அல்குர்ஆன் வழியில் அறிவியல்….
விண்ணையும் மண்ணையும் பிரித்தவன் யாரு?…
K.K.H. ஹழரத் அலி
மறு பதிப்பு : மார்ச் மாத தொடர்ச்சி….
பூமிப்பந்து விரிந்தது எப்படி?
“இன்னும் (பூமியை) நாம் அதனை விரித் தோம்; எனவே இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.” அல்குர்ஆன் 51:48
“இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)” அல்குர்ஆன் 88:20
“பூமியின் மீதும், இன்னும் அதை விரித்த தின் மீதும் சத்தியமாக….” அல்குர்ஆன் 91:6
என்றுபலஇடங்களில்பூமியைவிரித்ததைஅல்லாஹ்விரிவாகக்கூறுகின்றான். வானத்தை விரித்ததை நம்மால் எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. ஏனெனில் பரந்த வெற்றிடம் ஆகவே விண்வெளி விரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் உருண்டையாக உள்ள பூமிப்பந்தை எப்படி விரிக்க முடியும்? “உண்மையல்லாததை அல்லாஹ் கூறமாட்டானே” என்று நாம் நிதானமாக சிந்திக்கும்பொழுது, அறிவியல் ரீதியாகவே பூமி விரிந்ததை அறிந்து ஆச்சரியப்படுகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!
இன்று நாம் வாழும் பூமியானது, ஆர்ட்டிக், அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா என்ற ஐந்து கண்டங்களாக உள்ளது. இக்கண்டங்களை பெருங்கடல்கள் இடையே பிரிக்கின்றன. தனித்தனியே கடல்களால் பிரிக்கப்பட்ட நிலப்பகுதியில் நாம் வாழ்கின்றோம். இன்று நாம் வாழும் உலகம் போல் ஆரம்பத்தில் பூமி இருக்கவில்லை.
பான்கியா, வாரேசியா, கோண்டுவானா:
இன்று நம் பூமியில் ஐந்து கண்டங்களும், ஐந்து கடல்களும் உள்ளன. ஆனால் இன்றி ருப்பதுபோல் சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமி இருக்கவில்லை. அன்று ஒரே கண்டம், ஒரே கடல்தான். ஆம்! பூமியானது உருண்டை வடிவ ஒட்டுமொத்த கோள வடிவ பாறை போன்றிருந்தது. அதைச் சுற்றி ஒரே கடல் மட்டுமே. பின்பு படிப்படியாக பிரிந்து விரிந்து இன்றைய நிலையில் உள்ளது.
200 மில்லியன் வருடங்களுக்கு முன் இருந்த ஒரே கண்ட பூமிக்கு கிரேக்க மொழியில் பான்கியா என்று பெயர். இப்பெயருக்கு உள்ள பொருள் “ஒட்டுமொத்த நிலம்” என்பதாகும். அன்றிருந்த ஒரே பெருங்கடலுக்கு பான்தலாசா என்று பெயர்.
ஒன்றாக இருந்த பான்கியா நிலப்பரப்பு, 190 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இரண்டு மாபெரும் கண்டங்களாய் பிரிந்தது. வாரேசியா, கொண்டுவானா என்ற மாபெரும் கண்டங்களாய் பிரிந்து விரிந்தது. இன்றுள்ள ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்கா, அரேபியா, இந்தியா, தென் அமெரிக்கா, ஓசியானியா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய அனைத்தும் இணைந்திருந்த மாபெரும் கண்டத்திற்கு கோண்டுவானா என்று பெயர்.
கண்டங்களின் நகர்ச்சிக் கோட்பாடு :
இன்று நாம் காணும் புவிப்பரப்பு கடந்த காலங்களை விட அடியோடு மாறிவிட்டது. 1915-ல் ஆல்ஃபிரெட் வேக்னர் (1880-1930) எனும் ஜெர்மானிய அறிஞர் “கண்டங்களில் நகர்ச்சிக் கோட்பாடு” எனும் கொள்கையை வெளியிட்டார். பூமி எவ்வாறு விரிவடைந்தது என்பதை தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்தார்.
இன்று பனி மூடியிருக்கும் அண்டார்டிகா கண்டமானது 160 மில்லியன் வருடங்களுக்கு முன் மழைக்காடு நிலமாக இருந்தது. இன்றிருக்கும் ஆப்பிரிக்கா கண்டத்தில் அன்று பனிப்பாறைகள் மூடியிருந்தன.
