அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை
வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
2024 ஆகஸ்ட் மாத தொடர்ச்சி…
அல்லாஹ் அருளிய தூய இறைநூலை மூடி மறைத்தார்கள்:
அல்லாஹ் அருளிய இறைநூலை மூடி மறைத்து அதற்குப் பதிலாகச் சொற்ப விலையைப் பெறுவோர் தங்களது வயிறு களில் நெருப்பைத் தவிர வேறெதையும் உட்கொள்வதில்லை. (2:174) என்பதற்கு, அரபு மக்களின் மூதாதையர்களைப் புகழ்ந்து பேசி அவர்களிடமிருந்து பெற்று வந்த அற்பமான அன்பளிப்புகளையும் காணிக்கை களையும் இழந்துவிடக் கூடாது என்பதற் காகவும், தங்களது தலைமைப் பதவி பறி போய்விடக் கூடாது என்பதற்காகாவும், வேத உண்மைகளை வெளிப்படுத்தினால் மக்கள் தங்களை விட்டுவிட்டு நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி விடுவார்களோ என்ற அச்சத்தினாலும், வேத வசனங்களை மூடி மறைத்த யூதர்களைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு பேசுகின்றான் என்பதாக இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார் கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:531,532) மேலும்,
மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அனுபவித்தார்கள்:
(அவர்கள் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அனுபவித்தனர்) சமய அறிஞர்கள், துறவிகள் ஆகியோரில் கணிச மானவர்கள் மக்களின் செல்வங்களைத் தவ றான முறையில் உண்ணுகின்றனர். (9:34, 5:63, 4:161) இதில் “சமய அறிஞர்கள்” அல் அஹபார் என்பது யூத மத அறிஞர்களையும் “”துறவிகள்” அர்ருஹ்பான் என்பது கிறிஸ்த்தவ மதத் துறவிகளையும் குறிக்கும் என்பதாக சுத்தீ(ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள். அது சரிதான் என்பதற்கு ஆதாரமா (5:63,82) ஆகிய இறை வசனங்களை இமாம் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் கொண்டு வருகின்றார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்: 4:254,256) மேலும் அவர்கள்,
மற்றவர்களுக்கு உபதேசிப்பார்கள் தமது சொந்த வாழ்க்கையில் அதற்கு மாற்றமாக நடப்பார்கள்:
நீங்கள் (தவ்ராத்) வேதத்தை ஓதிக் கொண்டே, உங்களை மறந்துவிட்டு, நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறீர்களா? நீங் கள் புரிந்து கொள்ளமாட்டீர்களா? (2:44) எனும் வசனத்திற்கு:
அல்லாஹ்விற்கு வழிபட்டு நடக்க வேண்டும்; அவனை அஞ்சி வாழ வேண்டும் என்றெல்லாம் மக்களுக்கு இஸ்ரவேலர்கள் உபதேசிப்பார்கள். ஆனால் அவர்கள் தமது சொந்த வாழ்க்கையில் அதற்கு மாறாக நடப்பார்கள். இதற்காகவே அவர்களை அல்லாஹ் கண்டிக்கின்றான் என்று கத்தாதா (ரஹ்) அவர்களும்.
உங்களிடம் உள்ள தவ்ராத் வேதத்தில் கூறப்பெற்றுள்ள நபித்துவத்தையும் ஒப்பந்தத்தையும் ஏற்று நடக்க வேண்டும்; நிராகரிக்கக் கூடாது என்று மக்களுக்கு நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் உங்களை நீங்கள் விட்டு விடுகின்றீர்களே! எனது தூதர் முஹம்மதை ஏற்று நடக்கவேண்டும் என்று உங்களிடம் நான் வாங்கியுள்ள உறுதி மொழியை நீங்கள் மதிக்கவில்லையே! எனது வேதத்தில் நீங்கள் அறிந்துள்ளதை மறுக்கின்றீர்கள். எனது ஒப்பந்தத்தை மீறு கின்றீர்களே! இது தர்மமாகுமா? என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும்,
முஹம்மத்(ஸல்) அவர்களது மார்க்கத் தில் இணைந்துவிடுங்கள்; தொழுகையைக் கடைப்பிடியுங்கள் என்றெல்லாம் இறை வன் உங்களுக்கு இட்டுள்ள கட்டளை களை மக்களுக்கு நீங்கள் எடுத்துரைக்கின் றீர்கள். ஆனால் உங்களையே நீங்கள் மறந்து விடுகின்றீர்களே! என்பதாக ளஹஹாக் (ரஹ்) அவர்களும்,
இந்த யூதர்களிடம் ஒரு பழக்கம் இருந்து வந்தது. அவர்களிடம் ஒருவர் வந்து ஏதே னும் ஒன்றைக் குறித்துக் கேட்டால் அதன் மூலம் அவர்களுக்கு இலஞ்சமோ வேறு ஏதேனும் ஆதாயமோ கிடைக்காது என்றிருந்தால் அப்போது மட்டும் அவர்கள் உண்மையைக் கூறுவார்கள். இதனையே நன்மை புரியுமாறு மக்களுக்குச் சொல்லி விட்டு உங்களையே நீங்கள் மறுந்துவிடுகின் றீர்களே! இது நியாயமா என இறைவன் இங்கு கேள்வி எழுப்புகின்றான் என்பதாக அப்துர் ரஹ்மான் பின் அஸ்லம்(ரஹ்) அவர் களும்,
வேதக்காரர்களே! நன்மைகள் புரியுமாறு மக்களை நீங்கள் ஏவுகின்றீர்கள். ஆனால் உங்களை நீங்கள் மறந்துவிடுகின்றீர்களே! மக்களுக்கு எதை ஏவுகின்றீர்களோ அதை நீங்கள் செயல்படுத்துவதில்லை. இத்தனைக் கும் நீங்கள் தவ்ராத் ஓதி வருகின்றீர்கள். இவ்வாறு நடந்து கொள்கின்றவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அவ் வேதத்தின் மூலம் அறிந்துள்ளீர்கள். இது நியாயமா என இறைவன் இங்கே வினா தொடுக்கின்றான் என்பதாக இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்களும் விளக்கம் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்: 1:186-190)
மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்:
(நபியே!) வேதக்காரர்(களான யூதர்) களில் சிலர் உள்ளனர். அவர்களிடம் நீர் ஒ(ரேயயா)ரு பொற்காசை நம்பி ஒப்படைத்தாலும், அவர்களிடம் நீர் விடாமல் நிலையாய் நின்று (நச்சரித்துக்) கொண்டிருந்தாலே தவிர அதை உம்மிடம் அவர்கள் (திருப்பித்) தரமாட்டார்கள். (3:75)
எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களான பழங்குடி அரபு மக்களின் உடைமைகளை எடுத்துக் கொள்வதால் எங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை என்றார்கள் :
(நபியே!) வேதக்காரர்(களான யூதர்)களில் சிலர் உள்ளனர். அவர்களிடம் நீர் ஒ(ரே ஒ)ரு பொற்காசை நம்பி ஒப்படைத்தாலும், அவர்களிடம் நீர் விடாமல் நிலையாய் நின்று (நச்சரித்துக்) கொண்டிருந்தாலே தவிர அதை உம்மிடம் அவர்கள் (திருப்பித்) தரமாட்டார்கள். “எழுத வாசிக்கத் தெரியாதவர்(களான பாமரர்)கள் வியத்தில் எங்கள் மீது (குற்றம் சாட்ட அல்லாஹ்வுக்கு) வழியேதுமில்லை” என்று அவர்கள் கூறினார்கள். (3:75, இப்னு அப்பாஸ் (ரழி), அபூஸஅஸஆபின் யஸீத் (ரஹ்), முஸ்னது அப்திர் ரஸ்ஸாக், தஃப்ஸீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் 2:129-131)
தெரிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது அவர்கள் பொய் கூறினார்கள்:
அதாவது, எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களான அரபு மக்களின் உடைமை களைச் சுரண்டுவதால் மார்க்க அடிப்படை யில் எங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. இறைவன் அதை எங்களுக்கு அனுமதித்து விட்டான் என்று கூறினார்கள். “”இதன் மூலம் அவர்கள் தெரிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள். (3:75) என்று அல்லாஹ் சொல்கின்றான்.
யூதர்கள் பல வகைகளில் மக்களுக்கும் மார்க்கத்திற்கும் அநீதியிழைத்தார்கள்:
யூதர்கள் இழைத்த அநீதியாலும் மக்களில் பெரும்பாலானவர்களைத் தூய இறைவழியிலி ருந்து அவர்கள் தடுத்த தாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட் டிருந்த தூய்மையானவற்றைக் கூட அவர்களுக்கு நாம் தடை செய்தோம். (4:160) இங்கு யூதர்கள் பெரும்பாவங்கள் புரிந்து பெரும்பாலானவர்களைத் தூய இறைவழி யிலிருந்து தடுத்து அநீதி இழைத்த காரணத் தால் அவர்களுக்குத் தான் அனுமதித்திருந்த தூய்மையான உணவுப் பொருட்களைக் கூடத் தடை செய்ததாக அல்லாஹ் தெரிவிக்கின்றான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்: 2:820)
மூஸா தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனாலும் அவருக்குப் பின்னால் நீங்கள் அநீதி இழைத்தவர்களாகக் காளைக் கன்றை(க் கடவுளாக) ஆக்கிக் கொண்டீர்கள். (2:92)
பெரும்பாலானவர்களை இறைவழியிலிருந்து தடுத்தார்கள்:
மக்களில் பெரும்பாலானவர்களைத் தூய இறைவழியிலிருந்து அவர்கள் தடுத்ததாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றைக் கூட அவர்களுக்கு நாம் தடைசெய்தோம். (4:160)
இங்கு யூதர்கள் பெரும் பாவங்கள் புரிந்து பெரும்பாலானவர்களைத் தூய இறை வழியிலிருந்து தடுத்து அநீதி இழைத்த காரணத்தால் அவர்களுக்குத்தான் அனுமதித்திருந்த தூய்மையான உணவுப் பொருட்களைக் கூடத் தடை செய்ததாக அல்லாஹ் தெரிவிக்கின்றான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்:2:820)
வட்டி ஹராமாக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்குவதை ஆகுமாக்கிக் கொண்டார்கள்:
(வட்டி ஹராமாக்கப்பட்டிருந்தும் வட்டியை அவர்கள் உண்டார்கள்) வட்டி யிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங் களைத் தவறான முறையில் அவர்கள் உண்டதாலும் அவர்களுக்கு நாம் வதைக் கும் வேதனையைத் தயார் செய்து வைத் துள்ளோம். (4:161) அதாவது அவர்களுக்கு வட்டியை அல்லாஹ் தடை செய்திருந்தான். ஆனால் அவர்கள் வட்டி வாங்கினார்கள். அதற்காகப் பல்வேறு தந்திரங்களையும் விதவிதமான உபாயங்களையும் கையாண்டார்கள். அதன்மூலம் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்டார்கள். அத்தகைய (இறை) மறுப்பாளர்களுக்கு நாம் வதைக்கும் வேதனையைத் தயார் செய்து வைத்துள்ளோம் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். (தஃப்சீர் இப்னு கஸீர் 2:820-825)
அற்ப கிராயத்தைப் பெற்றுக் கொண்டார்கள்:
நெறிநூல் வழங்கப் பெற்றோரிடம் நீங்கள் மக்களுக்கு அ(ந்த வேதத்)தை நிச்சயமாகத் தெளிவுபடுத்திவிட வேண்டும். அதை நீங்கள் மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதிமொழி பெற்றதை (நபியே!) நினைத்துப் பாருங்கள். ஆனால் அவர்களோ அதைத் தமது முதுகுகளுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டு, அதற்குப் பதிலாக அற்பமான விலையை வாங்கிக் கொண்டனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் மோசமானதாகும். (3:187) யூத கிறிஸ்தவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களை நம்பிக்கை கொள்ள வேண்டும் அவர்களின் புகழை மக்களிடம் ஓங்கி ஒலிக்கப் பறைசாற்ற வேண்டும். முஹம்மத்(ஸல்) அவர்களது கட்டளைக்காக அவர்கள் (எப்போதும்) காத்திருக்க வேண்டும். அவர்களை அல்லாஹ் எப்போது தூதராக அனுப்பினாலும் உடனே அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் நபிமார்களின் நாவுகள் வழியாக அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருந்தான். ஆனால் அவர்களோ முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றிய உண்மைகளை மறைத்தனர். இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நன்மைக்குப் பதிலாக மிகவும் தாழ்ந்த அற்பமான உலகாதாயத்தை அவர்கள் வாங்கிக்கொண்டனர். அவர்களின் இந்தப் பேரமும் வர்த்தகமும் மிக மோசமானதாகும். (தஃப்ஸீர் இப்னு கஸீர் 2:336)
சொற்ப விலைக்குத் தூய மார்க்கத்தை விற்றார்கள்:
மனிதர்களைக் கண்டு அஞ்சாதீர்கள்; என்னையே அஞ்சுங்கள் எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். (5:44) அறியாமைக் காலத்தில் யூதர்களில் குறைழா, நளீர் ஆகிய இரு குலத்தார் இருந்தனர். அதில் குறைழா குலத்தைச் சேர்ந்த ஒருவர் நளீர் குலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்துவிட்டால் தவ்ராத் வேதத்திலுள்ள இறைக் கட்டளைகளை அவர்கள் மறைத்துவிட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்காமல் நூறு “வஸ்கு” பேரீச்சம்பழம் இழப்பீடாகக் கொடுத்துவிடுவார்கள். இது குறித்து பனூ குறைழா குலத்தார் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரினர். அப்போதுதான் இவ்வசனங்கள் அருளப்பெற்றன. (இப்னு அப்பாஸ் (ரழி), புகாரி: 3635, 6819, 7543, அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத், ஸஹீஹ் இப்னு ஹிப்பான், ஹாகிம், தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் : 3:182-193)