ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : சூரிய கிரகணம் என்றால் நாளைக்கு (ஹிபுவீUயூபுஸிஸிக்ஷு) இயல்பாகவே புதிய பிறை ஒன்று தான் என்று நபியவர்கள் சொல்ல வில்லையே! ஏன்?
தெளிவு : “”இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது; தொழுகைக்குத் தயாராகுங்கள் என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.’’
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) அறி வித்தார்: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸ லாத்து ஜாமிஆ (தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. (புகாரி: 1045)
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப் போது அவர்கள் அறவிப்பாளர் ஒருவரை அனுப்பி “அஸ்ஸலாத்து ஜாமிஆ‘ (தொழுகை நடைபெறுகிறது) என்று அறிவிக்கச் செய் தார்கள். (முஸ்லிம் : 1646) அத்துடன்;
“உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கட்டிக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள்’
அபூ பக்ரா(ரழி) அறிவித்தார்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் (கட்டிக்) கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். (புகாரி : 1040, 46)
அஸ்மா பின்த் அபீபக்ர்(ரழி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் (சூரிய கிரகணம் ஏற்பட்ட தினத்தில்) நபி(ஸல்) அவர்கள் பதற்றமடைந்தவர்களாக (தமது மேல் துண்டுக்குப் பதிலாகத் தமது வீட்டாரின்) முகத்திரைத் துணியை எடுத்து போட்டுக் கொண்டார்கள். பிறகு, அவர்களிடம் அவர் களது மேல்துண்டு கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. அவர்கள் (தொழுகை யில்) நின்று மக்களுக்கு நீண்ட நேரம் தொழுவித்தார்கள். (முஸ்லிம் : 1656)
“சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்’
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்தார்: சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் தொழுதார் கள். (புகாரி: 431, 748)
“உடனே நபித்தோழர்களும் பள்ளிக்குள் நுழைந்தார்கள்’
“இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழுகை நடத்தினார்கள்.’
அபூ பக்ரா(ரழி) அறிவித்தார்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் (கட்டிக்) கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார் கள்.(புகாரி: 431,748,1040,1044,1046, முஸ்லிம்: 1643,1645,1646,1647,1648, 1650, 1651,1653)
1. “கிரகணத் தொழுகைக்குத் தயாராகும் படி அழைப்புக் கொடுத்தார்கள்‘ (புகாரி: 1045, முஸ்லிம் : 1646)
2. “உடனே நபி(ஸல்) அவர்களும் தங்க ளின் ஆடையை இழுத்துக் கட்டிக்கொண்டு அவசரமாக பள்ளிக்குள் நுழைந்தார்கள்‘ (புகாரி: 1040,1046, முஸ்லிம்: 1656)
3. “சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்‘. (அப்துல் லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்தார். சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். (புகாரி: 431, 748)
4. “உடனே நபித் தோழர்களும் பள்ளிக் குள் நுழைந்தார்கள்.’ (புகாரி:1040)
5. “இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழுகை நடத்தினார்கள்‘ (புகாரி:1040, முஸ்லிம் : 1647)
6. “அந்தத் தொழுகையில் நீண்ட நேரம் ஓதினர்கள், நீண்ட நேரம் ருகூவும் செய்தார் கள்‘. (புகாரி: 1046,1044, முஸ்லிம்:1648, 1645)
7. “பின்னால் நின்றவர்களுக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நீண்ட ரக்அத்களைத் தொழுகையை நடத்தினார்கள்‘ (புகாரி:922, முஸ்லிம் : 1653)
8. “பின்னால் உள்ளவர்கள் மயங்கி விழும் அளவிற்கு தொழுவித்தார்கள்‘ (முஸ்லிம் : 1651)
9. “சூரிய கிரகணம் முடியும் வரை தொழு கையை நடத்தினார்கள்‘. (புகாரி:1040)
10. “கிரகணம் விலகி சூரியனின் வெளிச்சம் பளிச்சென்று தோன்றும் வரை தொழுகையைத் தொடர்ந்தார்கள்‘ (முஸ்லிம் : 1643)
11. “தொழுகை முடிந்ததும் மக்களுக்கு சில உபதேசங்கள் செய்தார்கள்‘ (புகாரி: 431,748, 922,1040,1044,1046, முஸ்லிம்: 1643,1645-1653) அவற்றில்;
12. “எவருடைய மரணத்திற்காகவோ எவரு டைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்ப தல்லை என்று கூறினார்கள்‘. (புகாரி: 1040-1044,1046, முஸ்லிம்: 1645,1648,1652)
13. சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும் என்று கூறி னார்கள். (புகாரி: 1041-1044, 1046, முஸ்லிம் : 1643, 1645,1648,1651,1652)
14. “நீங்கள் சூரிய கிரகணத்தைக் கண்டால் அது விலகும் வரை தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்‘ என்று கூறினார்கள். (புகாரி: 1040-1044,1046, முஸ்லிம் : 1645,1648,1651, 1652)
15. “கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப்படுத்துங்கள், தொழுங்கள், தர்மம் செய்யுங்கள்‘ என்று குறிப்பிட்டார்கள். (புகாரி : 1044)
16. “கிரகணம் ஏற்படுவதை நீங்கள் கண் டால் “தக்பீர்‘ (அல்லாஹு அக்பர்) கூறுங்கள், அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், தொழுங் கள், தான தர்மம் செய்யுங்கள் என்றார்கள்‘. (முஸ்லிம் : 1643)
17. “கிரகணம் முற்றாக நீங்கி சூரிய வெளிச் சம் வரும்வரை தொழுங்கள் என்று சொன்னார் கள்‘. (முஸ்லிம்: 1645)
18. “இன்று எனக்கு சுவர்க்கம் நரகம் எடுத் துக் காட்டப்பட்டது. அதுபோன்ற மோசமான கோரக் காட்சி எதையும் நான் இதுவரை கண்டதில்லை‘ எனக் கூறினார்கள்‘. (புகாரி: 431,748,922, முஸ்லிம்: 1651, 1652,1653)
19. “சுவர்க்கத்தின் பழக் குலையைப் பிடிக்க முயன்று பின்வாங்கிவிட்டேன் என்றார்கள்‘. (புகாரி: 748, முஸ்லிம்:1645,1652)
20. “அதிலிருந்து ஒரு குலையைப் பிடித் தேன். அதை நான் எடுத்திருந்தால் உலகம் உள்ளளவும் அதை நீங்கள் புசித்திருப்பீர்கள் என்று கூறினார்கள்‘. (புகாரி:748, முஸ்லிம்: 1645, 1651) மேலும்,
21. “நான் நரகத்தைக் கண்டேன். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்து உக்கிரம மாக எரிந்து கொண்டிருந்தது. அதனால் பின் வாங்கினேன் என்றார்கள்‘. (புகாரி:748, முஸ்லிம்: 1645, 1652), மேலும்;
22. “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கம் மற்றும் நரகம் உள்ளிட்ட) அனைத் தையும் நான் இத்தொழுகையில் இருந்தபோது கண்டேன். நரகம் என்(கண்) முன்னே கொண்டுவரப்பட்டது. அதன் தீச்சுவாலை என் னைத் தாக்கிவிடுமோ என நான் அஞ்சினேன். அதன் காரணமாகவே நான் பின்வாங்கியதை நீங்கள் கண்டீர்கள் என்றார்கள்‘ (முஸ்லிம்:1652)
23. “முஹம்மதின் சமுதாயமே! தன் அடி யார்களில் ஓர் ஆணோ, பெண்ணோ, விபச் சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான் என்றார்கள்‘. (புகாரி: 1044, முஸ்லிம்: 1643) ஏனெனில்;
24. “நான் இந்த இடத்தில் (தொழுகையில் நின்றிருந்தபோது) உங்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள அனைத்தையும் கண்டேன் என்று கூறினார்கள்‘. (முஸ்லிம்: 1645) மேலும்;
25. “நரகத்தில் (அம்ர்) இப்னு லுஹை என் பாரைக் கண்டேன். அவர்தாம் முதன்முதலில் கடவுள் சிலைக்காக ஒட்டகத்தை (சாபியா) நேர்ந்து விட்டவர் ஆவார் என்றார்கள்‘. (புகாரி: 748, முஸ்லிம் : 1645,1652) மேலும்,
26. “நரகத்தில் நான் அபூஸுமாமா அம்ர் பின் மாலிக் என்பவரையும் பார்த்தேன். அவர் நரகத்தில் தனது குடலை இழுத்த வண்ணம் சென்றுகொண்டிருந்தார் என்றார்கள்‘. (முஸ்லிம்: 1651)
27. “முனை வளைந்த கைத்தடி வைத்திருந்த ஒருவன் தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவன் கைத்தடியின் முனையால் ஹஜ் பயணிகளிடம் திருடிவந்தான். திருட்டு அம்பலமாகிவிட்டால் “எனது கைத்தடியில் (எப்படியோ இந்தப் பொருள்) மாட்டிக்கொண்டது‘ என்று கூறு வான். யாருக்கும் தெரியாவிட்டால் அதைக் கொண்டு சென்றுவிடுவான் என்றார்கள்‘. (முஸ்லிம்: 1652) மேலும்;
28. “பனூ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பூனையின் காரணத்தால் வேதனை செய்யப்படுவதை நான் பார்த்தேன். அவள் தனது பூனைக்குத் தீனி போடாமல் கட் டிப்போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமி யிலிள்ள புழுப் பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை. (இதன் காரண மாகவே அவள் நரகம் சென்றாள் என்றார்கள்‘ (முஸ்லிம்: 1651, 1652)
29. “ஹிம்யர் (யமன் நாட்டின் பழங்குடி) இனத்தைச் சேர்ந்த உயரமான கறுப்பு நிறப் பெண்ணொருத்தியை நான் நரகத்தில் கண் டேன் என்றார்கள்‘. (முஸ்லிம்:1651)
30. நான் இந்த இடத்தில் (தொழுதவாறு) நின்றபோது சொர்க்கம் மற்றும் நரகம் உட்பட இதுவரை நான் பார்த்திராத அனைத்தையும் கண்டேன். நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்ருகளில்), மகாக் குழப்பவாதியான மஸீஹுத் தஜ்ஜாலின் “குழப்பத்தைப் போன்ற‘ அல்லது “அதற்கு நிகரான‘ குழப்பத்துக்கு உள்ளாக்கப் படுவீர்கள் என எனக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டது என்றார்கள். (புகாரி:922, முஸ்லிம்: 1650,1653) இதனாலேயே;
31. “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் மண் ணறை(கப்ரு) வேதனையிலிருந்தும் (இறைவனி டம் அதிகமாகப்) பாதுகாப்புக் கோரி வந்ததை நான் செவியுற்றேன் என ஆயிஷா(ரழி) அவர் கள் கூறினார்கள்‘. (முஸ்லிம்: 1650)
32. “முஹம்மதின் சமுதாயமே! நான் அறி வதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.’ (புகாரி: 1044, முஸ்லிம்: 1643)
33. “(நீங்கள் மண்ணறையில் இருக்கும் போது) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி) “இம் மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்?’ என வினவப்படும். அதற்கு “இறை நம்பிக்கையாளர்‘ அல்லது “(இறுதித் தூதரின் மீது) உறுதி கொண்டிருந்தவர்‘ (இந்த இரண் டில் எதை அஸ்மா(ரழி) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரியவில்லை) “இவர் அல்லாஹ் வின் தூதர் முஹம்மத்(ஸல்) ஆவார்கள்; எங்களிடம் தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் அவர்களது அழைப்பை ஏற்றோம்; இணங்கினோம்‘ என்று மூன்று முறை கூறுவார். அப்போது அவரிடம், “உறங்குவீராக! நீர் அவரை நம்பிக்கை கொண்டிருந்தீர் என நாங்கள் அறிவோம். எனவே, நலமாக உறங்குவீராக‘ என்று கூறப்படும் என்றார்கள். (புகாரி: 922, முஸ்லிம்: 1653)
34. “(இறைத்தூதராகிய) இம்மனிதரைப் பற்றி நீர் அறிந்திருந்தது என்ன என்று கேட்கப் படும்பது நயவஞ்சகன், சந்தேகத்திலிருந்தவன், “இவரைப் பற்றி எனக்குத் தெரியாது; மக்கள் எதோ சொன்னார்கள்; நானும் சொன்னேன்‘ எனக் கூறுவான்‘ என்று நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். (புகாரி:922, முஸ்லிம்:1653) ஆக;
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உயி ரோடு இருந்துகொண்டு, அவர்களுக்கு வஹி யும், அருளப்பட்டுக் கொண்டிருந்த கால கட் டங்களிலேயே அவர்களின் மகன் இப்ராஹீம் (ரழி) அவர்கள் மரணித்த அன்று சூரிய கிரக ணம் ஏற்பட்டது. அன்று இப்ராஹீமின் மரணத் திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “சூரியனுக்கும், சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ சூரிய கிரகணம் பிடிப் பதில்லை. ஆகவே இது எனது மகன் இறப்பிற் காக ஏற்பட்டதல்ல. இது அல்லாஹ்வின் வல்ல மையை காட்டுவது இவ்வாறான நேரங்களில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என் பது உட்பட மண்ணறை வாழ்வு. சுவர்க்கம், நரகம் என முப்பதுக்கும் மேற்பட்ட ஏராள மான வியங்களை சூரிய கிரகணத்துடன் இணைத்துச் சொல்லியிருப்பது ஆதாரபூர்வ மான ஹதீத்களில் வருகின்றது. ஆனால் அவற் றில்; நம்மவர்களில் சிலர் சொல்வது போல;
“இன்று சூரிய கிரகணம் என்றால் நாளைக்கு (ஹிபுவீUயூபுஸிஸிக்ஷு) இயல்பாகவே புதிய பிறை ஒன்றுதான்‘ என்று நபியவர்கள் ஏன் சொல்ல வில்லை இன்னும் சொல்லப்போனால் சூரிய கிரகணம் தான் மாதத்தின் கடைசி நாள் (ஹிபுவீUயூபுஸிஸிக்ஷு) இயல்பாகவே நாளைக்குப் புதிய மாதத்தின் முதலாவது பிறை என்பதை மக்க ளுக்கு எடுத்துச் சொல்வதற்கு இதை விட சிறந்த சந்தர்ப்பம் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்திருக் காது. ஆனாலும் அவ் உபதேசங்களில் எவ்வ ளவோ வியங்களை அன்று எடுத்துச் சொன்ன நபியவர்கள் ஒரே ஒரு வார்த்தை கூட இன்று சூரிய கிரகணம் ஆகவே இந்த மாதம் இன்று டன் முடிந்துவிட்டது. நாளைக்கு (ஹிபுவீUயூபுஸிஸிக்ஷு) இயல்பாகவே புதிய மாதத்தின் பிறை ஒன்று என்று கூறியதாக வரவே இல்லையே! ஏன்? என்று சிந்தனை செய்யுங்கள்!