முஸ்லிம்-முஸ்லிமீன்-முஸ்லிமன்-முஸ்லிமத்தின்

in 2024 ஜூன்

முஸ்லிம்முஸ்லிமீன்முஸ்லிமன்முஸ்லிமத்தின்

முஸ்லிமத்தன்முஸ்லிமைனி என்பது குறித்து

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை.

2024-மே மாத  தொடர்ச்சி

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான  நற்கூலியையும்  சித்தப்படுத்தியிருக்கின்றான்:

1. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும், 2. நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், 3. இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும், 4. உண்மையே பேசும்  ஆண்களும்,  பெண்களும்,  5. பொறுமையுள்ள  ஆண்களும்,  பெண்களும், 6. (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும், 7. தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், 8. நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும் 9. தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தி யிருக்கின்றான். (அல்குர்ஆன் 33:35) இந்த வசனம் நிச்சயமாக முஸ்லிமான வல் முஸ்லிமாத் இறை நம்பிக்கை கொண்ட ஆண்கள் இறை நம்பிக்கை கொண்டபெண்கள், வல் முஃமினீன வல்முஃமினாத் என்று தொடங்குகிறது. அல்முஸ்லிமீன் வல்முஸ்லிமாத் ஆகிய இரு சொற்களும்அல்இஸ்லாம்எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவையாகும். அல்முஃமினீன், அல்முஃமினாத், ஆகிய இரு சொற்களும்அல்ஈமான்எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவையாகும். எனவே இங்கு இஸ்லாம் ஈமான் ஆகிய இரண்டையும் அல்லாஹ் தனித்தனியாகக் குறிப்பிட்டிருப்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும். இதுஇஸ்லாம்என்பதும்ஈமான்  என்பதும் வெவ்வேறானவை என்பதையே காட்டுகிறது. அதாவது இஸ்லாம் என்பது பொதுவானதாகும். அதுபோலவேஈமான்  என்பது அதைவிடக் குறிப்பான ஒன்றாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:328-336) மேலும் அன்றைய;

நயவஞ்சகர்களும் முஸ்லிம் என்பது யார்? என்பதைத் தெளிவாகவே அறிந்திருந்தார்கள் :

நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கி(ஏமாற்றி)விட்டதுஎன்று கூறினார்கள். அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தி) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக) (அல்குர்ஆன்: 8:49) இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: (பத்ருப்) போரில் இரு பிரிவினரும் ஒருவரையயாருவர் நெருங்கி வந்தபோது அல்லாஹ் இணை வைப்பாளர்களின் பார்வையில் முஸ்லிம்களைக் குறைத்துக் காட்டினான் முஸ்லிம்களின் பார்வையில் இணை வைப்பாளர்களைக் குறைத்துக் காட்டினான்.

அப்போதுஇணைவைப்பாளர்கள்இவர்களது மார்க்கம் இவர்களை மயக்கத்தில் ஆழ்த்திவிட்டது  என்று கூறினார்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கை அவர்களது பார்வையில் குறைவாகத் தென்பட்டதன் விளைவாக முஸ்லிம்களை நிச்சயமாக நாம் தோற்கடித்து விடுவோம் என ஐயமின்றி உறுதியாக நம்பினார்கள். ஆனால் உயர்ந்தோன் அல்லாஹ் அல்லாஹ்வை யார் முழுவதும் சார்ந்து முஸ்லிமாக இருக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன். ஏனெனில் அல்லாஹ் வல்லமை மிக்கோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவான் என்று கூறுகின்றான். பத்ரில் அதை நிரூபித்துக் காட்டவும் செய்தான். ஆனாலும் அதற்கு முன்னர் பத்ரில் குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம்களைக் கண்டபோது நயவஞ்சகர்கள் இவர்களது மார்க்கம் இவர்களை மயக்கிவிட்டது என்று கூறினார்கள். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 4:3036) மற்றுமோர் அறிவிப்பில்;

இறைத்தூதர்முஹம்மத்(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் கடமையாகி மக்காவைத் துறந்து மதீனாவுக்கு நாடு துறந்து சென்றுவிட்ட பிறகும் முஸ்லிம்ளில் சிலர் இணை வைப்பாளர்களுடன் மக்காவிலேயே தங்கி இருந்துவிட்டார்கள். அவர்கள் எதிரிகளுக்கு அஞ்சித் தங்களை இனங்காட்டிக் கொள்ளாமல் அங்கேயே வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் பத்ருப் போரும் வந்தது. மக்கா குறைசீயர்கள் இந்த முஸ்லிம்களையும் கட்டாயப்படுத்தி பத்ருப் போரிக் களத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

பத்ர் களத்தில்இணை வைப்பாளர்களான எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதைக் கண்ட இந்த முஸ்லிம்களின் உள்ளத்தில் சந்தேகம் எழ ஆரம்பித்தது. “குறைவான எண்ணிக்கையில் உள்ள முஸ்லிம்களின் அணியினரை, அவர்களுடைய மார்க்கப் பற்று ஏமாற்றிவிட்டது  என்று இவர்கள் வஞ்சகமாகக் கூறினார்கள். பின்னர் போர்க்களத்தில் இணை வைப்பாளர்களுடன் எதிரணியில் நின்ற இவர்கள், இறைத்தூதருடன் இருந்த முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி எய்யப் படும் அம்பு அல்லது முஸ்லிம்களின் வாள்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி மரண மடைந்தார்கள். இவர்களின் உயிர்களைக் கைப்பற்றியபோது வானவர்கள் கேட்ட கேள்வி மற்றும் இவர்கள் அளித்த பதில் குறித்தே;

(ஹிஜ்ரத் கடமையாகியும் அதனை அலட்சியம் செய்துவிட்டு இறைவழியில் நாடு துறந்து செல்லாமலும், தமது மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்து கொண்டு) தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, (அவர்களை நோக்கிமார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என வினவுவார்கள். அதற்கு அவர்கள்பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்  என்று பதிலளிப்பார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா?”அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா? என்று வானவர்கள் வினவுவார்கள். (எனவே) இவர்களின் இருப்பிடம் நரகம்தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும். (4:97) எனும் வசனம் அருளப்பட்டது. (இப்னு அப்பாஸ் (ரழி) சமூரா பின் ஜுன்தப்(ரழி), புகாரி: 4596, 7085, ஃபத்ஹுல் பாரீ, அபூதாவூத், தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர்: 2:676) இதுபோன்றே;

அறிவீனர்களும் முஸ்லிம்கள் என்றால் யார் என்பதை அறிந்திருந்தார்கள்:

மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று; (நபியே!) நீர் கூறும். “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழி யில் நடத்திச் செல்வான்  என்று (அல்குர் ஆன்: 2:142) பராஉ இப்னு ஆஸிப்(ரழி) அறிவித்ததாவது. நபி(ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப்பதினாறு மாதங்கள் அல்லது  பதினேழு மாதங்கள்தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (எனவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும்படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144வது வசனத்தை  அருளினான்.

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் எனும் (அல்குர்ஆன் 2:144) தொடரை அல்லாஹ் அருளினான். (புகாரி: 4486, 40, 399, 7252 & 4486-ன் சிறு குறிப்பு: 25ஆவது, முஸ்லிம் : 913,914, தஃப்சீர் இப்னு கஸீர்: 1:467-478) அப்போதுதான்;

முஸ்லிம்களைக் குறித்து யூதர்களின் விமர்சனம்:

இதனால் சந்தேகம் கொண்ட யூதர்கள் (முஸ்லிம்களாகிய) அவர்களை ஏற்கனவே இருந்த கிப்லாவிலிருந்து திருப்பியது எது? என்று  கூறலானார்கள்.  அப்போது:

மக்களில் (சில) அறிவீனர்கள் கூறு வார்கள்: “(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?” என்று (நபியே!) நீர் கூறும். “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை; தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்என்ற (அல்குர்ஆன்: 2:142) வசனத் தொடரை அல்லாஹ் அருளினான். தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்: 1:467-478) மேலும்;

நயவஞ்சகமம், சந்தேகமும், குடிகொண்ட யூதர்களும், மதியீனர்களும் முஸ்லிம்களை விமர்சித்தார்கள்:

இந்தகிப்லாமாற்றம் நிகழ்ந்தபோது நயவஞ்சகமும், சந்தேகமும், குடிகொண்ட சிலருக்கும், யூத இறை மறுப்பாளர்களுக்கும், ஐயமும் தடுமாற்றமும் ஏற்பட்டன. அப் போது; “ஏற்கனவே இருந்த அவர்களது கிப்லாவிலிருந்து முஸ்லிம்களாகிய அவர்களைத் திருப்பியது எது?” என்று அவர்கள் கேட்டனர். அதாவது, “இவர்களுக்கு என்ன நேர்ந்தது?”  சில நேரங்களில் அதை முன்னோக்குகின்றனர். சில நேரங்களில் இதை முன்னோக்குகின்றனர்? என்றுகேட்டனர். (தஃப்சீர் இப்னு கஸீர்: 1:467-478) கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன தான் நாடுகின்றவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான் என்று (நபியே!) கூறுவீராக! என்ற தொடரே அவர்களுக்குப் பதிலாகும்.

ஜின்களும்  முஸ்லிம்கள்  என்று  கூறினர்:

இன்னும், நிச்சயமாக, நம்மில் இறை யாணைக்கு முற்றிலுமாகக் கீழ்படிகின்ற முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் வேறு சிலர் அநீதியின் பக்கம் சாய்ந்த அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர். எவர்கள் முஸ்லிம்களாகி(முற்றிலுமாகஅல்லாஹ்வுக்கு வழிப்பட்டார்களோ? அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர். (அல்குர்ஆன் 72:14) என்று ஜின்கள் பேசிக் கொண்டதாக உயர்ந்தோன் அல்லாஹ் அறிவிக்கின்றான். அதாவது; நம்மில் சிலர்  முஸ்லிமாக இருக்கின்றனர். வேறுசிலர் அநீதியின்  பக்கம் சாய்ந்தவர்களாக இருக்கின்றனர் என்று பேசிக்கொண்டனர்.  (தஃப்சீர் இப்னு கஸீர் : 9:698-703)

Previous post:

Next post: