அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
2024 ஜூலை மாத தொடர்ச்சி…
இறை வசனங்களை மாற்றியும், மறைத்தும், திரித்தும், வளைத்தும், குழறுபடி செய்தார்கள்:
இறை வேதங்களின் வேத வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றியும் அல்லாஹ்வின் வசனங்களைத் திரித்தும் அவற்றின் உண்மையான கருத்துக்களை மறைத்தும் நாவுகளை வளைத்து குழறுபடிகள் செய்து கைவரிசை காட்டினார்கள். (2:79,159,174, 3:78,187, 4:46, 5:13,14) இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு உமர்(ரழி), அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), முஜாஹித், ஹஸன் அல் பஸ்ரி (ரஹ்), புகாரி: 7553, இதற்கு முன்னுள்ள குறிப்புரை, 6819, 6841)
இப்னு உமர்(ரழி) அறிவித்தார்: ஒரு யூத ஆணும், ஒரு யூதப் பெண்ணும் இறைத் தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபச்சாரம்) புரிந்து விட்டிருந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “உங்களுடைய வேதத்தில்(இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், “எங்கள் (மத) அறிஞர்கள், (விபச்சாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங்கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்யவேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்‘ என்றார்கள். (அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரழி) அவர்கள், “தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். அவ்வாறே “தவ்ராத்‘ கொண்டு வரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயிருந்த) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) பற்றிய வசனத்தின் மீது தம் கையை வைத்(து அந்த வசனத்தை “யாருக்கும் தெரியாதபடி மறைத்)தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை வாசித்துக் காட்டலானார். அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரழி) அவர்கள், “உன் கையை எடு!’ என்றார்கள். அவர் தம் கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரின் கைக்குக் கீழே இருந்தது. எனவே, (அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி) கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட் டார்கள். (புகாரி: 6819,6841,3635,7543) மேலும், அவர்கள்;
இறைவசனங்களுக்குப் பல அர்த்தங்கள் கற்பித்தார்கள் :
வேத வசனங்களுக்கு இரட்டை அர்த்தம் கற்பித்தார்கள் (2:104) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை யூதர்கள் மறைமுகமாக தூற்ற நினைக்கும்போது சிலேடையாகப் பேசுவார்கள். எவ்வாறெனில் இரு பொருள்படும் சொல்லைப் பயன்படுத்தி விட்டு வெளிப்படையில் நல்ல பொருளையும் அந்தரங்கத்தில் தூற்றலையும் அவர்கள் நாடிக் கொள்வார்கள்.
“நாங்கள் கொல்வதைக் கேளுங்கள்‘ என்று நபி(ஸல்) அவர்களிடம் சொல்ல நினைத்தால் “ராஇனா‘ என்ற இரண்டு அர்த்தங்களையுடைய சொல்லையே கூறுவார்கள். இதற்கு மேற்கண்ட பொருள் இருந்தாலும் “எங்களில் ஆடு மேய்க்கும் இடையரே‘ என்றும், மேலும் அவர்கள் “ருஊனத்‘ என்பதிலிருந்து பிறந்த “பேதை‘ எனும் பொருளையுமே மறைமுகமாக நாடுவார்கள். இந்த வகையில்தான் நபியவர்களிடம் சென்று நீங்கள் கூறுவதை செவியுற்றோம். சமிஃனா என வெளிப்படையாகக் கூறிக்கொண்ட யூதர்கள் மறைமுகமாக மாறு செய்தோம். அஸைனா என்றும் சொல்லிக் கொள்வர். அவ்வாறே நீங்கள் கேளுங்கள். வஸ்மஉ என்றும் நீங்கள் கேட்கவேண்டாம், ஃகைர முஸ்மஇன் என்றும் இரண்டு விதமாகக் கூறிவந்தனர். மேலும் யூதர்களில் பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த “ரிஃபாஆ பின் ஸைத்‘ என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அர்இனீ சம்அக, வஸ்மஉ ஃகைர முஸ்மஇன்‘ நான் சொல்வதைச் செவி சாய்த்துக் கொள்ளுங்கள், கேட்பீராக! கேட்காமல் ஆகிவிடுவீராக! என்று இரட்டை அர்த்தத்தில் பேசுவார். இதையே வேறு ஒரு வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறியுள்ளான். (தஃப்சீர் இப்னு கஸீர்: 1:345, 2:564) மேலும் அவர்கள்;
இறை வசனங்களை அவற்றுக்குரிய சரியான இடங்களிலிருந்து மாற்றினார்கள்:
யூதர்களில் சிலர், வேத வசனங்களை அவற்றுக்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றார் கள். அவர்கள் நாங்கள் “செவியுற்றோம், மாறு செய்தோம், என்றும் நீர் கேட்பீராக! நீர் கேட்காமல் போய்விடுவீராக! என்றும் கூறுகின்றார்கள். மார்க்கத்தைப் பழித்து(த் தமது உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதற்கு மாறாகத்) தமது நாவுகளை வளைத்து (இரு பொருள்பட) “ராஇனா‘ என்றும் கூறுகின்றார்கள். இம்மார்க்கத்தைக் குறைவுபடுத்திடத் தமது நாவுகளால் (வார்த்தைகளை) மாற்றிக் கூறுகின்றனர். அவர்கள் “நாங்கள் செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்றும் நீர் செவிமடுப்பீராக! உள்ளூர்னா (எங்களைக் கவனிப்பீராக) என்றும் அவர்கள் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும் (தன்னை) அவர்கள் மறுப்பதால் அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (4:46,41) நீர் கேட்பீராக! நீர் கேட்காமல் போய்விடுவீராக! (4:46,41) என்றும் கூறுகின்றார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான், மேலும்;
திட்டமிட்டுப் பொய்யுடன் மெய்யைக் கலந்தார்கள்:
யூதர்கள் திட்டமிட்டு வேதத்திலுள்ள மெய்யைப் பொய்யுடன் கலப்பதும் அவ்வாறு செய்துவந்த மோசடியான பொய் வேலைகளுக்கு உண்மை முலாம் பூசுவதும் உண்மையை மறைப்பதும் தவறானவற்றை வெளியிடுவதும் போன்ற குற்றங்களையும் செய்து வந்தனர். அதனால்தான் “நீங்கள் தெரிந்து கொண்டே மெய்யைப் பொய்யுடன் கலக்காதீர்கள், உண்மையை மூடி மறைக்கவோ செய்யாதீர்கள். (2:42, இப்னு அப்பாஸ்(ரழி), அபுல் ஆலியா(ரஹ்), கத்தாதா(ரஹ்), முஜாஹித்(ரஹ்), சுத்தீ (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர்: 1:184-186) என இறைவன் ஆணையிடுகின்றான். அதனால்தான்,
பொய்களுக்கு அதிகமாகச் செவிசாய்த்து அதற்கு இணங்கி நடக்கின்றார்கள்:
யூதர்களிலும் சிலர் உள்ளனர். அவர்கள் பொய்யை அதிகமாக (விரும்பி)ச் செவியுறு கின்றார்கள். உம்மிடம் வராத வேறு சமூகத்தாருக்(குப் பொய்களைக் கூறுவதற்)காகவும் (பொய்களை) அதிகமாகச் செவியுறுகின்றார்கள். (5:41) மேலும் அவர்கள்;
ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்று ஆனார்கள்:
தவ்ராத்(வேதம்) சுமத்தப்பட்டுப் பின்னர் அதைச் சுமக்காமல் (அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 62:5)
இறைத்தூதரைப் பார்த்து உங்களுக்கு மரணம் உண்டாகட்டும் என்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுடன் பகைமை பாராட்டும் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். எதிரிகளான அவர்களைப் பாதையில் நீங்கள் சந்திக்க நேரிட்டால் அவர்களைப் பாதையின் ஓரத்தில் ஒதுங்க விட்டுவிட்டுச் செல்லுங்கள். மேலும் யூதர்கள் உங்களுக்கு முகமன் கூறும்போது அவர்களில் சிலர், “அஸ்ஸாமு அலைக்கும்‘ உங்களுக்கு மரணம் உண்டாகட்டும் என்று கூறுவார்கள். எனவே அவர்களின் முகமனுக்குப் பதிலளிக்கையில் “வ அலைக்கும்‘ அவ்வாறே உங்களுக்கும் என்று மட்டும் கூறுங்கள் என்றார்கள். (4:86, இப்னு உமர்(ரழி), அபூ ஹுரைரா(ரழி), புகாரி: 6257, 6928, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், முஸ்னத் அஹ்மத், முவத்தா மாலிக், தாரிமி, புலூஹுல் மராம், 1336, தஃப்ஸீர் இப்னு கஸீர்: 2:634-681, 1:346) மேலும்,
இறைக் கட்டளையைக் கேலி செய்து நகைத்தார்கள் :
இஸ்ரவேலர்கள் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் யூசஉ பின் நுன்(அலை) அவர்களுடன் தீஹ் பாலைவனத்திலிருந்து வெளியேறியபோது ஜெரூசலத்தில் “தூர்‘ சினா மலையை அண்டியுள்ள “ஈலியா‘ என்று அழைக்கக் கூடிய புனித பூமியாகிய பைத்துல் முகத்தஸ்ஸை வெற்றி கொண்டபோது அதன் தலைவாயில் வழியாகப் “பணிவோடு‘ நுழையுங்கள். மேலும் “ஹித்தத்துன்‘ பாவங்களை மன்னிப்பாயாக என்று கூறுங்கள் என்று கட்டளையிட்டார்கள். ஆனால் அவர்களோ தமது புட்டங்களால் தவழ்ந்த வாறு நுழைந்தார்கள். மேலும் அவர்களிடம் கட்டளையிடப்பட்டிருந்த “ஹித்தத்துன்‘ என்னும் சொல்லை மாற்றி “ஹின்தத்துன்‘ கோதுமை என்று சொல்லி நகைத்தது மட்டுமன்றி “ஹப்பத்துன் ஃபீசஅரத்தின்‘ ஒரு வாற் கோதுமைக்குள் ஒரு தானிய விதை என்று வேறு கூறிக் கேலி செய்தார்கள். (5:21 26, 2:58,59, 7:161,162, இப்னு அப்பாஸ்(ரழி), அபூஹுரைரா (ரழி), முஜாஹித்(ரஹ்), புகாரி: 3403,4479,4641, முஸ்லிம்: திர்மிதி, தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன், தஃப்ஸீர் இப்னு கஸீர் : 3:118-135,1:220-225)
மார்க்கத்தைப் பிழைப்புக்கு வழியாக்கிக் கொண்டார்கள். (2:41,79,174, 3:187, 5:44)
இறை வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்றார்கள்:
எனது வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். (2:41) என்பதற்கு; “எனது வசனங்கள்‘ என்பது இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அருளிய வேதத்தையும் “சொற்ப விலை‘ என்பது இம்மையின் அனைத்து சுகங்களையும் குறிக்கும் என்பதாக சயீத் பின் ஜுபைர்(ரஹ்) அவர்களும், இந்த உலகம் முழுவதுமே சொற்ப விலைதான் என்பதாக ஹஸன் அஷ்பஸ்ரி (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்: 1:182)
தமது கைகளால் எழுதியவற்றை அல்லாஹ்விடமிருந்து வந்தது என்றார்கள்:
தமதுகைகளால்நூல்ஒன்றைஎழுதிஅதன்மூலம்அற்பவிலையைப்பெறுவதற்காகஇதுஅல்லாஹ்விடமிருந்துவந்ததுஎன்றுகூறுவோருக்குக்கேடுதான். (2:79) என்பதற்கு, தாமாகவே அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து இட்டுக்கட்டி எழுதிவிட்டு அற்ப விலையைப் பெறுவதற்காக இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று பொய் கூறி அதை அரபுகளிடம் விற்றுத் தவறான முறையில் மக்களின் செல்வங்களை விழுங்கிய யூத மதகுருமார்களைக் குறிக்கும் என்பதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக இக்ரிமா(ரஹ்), சுத்தீ(ரஹ்), கலீல்(ரஹ்), சீபவைஹி(ரஹ்), அஸ்மா(ரஹ்), அவர்கள் அறிவிக்கின்றார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:272, 273)