அறிந்து கொள்வோம்! 

in 2024 செப்டம்பர்

அறிந்து கொள்வோம்! 

மர்யம்பீ, குண்டூர்

1. அநாதைகளின் சொத்தை அநியாயமாக விழுங்குபவனின் நிலை என்னவாகும் என  அல்லாஹ்  கூறுகிறான்?

அவனதுஉணவு (மறுமையில்) நெருப்பாகும்.  (அல்குர்ஆன் 4:10)

2. கருக்கலைப்பு (குடும்பக் கட்டுப்பாடு) செய்பவர்கள் பற்றி அல்லாஹ் கூறுவது என்ன?

வறுமைக்குஅஞ்சிகுழந்தைகளைகொல்லாதீர்கள். (அல்குர்ஆன் 6:151,17:31)

3. வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு என்று அல்லாஹ்  கூறும்  வசனம் எது? 

அல்குர்ஆன் 35:1

4. ஏழு இரவுகள், எட்டு பகல்களும் தொடர்ந்தாற் போல் வேதனை பெற்ற சமூகம் எது என்று  அல்லாஹ்  கூறுகிறான்?

ஆது  சமூகம்.  (அல்குர்ஆன் 69:6,7)

5. தொழுகையில் மறதி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஸலாம்கூறியபின்இரண்டுஸஜ்தாசெய்யவேண்டும். (அப்துல்லாஹ்(ரழி), புகாரி:1226)

6. அல்கஸாமா  என்றால்  என்ன?

சத்தியம்.  (முஸ்லிம் : 3439)

7. பனீ இஸ்ராயீல்களின் வரம்பு மீறிய மிக மிக  கொடியது  எது?

அல்லாஹ்வைகண்ணால்காணும்வரைநம்பிக்கை  கொள்ளமாட்டோம்  என்பது.
(
அல்குர்ஆன் 2:55)

8. பயபக்தியுடையவர்கள் மீது மரணம் நெருங்கும் முன் அல்லாஹ் விதியாக் கியது  எது?

முறைப்படிவஸிய்யத்து (மரண சாஸனம்) செய்வது.   (அல்குர்ஆன் 2:180)

9. கஅபாலா  என்றால்  என்ன?

பிணையாக்கல்.  (புகாரி: பாடம் 39)

10. கணவனை இழந்தவர் கூற வேண்டிய துஆ எது?

இறைவாஎன்னையும், அவரையும் மன்னித்து அவரை விட சிறந்ததை எனக்கு அளிப்பாயாக.  உம்மு சலமா(ரழி)  (முஸ்லிம்:1677)

11. குமுஸ் என்றால் என்ன?

5ல் 1 பங்கு.  அலீ(ரழி) அவர்கள். (புகாரி:3091)

12. வழிகேடு உறுதியாகிய கூட்டத்தார் யாரை பாதுகாவலனாக ஏற்றுக் கொண்டார்கள்?

ஷைத்தான்களை.   (அல்குர்ஆன் 7:30)

13. இரவிலும், பகலிலும் வசித்திருப்பவை எல்லாம்  யாருக்கு  சொந்தம்?

அல்லாஹ்வுக்கே.     (அல்குர்ஆன் 6:13)

14. பயிர்களை எவ்வாறு முளைப்பித்ததாக அல்லாஹ்  கூறுகிறான்?

ஜோடி, ஜோடியாக.   (அல்குர்ஆன் 31:10)

15. அத்த  காஸுர்  என்றால்  என்ன?

பேராசை.    அல்குர்ஆன் அத்தியாயம் : 102

16. தொழுகையின் போது பேச தடை செய்ய கட்டளையிடப்பட்ட வசனம் எது?

அல்குர்ஆன் 2:238வது வசனம். வஹீயாக அறிவிக்கப்பட்ட பின்:  புகாரி : 1200

17. எந்த தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?

அங்கசுத்தி  (உளூ)  செய்து  கொள்ளாதவரின். (அபூஹுரைரா(ரழி),  புகாரி: 6954)

18. நபி(ஸல்) அவர்கள் யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) யாரை அனுப்பி  வைத்தார்கள்?

முஆத்இப்னுஜபல்(ரலி),  (புகாரி: 7371)

19. மது அருந்திய குற்றத்திற்கு தண்டனை எதுவாக இருந்தது?

பேரீச்சம்மட்டைமற்றும்காலனிகொண்டுஅடிப்பது.    (புகாரி: 6776)

20. நபி(ஸல்) அவர்கள் மக்காவை துறந்து மதீ னாவுக்கு வந்து யாருடைய குடும்பத்தாரிடம் 14 நாட்கள் தங்கியிருந்தார்கள்?

பனூ  அம்ர்பின்  அவ்ஃப்  குடும்பத்தாரிடம்.       (முஸ்லிம்: 911)

Previous post:

Next post: