ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்!

in 2024 ஜூன்

ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,  இலங்கை.

உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்.  (அல்குர்ஆன் 2:185) 

திருக்குர்ஆன் மூலம் தமிழாக்கம், விளக்கவுரை, மெளதூதி(ரஹ்) இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 1989-1993, வெளியீடு)

உங்களில் அம்மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) “திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர்”, சென்னை ரஹ்மத் அறக்கட்டளை 2010, ஜூலை வெளியீடு)

உங்களில் எவர் அம்மாதத்தை பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்றுவிடவும். (அல்குர்ஆன் 2:185) மன்னர் ஃபஹத் வளாகம்)

உங்களில் யார் (ரமழான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) புகாரி: மூலம், தமிழாக்கம். ரஹ்மத் அறக்கட்டளை 1999, ஜூலை, வெளியீடு)

உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) MOON PUBLICATIONS – 2007, ஆகஸ்ட் வெளியீடு)

ஆக மேலேயுள்ள பல்வேறுபட்ட குர் ஆன் மொழிபெயர்ப்புகள் அனைத்திலும்,

ரமழானை அடைதல் குறித்த இவ்வசனத்தில்” (2:185)

உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோஎன்ற கருத்துப்படவே மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. மாறாக, “ரமழான் மாதம் பிறந்து விட்டால்என்று கூறாமல்உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோஎன்றுதான் கூறப்பட்டுள்ளது. அதனால் இதுபோன்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக ரமழான் மாதம் ஆரம்பமாவதற்கு முன்னரே நோன்பையும், ­வ்வால் ஆரம்பமாவதற்கு முன்னரே பெருநாளையும் பின்பற்றவேண்டிய இழிநிலை  ஏற்படுகிறது.  இதனால்; 

முப்பது நாட்களைக் கொண்ட சில மாதங்கள் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டதாக எடுக்கப்படுகிறது. இதற்கு மிகச் சிறந்ததொரு உதாரணம் மிக அண்மையில் நம்மை விட்டும் கடந்து போன 1443, ரபீவுல் ஆகிர் மாதத்தின் இறுதிநிலை  படிப்பினையாகும்.  அதாவது;

ஹிஜ்ரிக் காலண்டரின் அடிப்படையில் புவிமய்ய சங்கம நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள 23.11.2022, புதன்கிழமையாகிய அன்று, “பிறை ஓர் ஆய்வுகுழுமத்தில்சகோதரர் சிக்கந்தர் பாட்ஷாஅவர்களால் பதிவிடப்பட்ட பிறை விபரம். இதோ!

இன்றைய பிறை விபரம்‘’

இடம் : சென்னை

சந்தியஉதயம் : (கிழக்கு) 5.19 AM

சந்திர உச்சம் : 11.14 AM

சந்திரமறைவு (மேற்கு) 5.7 PM

ஒளிபிரதிபலிப்பு : 0.7%

பார்வையில் படும் நேரம் இன்று அதிகாலை சுமார் 5.20 மணி அளவில் உதிக்கும் பிறை சுமார் 5.50 மணி முதல் அளவில் வானில் உயர வரும். அந்நேரத்தில் சூரியன் உதயமாகக் கூடிய நேரம் என்பதால் சூரியனின் ஒளி விரைவில் பிறையை மறைத்துவிடும். மேலும் ஒளி பிரதிபலிப்பு 0.7% மட்டுமே.”

இன்று பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் நாள். ஹதீதின்படிகும்ம நாள்” , “புவி மைய சங்கம நாள்”, “அமாவாசை  நாள்எனவே இன்று பிறையை பார்க்க முடியாது இன்ஷா அல்லாஹ்‘’

என மேலே உள்ள அவரது பிறை விபரங்களின் அடிப்படையில்; அன்றுகிழக்குத் திசையில் 1443, ரபீஉல் ஆகிர் மாதத்தின் தேய் பிறை உதிக்கும் நேரம் 5.19 AM” 

அப்போது உங்களுடைய சீரிய சிந்தனைக்கு:  அதாவது; அன்று அந்தத் தேய் பிறை உதிக்கும் நேரமானது; முப்பது நாட்களைக் கொண்ட மாதத்தில் கண்ணுக்குத் தெரியக்கூடிய கடைசிப் படித்தரமாகவுள்ள உர்ஜூனில் கதீம் எமது பிரதேசத்தில் உதிக்கும் நேரமாகும். அந்த நம்பிக்கையில் தான் ஃபஜ்ர் தொழுகை முடிந்ததும் அடி யேனும் அதிகாலை வேளையிலேயே கடற்கரைக்குச் சென்றேன். ஆனாலும் இன்று வானிலை சாதகமாக இல்லை அடிவானில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தது அது விலகுவதாக இல்லை அதனால் பார்க்க முடிய வில்லை.

ஆனாலும் நீரூபிக்கப்பட்ட அறிவியலின்படி அன்றைய பிறையானது இருபத்தொன்பதாவது நாளின் உர்ஜூனில் கதீமுடைய தோற்றமும், உர்ஜூனில் கதீமைப் போன்றே சூரியனுக்கு முன்னாலும் உதித்தது. ஆக; வளமை போன்று அன்றைய பிறையும்;

உர்ஜூனில்கதீமுடையநேரத்திலும்,

உர்ஜூனில்கதீமுடையதோற்றத்திலும்,

உர்ஜூனில்கதீமைப்போன்றேசூரியனுக்குமுன்னால்உதித்ததும்,

உர்ஜூனில்கதீமைப்போன்றேசூரியனுக்குமுன்னால்மறைந்ததும்,

எமது நீண்ட நாள் ஆய்வின், அவதானத்தின், அறிவியலின், ஆதாரங்களின், புரிதலின் அடிப்படையில் அன்றுதான் ரபீவுல் அவ்வல் மாதத்தின் இருபத்தொன்பதாவது நாளுக்கான உர்ஜூனில் கதீம், காரணம்;

ஹிஜ்ரிக் காலண்டரின் அடிப்படையில் புவிமய்ய சங்கம நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள 23.11.2022, புதன்கிழமையாகிய அன்று; நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் எனும் அடிப்படையில் அன்று ஃபஜ்ர் நேரம் உதித்தது” 1443, ரபீவுல் ஆகிர் மாதத்தின் உர்ஜூனில் கதீம்தான்.

காரணம் அன்று அதிகாலை உர்ஜூனில் கதீமுடைய நேரத்தில் எமது பிரதேசத்தில் உதித்த “1443, ரபீவுல் ஆகிர் மாதத்தின் இறுதித் தேய்பிறையானது.

அன்றைய இறுதி நேரம் வரை, சங்கமம் நடைபெறவில்லை DAFF MOON தளத்தில் 29ம், 4H, 10M என்றுள்ளது. அத்துடன் தேய்பிறையின் “WANING CRESCENT” 0.2% படித்தரம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே அன்று, 29 நாட்களையும் நான்கு மணித்தியாலங்களையும் தாண்டியே ஃபஜ்ருக்கு சற்று முன்னராகவே சங்கமம் நடைபெற்றது. எனவே, வளமையைப் போன்று அன்றைய பிறையும்;

உர்ஜூனில்  கதீமுடைய  நேரத்திலும்,

உர்ஜூனில்  கதீமுடைய  தோற்றத்திலும்,

உர்ஜூனில்  கதீமைப்  போன்றே  சூரியனுக்கு  முன்னால்  உதித்ததும்,

உர்ஜூனில்கதீமைப்போன்றேசூரியனுக்குமுன்னால்மறைந்ததும், அன்று;

ஃபஜ்ருக்குசற்றுமுன்னர்வரைசங்கமம்நடைபெறாதுதாமதமானதனாலும்,

23.11.2022, புதன்கிழமையாகிய அன்று 1443 ரபீவுல் ஆகிர் மாதத்தின் இறுதித் தேய் பிறையானதை உர்ஜூனில் கதீமாக எடுத்து, அதற்கு அடுத்த 29ஆவது நாளாகிய 24.11.2022, வியாழக்கிழமையைகும்மவுடைய நாளாக எடுத்து 25.11.2022, வெள்ளிக்கிழமையை; ஜமாத்தில் அவ்வல் முதல் நாளாக எடுக்கப்பட்டுள்ளது. (ஹிஜ்ரிக் காலண்டரின் அளவுகோலின் பிரகாரம் ஜமாதுல் அவ்வல் முதலாவது நாளாகக் குறிப்பிட்ட 24.11.2022, வியாழக்கிழமையன்று உலகில் எங்குமே பிறை தென்படவில்லை என்பதனாலும், அன்றைய ஃபஜ்ருக்கு சற்று முன்னர்தான் சங்கமம் நடந்த காரணத்தினாலும்ரபீவுல் ஆகிர் மாதத்தின் பெரும் பகுதியும், ஜமாத்தில் அவ்வல் மாதத்தின் சிறுபகுதியும் அதில் இருந்ததாலும் அது மறைக்கப்படும் கும்மவுடைய நாள்தான் என்பது தெளிவு)

இவ்வாறு ஹிஜ்ரிக் காலண்டரின் அளவுகோலின் பிரகாரம் முப்பது நாட்களைக் கொண்ட சில மாதங்களை இருபத்தொன்பதாக எடுப்பதாலும், அதில் எஞ்சிய முப்பதாவதுசங்கமஒரு நாளை புதிய மாதத்துடன் இணைப்பதாலும் ஹிஜ்ரிக் காலண்டரின் சில மாதங்களில் ஹதீதுக்கு முரணாக பிறை பதினாறிலும் முழு நிலவு நாள் வருகிறது.

அய்யாமுல் Bபீழ்எனும் நிலவு பிரகாசிக்கும்  வெள்ளை  நாட்கள்‘’

ஒவ்வொரு மாதமும்அய்யாமுல் யபீழ்  எனும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட்கள் என்று அழைக்கப்படும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலம் முழுவதும் நோன்பு நோற்பது போலானதாகும். (அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி), அபூஹுரைரா(ரழி), கதாதா இப்னு மில்ஹான்(ரழி), அபூதர்(ரழி), புகாரி:பாகம் 2, பக்கம்:648, பாடம்:60ல் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்;

மாதந்தோறும் பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நிலவு பிரகாசிக்கும் நாட்களில் நோன்பு நோற்றல்  எனும்  உப தலைப்பிட்டு;

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், “ளுஹாநேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுதுவிடுமாறும் இந்த மூன்று விசயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் (புகாரி:1981) புகாரி, பாகம் இரண்டு, பக்கம் 645, பாடம் 59இல், தாவூத் நபியின் நோன்பு எனும் தலைப்பில் கொண்டுவரும் ஹதீதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும் வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன் என்று நான் கூறிய செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டி யது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்டபோது) “என் தந்தையும், தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இது உம்மால் முடியாது! (சில நாட்கள்) நோன்பு வையும். (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வையும்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அதுபோன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்!” என்றார்கள். நான், “என்னால் இதைவிட சிறப் பானதைச் செய்ய முடியும்என்று கூறினேன். “அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டு விடுவீராக!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்குஎன்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்என்று நான் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், “அப்படியா னால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!” இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்! என்றார்கள். நான்என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள்இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!” என்றார்கள். (புகாரி:1976,1978,1979-81, முஸ்லிம்: 1159, அபூதாவூத்: 2449, திர்மிதி:761)

Previous post:

Next post: