அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓர் இறைக்கு மாறு செய்தும், இறை
வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
“இஸ்ராயீல்” என்னும் “சிரியாக்” அல்லது ஹீப்ரு மொழிச் சொல்லுக்கு (இஸ்ரா+ஈல்) அல்லாஹ்வின் அடிமை என்பது பொருள் வழக்கில் உள்ளது. இது இறைத்தூதர் யஃஅகூப்(அலை) அவர் களைக் குறிக்கும். “பனூ இஸ்ராயீல்” என்பதற்கு யஃஅகூபின் மக்கள், அல்லது யஃகூ பின் வழித்தோன்றல்கள் என்று பொருளாகும். இதன்படி “பனூ இஸ்ராயீல்” என்பது இஸ்ரவேலர்களைக் குறிக்கும். கிறிஸ்து பிறக்கும் முன் ஒரே இனத்தவர்களாக இருந்த இஸ்ரவேலர் கள் பின்பு யூதர்கள், என்றும் கிறிஸ்தவர்கள், என்றும் இரு இனங்களாகப் பிரிந்து விட்டனர். எனவே இப்போது “பனூ இஸ்ராயீல்” என்பது “யூதர்க ளையே” குறிக்கும். (புகாரி: 4 பக்கம், 145, பாடம் 50இன் சிறுகுறிப்பு, 126வது) மேலும் இவர்களைக் குறித்து அல்லாஹ் கூறும் போது;
(யூதர்களே!) யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் அங்கு சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை உங்கள் மூதாதை யர் இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனான ஒரே நாயனையே வணங்குவோம் அவனுக்கே (முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினார்கள். (அல்குர்ஆன் 2:133, புகாரி 4, பக்கம் 63, பாடம் 14இன் சிறு குறிப்பு, 49, பாடம் 18ன் சிறு குறிப்பு, 56ஆவது) மேலும்;
நபி யஃஅகூப்(அலை) அவர்கள் இறக்கும் தருவாயில் யூத மதத்தையே பின்பற்ற வேண்டும் என்று தமது மக்களுக்கு உபதேசித்தார்கள் என்பதாக யூதர்கள் கூறி வந்தனர். (தஃப்சீர் இப்னு கஸீர்: 1:456-458) இவ்வாறாக;
ஏராளமான இறைத்தூதர்களின் பரம்பரையில் வந்தவர்கள்தான் இஸ்ரவேலர்களான யூதர்கள் இதனையே!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன் தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூஃப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார் என இப்னு உமர்(ரழி) அறிவித்தார். (புகாரி : 3388, 3390, 4688) மேலும்,
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக் கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலை மானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர்(என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன்4:163) மேலும்,
மிகச் சிறந்த வழித்தோன்றல்களான இஸ்ரவேலர்களின் பரம்பரையில் வந்தவர்களே யூதர்கள்:
இஸ்ரவேலர்களின் தந்தை என்று அழைக்கக்கூடிய நபி இஸ்ஹாக்(அலை) அவர்களது மிகச் சிறந்த வழித்தோன் றல்களான இஸ்ரவேலர்களின் பரம்பரையில் வந்தவர்களே யூதர்கள்; (தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:200, 6:742)
அகிலத்தாரில் அன்று வாழ்ந்தவர்கள் அனைவரையும் விட அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே யூதர்கள்:
அன்று இருந்த அகிலத்தார் அனைவரை விடவும் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேன்மைப்படுத்தப்பட்டவர்களான யூதர்கள். (44:32,2:40,47,122,5:20,7:140,45:16, அபுல் ஆலியா(ரஹ்) தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:195-197)
அகிலத்தாரில் அன்று வாழ்ந்தவர்கள் அனைவரையும் விட அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களான யூதர்கள் 44:32 என்னும் வசனத் தொடர் குறித்து அபுல் ஆலியா(ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்; அக்காலத்தில் வாழ்ந்த உலக மக்கள் அனைவரையும் விட இஸ்ரவேலர்களை (யூதர்களை) இறைவன் மேன்மைப்படுத்தி னான் என்பதே இதன் பொருளாகும். ஏனெனில் உலக மக்கள் என்பது அந்தந்தக் காலத்தைப் பொறுத்து வேறுபடும் இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் இறுதித் தூதரின் இந்தச் சமுதாயமே இஸ்ரவேலர்களையும் (யூதர்களையும்) விட மேலானவர்கள் ஆவர். (தஃப்சீர் இப்னு கஸீர்:1:195-196)
அகிலத்தாரில் அன்று வாழ்ந்தவர்களில் யாருக்குமே வழங்கப்படாத பெரும் அருட்கொடைகள் வழங்கப்பெற்றவர்களே யூதர்கள்:
அன்று வாழ்ந்தவர்களில் அகிலத்தாரில் யாருக்குமே வழங்காதவற்றை எல்லாம் நீண்ட காலம் (அரசர்களாக) ஆட்சியாளர்களாக ஆக்கி வழங்கப் பெற்றவர்களான, (இஸ்ரவேலர் களான, யூதர்கள்) 5:20, 4:54, 7:137, 10:93, 26:59, தஃப்சீர் இப்னு கஸீர்: 1:195-197, 3:121,122)
அகிலத்தாரில் அன்று வாழ்ந்தவர்களில் யாருக்குமே வழங்கப்படாத பெரும் அருட்கொடைகள் வழங்கப் பெற்றவர்களான, (இஸ்ரவேலர்களான யூதர்கள்: 2:40,47,122, 5:20)
நல்லோர்களான பனிரெண்டு பேர்களின் வழித்தோன்றல்களில் வந்தவர்களே யூதர்கள்:
இறைத்தூதர் யஃஅகூப்(அலை) அவர்கள் நபி இஸ்ஹாக்(அலை) அவர்களின் மகனாவார் அன்னாருக்கு பனிரெண்டு மகன்கள், அவர்களில் யூசுஃப் (அலை) அவர்களும் ஒருவர் இந்தப் பனிரெண்டு பேர்களின் வழித்தோன்றல்களே இஸ்ரவேலர்களின் பனிரெண்டு பிரிவினர் ஆவர். எனவேதான் இஸ்ரவேலர்களை, யூதர்களை பனூ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் யஃகூபின் மக்கள்) என்பர். (புகாரி:4, பக்கம்:63, பாடம் 14ன் சிறுகுறிப்பு, 49ஆவது)
இஸ்ரவேலர்களுடைய (யூதர்களுடைய) பெரிய தந்தை இஸ்மாயீல் (அலை) அவர்களாகும். (தஃப்சீர் இப்னு கஸீர்:1:391) மற்றும்;
பல நபிமார்களையும், தூதர்களையும் தொடராகத் தோன்றச் செய்து இறை நூலையும் அருளி; நபி யஃகூப் (அலை) அவர்களின் பனிரெண்டு மகன் மார்களின் வழித்தோன்றல்களில் வந்த பிரிவினரில் ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு தலைவராக பன்னிரெண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டு அரசர்களாக ஆக்கப்பட்டவர்களான, (இஸ்ரவேலர்கள், யூதர்கள், 5:20, 5:12, 2:60, இப்னு அப்பாஸ்(ரழி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி), அபூஹுரைரா(ரழி), இப்னு உமர்(ரழி), ஹஸன் அல்பஸ்ரி(ரஹ்), அபுல் ஆலியா(ரஹ்), புகாரி: 3353, 3374, 3390, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர்: 1:179, 3:99-107, விவிலியம் பழைய ஏற்பாடு எண்ணாகமம் 1:1,5-15) மேலும்,
இஸ்ராயீலின் சந்ததிகளில் யஃகூப் (அலை), யூஸுப்(அலை), மூஸா(அலை), ஹாரூன்(அலை), தாவூத்(அலை), ஸுலைமான்(அலை), ஸக்கரிய்யா (அலை), எஹ்யா (அலை), ஈஸா(அலை), அய்யூப்(அலை), ஷிஐப்(அலை), இஸ்ஹாக்(அலை) போன்ற அதிக நபிமார்கள் அனுப்பப் பட்டவர்களான, (19:58, 5:20, 2:60, புகாரி: பாகம் 4, பக்கம் 63, பாடம்13, பக்கம்145, பாடம் 50, பக்கம் 127,112,108,79, பாடம்20, பக்கம் 70, பாடம் 18, 3353, 3374, 3382, 3383, 3390)
பன்னிரெண்டு கூட்டங்களாக பிரிக்கப்பட்டவர்களான இஸ்ரவேலர்கள் எனும் யூதர்கள்:
மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரெண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு, “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம். (அவர் அவ்வாறு அடித்த தும்) அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன. அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம் (நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள். மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து; “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்”(என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்) அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 7:160)
பன்னிரெண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டவர்களான இஸ்ரவேலர்கள் எனும் யூதர்கள்:
நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதிமொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரெண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்;
நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம் மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார். (அல்குர்ஆன் : 5:12)
பல நபிமார்களையும் தூதர்களையும் தொடராகத் தோன்றச் செய்து இறை நூலையும் அருளி, நபி யஃகூப் (அலை) அவர்களின் பனிரெண்டு மகன்மார்களின் வழித்தோன்றல்களில் வந்த பிரிவினரில் ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒரு தலைவராக பன்னிரெண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டு அரசர்களாக ஆக்கப்பட்டவர்களான. (5:20,5:12,2:60, இப்னு அப்பாஸ்(ரழி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி), அபூஹுரைரா(ரழி), இப்னு உமர்(ரழி), ஸஹன் அல்பஸ்ரி(ரஹ்), அபுல் ஆலியா(ரஹ்), புகாரி: 3353,3374,3390, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:179, 3:99-107, விவிலியம் பழைய ஏற்பாடு எண்ணாகமம் 1:1, 5-15)