மனிதர்களுக்கான எச்சரிக்கை! (WARNING)
N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு
இவ்வுலக வாழ்வில் மனிதர்கள் இரண்டு விதமான செயலில் ஈடுபடுகிறார்கள் அல்லது இரண்டும் கலந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.
இரண்டுவிதமான செயல்கள் என்னென்ன?
ஒன்று : நற்செயல்கள் (நல்லது)
மற்றொன்று : தீய செயல்கள் (கெட்டது)
பொதுவாக நற்செயல்கள் அனைத்தும் வெளிப்படையாகவே நடக்கின்றன. (சில செயல்கள் மட்டும் மறைவாக நடக்கும்) அதுபோல் தீய செயல்கள் அனைத்தும் மறைவாகவே நடக்கின்றன. (ஒரு சிலர் மட்டும் வெளிப்படையாகவே நடத்துகின்றனர்)
நற்செயல்கள் அனைத்திற்கும் இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மைகள் (பலன்) உண்டு.
தீய செயல்கள் செய்தால் இறைவனால் மன்னிக்கவும் படலாம். அல்லது தண்டிக்கவும் படலாம். ஆனால் தீய செயல்கள் பற்றி இறைவன் கூறும்பொழுது.
“உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம்” என்று கூறுகிறான்.
ஏனென்றால் தீய செயல்கள்
உள்ளத்திற்கோ
உடலுக்கோ
உடமைக்கோ
உறவுக்கோ,
உயிருக்கோ
ஏதேனும் ஒரு வகையில் தீங்காகத்தான் இருக்கும். அதுவே நடுநிலை ஆனது என்று சில செயல்கள் உள்ளன. அவைகளை கடைபிடித்தல் நல்லது.
ஆனால் எதுவெல்லாம் செய்யக்கூடாது என இறைநூலில் (அல்குர்ஆனில்) எச்சரிக்கை செய்துள்ளதோ அவைகளை செய்தால் பாவத்திற்கும், தண்டனைக்கும் ஆளாக நேரிடும்.
அவைகள் என்ன:
1. முதல் எச்சரிக்கையில் :
இது (அல்குர்ஆன்) இறைவனால் அருளப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இது (அல்குர்ஆன்) இறையச்சமுடையோருக்கு நேர்வழிகாட்டியாகும்.
அவர்கள் யார் என்றால்,
A. மறைவானவற்றை நம்புவார்கள்
B. தொழுகையை நிறைவேற்றுவார்கள்
C. நாம் வழங்கியதைக் கொண்டு செலவு செய்வார்கள்.
D. இந்த குர்ஆனையும் (இறைநூலையும்) இதற்கு முன்பு அருளப்பட்ட இறை நூல்களையும் நம்புவார்கள்.
E. இறுதி தீர்ப்பு நாள் உண்டு என உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் 2:5)
மேற்கண்ட ஐந்து விசயங்களை யார் எல்லாம் நிராகரித்தார்களோ அவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள். (அல்குர்ஆன் 2:7)
அதாவது நிராகரிப்பாளர்களுக்கான முதல் எச்சரிக்கை இதுவாகும்.
அடுத்து அடுத்து வரும் எச்சரிக்கைகள் :
2. உறவை முறித்தல் & குழப்பம் விளைவித்தல்
பார்க்கவசனம் : 2:27
3. இரத்தம் சிந்துதல் :
பார்க்க வசனம் : 2:84, 85
4. இறைவனுக்கு இணை வைத்தல் :
பார்க்க வசனம் : 2:165, 4:36, 17:22
5. இலஞ்சம் கொடுத்தல், வாங்குதல் :
பார்க்கவசனம் : 2:188
6. பெருமை, கர்வம், கஞ்சத்தனம் :
பார்க்க வசனம் : 4:36,37
7. மது, சூது :
பார்க்கவசனம் : 5:90
8. இறைநூலை ( இந்த குர்ஆனை ) புறக்கணித்தல்:
பார்க்கவசனம் : 6:157
9. குழந்தைகளை கொல்தல் :
பார்க்கவசனம் : 17:31
10. விபச்சாரம் நெருங்குதல் :
பார்க்க வசனம் : 17:32, 25:68
11. அளவில் குறை செய்தல் :
பார்க்கவசனம் : 83:1
12. புறம் பேசுதல்
பார்க்க வசனம் : 104:1-8
13. அநீதி :
பார்க்கவசனம் : 42:42
14. சூனியம் செய்தல் :
பார்க்க வசனம் : 2:102, 10:77