ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
துல்லியமான கணக்கீட்டின் அடிப்படையிலும், காட்சியின் அடிப்படையிலும் அமைந்ததுதான் எமது ஹிஜ்ரி காலண்டர் எனச் சொல்லிக்கொண்டு காட்சியைக் கண்டுகொள்ளாமல் வெறும் கணக்கீட்டிற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்துப் பயணிப்பதுதான் எமது ஆதங்கம்.
ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்:
1. இது எமது இறுதித் தீர்மானம் அல்ல. ஆய்வு நூல்தான்; உங்கள் பரிசீலனைக்கானது அவற்றில் மாற்றம் ஏதேனும் இருந்தால் எமக்கு அறியத் தாருங்கள் நாம் மறுபரிசீலனைக்கு எடுப்போம் என்று கூறித்தான் அவர்களது வெளியீடுகளை வினியோகித்தார்கள். ஆனால் அவற்றில் சில முரண்பாடுகளை அவர்களது கவனத்திற்குக் கொண்டு சென்றபோது அவற்றை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
2. எமது காலண்டரும், பிறையின் கணக்கும் ஒன்றுதான்; காலண்டரையும் பாருங்கள் அன்றைய தினத்தின் பிறையையும் பாருங்கள்.
என்று சொன்னவர்களிடம் அடுத்த நாளும் நியூசிலாந்தில் உர்ஜூனில் கதீம் தெரிந்ததே என்றபோது; கணக்கீடு என்று சொன்னால் கணக்கீட்டோடு மாத்திரம் நின்றுகொள்ள வேண்டும் காட்சியை பார்க்கக்கூடாது அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று சொல்கிறார்கள்.
3. மக்காவின் மையப் பள்ளி என்றும் தீர்க்க ரேகை : (ANTI PODE)
உலக முஸ்லீம்கள் தொழுகைக்காக புனித மக்காவிலுள்ள கஃஅபாவின் பக்கம் (கிப்லாவிற்காக) முகம் திருப்புங்கள். (2:142, 143,144,145,10:87) என்ற அல்லாஹ்வின் ஆணைக்கு ஏற்ப மக்காவுக்குக் கிழக்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் தொழுகைக்காக கிப்லாவின் திசையான மேற்கு நோக்கித் தொழுகின்றார்கள். அதேபோல மக்காவிற்கு மேற்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லீம்கள் தொழுகைக்காகத் தங்களது கிப்லாவின் திசையாகக் கிழக்கித் திசையை நோக்கித் தொழுகின்றார்கள்.
இவ்வாறு கிப்லாவை இலக்காகக் கொண்டு அதனை மைய்யப்படுத்தி முழு உலக முஸ்லீம்களும் அணி அணியாக வரிசையாக நிற்பதை உலகப் படத்தை கவனத்தில் கொண்டால் அவ்வாறு மேற்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதியும், கிழக்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதியும் சங்கமிக்கும் மிகப் பொருத்தமான இடமாக இந்த உலகத் தீர்க்க கோட்டுப் பகுதியே சிறப்பாக அமைந்துள்ளது என்றே சொல்லப்பட்டது இன்றும் அவ்வாறே சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், புனித கஃஅபாவை மேற்கு நோக்கி மாத்திரமல்ல, அனைத்து திசைகளிலிருந்தும் வளையமாக நின்று கஃஅபாவை முன் னோக்கித் தொழப்படுகிறது. புனித கஃஅபா அமைந்துள்ள ஹரம் சரீஃபில் இவ்வாறு சிறு வட்ட வளையமாகவே ஆரம்பிக்கப்பட்ட ஸப்பானது படிப்படியாக விரிவடைந்து மறுபடியும் படிப்படியாக சுருங்கி வந்து சிறியதொரு வளையமாக மாறும் இடம் கிட்டத்தட்ட அலாஸ்கா பிரதேசம் தான் கஃஅபாவை முன்னோக்கியதாக ஆரம்பிக்கப்பட்ட சிறிய வட்ட வளைய மானது இந்த இடத்தில் முதுகுப் பகுதிகள் முன்னோக்கிய மையப் புள்ளியாக அமைகிறது என்பதே நிதர்சனம்.
