ஐயமும்! தெளிவும்!
ஐயம் : “ஸிராத்தல் முஸ்தகீம், கைரில் மக்லூபி அலைஹிம் வலல்லால்ஹீன்‘’
மேற்படி வசனத்தை நாம் ஒவ்வொரு நேர (வஃத்து) தொழுகையிலும் ஓதிவருகிறோம். ஏன் என்றால் இந்த வசனத்தின் பொருள் நேரான பாதையிலும், மற்றும் கோபத்திற்கோ, வழி தவறியவர்களாகவோ ஆககூடாது என்பதற்காக.
அவ்வாறுயிருக்க நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் இந்த துஆவை ஓதி வந்தார்கள். அவர்கள் நேர்வழியிலிருந்தும் இதை ஏன் ஓதி வந்தார்கள்?
ஹி. அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு
இறைவனின் சாந்தியும் சமாதான மும் அவருக்கு உண்டாக, துஆச் செய்கின்றோம். ஆமீன்.
இறுதி தூதரும், தோழர்களும் ஒருபோதும் தவறான வழியில் இருந்திருக்கவில்லை. ஏன் என்றால் அவர்கள் இறைவனின் அருளைப் பெற்றவர்கள். ஆயினும் நபி தோழர்கள் இறைதூதரிடம் தவறான வழி எது? கோபத்திற்கும், வழி தவறியவர்களாகவும் ஆளானாவர் கள் யார்? என்று கேட்டார்கள்.
இறைத்தூதர் சொன்னார்கள்:
அது யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஆவார்கள் என்றும் மேலும் இது வரப்போகின்ற ஆபத்திலிருந்து பாதுகாப்பு தேட நாம் கேட்க வேண்டிய துஆவாகும் என பதில் அளித்தார்கள். அதா வது இந்த துஆவானது தனி மனிதனுக்காக மட்டும் இறைவனால் கற்றுக் கொடுக்கப்பட்ட துஆ அல்ல. மாறாக கூட்டு பிரார்த்தனையும், சமூக வேண்டுதலும் ஆகும்.
ஏன் என்றால்;
இதற்கு முன்பு (நமக்கு முன்பு) வாழ்ந்த பல சமூகம் இறைவனின் அருளைப் பெற்று வாழ்ந்தவர்கள் தான். ஆயினும் ஒரு காலத்திற்கு பிறகு தவறான பாதையில் சென்றதால் கோபத்திற்கும், வழி தவறியவர்களாகவும் ஆகியிருக்கின்றார்கள்.
எனவேதான் நபி(ஸல்) சமூகத்திற்கு அந்த நிலை ஒருபோதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இறைவனால் கற்றுக் கொடுக்கப்பட்ட துஆவாகும்.
அதாவது தொடக்கம் மட்டும் நன்றாக இருந்து முடிவு வேறு மாதிரி இருந்துவிடக் கூடாது என்பதால் எப்பொழுதும் இறைவனின் அருளைப் பெற்றவர்களாக மாறாதிருக்க வேண்டும் என்பது ஆகும்.
“என் இறைவனே! எனக்கு நேர்வழி காட்டு…!” என அடியானை கேட்கச் சொல்லி அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த துஆ முதல் அத்தியாயமாக அல்குர் ஆனில்(இறைநூலில்) இடம் பெற்றுள்ளது.
அதற்கு இறைவனின் பதில்: நீ என்னிடத்தில் வேண்டிய நேர்வழியாக வழிகாட்டும் நூலை(அல்குர்ஆனை) தந்துள்ளேன் என தூதர் மூலம் அருளியுள்ளான்.
யாருக்கு இறைவன் நாடினானோ அவர்களுக்கு மட்டுமே நேர்வழி கிடைக்கும். அத்தகைய பாக்கியம் பெற்றவர்களாக நம்மையும் இறைவன் ஆக்குவானாக! ஆமீன்.