நமது புவிப்பரப்பு ஏழு பெரும் டெக்டானிக் பிளேட்களாக சிறிது சிறிதாக பிரிந்து விலகிச் சென்று அதாவது பூமி பிளேட்களின் தடிமன் 64 (40 மைல் கனம்) இவை வருடத்திற்கு அரை அங்குலம் முதல் நான்கு அங்குலம் வரை (12mm to – 100mm) நகர்ந்து கொண்டிருக்கின்றன.
முதன் முதலில் கோண்டுவானா பிரிந்த பொழுது அதிலிருந்து தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா கண்டம் பிரிந்து விரிந்து சென்றது. அடுத்து ஆப்பிரிக்காவிலிருந்து மடகாஸ்கர் தனியாக பிரிந்தது. இதுபோல் லாரேசியாவிலிருந்து வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்கள் பிரிந்து விரிந்து சென்றன. கிரீன்லாந்து தனியாக போய்விட்டது.
வருடத்திற்கு 25துது (ஒருஅங்குலம்) அளவில் சிறிது சிறிதாக பிரிந்த இந்தியா ஆசியா கண்டத்துடன் சேருவதற்கு 55 மில்லியன் வருடங்களாயின. இந்தியா துணைக் கண்ட டெக்டோனிக் பிளேட் தொடர்ந்து நகர்வதால் அந்த அழுத்தத்தின் நெருக்குதல் காரணமாக இமயமலை தொடர்களும் மிக உயரமான திபெத் பீட பூமியும் ஏற்பட்டது. இறுதியாக 50 மில்லியன் வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியா கண்டம் அண்டார்டிகாவிலிருந்து பிரிந்து விலகி விரிந்துள்ளது.
உலகம் அன்று ஒரு ஜுராஸிக் டைனாசரஸ் பார்க்:
இப்பொழுதும் நமது புவிப்பரப்பு நகர்ந்து, அதாவது விரிந்து கொண்டுதானிருக்கிறது. இதே அளவில் தொடர்ந்து 50 மில்லியன் வருடங்களில் நகரும்பொழுது சைபீரியாவும் அலாஸ்காவும் ஒன்று சேர்ந்து விடும்.
இப்படி நமது பூமி விரியும் நிகழ்ச்சியானது பல யுகங்களுக்கு முன்னாலிருந்து இன்று வரை தொடர்கிறது. இந்த நகர்வின் தாக்கத்தாலேயே பூகம்பங்கள், எரிமலை வெடித்தல் போன்றவையும் ஏற்படுகின்றன. அறிவியல் ஆய்வாளர்கள் பூமி விரிவதை ஆறு யுகங்களாக பிரித்துள்ளனர். அவை, Azoic Archeozoie, Preterozoie என்ற மூன்று யுகங்களும் பூமி தோன்றிய பின் நான்கு பில்லியன் வருடங்களில் முடிந்துவிட்டன. நான்காவது யுகமான Paleozoic யுகமானது 600 மில்லியன் வருடத்திலிருந்து 225 மில்லியன் வருடம் வரை நீடிக்கிறது. Mesozoic யுகமான 225 மில்லியன் வருடத்திலிருந்து 65 மில்லியன் வருடம் வரை நீடித்தது. இந்த யுகத்தில் தான் கண்டத்திட்டுகள் (Continental Drift Teetinoe Plates) நகரத் தொடங்கின. கடைசி ஆறாவது யுகமானது இன்று நாம் வாழும் யுகமாகும். இது 65 மில்லியன் வருடத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது.
சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன் இப்பூமியில் மனிதர்களை அல்லாஹ் படைக்கவில்லை. இப்பூமியில் பெரும் விலங்கினமான டைனாசரஸ் இராட்சத பிராணிகளே உலகை ஆண்டன. மனிதர்கள் வாழ தகுந்ததாக அப்பொழுது இருக்கவில்லை. இந்த யுகத்தை “ஜுராசிக் யுகம்‘ என்றும் அழைப்பாளர்கள்.
இவ்வாறு மிக நீண்ட யுகங்களுக்குப் பின் பூமியானது நகர்ந்து விரிந்து இறுதி பனி யுகத்தில் பனிப்பாறையாக இருந்த பூமி சிறிது சிறிதாக உருகி பெரும் ஆறுகளாக ஏரிகளாக நீர் நிலைகளாக மாறியது. மனிதன் நன்கு வாழ தகுந்த பூமியாக இவ்வாறு அல்லாஹ் மாற்றினான். “பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்தே அதன் தண்ணீரையும் அதன் மீதுள்ள மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். அதில் மலைகளையும் அவனே நிலைநாட்டினான்.” (அல்குர்ஆன் 79:30,32)
இன்றுள்ள பெரும்,பெரும் மலைகளான, ஆல்ப்ஸ், ஆண்டிஸ், இமயமலைத் தொடர்களெல் லாம் யுகத்தில் அதாவது பூமி கண்டங்கள் நகர்ந்து விரிந்த பின்பே மலைத் தொடர்கள் ஏற்பட்டன. இதற்கும் காரணம் உள்ளது. தனித்தனியாக பிரிந்து விரிந்த கண்டங்கள் பூமியின் சுழற்சி வேகத்தில் அசைந்து விடாதிருக்க, மலைகளை அல்லாஹ் முளைகளாக நாட்டினான்.
“பூமியின் மீது… அது உங்களைக் கொண்டு அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை உறுதியாக அவன் அமைத்தான்”. அல்குர்ஆன் 16:15
இவ்வாறு, பூமி விரிந்த கொள்கைக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. குறிப்பாக 1963ல் வைன், மாத்யூ எனும் இரு கடலாய்வு அறிஞர்கள் கடல் படுகைகளை ஆய்வு செய்து “பூமி விரிந்த கொள்கையை” நிரூபித்தர்கள். அதாவது, கண்டங்களின் நிலப்பரப்பில் உள்ள மலைகள் பாறைகளின் வயதை விட, கடலின் தரைப்பகுதியில் காணப்படும் பாறைகள் மிகக் குறைந்த வயதுள்ளதாக அறிவித்தார்கள், பூமி நகரும் பொழுது ஏற்படும் இடைவெளிகளில் வழியாக பூமியின் உட்பகுதியில் உருகிய நிலையில் இருக்கும் லாவா எரிமலைப் பாறை குழம்புகள் கடலிற்கு தரை தளங்களாக மாறியது. எனவே நிலப்பகுதியில் முன்பே உள்ள பாறைகளை விட இடையில் வந்த எரிமலைக் குழம்புப் பாறைகள் வயது குறைவு.
மேலும் உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட பிராணிகள் மற்றும் செடி, கொடிகளின் படிமங்களும் பூமி விரிந்ததை உண்மைப்படுத்தின.
உதாரணமாக “கோண்டுவானா‘ மாபெரும் கண்டத்தில் இணைந்திருந்து பிரிந்த ஆஸ்திரேலியாவில், இன்றளவும் “பாங்க்ஸியா‘ (Banksia) எனும் தாவரத்தின் படிமங்கள் (Fossils) இன்று அண்டார்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த படிமத்தின் வயது 50 மில்லியன் வருடங்கள். ஆதாரம் : National Geographie, July 2000 P.12
இன்று கண்டங்கள் பிரிந்துள்ளதா? அல்லது விரிந்துள்ளதா?
ஒவ்வொரு கண்டங்களும் இன்று தனித் தனியாக பிரிந்திருப்பது போன்று தோன்றினாலும் உண்மையில் அவை முற்றாக பிரிந்துவிடவில்லை. அவை விரிவடைந்திருக்கிறது. விரிவடையும் பொழுது ஏற்படும் தாழ்வான பள்ளங்களில் கடல் நீர் புகுந்துவிட்டது; உதாரணமாக ஒரு கனமான ரப்பர் துண்டின் இரு முனைகளையும் எதிரெதிர் திசையில் இழுக்கும்பொழுது, ரப்பர் துண்டு விரிவடைகிறது. அதன் இரு ஓரங்களும் அதே தடிமனில் இருக்கும் ஆனால் மையப் பகுதியில் உள்ள ரப்பர் துண்டு கனம் குறைந்து மெல்லியதாக இருக்கும். இதுபோன்ற ஒரு நிலையிலேயே பூமி விரிந்துள்ளது. இரு கண்டங்களையும் இணைக்கும் கனம் குறைந்த தாழ்வுப் பகுதியில் கடல்நீர் சூழ்ந்து உள்ளது. நிலப்பகுதியில் உள்ள பூமியின் கனமானது சராசரி 40கி.மீ. தடிமனுள்ளது. அதேசமயம் கடலுக்கு அடியில் உள்ள நிலப்பரப்பின் தடிமனானது 10 அல்லது 12 கி.மீக்கு மேல் தடிமனாக இல்லை. ரப்பர் துண்டை இழுத்து விரிப்பது போல் அல்லாஹ் பூமியை விரித்துள்ளான்.
ஆகவேஇன்றுள்ளகண்டங்கள்தனித்தனியேகடல்களால்பிரிந்திருப்பதுபோன்றுதோன்றினாலும்உண்மையில்கடலின்தரைப்பகுதிநிலப்பரப்புஎல்லாகண்டங்களையும்இணைந்துள்ளது. ஒன்றாக இருந்த பூமியை அல்லாஹ் விரித்துவிட்டான். “மேலும் பூமியை… அதன் பின் அவன் அதை விரித்தான்.” அல்குர்ஆன் 79:30
மிதக்கும் மிதவையில், கடல்களும் கண்டங்களும்:
பூமியின் மேற்பரப்பில் நாம் உறுதியாக நிலைபெற்றிருப்பதாக தோன்றினாலும் உண்மை அதுவல்ல. கடலில் மிதக்கும் மிதவைகள் போன்றே பூமியின் மேற்பரப்பு அமைந்துள்ளது. பூமியின் உள்ளமைப்பானது நான்கு அடுக்குகளாக உள்ளது. (Lithosphere) லித்தோஸ்பியர் எனப்படும் மேல் தகட்டின் கனம் 50 மைல்கள். இதிலிருந்து 1745 மைல் ஆழம் வரை உள்ளவை மாண்டில் (Mantle) எனப்படும். நடு உறை உள்ளது இதிலிருந்து 2164 மைல் ஆழத்தில் உள்ளகம் (Iron rich core) உள்ளது. இதன் வெப்பநிலை 4500O உறையின் மேல் தகட்டில் சுமார் 250வது ஆழம் வரை இளகின பாகு கோளம் (Asthemoshere) படர்ந்திருக்கிறது. நடு உறைக்கு ஒரு நெகிழ்வுத் தன்மையை ஊட்டுவது இக்கோளமே.
இதனாலேயே பூமியின் மேற்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் கடல்களும் கண்டங்களும் இளகின பாகு கோளத்தில் மிதவைகள் மாதிரி இலேசாக நகர்ந்து விரிந்து சென்றவண்ணம் இருக்கின்றன. ஆக முன்பு ஒன்றாக இருந்த பூமி இவ்வாறே படிப்படியாக விரிந்து தனித்தனி கண்டங்களாக மாறின. இந்த அறிவியல் உண்மைகள் 20ம் நூற்றாண்டில்தான் அறியப்பட்டன. ஆனால் 6ம் நூற்றாண்டில் இருந்து அல்லாஹ்வின் அருள் மறையாம் திருமறை இவ்வுண்மைகளை உரைத்துக் கொண்டிருக்கிறது.
மனிதர்களைசிந்திக்கச்சொல்லிசீர்திருத்தும்உயர்வேதமானஅல்குர்ஆன், இதோ பேசுகிறது, உங்களைப் பார்த்து….
“மேலும் அவன் எத்தகையவன் என்றால், பூமியை விரித்து, அதில் உறுதியான (பெரிய, பெரிய) மலைகளையும் (நீண்ட) ஆறுகளையும் அவன் ஆக்கினான். ஒவ்வொரு கனி வர்க்கத்திலிருந்தும் (இருவகைக் கொண்ட) ஜோடிகள் இரண்டை அதில் உண்டாக்கினான்; இரவைப் பகலால் அவன் மூடுகின்றான்; சிந்திக்கக் கூடிய கூட்டத்தினருக்கு நிச்சயமாக, இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” அல்குர்ஆன் : 13:3
“சிந்தித்துணரக்கூடிய மக்களுக்கு நாம் (நம்முடைய) வசனங்களை இவ்வாறே (தெளிவாக) விவரிக்கிறோம்” அல்குர்ஆன் :10:24