ஆகவே ஃபிஜியிலுள்ள சர்வதேசத் தீர்க்க கோட்டில் முதுகும் முதுகும் இணைகிறது என்பதும், கஃஅபா வளாகத்தில் வட்ட வளையமாக ஆரம்பித்த ஸப்பானது இந்த இடத்தில் நேராக ஆனது என்பதும் தவறான புரிதல் ஆகும். இது எல்லோராலும் இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதொரு விசயமே. ஏன் நீங்களே ஒரு உருண்டை வடிவமான பொருளை எடுத்து மேலே ஒரு புள்ளியை இடுங்கள் பின்னர் அந்த புள்ளியை மையப்படுத்தி வட்டவளையம் வளையமாகக் கோடுகளைக் கீறி வாருங்கள் இறுதியிலும் அது சிறிய வட்ட வளையமாகவே முடிவடையும் என்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம். அதுவே மையப்புள்ளி ஆகும். அது அமைந்திருப்பது “அலாஸ்காவின்‘ நேர்கோட்டை அண்டிய ”TENATAGU” பிரதேசமாகும் என்பதும் எனது புரிதல் இந்த புரிதல் தவறு என்று நீங்கள் கருதினால், கஃஅபாவின் வளாகத்தில் சிறு வட்ட வளையமாக ஆரம்பித்த தொழுகையின் ஸப்பானது உலகில் எந்த இடத்தில் வைத்து நேராக ஆனது? அது எந்த அடிப்படையில் சர்வதேசத் தீர்க்க கோட்டில் நேர்கோடாக மையம் கொண்டது? என்பதை நீங்கள் (ஹிஜ்ரி கமிட்டியினர்) தான் விளக்கிச் சொல்லவேண்டும் ஆக;
உலகின் பாதியளவு நீளமான பல ஆயிரம் கிலோமீட்டர் நீளமாகவுள்ள சர்வதேசத் தீர்க்க கோடா? அல்லது,
ஒரே இடத்தில் மைய்யம் கொண்டுள்ள அலாஸ்காவின் நேர்கோட்டை அண்டியுள்ள “ENATAGU” பிரதேசமா?
“நாளின் ஆரம்பம்‘ “ஹிஜ்ரிக் கமிட்டியின ரின் வெளியீடாகிய‘ ஹிஜ்ரி நாட்காட்டி யின் உண்மை நிலையும் அதையும் புறக் கணிப்போரின் தவறான குற்றச்சாட்டு களும் எனும் நூலில் பாகம் நான்கில் “இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள்‘ எனும் உப தலைப்பில், கிரிகோரியன் காலண்டரைக் குறித்து எழுதுகையில்;
இன்று நஸராக்கள் அவர்களுடைய (MERIDIAN) கிப்லாவாக லண்டன் கிரீன்விச் பகுதியை வைத்திருப்பதால் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரியன் உச்சத்தில் இருக்கும்போது அந்த லண்டன் கிரீன்விச் பகுதியானது உள்நாட்டு நேரம் இரவு 12 மணியாக இருக்கும். எனவே இஸ்லாத்தை எதிர்ப்போர் அவர்களுடைய கிப்லாவாக (MERIDIAN) லண்டன் கிரீன்விச் பகுதியை மையப்படுத்தி அவர்களுடைய கிரிகோரியன் நாட்காட்டியின் அடிப்படையில் இரவு 12 மணிக்கு தேதியும், கிழமையும் மாற்றி வருவதைப் பார்க்கலாம். அவர்கள் தங்களது நாட்டிலுள்ள கிரீன்விச் (GREEN WICH) நகரை மையமாக (கிப்லாவாக)க் கொண்டு தயாரிக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியை தங்கள் ஆதிக்கத்திலுள்ள நாடுகளில் மிக எளிதாகத் திணித்துவிட்ட னர் என்று இடித்துரைத்து எழுதப்பட்டுள்ளது.
உச்சியில் ஆரம்பிக்கும் உலக நாள்:
அதேநேரம், ஹிஜ்ரிக் காலண்டர் குறித்து அதே நூலில் அவர்கள் பிரஸ்தாபிக்கையில் “உண்மையில் உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் தினமும் சூரியன் 90 டிகிரி கோணத் தில் உச்சியில் வரும்போது ஒரு நாளை அளவிட்டு கணக்கிட்டு வருகிறோம்.’
என்றும் எழுதியிருப்பதானது நாளின் ஆரம்பம் “ஃபஜ்ர் வீலி ஃபஜ்ர்‘ என்று ஊருக்கு உபதேசம் செய்தாலும் தமது ஹிஜ்ரிக் காலண்டரும் நஸராக்களின் கிரிகோரியன் காலண்டரைப் போலவே உலக நாளை உச்சியில் இருந்தே ஆரம்பிக்கிறது. இரவு பன்னிரெண்டு மணிக்கு நாள் மாறுகிறது என்பதற்கு மறைமுகமான சான்றாகும். அத்துடன்,
நாளின் ஆரம்பம் “ஃபஜ்ர் வீலி ஃபஜ்ர்‘தான் என்பதை இலக்காகக் கொண்டு உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்த, இன்றுவரை செய்து கொண்டிருக்கின்ற ஹிஜ்ரிக் கமிட்டி சகோதரர்கள்.
நாட்களும், தேதிகளும், வாரங்களும், மாதங்களும், வருடங்களும், ஃபிஜியிலுள்ள சர்வதேசத் தேதிக் கோட்டிலிருந்தே ஆரம்பமாகின்றன என்பதாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கின்ற, இன்றுவரை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்ற ஹிஜ்ரிக் கமிட்டி சகோதரர்கள்.
ஒட்டுமொத்த உலக நாளின் ஆரம்பத்தை மாத்திரம் ஃபிஜியில் சூரியன் உச்சியில் இருக்கும்போது நாளை ஆரம்பிப்பது எதன் அடிப்படையில், ஊருக்கு உபதேசம் “ஃபஜ்ர் To ஃபஜ்ர்‘ உலக நாளுக்கு ஆரம்பம் உச்சியா? அது என்ன உச்சி?
இரு முகம் கொண்ட உச்சி:
(மனிதர்களின் சிலர்) இவர்களுடனும் இல்லை அவர்களுடனும் இல்லை இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். (4:143)
அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன. ஆகவே அவர்கள் தமது சந்தேகங்களினால் (இங்குமங்குமாக) உழலுகின்றார்கள். (9:45)
அவர்கள் ஒரு காலை முன்னெடுத்து வைத்தால் மறு காலைப் பின்னோக்கி வைக்கின்றார்கள். அவர்களுக்கு எதிலும் ஓர் உறுதியான நிலைப்பாடு கிடையாது. அவர்கள் தடுமாற்றத்திற்கும், அழிவுக்கும் ஆளான மக்கள் ஆவர். அவர்கள் இவர்களுடனும் இல்லை, அவர்களுடனும் இல்லை. (தஃப்சீர் இப்னு கஸீர்: 4, பக்கம் 289, 290)
மேலும் மனிதர்களில் சிலர் இருக்கின் றார்கள் அவர்கள் (அந்தப் பக்கமும் இல்லாமல் மதில்மேல் பூனை போன்று) விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்கள் இம்மையையும் இழந்து விட்டார்கள், மறுமையையும் இழந்து விட்டார்கள். இதுதான் பகிரங்கமான நஷ்டமாகும். (22:11)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வெறுத்த உச்சி:
“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வெறுத்த உச்சி அந்நேரம் நபியவர்கள் பாங்கு சொல்வதற்குக் கூட தடை செய்த உச்சி‘ நபியவர்கள் “கடுமையான வெப்பம் நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும் என்று சொன்ன உச்சிப்பொழுது’
(சூரியன் உச்சிக்கு வந்து) வெப்பம் கடுமையாக ஆனபோது முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்வதற்காக இரண்டு தடவைகள் முற்பட்டபோதும், அந்த இரண்டு தடவையும் கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு என்று கூறி பாங்கு சொல்ல விடாமலும், தொழ விடாமலும், சூரியன் நன்றாகச் சாய்ந்து மணல் திட்டுகளில் நிழலை காணும் வரை லுஹரைத் தாமதப்படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரக வெப்பத்தின வெளிப்பாடாகும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாங்கு சொல்ல விடாமலும், தொழ விடாமலும், தடுத்திருக்க (அறிவிப்பவர்கள், அபூதர் (ரழி), அபூஹுரைரா(ரழி), அபூஸயீத்(ரழி), இப்னு உமர்(ரழி) ஆகியோர் புகாரி: 533-543) உச்சிப் பொழுதான அந்நேரத்தில் பாங்கு சொல்வது, தொழுவது போன்ற சிறந்த வணக்கங்களையே செய்யக்கூடாது என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தடுத்த, சூடு கூடிய,
ஃபிஜி உச்சிப் பொழுதில் இருக்கும்போது உலக நாளை ஆரம்பிக்கும் விதமான கட்டமைப்பில் ஹிஜ்ரிக் காலண்டர் உருவாக்கப்பட்டது எதன் அடிப்படையில்?
இவ்வாறே ஹிஜ்ரிக் காலண்டர் ஃபிஜியின் ஃபஜ்ரிலிருஃந்து உலக நாளை ஆரம்பிக்காமல் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரியன் உச்சத்தில் இருக்கும்போது உலக நாளை ஆரம்பிப்பதால்:
உலகின் சில நாடுகளில் உள்ளவர்கள் புவி மைய சங்கம நிகழ்வான அமாவாசை நடைபெற்று புதிய மாதம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே நோன்பையும், பெரு நாளையும் எடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்படுகிறதும்.
புவி மைய சங்கம், அமாவைசை நாளில் நோன்பு ஆரம்பம் :
உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:185) முஹம்மது ஜான் பதிநான்காம் பதிப்பு : 1983
உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) தாருஸ்ஸலாம், ரியாத் சவுதி அரேபிய 2008, வெளியீடு.
உங்களில் அவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். (அல்குர்ஆன் 2:185) அப்துல் ஹமீத் பாகவி வெளியீடு.