு எதிராக எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம். மேலும், இந்நெறிநூலை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்குர்ஆன் 16:89) என்று உயர்ந்தோன் அல்லாஹ் தெரிவிக்கின்றான்.  மேலும்,

நமக்கும் அவ்வாறே அல்லாஹ் கட்டளையிடுகின்றான் :

(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விசயத்தின் பக்கம் வாருங்கள்: (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்கமாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ளமாட்டோம் எனக் கூறும்; (முஃமின்களே இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்! என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன் 3:64)  இது குறித்து;

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அபூ சுஃப்யான்(ரழி) எனக்கு அறிவித்த தாவது; (குறைஸியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபியா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன்  ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) யஹராக்ளியஸிற்கு கடிதம் கொண்டு வரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்களிட மிருந்து திஹ்யா அல் கல்பீ அவர்கள் கொண்டுவந்து, புஸ்ராவின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை யஹராக்ளியஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அதில் பின்வருமாறு  எழுதப்பட்டிருந்தது.

அளவற்ற அருளாளன், கருணையன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் யஹராக்ளிய ஸுக்கு (எழுதப்படும் கடிதம்)

நேர்வழியைப் பின்பற்றிய0வர் மீது (இறைவனின்) சாந்தி பொழியட்டும், நிற்க, நான் உங்களை இஸ்லாத்தை ஏற்(று முஸ்லிமா)கும்படி அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக) உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், உங்கள் குடிமக்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்(று முஸ்லிமா)காமல் போவதின் குற்றமும்)  உங்களையே  சேரும்.

இறைநூல் வழங்கப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு கொள்கையின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் நாம் வணங்கமாட்டோம். எதனையும் (எவரையும்) அவனுக்கு இணையாக்கமாட்டோம். அல்லாஹ்வை விட்டுவிட்டு நம்மில் ஒருவர், மற்றவரைக் கடவுளாக ஆக்கிக்கொள்ள மாட்டோம் (என்பதே அந்தக் கொள்கை), அவர்கள் (இந்த அழைப்பைப்) புறக்கணிப்பார் களாயின், “நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாயிருங்கள் என்று (அவர்களிடம்) கூறிவிடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. (நீண்ட ஹதீஃதின் சுருக்கம்,புகாரி: 2941, 4553, 7,51, 2681, 2804, 2941, 2978, 3174, முஸ்லிம், முஸ்னது அஹமத், தஃப்சீர் இப்னு கஸீர்: 2:118-121) மேலும்,

அவர்கள் உங்களுக்கு பதிலளிக்காவிட்டால், அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது. இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிகின்ற முஸ்லிம்களாக இருப்பீர்கள் அல்லவா? (என்று கூறவும்) அல்குர்ஆன் 11:14. என்று இந்த வசனம் கேட்கிறது. அதாவது; இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மக்கா இணை வைப்பாளர்கள் ஏற்க மறுத்து விதண்டாவாதம் புரிந்தது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறுமுகமாக அல்லாஹ் இதனை எடுத்துரைக் கின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர்: 4:596)

இன்னும் கால்நடை(ப் பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும்படிச் செய்வதற்காகவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே எங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் (முஸ்லிமாக) வழிப்படுங்கள்; (என்று நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 22:34) அதாவது; முஸ்லிமாக இருந்த ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும், குர்பானியை நாம் ஏற்படுத்தி யுள்ளோம் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர்: 6:74-77)

———————————-

அறிந்து கொள்வோம்!

S.H. அப்துர் மர்யம்பீ, குண்டூர்

1. மறுமையில் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்படுபவர்கள் யார்? 

காஃபிர்கள். அல்குர்ஆன் 15:2

2. அப்துல் முத்தலிப் என்பவர் நபி(ஸல்) அவர்களுக்கு எந்த உறவு முறை?

தந்தைவழிபாட்டனார். ஆதாரம்: முஹம்மத் என்ற நூலின் 72ம் பக்கம்.

3. நபி(ஸல்)அவர்களை வளர்ப்பதில் பங்கு கொண்ட நீக்ரோ அடிமைப் பெண்ணின் பெயர்? 

பரகா.  முஹம்மத் நூலின் பக்கம் 73

4. நபி(ஸல்) அவர்கள் தந்தை அப்துல்லாஹ் தனது குடும்பத்தாருக்கு விட்டு சென்ற சொத்துக்கள் எவை? 

ஐந்துஒட்டகங்கள், சிறிய ஆட்டு மந்தை, நீக்ரோ அடிமைப் பெண் பராகா. ஆதாரம்: முஹம்மத் நூலின் பக்கம் 73.

5. நபி(ஸல்) அவர்களின் தாய் வழிப் பாட்டனார் யார்?

இப்னு  கிளாப். ஆதாரம்: முஹம்மத் நூலின் பக்கம் 73

6. இறை நம்பிக்கையில் பாதி எது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

தூய்மை.   முஸ்லிம்:381

7. இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு எதனை நினைவுபடுத்த நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

லாஇலாஹாஇல்லல்லாஹ்எனும்கலிமாவை. முஸ்லிம்: 1672

8. ரமழான் மாதம் வந்துவிட்டால் எந்த வாயில்கள் திறக்கப்படுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

சொர்க்கத்தின்  வாயில்கள்.  முஸ்லிம்:1956

9. பரீத் என்றால் என்ன?

பயணதூரத்தின்அளவு. புகாரி: பாடம் 4, ஒரு பரீத் என்பது 12  மைல்கள்.

10. கஸ்ர்  தொழுகை  என்றால்  என்ன?

சுருக்கித்  தொழுதல். பாடம் 5, புகாரி

11. வாகனத்தில் செல்லும்போது கிப்லா எதுவாக  வைத்து  தொழவேண்டும்?

வாகனம்எந்ததிசையில்செல்கிறதோஅதுவே  கிப்லா.  புகாரி: 1094

12. லைலத்துல் கத்ர் அன்று யாருடைய நெற்றியில் களிமண் அடையாளத்தைப் பார்த்ததாக அபூ ஸயீத்(ரழி) அவர்கள் கூறினார்கள்?

நபி(ஸல்)  அவர்களின்  நெற்றியில்.  புகாரி: 2016

13. கடனை திருப்பிச் செலுத்தும் எண்ண மின்றி இருப்பவனை அல்லாஹ் என்ன செய்வான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்? 

அழித்துவிடுவான்.  புகாரி: 2387

14. மக்களில் சிறந்தவர் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

தான்வாங்கியகடனைஅழகியமுறையில்திருப்பிச்செலுத்துபவர். புகாரி: 2392

15. கண்டெடுக்கப்பட்ட பொருளை எத்தனை ஆண்டுகள் பொது அறிவிப்பு தரச் சொல்லி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

ஒருஆண்டுதொடர்அறிவிப்புதரச்சொன்னார்கள்.  புகாரி: 2429

16. அக்கிரமகாரனுக்கு எப்படி உதவி செய்ய நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

அவனதுகைகளைப்பிடித்து.  புகாரி : 2444

17. அஷ்ஷிஃரா என்றால் என்ன என அல்லாஹ்  கூறுகிறான்?

கவிஞர்கள். அல்குர்ஆன் அத்தியாயம் :26

18. பிர்அவ்னின் மனைவி (ஆசியா) அல்லாஹ்விடம் எவ்வாறு துஆ செய்தார்கள்?

சுவனத்தில்எனக்குஒருவீடுஅமைத்துதருவாயாகஎன்றுபிரார்த்தனைசெய்தார்கள்.   அல்குர்ஆன் 66:11

19. முகமன் என்றால் என்ன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

சலாம். முஸ்லிம் : 4364

20. தொழும் திடலில் எதனை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்?

பெருநாள்தொழுகைக்குமுன்பும், பின்பும் தொழ தடுத்தார்கள். முஸ்லிம் : 1616

 

Previous post:

Next post: