உலக நிகழ்வுகள் யாரால்? ஏன்?

in 2024 ஜூலை

உலக நிகழ்வுகள் யாரால்? ஏன்?

அய்யம்பேட்டை A.  நஜ்முதீன்

இறைநூலில்(அல்குர்ஆனில்) பல இடங் களில்இறைவன் நாடினால்என்றும், “இறைவனின் நாட்டப்படியேநடக்கின் றன என்றும், மற்றும் உலக நிகழ்வுகள் அனைத்தும் இறைவனுக்கு தெரியாமல் நடப்பதில்லை  என்றும்  கூறப்பட்டுள்ளது.

ஆனால் அநீதியாக ஆட்சி செய்த பல மன்னர்களும் (ஆட்சியாளர்களும்) பல சமு தாயங்களும் இப்பூவுலகில் வாழ்ந்தும், மறைந்தும் இருக்கின்றார்கள். அத்தகைய ஆட்சியாளர்களின் அநீதிக்கு இறைவனின் நாட்டமும் காரணமா?

நிச்சயமாக இல்லை;  ஏன்  என்றால் அத்தகைய ஆட்சியாளர்களையும், அநீதியாக நடந்த சமுதாயத்தினரையும் தான் என்ன செய்தேன் என்பதை இறைவன் தன் நெறிநூலின்  மூலம்  எடுத்துரைக்கின்றான்.

அவை ஒன்று : ஆட்சி அதிகாரத்துடன் வாழ்ந்த எத்தனையோ சமுதாயத்தினரை இதற்கு முன்னர் நாம் அழித்துவிட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? உங்களுக்கு (நமக்கு) வழங்கப்படாத பல சிறப்புக்களையும், ஆட்சி அதிகாரத்தையும் நாம் வழங்கி யிருந்தோம். மேலும் அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழையை பொழிய வைத்தோம். மேலும் அவைகளுக்கு கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் அவர்கள் பாவத்தில் மூழ்கி நன்றி செலுத்தாத காரணத்தினால் நாம் அவர்களை அழித்து விட்டோம். இன்னும் அவர்களுக்கு மாற்றமாக அடுத்த (வேறு) தலைமுறையினரை உருவாக்கினோம்.       (அல்குர்ஆன் 6:6)

அடுத்து இறைநூலில் மற்றொரு வசனத்தில்அல்லாஹ்வின் வேதனை திடீரென்றோ அல்லது முன் அறிவிப்பு செய்தோ உங்களிடம் வருமானால் அநீதி இழைத்த கூட்டத்தினர் மட்டும் அழிக்கப்படுவார்களா? அல்லது நல்லவர்களும் அழிக்கப்படுவார்களா? இதனை நீங்கள் சிந்தித்தது உண்டா? பதில் கூறுங்கள்என்று இறைவன் கேட்கிறான்.  (அல்குர்ஆன் 6:47)

மேற்கண்ட இரு வசனத்தில் ஒன்றில் சமுதாயம் முழுவதும் அழித்துவிட்டோம் என்றும் மற்றொன்றில் நபிமார்கள் மூலம் எச்சரிக்கை செய்தும் அநியாயம் செய்தவர்கள் மட்டும் அழிக்கப்பட்டார்கள் என்ப தாக இறைவன் கூறுகிறான்.

அதாவது மேற்கண்ட வசனங்களில் இறைக்கட்டளைக்கு மாறுசெய்தும், இறை தூதர்களை எதிர்த்த சமுதாயத்தினரை மட்டும் பிரித்தெடுத்து தீயவர்களை மாத்திரம் தான் அழித்ததாக அல்லாஹ் கூறுகிறான்.

உதாரணமாக நூஹ் நபி, லூத் நபி, ஹுத் நபி, ஸாலிஹ் நபி, மற்றும் மூஸா நபி (அலை) ஆகிய நபிமார்களின் சமுதாயத்தவர்களில் நல்லவர்கள், தீயவர்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்டு நல்லவர்கள் மட்டும் காப்பாற்றப்பட்டனர்.

ஆனால் நபிமார்கள் இல்லாதபோது மனிதர்களுக்கு வரும் துன்பங்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இருபாலாருக்கும் வருகிறது. இது ஏன்? 

உதாரணமாக; சமீப காலமாக நடந்து வருகின்ற இஸ்ரேல்பாலஸ்தீனம் போரில் கைக்குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். போரில் சம்பந்தப்படாத இவர்கள் பாதிக்கப்பட்டது. இறைவன் கொடுத்த தண்டனையா என்றால் இல்லை. மாறாக மனித கரங்களால் தேடிக் கொண்டவையாகும். பாலஸ்தீன முஸ்லிம்களை இறைவன் காப்பாற்றவில்லையே என்று கூட சிலருக்கு சந்தேகம்  வரலாம்.

மனிதர்களின் கைகள் சம்பாதித்தவற்றின் (தீச் செயல்களின்) காரணத்தால், தரையிலும் கடலிலும் குழப்பம் வெளிப்பட்டு விட்டன. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு, அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.  (30:41)

எவர் நற்செயல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும். எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும். அன்றியும், உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.     (41:46)

இது மனித கரங்களால் தேடிக் கொண்டதாகும். இதே போன்று ஒரு நிகழ்வு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உஹதுப் போரின் போது முஸ்லிம்களுக்கு நடந்தது. (அந்த வரலாறு அந்நஜாத் வாசகர்கள் அறிந்ததே. எனவே விரிவாக எழுதாமல் தவிர்த்து விட்டோம்)

மேலும் இந்திய வரலாற்றிலும் பல நிகழ்வுகள் முஸ்லிம் மன்னர்களாகிய (முகலாயர்களின்) ஆட்சியாளர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் பல நடந்துள்ளன, நடந்தும்  வருகின்றன.

இவைகளுக்கு  எல்லாம்  என்ன  காரணம்?

இறைவன் கட்டளையைப் பின்பற்றாமல் ஒற்றுமையாக முஸ்லிம்கள் இல்லாத காரணத்தினால் நடந்தவையாகும். அதாவது ஒரு அமீர் (தலைவர்) இல்லாததே முக்கிய  காரணம்.

எனவே எல்லா நிகழ்வுக்கும் பழியை இறைவன்  மீது போடாதீர்கள். 

அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பதல்லாம் பிறப்பும்இறப்பும், உயர்வும்தாழ்வும் மற்றும் புயல், மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் சம்பவங்கள்  மட்டுமே.

அதே வேளையில் இறைவன் சில நியதிகளையும் தனக்குதானே இறுதி நாள் வரை  வகுத்துக்  கொண்டுள்ளான்.

அது  என்னவென்றால் :

பாவச் செயல்களில் ஈடுபடும் ஆட்சி யாளர்களையும், தனி மனிதர்களையும், சமுதாயத்தையும் உடனுக்குடன் இறைவன் தண்டிப்பதாகயிருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் இறைவன் விட்டு வைத்திருக்கமாட்டான். அதாவது மனிதன் செய்யும் தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதில்லை. மாறாக இறைவன் நிர்ணயித்துள்ள இறுதி நாள் வரை தண்டிப்பதை பிற்படுத்தவும் செய்கிறான். மனிதர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் திருந்தி வாழ வாய்ப்பையும் வழங்குகிறான். ஆனால் இறைவனின் நியதியில் முக்கியமானது என்னவென்றால் மனிதர்களுக்கு, ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்துவிட்டால் அதில் சிறிது நேரம் பிந்தவும் செய்யாது, முந்தவும் செய்யாது என்பதே ஆகும். (பார்க்க இறை வசனம் : 16:61)

இறைவனின் நாட்டமில்லாத மனிதன் செய்யும் ஒவ்வொரு தீயச் செயலும் பின் விளைவுகளை ஏற்படுத்தியே தீரும். அந்த விளைவுகளை மனிதன் அனுபவித்தே ஆக வேண்டும்.

எனவே இறைவனின் நாட்டமில்லாத மனித கரங்களால் ஏற்படும் அழிவை தேடிக் கொள்ளாமல் முஸ்லிமாக வாழ விரும்பினால் இறை வழிகாட்டி நூலான (அல்குர்ஆனையும்) இறைதூதரின் நடைமுறையையும் பின்பற்றுவோம். எனவே தான் இறைநூல்  கூறுகிறது.

இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையே  அன்றி  வேறில்லை‘’ (அல்குர்ஆன் 68:52)

உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள், அவற்றைப் பின்பற்றினால் ஏற்படும் நன்மைகள் அல்லது அதை புறக்கணிப்பதால் ஏற்படுகின்ற தீமைகளை கூறுகிறது. அதாவது சமூக அமைப்பு, நாடு, நாட்டுமக்கள், உலகம், உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கூடிய பாதுகாப்பான நிம்மதியான வாழ்வைப் பெறுவது எப்படி என்ற அடிப்படை யில் இறைவன் இறுதி இறைவழி காட்டி  நூலில்  வழங்கியுள்ளான்.

மனிதர்களுக்கு சில சுதந்திரத்தை அளித்து படைத்துள்ளதால் சில உலக தீய  நிகழ்வுகள் அனைத்தும் இறைவனின் நாட்டமே என்று கூறுவது மனித செயல்களில் இறைவன் தலையீடு இருப்பதாக ஆகிவிடும். மனிதர்களின் சில தீய செயலுக்கு ஏற்ப உலக நிகழ்வுகள் (அழிவுகள்) அமைகின்றன என்பதே உண்மை.

Previous post:

Next post: