ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்!
அபூ இஸ்ஸத், இலங்கை
2024 ஜூலை மாத தொடர்ச்சி…
குழந்தைகளுக்குப் பாலூட்டும் கால அளவிலும்:
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். (அல்குர்ஆன் 46:15) இதன்படி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியிருப்பதாவது: ஒரு பெண் ஒன்பது மாதத்தில் பிள்ளை பெற்றெடுத்தால் இருபத்து ஒன்று மாதம் பாலூட்டுவது அதற்குப் போதுமானதாகும். ஆனால் ஏழு மாதத்தில் பிள்ளை பெற்றெடுத்தால் இருபத்து மூன்று மாதம் பாலூட்டுவது அதற்குப் போதுமானதாகும். ஆறு மாதத்தில் பிள்ளை பெற்றெடுத் தால் முழுமையாக இரு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ் கூறியிருக்கின் றான். அவனைக் கருவில் சுமந்ததும், அவனுக்குப் பாலூட்டலை நிறுத்தியதுமான காலம் முப்பது மாதங்களாகும் என்று (தஃப்சீர் இப்னு கஸீர்: 8:393-401) என்பதிலும்;
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இரு வருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்ட வளாக (கர்ப்பத்தில்) அவனை சுமர்ந்தாள், இன் னும் அவனுக்குப் பால்குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. (அல்குர்ஆன் 31:14) அதாவது அவனைப் பெற்றெடுத்த பிறகு பாலூட்டி வளர்ப்பது இரண்டு ஆண்டுகளா கும். மற்றொரு வசனத்தில்; “முழுமையாகப் பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண) வர்களுக்காகத் தாய்மார்கள் தம் குழந்தை களுக்கு ஈராண்டுகள் முழுமையாகப் பாலூட்ட வேண் டும்.’ (2:233) என்று அல்லாஹ் கட்டளை யிடுகிறான். இந்த வசனத்தை வைத்தே இப்னு அப்பாஸ்(ரழி), அலி(ரழி) உள்ளிட்ட அறிஞர் கள் “ஒரு குழந்தை பிறப்பதற்கான குறைந்த பட்ச கால அளவு ஆறு மாதங்களாகும்‘ என்ற விதியைக் கண்டறிந்துள்ளனர்.
(கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவ னுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் (மொத் தம்) முப்பது மாதங்களாகும். (46:15) என்று அல்லாஹ் கூறுகின்றான். இதன்படி முப்பது மாதங்கள் என்பது இரண்டரை ஆண்டுகளா கும் பால்குடிக்கான இரண்டு ஆண்டுகளை இதிலிருந்து கழித்தால் ஆறு மாதங்களே எஞ்சியிருக்கும் என்பது தெளிவு. (தஃப்சீர் இப்னு கஸீர்: 7:177182) என்பதிலும்,
கொடுக்கல் வாங்கல்களை தேதியிட்டு எழுதுவதிலும் :
இறை நம்பிக்கை கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுது பவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீத மாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண் டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்தி ரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள் ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதை யும் குறைத்து விடக்கூடாது.
(அல்குர்ஆன் 2:282, தஃப்சீர் இப்னு கஸீர்: 1:899-911) என்பதிலும், இறுதியாக வந்த வச னத்தில் “அதில் எதையும் குறைத்து விடக் கூடாது‘ (2:282) என்று அல்லாஹ் சொல்வதற்கு மாற்றமாக சில நாட்கள் குறைவடைகிறது; அத்துடன்;
மாதங்களை முன்னும் பின்னுமாக (9:37) மாற்றுவது:
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப் பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை(நிராகரிப்பை)யே அதிகப்படுத்து கிறது. இதனால் நிராகரிப்பவர்களே வழிகெடுக் கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக் கப்பட்டதாகக் கொள்கிறார்கள்) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்க ளின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக் கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான் அவர் களின் (இத்) தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத் தானால்) அழகாக்கப்பட்டு விட்டன. அல் லாஹ் காஃபிர்கள் கூட்டத்தை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் 9:37) இவ் வாறு சில மாதங்களில் முன் பின்னாக ஆகு வதால் சரியான கணக்கில் துல்லியம் இழந்து; பின்னோக்கிக் கணக்கிடும்போது ஆதாரபூர்வ மான ஹதீத்களுக்கு முரணாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அரஃபாவுடைய நாள் வியாழக்கிழமை வருகிறது.
“இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக் காக நான் முழுமையாக்கிவிட்டேன் எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன் இன்னும் உங்க ளுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்‘ (5:3) எனும் வசனம் அருளப்பெற்றது. அதாவது; ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மேற்கொண்ட விடைபெறும் ஹஜ்ஜின் போது “அரஃபா தினம்‘ எனப்படும் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் (வெள்ளிக்கிழமை) “அரஃபாப் பெருவெளியில் நபியவர்கள் தங்கி யிருந்த வேளையில் தான் இத்திருவசனம் (5:3) அருளப் பெற்றது என்பதாகப் பலமான அறிவிப்புகள் பல வந்துள்ளன. (புகாரி: 4606,இன் சிறு குறிப்பு: மூன்றாவது, ஃபத்ஹுல் பாரீ) மேலும்; இது பற்றி;
யூதர்களும் அறிந்த பிரபல்யமான வியம்தான்:
தாரிக் இப்னு யுஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்ததாவது: யூதர்கள் உமர்(ரழி) அவர் களிடம் நீங்கள் ஓர் இறைவசனத்தை ஒதுக்கின் றீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால் அந்த நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம் என்று கூறினர். அப்போது உமர்(ரழி) அவர்கள் “அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கி யது? அது இறங்கிய வேளையில் அரஃபா (துல் ஹஜ் 9ஆம்) நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர் கள் எங்கேயிருந்தார்கள் என்பதையயல்லாம் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங் கள் அப்போது அரஃபாவில் இருந்தோம். (இதன் மூன்றாம்) அறிவிப்பாளர்: சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறுகிறார்கள். இன்று உங்க ளின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமை யாக்கிவிட்டேன்‘ எனும் (திருக்குர்ஆன் 5:3வது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பி லுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக்கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியா மல்) சந்தேகப்படுகிறேன் என்றார்கள். (புகாரி: 4606, 4407) அத்தியாயம் : 65, திருக்குர்ஆன் விளக்கவுரை மேலும் அது ஓர் வெள்ளிக்கிழமை தான் என மற்றுமோர் ஆதாரபூர்வமான புகாரியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அது பின்வருமாறு.
யூதர்களில் ஒருவர் உமர்(ரழி) அவர்களிடம் “அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்த நாளை நாங்கள் ஒரு பெருநாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்‘ என்றார்) அதற்கு உமர் (ரழி) அவர்கள் “அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். “அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள் என தாரிக் இப்னு ´ஹாப்(ரழி) அறிவித்தார். (புகாரி: 45)
மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளதாவது: கஃஅப்(ரழி) அவர்கள், ஒருமுறை “இந்த வசனம் மட்டும் வேறொரு சமுதாயத்தாருக்கு அருளப்பெற்றிருந்தால் எந்த நாளில் அது அருளப்பெற்றதோ அதைக் கவனத்தில் கொண்டு அதைக் கூடி மகிழும் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள் “கஃஅபே! அது எந்த வசனம்?’ என்று கேட்டார்கள். உடனே அவர், “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன் எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன் இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்‘ எனும் வசனம் என்றார். அப்போது உமர்(ரழி) அவர்கள் “அந்த வசனம் அருளப்பெற்ற நாளை யும், அது அருளப்பெற்ற இடத்தையும், நான் நிச்சயமாக அறிந்துள்ளேன். துல்ஹிஜ்ஜா ஒன்பதாவது, அரஃபாவுடைய நாள் வெள்ளிக் கிழமை அருளப்பெற்றது. அல்லாஹ் புகழுக்குரி யவன், அரஃபாவுடைய நாளும், வெள்ளிக் கிழமை நாளும் ஆகிய அவ்விரு நாட்களுமே நமக்குப் பண்டிகை நாட்கள்தான்‘ என்றார்கள். (தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்: 3:19-47)
தாரிக் பின் ´ஹாப்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: யூதர்களுள் ஒருவர் (கலீஃபா) உமர்(ரழி) அவர்களிடம் வந்து “இறை நம்பிக்கை யாளர்களின் தலைவரே!’ உங்களது வேதத்தில் ஒரு வசனத்தை நீங்கள் ஓதுகின்றீர்கள் அந்த வசனம் யூதர்களாகிய எங்களுக்கு இறக்கியரு ளப்பட்டிருக்குமானால் (அது அருளப்பெற்ற) அந்த நாளைப் பண்டிகை நாளாக நாங்கள் ஆக்கிக் கொண்டிருப்போம்‘ என்று கூறினார். (அப்போது) உமர்(ரழி) அவர்கள் “அந்த வசனம் எது?’ என்று கேட்க அவர்; “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன் எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்து விட்டேன் இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டு விட்டேன்‘ எனும் (5:3) ஆவது இறை வசனம் தான் அது என்று கூறினார். அப்போது உமர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக‘ “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களுக்கு எந்த நாளில், எந்த நேரத்தில், (எந்த இடத்தில்) அந்த வசனம் அருளப்பெற்றது என்பது எனக்குத் தெரியும் (அது விடைபெறும் ஹஜ்ஜின் போது) ஒரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அரஃபாவில் இருந்தபோது, (தான் இந்த வசனம் அருளப்பெற்றது) என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மத்,183, நஸாயீ: 2952, 4926) அந்நாளைக் கொண்டாடுகிறார்கள்.
யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர்(ரழி) அவர்களிடம், “இன்றைய நாள் உங்களுக்கு உங்களது மார்க்கத்தை நான் நிறைவு செய்துவிட்டேன்‘ எனும் (5:3) இந்த வசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் (அது அருளப்பட்ட) அந்த நாளை நாங்கள் பெருநாளாக ஏற்படுத்தியிருப்போம்‘ என்று கூறினார். அதற்கு உமர்(ரழி)அவர்கள், “இந்த வசனம் அருளப்பட்ட “நாளும் இரவும்‘ எனக்குத் தெரியும். இந்த வசனம் (விடைபெறும் ஹஜ்ஜின் போது) நாங்கள் அரஃபா எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தபோது “வெள்ளிக்கிழமை இரவில் அருளப்பட்டது‘ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: தாரிக் பின் ´ஹாப் (ரழி), நூல்: நஸாயீ : 2952, 4926, அஹ்மத் 183) அடுத்து,
சவ்வால் மாதமும், துல்ஹஜ் மாதமும் சேர்ந்தாற் போல் 29+29 ஆக குறைந்து வராது:
இரண்டு பெருநாட்களின் மாதங்கள் சேர்ந் தாற்போல் எண்ணிக்கையில் 29+29 நாட்களா கக் குறைந்து வராது என்பதையும் நபியவர்கள் விளங்கியிருந்தார்கள்.
பெருநாட்களின் இரு மாதங்களும் சேர்ந் தாற்போல் இருபத்தொன்பது நாட்களாகக் குறையாது என்று முஹம்மத் (என்பவர்) அறிவிக்கின்றார். (புகாரி: பாகம் 2, பக்கம் 586, பாடம் 12) அதையே;
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி னார்கள்: துல்ஹஜ், ரமழான் ஆகிய பெருநாட்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற் போல் (29:29 நாட்களாகக்) குறையாது என்று அபூபக்ரா(ரழி) அவர்கள் புகாரி பாகம் 2, பக்கம் 586, பாடம் 12, 912 (இரண்டு பெருநாட்களுக்குரிய மாதம் என்பது துல்ஹஜ் மற்றும் சவ்வால் மாதமாகும்) இந்த ஹதீதுக்கு முரணாக, ஹிஜ்ரிக் காலண்டரில் குறித்த இரணடு மாதங்களும் இருபத் தொன்பது+இருபத்தொன்பதாக வருகிறது ஹிஜ்ரி 1444 ஆகிய இந்த வருடத்து காலண்ட ரிலேயே நீங்கள் இதனைக் காண லாம். முன்னரும் சில ஆண்டுகளில் இவ்வாறு வந்ததுண்டு. அடுத்து;
தீர்க்க ரேகை (புஹிவீணூ Pநும்சி) :
“உலக முஸ்லிம்கள் தொழுகைக்காக புனித மக்காவிலுள்ள கஃஅபாவின் பக்கம் (கிப்லாவிற் காக) முகம் திருப்புங்கள். (2:149,143,144,145, 10:87) என்ற அல்லாஹ்வின் ஆணைக்கு ஏற்ப மக்காவுக்குக் கிழக்கில் அமைந்துள்ள நாடுகளி லுள்ள முஸ்லிம்கள் தங்களின் தொழுகைக்காக கிப்லாவின் திசையான மேற்கு நோக்கித் தொழு கின்றார்கள். அதேபோல மக்காவிற்கு மேற்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காகத் தங்களது கிப்லாவின் திசை யாகக் கிழக்குத் திசையை நோக்கித் தொழுகின் றார்கள். இவ்வாறு;
கிப்லாவை இலக்காகக் கொண்டு அதனை மைய்யப்படுத்தி இவ்வாறு முழு உலக முஸ்லிம்களும் அணி அணியாக வரிசையாக நிற்பதை உலகப் படத்தை கவனத்தில் கொண்டால் அவ்வாறு மேற்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதியும், கிழக்கு நோக்கித் தொழுபவர் களின் முதுகுப் பகுதியும் சங்கமிக்கும் மிகப் பொருத்தமான இடமாக இந்த உலகத் திகதிக் கோட்டுப் பகுதியே சிறப்பாக அமைந்துள்ளது என்றே சொல்லப்பட்டது இன்றும் அவ்வாறே சொல்லப்பட்டு வருகிறது. ஆனால்;
புனித கஃஅபாவை மேற்கு நோக்கி மாத்திரமல்ல. கிழக்கு நோக்கி மாத்திரமல்ல, நாலு திசைகளிலிருந்து மாத்திரமல்ல, அனைத்து திசைகளிலிருந்தும் வளையமாக நின்று கஃஅபாவை முன்னோக்கித் தொழப்படுகிறது. புனித கஃஅபா அமைந்துள்ள ஹரம் ரீஃபில் இவ்வாறு சிறு வட்ட வளையமாகவே ஆரம்பிக்கப்பட்ட ஸஃப்பானது படிப்படியாக விரிவடைந்து மறுபடியும் படிப்படியாக சுருங்கி வந்து சிறியதொரு வளையமாக மாறும் இடம் கிட்டத்தட்ட அலாஸ்கா பிரதேசம்தான் கஃஅபாவை முன்னோக்கியதாக ஆரம்பிக்கப்பட்ட சிறிய வட்ட வளையமானது. இந்த இடத்தில் முதுகுப் பகுதிகள் முன்னோக்கிய மையப் புள்ளியாக அமைகிறது என்பதே நிதர்சனம். ஆகவே,
ஃபிஜியிலுள்ள சர்வதேசத் திகதிக் கோட்டில் முதுகும் முதுகும் இணைகிறது என்பதும், கஃஅபா வளாகத்தில் வட்ட வளையமாக ஆரம் பித்த ஸஃப்பானது இந்த இடத்தில் நேராக ஆனது என்பதும் தவறான புரிதல் ஆகும். இது எல்லோராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதொரு விசயமே. ஏன் நீங்களே ஒரு உருண்டை வடிவமான பொருளை எடுத்து மேலே ஒரு புள்ளியை இடுங்கள். பின்னர் அந்த புள்ளியை மையப்படுத்தி வட்ட வளையம் வளையமாகக் கோடுகளைக் கீறி வாருங்கள். இறுதியிலும் அது சிறிய வட்ட வளையமாகவே முடிவடையும் என்பதை நீங்கள் கண்டுகொள் ளலாம். அதுவே மையப்புள்ளி ஆகும். அது அமைந்திருப்பது “அலாஸ்காவின்‘ நேர் கோட்டை அண்டிய “வீசினிபுவீபுறூணூ” பிரதேசமாகும் என்பதும் எனது புரிதல். இந்த புரிதல் தவறு என்று நீங்கள் கருதினால், கஃஅபாவின் வளாகத்தில் சிறு வட்ட வளையமாக ஆரம்பித்த தொழுகையின் சஃப்பானது உலகில் எந்த இடத்தில் வைத்து நேராக ஆனது? அது எந்த அடிப்படையில் சர்வதேசத் திகதிக் கோட்டில் நேர்கோடாக மையம் கொண்டது? என்பதை அவர்கள்தான் விளக்கிச் சொல்ல வேண்டும். ஆக;
சில காலண்டர்கள் ஓரிரு நாட்கள் பிந்து கின்றன. அதனால் எண்ணற்ற பாவங்கள் ஏற்படுகின்றன என்பதற்காகத்தான் ஹிஜ்ரிக் காலண்டரில் இணைந்தோம். இதுவோ நாட்கள் முந்துவதாலும் ஏராளமான பாவங்களுக்கு வழிவகுக்கின்றன. அதனால் பிந்துவதும் வேண்டாம். முந்துவதும் வேண்டாம். நடுநிலையான (2:143, 31:32, 35:32, 68:28) சமுதாயமான நாம் நடுநிலையான காலண்டரைத் தேர்வு செய்வோம். (நிறைவுற்றது)