அல்லாஹ் மிகப் பெரியவனா? எப்படி?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
உலக முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லாத மற்றும் ஏகபோகமாக நம்பிக்கை கொண்ட ஒரு வார்த்தை அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்பதாகும்.
அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்ற இந்த அரபி மொழி வார்த்தையானது. உலகில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் ஒரு உன்னதமான வார்த்தையும் கூட.
ஆனால் முஸ்லிம்களில் பெரும்பாலோர் அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹ் அக்பர்) என்ற வார்த்தையின் பொருளை விளங்காதவர்களாக இருக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட, அல்லாஹ் மிகப் பெரியவன் என்றால் எப்படி? என்று முஸ்லிம்களிடம் கேட்டால் பெரும்பாலோருக்கு பதில் சொல்ல தெரியாது. ஆனால் அல்லாஹ் மிகப் பெரியவன் என்று 100 சதவீதம் நம்புவார்கள்.
இஸ்லாத்தை பொருத்தவரை நம்பிக்கை மட்டும் ஒருவர் முஸ்லிம் என்பதற்கு போது மானது அல்ல.
இன்னும், மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொள்கிறோம்‘ என்று கூறுவோரும் இருக்கின்றனர். ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (அல்குர்ஆன் 2:8)
(இவ்வாறு கூறி) அவர்களின் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை. எனினும் அவர்கள்(இதை)உணர்ந்து கொள்ளவில்லை. (அல்குர்ஆன் 2:9)
யார் யாரிடம் எல்லாம் செயல் வடிவமும் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே மூமின்கள் ஆவார்கள். எனவே அல்லாஹ் மிகப் பெரியவன் என்பதை விளங்கி கொள்ள நம்பிக்கை மட்டும் போதுமானது அல்ல, செயல் வடிவமும் அவசியம்.
(அதாவது அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளையும் பின்பற்றுவது அவசியமாகும்)
ஏனெனில் நீங்கள் நம்பிக்கை (ஈமான்) கொண்டுயிருந்தாலும் முஸ்லிமாக அல்லாது வேறு ஒருவராக மரணத்திட வேண்டாம் என இறைநூலில் இறைவன் கூறுகிறான்.
நபி இப்ராஹிம்(அலை) கூறினார்கள். என்னுடைய மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இந்த தீனையே (வாழ்க்கை முறையாக) தேர்ந்தெடுத்துள்ளான். எனவே, நீங்கள் முஸ்லிம்களாக அன்றி வேறு ஒருவராக இறந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 2:132)
அதாவது ஒருவருக்கு முஸ்லிம் பெயர் இருப்பதாலோ, கஃபன் துணி இடுவதாலோ மற்றும் ஜனாஸா தொழுகை நடத்தி கஃப்ரில் நல்லடக்கம் செய்வதாலோ அவர் முஸ்லிமாக ஆகிவிடமுடியாது. இறைவன் வழிகாட்டிய வாழ்க்கை முறையை மட்டும் தேர்ந்து எடுத்து வாழ்ந்தால் மட்டுமே முஸ்லிமாக ஆகமுடியும். மரணிக்கவும் முடியும் என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து தெளிவாக தெரிகிறது.
மேலும் இறைநூலில் இறைவன் கூறுகிறான்:
“தீனில் (இறைவழிகாட்டுதலை) பின்பற்றுவதில்) யாதொரு கட்டாயமோ, நிர்பந்தமோ இல்லை. தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாக கூறப்பட்டுள்ளது. இனி எவர் தாஃகூத்தை நிராகரித்து அல்லாஹ் அருளிய வழிமுறை மீது முழு நம்பிக்கை கொண்டாரோ அவர் நிச்சயமாக மிகப் பலமான பிடிமானத்தை பற்றிக் கொண்ட முஸ்லிமாவார்‘. (அ.கு.2:256)
தாஃகூத்து என்றால் யார்?
அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு மட்டுமே பணிந்து வாழாமல் தான் சுய அதிகாரம் கொண்டவன் (எல்லாம் தெரிந்தவன்) என பறைசாற்றி (மக்களை நம்பச் செய்து) தான் கூறும் சொல்லுக்கு மற்றும் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழும்படி செய்பவன் தாஃகூத் ஆவான்.
உதாரணமாக மனித சட்டங்களான மத்ஹபு நூலின் மார்க்க சட்டங்கள் பின்பற்ற மக்களை கட்டுப்படுத்துபவனும் தாஃகூத் ஆவான்.
எனவே அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்ன? மற்றும் அல்லாஹ் எப்படிப்பட்டவன்? அல்லாஹ் பெரியவனா? என்பதை எல்லாம் அறிய அல்குர்ஆனை மொழி பெயர்ப்புடன் படித்தால் மட்டுமே விளங்கிக் கொள்ளமுடியும்.
இறைநூலில் “அல்லாஹ்‘ என்ற வார்த்தை சுமார் 899 இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆயினும் அந்த கூறப்பட்டுள்ள இடங்களில் அல்லாஹ் என்ன சொல்ல வருகிறான் என்பதையும் கூறியுள்ளான். ஆனால் அதை விளங்காதவர்களாக ஓதுகிறார்கள்.
ஒவ்வொரு இடங்களிலும் அல்லாஹ்வுடைய பண்புகள் என்ன? அவனுடைய செயல்பாடுகள் என்னென்ன, மற்றும் அவனுக்கே உரிய தன்மைகள் என்ன? என்பதைப் பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக தானே பெரியவன் என்பதையும் சில இடங்களில் அல்லாஹ் கூறியுள்ளான்.
ஆயினும் முஸ்லிம்கள் குர்ஆனை மொழி பெயர்ப்புடன் விளங்கி படிக்காத காரணத்தினாலும், தாஃகூத்களின் வழிமுறையை கடைப்பிடிப்பதாலும் ஏனைய மதத்தினர் இறைவன் (கடவுள்) என்றால் சில கற்பனை உருவங்களையும், சில தன்மைகளையும் குறிப்பிட்டு நம்பிக்கை வைத்திருப்பது போல் முஸ்லிம்களில் பலரும் அல்லாஹ்வுக்கு இணையாக இறந்துபோன சில அடி யார்களுக்கும் இறை தன்மைகளில் சில இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். எனவேதான் அல்லாஹ் மட்டுமே பெரியவன் என்பதை விளங்கி கொள்ளாமல் இணை வைப்பவர்களாக இருக்கின்றார்கள். அத்தகைய இணை வைப்பாளர் களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்.
“நீங்கள் அவர்களை (இறந்தவர்களை) பிரார்த்தித்தாலும் பிரார்த்தித்து அழைத்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை செவியேற்கமாட்டார்கள். செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள். மறுமை நாளில் நீங்கள் இணை வைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடு வார்கள். யாவற்றையும் நன்கு அறிந்த அல்லாஹ்வைப் போன்ற எவருமே உமக்கு அறிவிக்கமாட்டார்.” (அ.கு. 35:14)
மேலும் இறைவன் கூறுகிறான்.
“உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள்: நிச்சயமாக அல்லாஹ் தான் (உயிருள்ளவர்களை) நாடிய வர்களைச் செவியேற்கும்படி செய்கிறான்; சமாதிகளில் உள்ளவர்களைக் கேட்கும் படிச் செய்பவராக நபியே நீர் இல்லை‘’ (அல்குர்ஆன் 35:22)
அடுத்து முஸ்லிம்களில் பலர் அல்லாஹ் பெரியவன் என்பது தெரிந்தே செய்யும் ஒரு தவறு என்னவென்றால்;
இறைநூலில் இடம்பெற்ற ஒரு வசனத்தை பர்ஸிலும், பாக்கெட்டிலும், வைத்திருப்பார்கள் மற்றும் பெரும்பான்மை வீடுகளில் பிரேம் செய்து மாட்டியும் வைத்திருப்பார்கள். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் குர்ஆனில் இடம் பெற்ற அந்த வசனத்தை மனப்பாடம் கூட பெரும்பாலோர் செய்திருப்பார்கள். ஆனால் அந்த வசனத்தின் பொருளை விளங்காத காரணத்தினால் இணை வைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.
அந்த வசனம் என்னவென்றால்;
“ஆயத்தில் குர்ஸி‘யாகும். (அ.கு.2:255)
எனவே மேற்கண்ட அந்த வசனத்தின் பொருளை விளங்கிக் கொண்டிருந்தால்,
“அல்லாஹ் மிகப் பெரியவன் என்பது மட்டுமல்ல; அல்லாஹ் மட்டுமே மிகப் பெரியவன் என்பதையும் விளங்கிக் கொண்டிருப்பார்கள்.’