ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்!

in 2024 ஜூலை

ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2024  ஜூன் மாத  தொடர்ச்சி

ரியாதுஸ் ஸாலிஹீன் பக்கம் 519, பாடம் 230இல், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது விரும்பத்தக்கதாகும்எனும் உபதலைப்பின் கீழ் (மாதம் மூன்று நோன்புகளில் மிகச் சிறந்ததுஅய்யாமுல் யபீழ்நாட்களாகும். அது பிறை 13,14,15 ஆகிய (நிலவு பிரகாசிக்கும்) நாட்களாகும். 12,13,14ஆம் நாட்கள் என்றும் கூறப்படுகிறது (எனினும்) பிரபலமான சரியான கருத்து முதலாவது தான்) என்று ஆரம் பித்து, 1258ஆவது ஹதீதாக;

ஒவ்வொரு மாதமும் (நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய) மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும்ளுஹாநேரத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுதுவிடுமாறும் இந்த மூன்று வி­யங்களை என் நெருங்கிய தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!’ அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) அவர்கள், ரியாளுஸ் ஸாலிஹீன்: 1258, 1259 ஹதீதாக;

என் நேசர் எனக்கு மூன்று காரியங்களை உபதேசித்தார்கள். நான் வாழும் காலமெல் லாம் அவற்றை விடமாட்டேன். 1. ஒவ் வொரு மாதமும்  அய்யா முல் யபீழ்என; (நிலவு பிரகாசிக்கும்) வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படும் 13,14,15 ஆகிய) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, 2.லுஹாத் தொழுகை தொழுவது, 3.வித்ருத் தொழுது விட்டுத் தூங்குவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட் டார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரழி), ரியா ளுஸ்ஸாலிஹீன்: 1259, முஸ்லிம்:722, நஸயீ: 692, மேலும் ரியாளுஸ்ஸாலிஹீன்: 1260ஆவது ஹதீதாக;

ஒவ்வொரு மாதமும் (நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய) மூன்று நாட்கள் நோன்பு வைப்பது காலம் முழுவதும் நோன்பு வைப்பது போலாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரழி) அவர்கள். ரியாளுஸ்ஸாலிஹீன்: 1260, புகாரி:1979, முஸ்லிம்: 1159) மேலும்;

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் (நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய) மூன்று நாட்கள் நோன்பு வைப்பார்களா? என்று ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்டேன்ஆம்என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஆதா அல்அதவிய்யா(ரழி) அவர்கள் ரியாளுஸ்ஸாலிஹீன்: 1261, முஸ்லிம் : 1160)

மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைத்தால் 13,14,15 ஆகிய (“அய்யா முல் யபீழ்எனும் நிலவு பிரகாசிக்கும் வெள்ளை) நாட்களில் நோன்பு வைப்பீராக!’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரழி) ரியாளுஸ்ஸாலிஹீன்: 1262, திர்மிதி:761)

அய்யா முல் யபீழ்எனும் 13,14,15 ஆகிய (நிரவு பிரகாசிக்கும் வெள்ளை) நாட்களில் நோன்பு வைக்குமாறு எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: கதாதா இப்னு மில்ஹான்(ரழி), ரியாளுஸ்ஸாலிஹீன்: 1263, அபூதாவூத்:2449) மேலும்,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தாலும் பயணத்தில் இல்லாவிட்டா லும்அய்யாமுல் யபீழ்‘ (எனப்படும் நிலவு பிரகாசிக்கும் 13,14,15 ஆகிய வெள்ளை நாட்களில்) நோன்புகளை விடமாட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல் லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ரியாளுஸ்ஸாலிஹீன்: 1264, நஸயீ:4:198-199) போன்ற ஆதாரபூர்வமான ஹதீத்களுக்கு முரணாக பிறை பதினாறிலும் முழு நிலவு நாள் வருகிறது. மேலும்; மற்ற மற்ற காலண்டர்கள் ஓரிரு நாட்கள் பிந்துவதால் பிரச்சனை ஹிஜ்ரிக் காலண்டரோ முந்துவதால் பிரச்சனை  அதனால்;

ரமழானுக்கு முதல் நா(ளான புவி மைய்ய சங்கம நிகழ்வு ஏற்படும் அமாவாசை நா)ளும் அதற்கு முதல் நா(ளான கண்ணுக்குத் தெரியக்கூடிய, கணக்கீட்டில் தெரியக்கூடிய கடைசிப் படித்தரமான உர் ஜூனில் கதீம் 36:39 தென்படக்கூடிய நா)ளும்  உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது அந்நாளில் வழக்கமாக நோற்கும் நோன்பு வந்து அமைந்தாலே தவிர! என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: பாகம் 2, பக்கம் 588, பாடம் : 14, 1914, முஸ்லிம் :1082, ரியாதுஸ் ஸாலிஹீன்:1224)

எனும் ஹதீதுக்கு முரணாக ஒருநாள் முன்னதாக மாதத்தை ஆரம்பிப்பதால், உதாரணமாக முப்பது நாட்களைக் கொண்ட “­ஃபான்மாதத்தை இருபத்தொன்பதாக முடித்துக் கொண்டு அதில் எஞ்சிய ஒரு நாளைக் கொண்டு ரமழானை ஆரம்பிப்பதால், “­ஃபானின்முப்பதாவது நாள் ரமழானின் முதலாவது நாளாகக் கருதப்படுகிறது. இதனால் பிந்திய பத்தில் ஒற்றைப்படை நாளில் எடுக்கவேண்டிய லைலதுல் கத்ருடைய நாளை இரட்டைப் படையான நாளில் எடுக்கும் நிலை. அது போலவே,

புவிமைய, சங்கம, அமாவாசை நாளில் நோன்புப் பெருநாள் :

முப்பது நாட்களைக் கொண்டரமழான்மாதத்தை இருபத்தொன்பதாக முடித்துக்கொண்டு அதில் எஞ்சியசங்கம  ஒரு நாளைக் கொண்டுசவ்வால்மாதத்தினை ஆரம்பிப்பதால், “ரமழான்மாதத் தின் முப்பதாவதுசங்கமநாளைசவ்வால்மாதத்தின் முதலாவது நாளாகக் கருதித் தவறான ரமழானுடைய முப்பதாவதுசங்கமநாளிலேயே நோன்பு பெருநாளைக் கொண்டாடும் நிலை ஏற்படுகிறது. இது போலவே;

முப்பது நாட்களைக் கொண்டதுல்கஃதாமாதத்தை இருபத்தொன்பதாக முடித்துக் கொண்டு அதில் எஞ்சிய முப்பதாவது சங்கமநாளைக் கொண்டுதுல்ஹஜ்மாதத்தினை ஆரம்பிப்பதால்; “துல்கஃதாமாதத்தின் முப்பதாவது சங்கமநாள்துல்ஹஜ்ஜின்முதலாவது நாளாகக் கருதப்படுகிறது. இதனால் துல்ஹஜ் மாதத்தின் எட்டாவது நாள் ஆரம்பிக்கவேண்டிய ஹஜ்ஜுடைய கிரிகைகள் துல்ஹஜ் ஏழாவது நாள் ஆரம்பிப்பதனால் முதல்கோணல் முற்றிலும் கோணலாக  மாறி;

துல்ஹஜ் பிறை எட்டில் அரஃபா நோன்பு:

துல்ஹஜ் பிறை ஒன்பதாவது அரபா தினத்தில் நோன்பு நோற்பது முந்தைய ஒரு வருடத்தினதும் வரும் அடுத்த ஒரு வருடத்தினதும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். (அபூ கதாதா(ரழி) முஸ்லிம்: 1162, திர்மிதி, ரியாதுஸ் ஸாலிஹீன்: 1250) என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதற்கு மாற்றமாக துல்ஹஜ் பிறை எட்டாவது நாளில் அரஃபா நோன்பு நோற்கப்படுகிறது. மேலும்;

துல்ஹஜ் பிறை ஒன்பதில் ஹஜ்ஜுப் பெருநாள்:

துல்ஹஜ் பிறை பத்தில் கொண்டாடப்பட வேண்டிய ஹஜ்ஜுப் பெருநாள் துல்ஹஜ் பிறை ஒன்பதாவது பெருநாள் அல்லாத தவறான நாளில் கொண்டாடப்படுகிறது. அத்துடன், அறுத்துப் பலியிட வேண்டிய குர்பானி கொடுக்க வேண்டிய; 

அறுத்துப் பலியிடுவதுகுர்பானிதுல்ஹஜ் பிறை ஒன்பதில் :

அய்யாமுத் தஸ்ரிக்எனும் துல்ஹஜ் மாத 11,12,13 ஆகிய நாட்களை (அபூ ஹுரைரா(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), அக்பா பின் ஆமிர்(ரழி), நுபைஷா அல் ஹுதவீ(ரழி), ஆயிஷா(ரழி), புகாரி பாகம்:1 பக்கம் 731, பாடம் 11:732 பாடம் பனிரெண்டு, 9,10,11 ஆகிய தவறான நாட்களாக மாற்றிக் கடைப்பிடிக்கும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறே;

மூன்று ஜம்ராக்களிலும் கல் எறிதலின் (புகாரி: பாகம் 2, பக்கம் 406, 1723,1685-1687, 1683,1670) நகம், முடி களைதலின், குர்பானி கொடுத்தலின் (புகாரி: பாகம் 2, பக்கம் 451, 1746-1754, பக்கம் 406, 1723, 1685-1687, 1710-1720, 1725-1730) நாட்களிலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த சரியான உரிய நாட்கள் தவறிய நிலையில் ஒரு நாள் முந்தியதாகத் தவறான நாட்களிலேயே அக்கிரிகைகள் கடைப்பிடிக்கப்படும் நிலை ஏற்படுகின்றன. அவ்வாறே;

புவிமைய, சங்கம, அமாவாசை நாளில் முஹர்ரம்  மாதம் ஆரம்பம்:

முப்பது நாட்களைக் கொண்டதுல்ஹஜ்மாதத்தை இருபத்தொன்பதாக முடித்துக் கொண்டு அதில் எஞ்சியசங்கமஒரு நாளைக் கொண்டுமுஹர்ரம்மாதத்தினை ஆரம்பிப்பதால், “துல்ஹஜ்  மாதத்தின் முப்பதாவதுசங்கமநாளைமுஹர்ரம்மாதத்தின் முதலாவது நாளாகக் கருதப்படுகிறது. இதனால்;

ரமழானுக்குப் பின்னர் நோன்புகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் புனித மாதமான முஹர்ரம் மாத ஆஸூரா நோன்பு தான் (அபூஹுரைரா(ரழி), புகாரி:2000-2007, 1592,3397,4501-4504,4680,1893,3942, முஸ்லிம் 1130,1162,1163) என்றும் அது கடந்த ஆண்டின் பாவங்களை மன்னித்துவிடும் (அபூகத் தாதா(ரஹ்) முஸ்லிம்) வரும் ஆண்டில் நான் இருந்தால் நிச்சயமாக முஹர்ரம் ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் (அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்லிம் 1134, ரி.ஸா.1253) என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனும் ஹதீதுக்கு முரணாக முஹர்ரம் மாதத்தில் ஒருநாள் முன்னதாகவே நோன்பு நோற்கும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ஹிஜ்ரிக் காலண்டரின் அளவுகோலின் பிரகாரம் முப்பது நாட்களைக் கொண்ட சில மாதங்களை இருபத்தொன்பதாக எடுப்பதாலும், அதில் எஞ்சிய முப்பதாவது ஒரு நாளை புதிய  மாதத்துடன்  இணைப்பதாலும்;

கணவன் இறந்துவிட்டால் மனைவிஇத்தாஎனும் காத்திருப்பை மேற்கொள்ளும் காலத்திலும்:

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் (மறுமணம் செய்வதற்கு) நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விசயத்தில் பொறுத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:234) அதாவது: கணவன் இறந்துவிட்டால் மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள்இத்தாஎனும் காத்திருப்பை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த வசனத்தில் பெண்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். (தஃப்சீர் இப்னு கஸீர்: 1:765-772) என்பதிலும்;

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மேற்கொள்ளும்இத்தாஎனும் காத்திருப்பை மேற்கொள்ளும் காலத்திலும்: விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய் (அல்லது மூன்று மாதங்கள் முடியும்) வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விசயத்தில் பொறுத்து இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:228) தஃப்சீர் இப்னு கஸீர்: 1:725-733) என்பதிலும்;

மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், “இத்தா‘(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடையஇத்தாவின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும். மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். (அல்குர்ஆன் 65:4) தஃப்சீர் இப்னு கஸீர்: 9:479-486) என் பதிலும்;

====================

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

1. இறைவனின் அத்தாட்சியை மிக அருகில் கண்ட முதல் நபி யார்?

ஸித்ரத்துல்முன்தஹாமரம். முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.    அல்குர்ஆன் 53:16

2. முதல் முதலில் கொலையானவர் யார்? 

ஹாபீல்.  அல்குர்ஆன் 5:30

3. நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்ட நபி யார்?

இப்றாஹிம் (அலை)   அல்குர்ஆன் 21:69

4. கல் மழையால் அழிக்கப்பட்ட எந்த நபியின் (மனைவி)?

லூத்நபிஅவர்களின்மனைவி.     .கு.27:57

5. தண்ணீரிலிருந்து காப்பற்றப்பட்ட நபி யார்?

நூஹ்(அலை).   அல்குர்ஆன் 7:64

6. நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் யார்?

ஜின்கள்.  அல்குர்ஆன் 7:12, 15:27

7. செல்வத்தை விட மேலானது எது என்று  அல்லாஹ்  கூறுகிறான்?

நல்லுபதேசம்.    அல்குர்ஆன் 10:58

8. பாதை வி­யத்தில் கருத்து வேறுபாட் டுக்கு நபி(ஸல்) அவர்கள தந்த தீர்வு என்ன?

7 முழங்கள் அகலம் உள்ள பாதையை அமைத்துக் கொள்ளட்டும்.  முஸ்லிம் 3295

9. செயல்கள் அனைத்தும் எதைப் பொருத்து அமைகின்றன?

எண்ணங்களைபொருத்து.  புகாரி : 1

10. எந்த நாள்களில் வஹீ இறங்குவதாக ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்?

கடும்குளிரானநாளில். புகாரி: 2

11. ஜிப்ரில்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை எத்தனை முறை கட்டி அணைத்தார்கள்?

மூன்றுமுறை.   புகாரி: 3

12. இஹ்சான் என்றால் என்ன?

அழகியமுறையில்செயலாற்றுவது. (அல்லாஹ்வை பார்ப்பது போன்ற உணர்வு. முஸ்லிம் : 5

13. அல்கவ்ஸர் எனும் தடாகத்தின் பரப்ப ளவு எவ்வளவு?

மதீனாவுக்கும்ஸன்ஆநகரத்துக்கும்இடைப்பட்டதூரம்.  புகாரி: 6591

14. முஸா(அலை) அவர்களுடன் பயணித்த பணியாளர் யார்?

யூ­ஃ இப்னு நூன்.  புகாரி: 122

15. செய்யாத குற்றத்திற்காக பழி சுமத்தப்பட்ட  மிருகம் எது?

ஓநாய்.   அல்குர்ஆன் 12:17

16. எந்த சமுதாய மக்களை மேன்மைப் படுத்தியதாக  அல்லாஹ் கூறுகிறான்?

இஸ்ராயீல்  மக்கள்.     அல்குர்ஆன் 2:47

17. வேதனைக்கு மேல் வேதனை செய்யப் படுபவர் யார்?

பூமியில்  குழப்பம்  செய்யக்கூடியவர்கள்.  அல்குர்ஆன் 16:88

18. தீங்கிழைக்கக் கூடிய உயிரினத்தை கொல்லும்படி எதனை நபி(ஸல்) அவர் கள்  கூறினார்கள்?

பல்லி.  புகாரி: 3307

19. எந்தப் பெண்ணின் தந்தையும் நபி, கணவரும் நபி?

ஷிஹைப்நபிமற்றும்மூஸாநபி.   அல்குர்ஆன் 28:27

20. பட்டாடை அணிய அனுமதி பெற்ற இரு சஹாபாக்கள் யார்?

ஸுபைர்பின்அல்அவ்வாம்(ரழி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரழி),   முஸ்லிம் : 4216

 

Previous post:

Next post: