(கடவுளை) இறைவனை பார்க்கவும், பேசவும் முடியுமா?

in 2024 செப்டம்பர்

(கடவுளை) இறைவனை பார்க்கவும், பேசவும் முடியுமா?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

இறைவனை மனிதர்கள் நேரிடையாக பார்க்கவும், பேசவும்  முடியாதா?

இந்த கேள்வி ஒன்றும் புதிது அல்ல; இது காலம்காலமாக கேட்கப்பட்டு வருவது தான். இதற்கு காரணம் கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்பக்கூடியவர்களாக சிலர் இருந்ததால், இருப்பதால்  வந்தது.

இந்த கேள்வியை இறைவனை நம்பாதவர்கள் மட்டும் கேட்கவில்லை. இறைவனை நம்பக்கூடியவர்களுக்கும் இந்த சந்தேகம்  உள்ளது.

இறைவனை நாம் கண்ணால் இந்த உலகில்  பார்க்க  முடியாது.

பார்வைகள் அவனை அடையமுடியா; (ஆனால்) அவனோ (எல்லோருடைய) பார்வை களையும் அடைகிறான்; அவன் நுட்பமான வன்; நன்கறிகின்றவன்.” (6:103) என்பது உண்மைதான். 

ஆனால் பேசமுடியும்; அதுமட்டுமல்ல இறைவனும் நம்முடன் பேசிக்கொண்டு தான்  இருக்கின்றான்.

என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா? உண்மைதான். முதலில் இறைவனை எப்போ பார்க்க முடியும் என்பதை குறிப்பிட்டுவிட்டு எப்படி பேசமுடியும் என்பதை  பார்ப்போம்.

மனிதனை தன்னுடைய பிரதிநிதியாக இந்த பூமியில் வாழ விட்டு விட்டு அவனு டைய சந்தேகங்களுக்கு இறை நூலில் விடை கூறாமல்  இல்லை.

எவ்வாறு என்றால், மறுமை நாளில் தன்னைப் பார்க்க முடியும் என்பதைப் பற்றி இறைநூலில் (குர்ஆனில்) பல இடங்களில்  இறைவனே கூறியுள் ளான். உதாரணமாக: அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும், தமது இறைவனை பார்த்துக் கொண்டு இருக்கும்.   (அல்குர்ஆன்75:22,23)

மேலும் பார்க்க வசனம் : 2:223, 377, 10:7, 10:45, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44. 

அதுபோல் நபி(ஸல்)வர்களும் இறை வனை மறுமையில் காணமுடியும் என்று கூறி யுள்ள ஹதீத்கள் ஏராளம் உள்ளன. (பார்க்க : புகாரி ஹதீத் எண். 806, 7440)

முதலில் இறைவன் மனிதர்களிடம் எவ் வாறு பேசினான்/பேசுகிறான் என்பதையும் பிறகு நாம் எப்படி பேசமுடியும் என்பதையும்  பார்ப்போம்.

“1. வஹீயின் மூலமோ, 2. திரைக்கப்பால் இருந்தோ, அல்லது 3. ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்ப தால் மூலமோ தவிர (வேறு முறையில்) எந்த மனிதரிடமும் (இறைவன்) தான் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன், ஞானமிக்கவன்” (அல்குர் ஆன் 42:51) என்று இறைவன் தான் பேசும் முறையை  நமக்கு  கூறியுள்ளான்.

இந்த மூன்று முறையிலும் இப்பொழுதும் இறைவன் பேசுகிறானா? மேலும் எந்த முறை யில் எப்படி பேசுகிறான் என்று பார்ப்போம்.

1. வஹி என்பது இறைவன் மனிதர்களி லிருந்து யாரை தூதராக தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவருக்கு தன்னுடைய செய்திகளை வானவர் ஜிப்ரீல்(அலை) அவர் களின் வாயிலாக இறைத்தூதரிடம் சேர்ப்பது. உதாரணமாக : இறைநூல்(அல்குர்ஆன்) அவ் வாறு  வந்து  சேர்ந்தது தான்.

குர்ஆனுக்கு முன்பும் பல இறைநூல்கள் பல  இறைத்தூதர்களுக்கு  அருளப்பட்டன.

உதாரணமாக : தவ்ராத், இன்ஜில், ஜபூர் ஆகியவையாகும். ஆனால் பழைய இறை நூல்களில் அவை அருளப்பட்ட மொழிகள் வழக்கத்தில் இல்லை. மற்றும் பல பழைய இறைநூல்கள் கலப்படமிகுந்து வழக்கத்தில் உள்ளன.

எனவே குர்ஆன் அருளப்பட்டது முதல் இன்றுவரையும் மற்றும் இறுதி நாள் வரையும் நம்முடன் இறைவன் பேசிக்கொண்டு தான் இருக்கிறான், இருப்பான். 

(ஆனால் அதை(குர்ஆனை) மந்திர நூலாக பல மக்களால் பார்க்கப்படுகிறது. இறைவன் நம்முடன்  பேசுவதாக  நினைப்பதில்லை)

2. திரை  மறைவாக:

நாம் வாக்களித்த இடத்துக்கு (தூர்சீனா மலை அருகில்) மூஸா(அலை) வந்து அவரிடம் இறைவன் பேசியபோது, “”என் இறைவா! உன்னை எனக்கு காட்டுவாயாக! நான் உன்னை பார்க்க வேண்டும்  எனக் கூறினார்.  அதற்கு  இறைவன்,

என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் பின்னர் நீர் என்னைப்  பார்க்கலாம்  என்று  கூறினான்.

இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்தபோது அது தூளாகிவிட்டது, மூஸா(அலை) அவர்கள் மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது கூறி னார். நீ மிகவும் தூய்மையானவன், நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். மேலும் நான் நம்பிக்கை கொண்டவர்களில் முதன்மையானவனாக இருக்கின்றேன்.      (அல்குர்ஆன் 7:143)

ஆக திரைமறைவில் மட்டுமே இறைவன் பேசுவான் என்பதற்கு மேற்கண்ட இறை வசனம் மூலம் அறியலாம். அவ்வாறு என்றால் நபி(ஸல்) அவர்கள் இறைவனை நேரில் பார்த் தார்கள் என கூறப்படுகிறதே, இது  உண்மையா? இந்த கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் தந்த  பதிலே  போதுமானது.

நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தது உண்டா?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “”அவனோ (இறைவன்) ஒளிமயமானவன், நான் எப்படி அவனை பார்க்கமுடியும்என கூறினார்கள். (ஆதாரம்: நூல்: முஸ்லிம் : 29)

அறிவுப்பூர்வமாக நாம் சிந்தித்துப் பார்த்தால் கூட இறைவனை எந்த மனிதனும் நேரில் காணவில்லை என நம்புவது தான் நன்மையாகும். ஏன் என்றால்? இறைவனை பார்த்தாக ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள்  ஏராளம்.

3. தூதரை  அனுப்பி : 

நம்முடைய வானவர்கள் (மலக்குகள்) இப்ராஹீமிடம் ஒரு நற்செய்தியை சொல்ல அனுப்பப்பட்டார்கள். 

நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீ முக்கு நற்செய்தி கொண்டுவந்துசாந்தி உண்டாவ தாக!’ என்று கூறினார்கள். (அதற்கு உங்களின் மீதும்) சாந்தி உண்டாவதாக! என்று அவர் சொன் னார். (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றை (அதன் இறைச்சியைக்) கொண்டு வருவதில்  தாமதிக்கவில்லை.     (அல்குர்ஆன் 11:69)

ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார். அவர்களைப் பற் றிய பயத்தையும் அவர் (தம்) மனதில் உணர்ந்தார். (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) பயப் படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத் தார்பால் அனுப்பபட்டிருக்கிறோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 11:70)

அப்போது அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார். இன்னும் அவர் சிரித்தார்; அவருக்கு நாம் இஸ்ஹாக் கைப்பற்றியும், இஸ் ஹாக்குப் பின் யஃகூபைப்  பற்றியும்  நன்மாராயம்  கூறினோம்.     (அல்குர்ஆன் 11:71)

அதற்கு அவர் கூறினார்: “, கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறு வேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் தான்!”      (அல்குர்ஆன் 11:72)

(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளை யைப் பற்றி நீர் ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ் வின் அருளும், அவனுடைய பாக்கியங்களும் இவ் வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனா கவும்  இருக்கின்றான்  என்று  பதிலளித்தார்கள்.   (அல்குர்ஆன் : 11:73)

ஆக மூன்று முறையிலும் இறைவன் எவ் வாறு பேசினான் என்பதை தெளிவாக இறைநூல் மூலம் (குர்ஆன் மூலம்) அறியலாம். 

நாம்  இறைவனிடம்  பேச  முடியுமா?  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: