பரிந்துரை (ஃபாஅத்) RECOMMENDATIONபயன் தருமா? பயன் தராதா?
A.N. திருச்சி
இறைநூலான குர்ஆன் என்பது அல்லாஹ் வின் திருவாக்கு! எவ்வாறு என்றால்,
“நமது அடியாருக்கு(முகம்மது நபிக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, அதில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உதவியா ளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்‘’ (அல்குர்ஆன் 2:23)
மேற்கண்டவாறு குர்ஆன் (இறைநூல்) சவால் விட்டு சுமார் 1445 ஆண்டுகள் கடந்து 1446ம் ஆண்டு நடக்கிறது. ஆயினும் எவராலும் இதற்கு நிகராக ஒரு நூலை கொண்டுவர முடியவில்லை . இனியும் எவ ராலும் (மறுமை வரை) கொண்டு வரவும் முடியாது.
எனவே இது (குர்ஆன்) இறைவாக்கு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எந்தவித சந்தேகமும் இல்லை என்று நம்பக் கூடிய முஸ்லிம் சமுதாயம் முழுமையாக இதை பயன்படுத்தவில்லை.
சந்தேகப்படுகின்ற சிலர் என்ன நினைக் கின்றார்கள் என்றால் முகம்மது நபி(ஸல்) அவர்கள் இதை சுயமாக கற்பனை செய்து அதை இறை செய்தி என மக்களிடம் கூறி யிருக்கலாம் என்பதுதான் அவர்களின் சந்தேகம்.
ஆனால் உண்மை என்னவென்றால் முகம்மது நபி(ஸல்) அவர்கள் தாமாக உரு வாக்கி இதைக் கூறியிருக்க முடியாது, கூற வில்லை என்பதற்கு குர்ஆனிலேயே ஏராள மான சான்றுகள் உள்ளன. அது மட்டுமல்ல;
A. இறைநூலான குர்ஆன் வரலாற்று (க்ஷிணூறீவீநுயூக்ஷு) நூல் அல்ல.
B. சுயசரிதையை கூறும் (யணூநுறூயூபுPக்ஷிக்ஷு) நூலும் அல்ல.
C. அறிவுக்கு அப்பாற்பட்ட வியங் களை பேசும் நூலும் அல்ல.
D. வெறும் அறிவுரைகளை மட்டுமே சொல்லும் நூலும் அல்ல.
மாறாக அதில் அறிவுக்கு பொருத்த மான பல கருத்தும், அனைத்து மக்களுக்கும் வழிகாட்டும் நூலாகவும், மனிதர்களின் சந்தேகங்களுக்கு விடை கூறும் நூலாகவும் அது இருக்கிறது.
“இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே (வழிகாட்டும் நூலாக) இருக்கிறது” என்று அதுவே கூறுகிறது. (அல்குர்ஆன் 68:52)
மேலும், “இந்த குர்ஆனை (இறைநூலை) அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் அல் லாதவரிடமிருந்து இது வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்” என்றும் கூறுகிறது. (அல்குர்ஆன் 4:82)
இப்படிப்பட்ட அற்புதமான குர்ஆனை மொழி பெயர்த்தவர்கள் ஏனைய நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதுபோல் வார்த்தைக்கு வார்த்தை (நிநுயூம் யக்ஷு நிநுயூம்) மொழி பெயர்த்ததால் பல்வேறான கருத்து மோதல்களும், மற்றும் இறந்துபோன சில அடியார்கள் பரிந்துரை செய்வார்கள் என்ற சர்ச்சையும் நிலவுகிறது.
ஆனால் குர்ஆன் என்பது நேருக்கு நேர் இறைவன் பேசுவது போல் அமைந்த வழி காட்டும் நூலாகும். எனவே குர்ஆனை முழுமையாக புரிந்துகொள்ள முன்–பின் வசனங்களைப் பற்றியும் அதன் மையக் கருத்தைப் பற்றியும் சிந்தித்து மொழி பெயர்ப்புடன் படித்தால் சுலபமாக புரிந்து கொள்ளமுடியும்.
குர்ஆனில் (இறைநூலில்) தெளிவாக விளங்கக் கூடிய வகையில்தான் பெரும் பாலான வசனங்கள் உள்ளது. ஒருசில வச னங்கள் மட்டும் சிந்தித்து பார்த்து விளக் கங்களை பெறுமாறு உள்ளது. ( பார்க்க: 3:7)
ஆனால் குர்ஆனில் நான்கு விதமான கருத்தை கூறும் வசனங்கள் உள்ளது என் றால் அது பரிந்துரை பற்றிய வசனங்களாகும்.
ஏன் இந்த பரிந்துரை வசனங்களை மட்டும் நான்கு விதமாக கூறப்பட்டுள்ளது என்று சிந்தித்தால் பல சர்ச்சைகள் அடங்கி விடும்.
எனவே நாம் பரிந்துரை பற்றிய நான்கு விதமான வசனங்களைப் பார்ப்போம்.
1. முதலாவதாக பரிந்துரை இல்லை என்று இடம் பெற்ற வசனங்கள் சுமார் 10 உள்ளன.
அவை : 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 36:23, 39:43,44, 74:48
(பரிந்துரை ஏன் இல்லை என்பதற்கான காரணம் விளக்கம் பிற்பகுதியில் குறிப் பிடப்பட்டுள்ளது தனி பகுதியில் காணலாம்)
2. இரண்டாவதாக பரிந்துரை உண்டு என இடம்பெற்ற வசனங்கள். சுமார் (2) இரண்டு உள்ளன.
அவை: 19:87, 34:23
3. மூன்றாவதாக அல்லாஹ்வே சிலருக்கு அனுமதி கொடுத்து சிலரின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக இடம் பெற்ற வசனங் கள். (4) நான்கு உள்ளன.
அவை : 2:255, 10:3, 20:109, 53:26.
(53:26 இது மட்டும் மலக்கு பரிந்து பற்றியது)
4. நான்காவதாக பரிந்துரை செய்யமுடியாது என இடம்பெற்ற வசனங்கள் ஒன்று உள்ளது.
அவை : 10:18
இதை அல்லாது ஹதீத் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பல ஹதீத் நூல்களிலும் பல்வேறான கருத்துக்களை தரக்கூடியவை களும் பரிந்துரை பற்றி உள்ளன.
பரிந்துரையை வைத்து மறுமையில் சுலபமாக சுவனம் சென்றுவிடலாம் என்ற தவறான கருத்தும் மற்றும் பெரும் பாவ மான இணை வைத்தல் அளவிற்கு மனி தனை கொண்டு செல்லக்கூடிய பாவச் சாய லாகவும் இது இருக்கிறது.
எனவேதான் இறைவன் இதை நான்கு விதமாக குறிப்பிட்டுள்ளான்.
1. பரிந்துரை ஏன் இல்லை என்பதற்கான விளக்கம் :
இறைவனை நம்பாதவர்களுக்கும், மறு மையை நம்பாதவர்களுக்கும் பரிந்துரை இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்று தான். ஆனால் ஏக இறைவனையும், மறுமை யும் நம்பியவர்கள் யூதர்களும், கிறிஸ்தவர் களும் ஆவார்கள். எனினும் அவர்கள் நம் பிக்கை என்னவென்றால் குடும்ப பாரம் பரியமும், சிலரின் பரிந்துரையும் தங்களை மறுமையில் காப்பாற்றும் என்பது அவர்க ளின் மூட நம்பிக்கையாக இருந்தது.
இத்தகைய கருத்தின் அடிப்படையில் பரிந்துரை இல்லை என்பதைத்தான் இறைவன் கூறியுள்ளான்.
2. பரிந்துரை உண்டு என்பதற்கான விளக்கம் :
பரிந்துரை அறவே இல்லை என்றால் பரிந்துரை உண்டு என்ற வசனத்தை இறை வன் கூறியிருக்க மாட்டான். எனவே இறை வன் யாருக்கு அனுமதி தருகின்றானோ அவர்கள் செய்யும் (உதாரணமாக: நபி (ஸல்) அவர்கள்) நல்லவர்களுக்கு செய்யும் பரிந்துரை.
3. பரிந்துரை பயன்தரும் என்பதற்கான விளக்கம் :
பரிந்துரை உண்டு என்பதால் பயன்தரும் என்பதும் தெளிவாக தெரிகிறது. ஆனால் அந்த பரிந்துரை செய்யக்கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களும் மற்றும் சில வான வர்களும் ஆவார்கள். ஆனால் யார்? யார் என்பதும் யாருக்கு செய்வார்கள் என்பது மட்டும் அல்லாஹ் மட்டுமே அறிவான்.
அதாவது இறைவன் யார் யாரை எல்லாம் மன்னிக்க நாடிவிட்டானோ அவர் களை பரிந்துரை மூலம் நரகத்திலிருந்து விடுவித்து சுவனம் செல்ல அனுமதிப்பான். இதுகூட சில நல்லடியார்களை சிறப்பிக்க இறைவன் செய்த ஏற்பாடாக இருக்குமே தவிர முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. அல்லாஹ்வே அறிவான்.
அதே வேளையில் இறந்த சில நல்லடி யார்கள் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பி அவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்கள் பரிந்துரை செய்ய முடியாது என்பதும் தெளிவாக அறியலாம்.
பார்க்க வசனங்கள் உதாரணமாக : 2:186, 7:29, 7:55,56, 7:180, 7:194, 7:197, 10:106, 13:14,16:20. இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளன.
நாம் படைப்பினங்களிடம் பிரார்த் தனை செய்வதை தவிர்த்து படைத்த இறை வனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்வது இறைவன் பரிந்துரைக்கும் ஏற்ற நல்லடி யார்களாக ஆக்கும். இன்ஷா அல்லாஹ்.
(இறைவா) உன்னை மட்டுமே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்து வாயாக! (குர்ஆன் 1:5,6)
பரிந்துரை செய்ய முடியாது என்பதற்கான விளக்கம் :
மக்காவில் வாழ்ந்த நிராகரிப்பாளர் கள் ஏக இறைவனை மட்டும் ஏற்றுக் கொள் ளாமல் காஃபா ஆலயத்தில் இறந்து போன சில நல்லடியார்களின் சிலைகளை வைத்து இது (இவர்கள்) பரிந்துரை செய்யும்/ செய் வார்கள் என்று நம்பினார்கள். இத்தகைய நம்பிக்கையும் பரிந்துரையும் செய்யமுடி யாது என்பதை தான் இறைவன் கூறியுள் ளான். அவ்வாறு நம்பிக்கை உள்ளவர்கள் இணைவைப்பவர்கள் என்றும் கூறியுள் ளான்.
பரிந்துரை உண்டு என்று நம்பினாலும் உலக வாழ்க்கையில் வசதியும், வாய்ப்பும் இருக்கும்போதே நல்வழியில் செல்வத்தை செலவழித்துக் கொள்ளுங்கள். இவ்வுலகில் நாம் செய்யக்கூடிய நன்மைகளை நாளை (மறுமையில்) பரிந்துரை பெற்றும் அல்லது பரிந்துரை தேவையில்லாமலும் கூட சுவனம் செல்ல வாய்ப்பாக இருக்கும்.
இணை வைத்தவர்களுக்கு பரிந்துரை ஏற்கப்படமாட்டாது எவ்வாறு என்றால்:
A. நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் இறைவனின் மிகவும் நேசத்திற்குரியவர்களாக இருந் தார்கள். ஆயினும் அவரால் தன் தந்தைக் காக செய்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. (பார்க்க: 9:114)
B. நபி நூஹ்(அலை) அவர்கள் தன் மகனுக்காக செய்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. (பார்க்க : 11:46)
C. முகம்மது நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய பெரிய தந்தைக்காக (அபூ தாலிப்க்காக) செய்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.