அறிவுபூர்வமான வாதமும் அல்லாஹ்வின் பார்வையில் அறிவற்ற வாதமே!
S. ராசிக், திருச்சி
அல்லாஹ்வின் நெறிநூலில் மனித அறிவு சரிகாணாவிட்டாலும் இறையை–மறையை நம்பவேண்டும். அதுவே இறை, (ஈமானிய) நம்பிக்கை என்கிறது மார்க்கம்.
முதலில் அறிவுபூர்வமான வாதம் வைத்தவன் இப்லீஸ் என்கிற ஷைத்தான் மண்ணை விட நெருப்பே உயர்ந்தது. தாழ்ந்த ஒன்றுக்கு உயர்ந்த ஒன்று தலை வணங்க கூடாது என்று அறிவுபூர்வமாக சிந்தித்தான். வழிகேட்டில் விழுந்தான். தன் அறிவு எதை சொல்கிறதோ அது தான் மார்க்கம் என்பவர்கள் இப்லீஸின் ஏஜெண்டுகள் அவர் ஆலிமாக இருந்தாலும் அல்லா மாக இருந்தாலும் அறிஞன் என்று பெயர் பெற்றவனாக இருந்தாலும் இறை நியதிக்கு எதிரானவர்களே நபிமார்களின் வாழ்வில் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் காணக் கிடைக்கின்றன.
மனிதர்களில் அறிந்தவர்கள் நபிமார்கள் கூட கிடையாது. மூஸா–கிள்று (அலை) அவர்களின் சந்திப்பின் நிகழ்வு மனித அறிவில் தோன்றியது மார்க்கமல்ல என்பதை அறிய முடிகிறது.
யூனுஸ்(அலை) அவர்களின் சமுதாயத்தை அல்லாஹ் அழிக்க போவதாக நபியிடம் கூறுகிறான். ஆனால் அல்லாஹ் அந்த சமுதாயத்தை அழிக்கவில்லை.
பின்னால் நடந்த நிகழ்வுகள் யூனுஸ் நபிக்கு தெரியாது. இதுதான் மனித அறிவு. தன் அறிவு சொன்னதை கேட்டு அல்லாஹ்விடம் கோபித்தார்கள். மீனுடையவரை போல் நீங்கள் ஆகிவிட வேண்டாம் என்று அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.
மனித அறிவு குறையுள்ளது. இறை அறிவே நிறையுள்ளது. மது, அசதி போக்கும் அருமருந்து அவன் அறிவு சொல்லும் மதுவில் சில பயனும் பெரும் தீயது இருக்கிறது என்று இறை அறிவு சொல்லும் அவனவன் அறிவில் பட்டதை பேசினால் அழிவில் தான் முடியும்.
பொது அறிவான இறை அறிவே வழிகாட்டும் பேரறிவு. சிந்திக்க மார்க்கம் சொல்கிறது. சிந்திப்பது தவறா? என்றால் இல்லை. இப்ராஹீம்(அலை) அவர்களை போன்று ஒரு சிந்தனை வாதியை பார்க்கமுடியாது.
அந்த சமுதாயமே இணைவைப்பில் ஈடுபட்டபோது சிந்தனையை தூண்ட ஒரு ஆள் கூட இல்லாத காலத்தில் தனி ஆளாக சிந்தித்தார். நட்சத்திரம், சந்திரன், சூரியன் என்று ஒவ்வொரு படைப்பையும் சிந்தித்து இறுதியில் இறைவன் ஒருவனை கண்டறிந்தார். சத்தியம் இதுதான் என்று தெளிவான பிறகு அல்லாஹ்வின் கட்டளை அறிவுபூர்வமாக இருக்கிறதா என்று அஹ்லே அறிவுவாதிகளை போன்று அறிவை ரப்பாக வணங்கவில்லை.
பாலைவனத்தில் தன் குடும்பத்தை பிரிந்து வந்தது; மகனை அறுக்க துணிந்தது, இவைகள் அறிவுபூர்வமான சிந்தனையல்ல. அஹ்லே அறிவுவாதிகள் இதை அறிவற்ற சிந்தனை என்பார்கள்.
சத்தியத்தை தேடும்போது சிந்தித்தார்கள், சத்தியம் இதுதான் என்று உறுதியான பிறகு தன் அறிவை உபயோகிக்கவில்லை. இறை கட்டளைக்கு கீழ்படிந்தார்கள். இது தான் அடிமைத்தனம் இந்த அறிவின்மையை தான் அல்லாஹ் விரும்புகிறான்.
தொழுகை தேவை இல்லை, நோன்பு தேவை இல்லை, ஹஜ் தேவை இல்லை, சோம்பேறிகளின் சொர்க்க கொள்கை இது. மனோ இச்சையை ரப்பாக ஆக்கிக் கொண்ட இணை வைப்புவாதிகள் குர்ஆனை மட்டும் பின்பற்றுகிறோம் என்று சொல்வதில் பொய்யர்கள். முஸ்லிம்களில் பலர் சிந்திக்காமல் தர்கா, தரீக்கா, மெளலூது, மீலாது, மத்ஹப், ராத்திப், தட்டு, தகடு. தாயத்து இது போன்று அறிவை உபயோகப்படுத்தாமல் முன்னோர்கள் வழிமுறை தாய், தந்தையர் வழிமுறை; பெரும்பான்மை வழிமுறை; ஹஜ் ரத்களின் வழிமுறை என்று முட்டாள் சமுதாயமாக இருக்கிறார்கள்.
சமுதாயத்தில் சிலர் நாங்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கிற பேர்வழிகள் என்று சொல்லிக் கொண்டு அவரவர் மனதில் தோன்றியதை மார்க்கமாக்க துடிக்கிறார்கள். சிந்திக்காதவர்களும், வழி தவறியவர்கள் மற்றும் மார்க்க வரையறையை தாண்டி அதிகமாக சிந்திப்பவர்களும் வழி தவறியவர்கள்.
“நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.” (அல்குர்ஆன் 1:7)
எங்களை நேர்வழியில் நிலைநிறுத்துவாயாக! என்று ஒவ்வொரு தொழுகையிலும் பிரார்த்திப்போம். அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ். ஆனால் அறிவிற்கு உண்டு அடைக்குந்தாழ்.