அறிந்து கொள்வோம்!

in 2024 மே

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

1. ஆதம் நபி அவர்கள் மன்னிப்பு கேட்பதற்குரிய வார்த்தைகளை யாரிடம் கற்றுக்கொண்டார்கள்?

அல்லாஹ்விடம்.  அல்குர்ஆன் 2:37

2. நோன்பாளிகள் எந்த வாசல் வழியாக சொர்க்கத்தில் நுழைவார்கள்?

ரய்யான்வாசல்.   புகாரி : 3257

3. நபி(ஸல்) அவர்கள் எந்த வாகனத்தில் மிஹ்ராஜ் பயணம் செய்தார்கள்?

புராக்.   புகாரி : 3207

4. நபி ஈஸா(அலை) அவர்களின் மற்றொரு பெயர் என்ன?

மஸீஹ்.   அல்குர்ஆன் 3:45

5. நபி(ஸல்) அவர்கள் மரணித்த ஆண்டில் எத்தனை நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்?

20 நாட்கள்.    புகாரி : 2044

6. முதன் முதலில் இறைவன் பூமியில் இறக்கிய  நெறிநூல்  எது?

ஜபூர்.   அல்குர்ஆன் 4:163

7. தீய சொற்களை சொல்ல யாருக்கு அனுமதி  உண்டு?

அநியாயம்  செய்யப்பட்டவர்களுக்கு.            அல்குர்ஆன் 4:148

8. புதிய ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது யார்  சாபமிடுவார்கள்?

அல்லாஹ்வின்  வானவர்கள்.   புகாரி : 1867

9. எந்தப் போரின் போது உணவு தீர்ந்து போய்  பஞ்சம்  ஏற்பட்டது?

ஹவாஸ்  போரின்போது.    புகாரி: 2484

10. உம்மு சலமா(ரழி) அவர்களின் முதல் கணவர்  பெயர்  என்ன?

அபூசலமா.   முஸ்லிம் : 1678

11. சாலையோரங்களில் அமர்ந்து பேசு வதை  யார்  தடை செய்தார்கள்?

முஹமது  நபி (ஸல்)  அவர்கள்.  முஸ்லிம்:4365

12. நல்ல மனிதரின் கனவு நபித்துவத்தின் எத்தனை  பாகங்களில்  ஒன்றாகும்?

40  பாகங்களில்   ஒன்று.   முஸ்லிம்: 4557

13. வேதக்காரர்களின் சலாமுக்கு எவ்வாறு பதில் கூற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

வஅலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும்  நேரட்டும்)  முஸ்லிம் : 4369

14. நம் வசனங்களை பொய்பிப்பவர்கள் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?

நரகவாசிகள்.   அல்குர்ஆன் 5:86

15. எவர் (தான தர்மம்) கொடுத்து இறைவனிடம் பயபக்தியுடன் நடப்பவரின் சுவர்க்கத்தின் வழியை எப்படி அமைப்போம்  என்று  அல்லாஹ்  கூறுகிறான்?

இலேசாக்குவோம்.   அல்குர்ஆன் 92:5,7

16. பிந்தியது மறுமை, முந்தியது இம்மை என்று அல்லாஹ் கூறும் வசனம் எது?

அத்தியாயம்  :  92:13

17. மனிதர்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும்  கோபத்திற்குரியவன்  யார்?

உண்மையைமறைத்துபொய்மையைநிலைநாட்ட  கடுமையாக  சச்சரவு  செய்பவன். அல்குர்ஆன் 5:183

18. நயவஞ்சகர்களின்  தலைவர்  யார்?

அப்துல்லாஹ்பின்உபைபின்சலூல்.   முஸ்லிம் : 5355

19. எத்தனை உறுப்புகள் தரையில் படும்படி ஸஜ்தா செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

ஏழுநெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டு கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள்.   புகாரி: 812

20. அல்லாஹ்விற்கு குமாரர்கள் இருப்ப தாக  யார்  யார்  கூறுகிறார்கள்?

யூதர்களும், கிறிஸ்துவர்களும்.   அல்குர்ஆன் 5:18

Previous post:

Next post: