அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. கவ்ஸர் என்னும் நீர்தடாகத்தின் அளவு என்ன?
ஒரு மாத பயண தூரம். (புகாரி: 6579)
2. எந்த நேரத் தொழுகையை தொழுவதால் இரு மடங்கு நன்மை கிடைக்கும்?
அஸர் தொழுகை. (முஸ்லிம் : 1510)
3. அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு இறந்தோரை உயிர்ப்பித்த நபி யார்?
ஈஸா(அலை). (அல்குர்ஆன் 5:110)
4. நாம் எதனை நினைவு கூறவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மரணம். (திர்மிதி : 2307)
5. இப்றாஹிம்(அலை) அவர்கள் காலத்து மக்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தார்?
சிலைகளை. (அல்குர்ஆன் 26:71)
6. மறுமையில் பயபக்தியுடையோருக்கு அருகில் எது கொண்டுவரப்படும்?
சுவனம். (அல்குர்ஆன் 26:90)
7. ஒரே இனத்தை சேர்ந்த இரண்டின் நடுவே தடுப்பு இருப்பதாக எதை அல்லாஹ் கூறுகிறான்?
கடல்கள். (அல்குர்ஆன் 55:19, 20)
8. நீண்ட காலம் நோயுற்று பொறுமை காத்த நபி யார்?
அய்யூப்(அலை) (அல்குர்ஆன் 21:83, 84)
9. எந்த நபியின் மகன் நிராகரிப்பாளன் என அல்லாஹ் கூறுகிறான்?
நூஹ்(அலை) (அல்குர்ஆன் 11:42,43)
10. நரகவாசிகள் சொர்க்கவாசிகளிடம் எதை கேட்பார்கள்?
தண்ணீர் அல்லது உணவு. (அல்குர்ஆன் 7:50)
11. நபி(ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அன்சாரிகள் கூடிய இடம் எது?
பனூசாயிதாசாவடி. (புகாரி : 2462)
12. முதல் முதலில் மண்ணறையை பிளந்து உயிர்த்து எழுபவர் யார்?
முஹம்மத் நபி (ஸல்). (முஸ்லிம் : 4575)
13. புர்கானின் நாள் என்று அல்குர்ஆனில் குறிப்பிடும் போர் எது?
பத்ர்போர். (அல்குர்ஆன் 8:41)
14. எதனை எதிர்பார்த்து உதவி செய்யாதீர்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
ஆதாயம். (அல்குர்ஆன் 74:6)
15. எவருடைய தவ்பா ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று அல்லாஹ் கூறுகிறான்?
நம்பிக்கைகொண்டபின்நிராகரிப்புஅதிகமாக்கிக் கொண்டவர்களின் தவ்பா. (அல்குர்ஆன் 3:90)
16. மஸ்ஜிதுந் நபவியில் தொழும் சிறப்பை பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள்?
ஆயிரம் தொழுகைகளை விட சிறந்தது. (புகாரி: 1190)
17. ஸஃபா மர்வாவில் தொங்கோட்டம் எதற்காக என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
இணைவைப்போருக்குதம்பலத்தைகாட்டுவதற்கு. (புகாரி : 1649)
18. எதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நோன்பு துறப்பதை. (முஸ்லிம்: 2003)
19. தானிய வகைகளில் எந்த அளவு வரை ஜகாத் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஐந்து வஸ்க்களை விட குறைவானவற்றிற்கு. (முஸ்லிம் : 1780)
20. பெண்களில் முழுமை பெற்றவர்கள் யார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
மர்யம்(அலை) பிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்கள். (முஸ்லிம் : 4816)