அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை
வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
2024 செப்டம்பர் மாத தொடர்ச்சி…
அவர்கள் வெறும் கற்பனையைத் தவிர வேறு எதையும் அறியமாட்டார்கள்:
“அவர்கள் கற்பனைகளைத் தவிர இறை நூலைப் பற்றி வேறு எதையும் அறியமாட்டார்கள்.”. (2:78)
அவர்கள் தமது வாயால் கூறுகின்ற சில பொய்யான தகவல்களைத் தவிர வேறு எதையும் அறிந்திருக்க மாட்டார்கள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், பொய்களைத் தவிர வேறு எதையும் அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள் என்பதாக முஜாஹித்(ரஹ்) அவர்களும், விளக்கமளித்துள்ளார்கள்.
மேலும் யூதர்களில் சிலர் இறைநூலில் எதையும் அறிந்திருக்கவில்லை அது மட்டுமின்றி இறைநூலில் இல்லாதவற்றை நினைத்தபடி எல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். அத்துடன் தான் பேசியவை அனைத்தும் இறைநூலில் உள்ளவைதான் என்றும் அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். (முஜாஹித் (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் : 1:270, 271)
சொற்ப நாட்களே நாங்கள் நரகத்தில் இருப்போம் என்றார்கள்:
“(விரல் விட்டு) எண்ணப்படும் (சில) நாட்களைத் தவிர (வேறெப்போதும்) நரகம் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறினார்கள்.” (2:80)
சில வேளை நாங்கள் நரகம் செல்ல நேரிட்டாலும் விரல் விட்டு எண்ணப்படும் சில நாட்களைத் தவிர வேறெப்போதும் நரகம் எங்களைத் தீண்டாது. அதற்குப் பிறகு நாங்கள் நரகத்திலிருந்து வெளியேறி சுவர்க்கம் சென்றுவிடுவோம் என்று தாங்களாகவே வெறும் கற்பனையாக வாதித்துக் கொண்டிருந்தார்கள். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: இந்த உலகம் ஏழாயிரம் ஆண்டுகள் வரை இருக்கும். அவற்றில் ஒவ்வோர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஒரு நாள் விகிதம் மொத்தமாக ஏழு நாட்கள் மாத்திரமே நாங்கள் நரகத்தில் தண்டனையை அனுபவிப்போம் என்று யூதர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:274-277) நாங்கள் அந்த நரகத்தில் கொஞ்ச நாட்களே இருப்போம் என்று அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களிடமே யூதர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி: 3169,4249,5777, ஃபத்ஹல் பாரீ, உம்தத்துல் காரீ, முஸ்னத் அஹ்மத், நஸயீ, தஃப்ஸீர் இப்னு மர்த்தவைஹி, இப்னு கஸீர்: 1:276)
நாங்கள் மாத்திரமே நேர்வழியில் உள்ளவர்கள் என்றார்கள்:
“நாங்கள் மாத்திரமே நேர்வழியில் உள்ளவர்கள் என்றார்கள். கிறிஸ்தவர்கள் (நேர்வழி) எதிலும் இல்லை என்று யூதர்கள் கூறுகின்றார்கள்.” (2:113)
யூதர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள் என்று வாதம் செய்தார்கள். இதன்மூலம் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டனர். இறைவன் மீது நியாயமின்றி அவர்களாக வகுத்துக் கொண்ட கற்பனைதான் இது என அபுல் ஆலியா(ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:364)
நாங்கள் அல்லாஹ்வின் செல்லப் பிள்ளைகள் என்றார்கள்:
யூதர்கள் கூறுகிறார்கள்; “கிறிஸ்தவர்கள் எ(ந்த மதத்)திலும் இல்லை‘ என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; “யூதர்கள் எ(ந்த மதத்)திலும் இல்லை‘ என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) இறைநூலை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே அறியாதவர்களும் கூறுகிறார்கள்; மறுமை நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விசயத்தில் தீர்ப்பளிப்பான். (2:113)
நாங்கள் அல்லாஹ்வின் செல்லப் பிள்ளைகள் என்றார்கள்:
“நாங்கள் அல்லாஹ்வின் (செல்லப்) பிள்ளைகள்; அவனுடைய நேசர்கள்‘ என்றார்கள்.” (5:18)
இஸ்ராயீல் எனும் யஃகூப் (அலை) அவர்களின் சிறப்பையும் மதிப்பையும் உணர்த்துவதற்காகத் தமது வேதத்தில் இருப்பதில் (விவிலியம் பழைய ஏற்பாடு யாத்திராகமம், 4:22, ஓசியா, 11:1, புதிய ஏற்பாடு யோவான், 1:12) ஆகிய வசனங்களின் உண்மையான கருத்தை அவர்கள் மாற்றித் திரித்து மேற்கோள் காட்டிக் கூறிக்கொண்டிருந்தனர். அதாவது இறைத்தூதர்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள் ஆவர். எனவே அவர்களுக்கு அல்லாஹ் முன்னுரிமை அளிக்கின்றான் நாங்களோ அதிக இறைத்தூதர்களைச் சார்ந்தவர்கள். எனவே அல்லாஹ் எங்களை நேசிக்கின்றான் என்று வாதிட்டார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்: 3:110-114)
இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: யூதர்களான நுஅமான் பின் அளாஉ, பஹ்ரீ பின் அம்ர், ஃஸ் பின் அதீ ஆகியோர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து உரையாடினர், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் அவர்களுடன் உரையாடினார்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். மேலும் அவனது தண்டனை குறித்தும் அவர்களுக்கு எச்சரித்தார்கள். அப்போது அவர்கள் முஹம்மதே! எங்களை நீர் பயமுறுத்த முடியாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக!
“நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், அவனுடைய நேசர்கள் என்று கூறினார்கள்.” (5:18) அப்போதுதான் இந்த வசனம் அருளப்பெற்றது). (தஃப்ஸீர் இப்னு அபீஹாத்திம், தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர், 3:110-114) விவிலியம் பழைய ஏற்பாடு உபாகமம் 4:2) அது போன்றே!
உஸைர் (அலை) அவர்களை அல்லாஹ்வின் புதல்வர் என்றார்கள்:
“யூதர்கள் உஸைர் அவர்களை, அல்லாஹ்வின் புதல்வர் என்கின்றனர். இது அவர்கள் தமது வாய்களால் கூறும் (உண்மைக்குப் புறம்பான) கூற்றாகும்.”(9:30)
உஸைர் என்பவர் யூதர்களில் வாழ்ந்த ஒரு நல்ல மனிதரின் பெயராகும். இவர் ஓர் இறைத்தூதர்? என்பதில் வரலாற்றாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு.
புக்த்த நஸ்ஸர் ஜெரூசலத்தைக் கைப்பற்றி அழித்தபின் தவ்ராத் வேதப் பிரதிகள் அனைத்தும் காணாமல் போய்விட்டது. அப்போது உஸைர்(அலை) அவர்கள் தமது நினைவில் இருந்த தவ்ராத்தை எழுதினார்கள். இதனால் உஸைரை யூதர்கள் நபி மூஸா(அலை) அவர்களைப் போன்றவர் எனப் போற்றினர் சிலர் எல்லை மீறி உஸைர் இறைவனின் குமாரர் என்றே புகழ்ந்தனர். (தஃப்ஸீர் மாஜிதீ, இப்னு கஸீர்: 4:245,246) அவர்களுடைய. இந்த வாதத்திற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இது அவர்களது கற்பனையும் புனை சுருட்டும் தவிர வேறொன்றும் இல்லை. இவ்வசனத்தில் (9:30) வரும் “அவர்களை அல்லாஹ் கொல்வானாக‘ என்பதற்கு “அல்லாஹ் அவர்களை அழிப்பானாக‘ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்: 4:246)
மர்யம்(அலை) அவர்களின் மீது மிகப் பெரும் அவதூறு சுமத்தினார்கள்:
மர்யம்(அலை) அவர்களின் மீது மிகப் பெரும் அவதூறு சுமத்தினார்கள். (4:156) “கற்பொழுக்க மில்லாதவர்” என்று யூதர்கள் மர்யம்(அலை) அவர்கள் மீது குற்றம் சாட்டினார்கள் என இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும், தவறான உறவின் மூலமே அவர் ஈஸா(அலை) அவர்களைப் பெற்றெடுத்தார் என்று யூதர்களும் அவமானப்படுத்தினார்கள் என்பதாக சுத்தி(ரஹ்) அவர்களும், அப்போது மர்யம்(அலை) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது என்று சில யூதர்கள் கூறினார்கள் என்பதாக இப்னு கதீர்(ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு கதீர் : 2:789,780)
ஈஸா(அலை) அவர்களை நபியாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள் :
இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்களை ஏற்க மறுத்தார்கள். (4:156) மர்யம்(அலை) அவர்களின் மைந்தரான ஈஸா(அலை) அவர்கள், தந்தையின்றி அல்லாஹ்வின் கட்டளையால் அற்புதமாக உருவாகி, (4:171, 3:47,59, 19:17-21) பிறந்தவுடன் “இஞ்சீல்” இறைநூல் கொடுக்கப்பட்டு நபியாக (19:30, 3:48, 5:46,110, 57:27) பிறந்தவுடன் தொட்டிலில் தெளிவான சான்றுகளுடன் பேசி, (3:46, 5:110, 19:29,30) இறந்தோரை உயிர்ப்பிப்பது, (3:49, 5:110) களிமண்ணால் பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் ஊதுவதால் அது அல்லாஹ்வின் ஆணையின் பேரில் உண்மையான பறவையாக சிறகடித்துப் பறந்து செல்வது (3:49, 5:110) பிறவியிலேயே கண் பார்வையை இழந்த குருடருக்கும், தொழு நோயாளிக்கும் குணமளிப் பது, (3:49,5:110) இன்னும் ஏராளமான அற்புதங்களை செய்வது போன்ற தெளிவான சான்றுகளுடனும் நேர்வழியுடனும் அல்லாஹ் அனுப்பி வைத்த ஈஸா(அலை) அவர்கள் மீது பொறாமை கொண்ட யூதர்கள் அவரைப் பொய்யர் என்று கூறி அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். (இப்னு அப்பாஸ்(ரழி), தஃப்ஸீர் இப்னு கஸீர் (1:290, 2:787, 791) அது மாத்திரமல்ல;
தங்களால் முடிந்த அளவு ஈஸா(அலை) அவர்களுக்குத் தொல்லை தருவதில் முனைப்புக் காட்டினர். இதனால் நபியவர்களும் அவருடைய தாயார் மர்யம்(அலை) அவர்களும் ஒரே ஊரில் வசிப்பது இயலாமல் போகவே ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து கொண்டே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் மீது கொண்ட அளவற்ற குரோதம் காரணமாக அவர்களை மோப்பம் பிடித்துப் பின் தொடர்ந்து சென்ற யூதர்கள் “யூதாஸ்‘ என்பவனுக்கு நபியைத் தம்மிடம் காட்டிக் கொடுப்பதற்காக வஞ்சகமாக முப்பது வெள்ளிக் காசுகளைக் கையூட்டாகக் கொடுத்து ஈஸா(அலை) அவர்களைப் போன்று உருமாற்றப்பட்ட “சர்ஜிஸ்‘ என் பவரை ஈஸா நபி(ஸல்) என்றெண்ணி இரவோடு இரவாகப் பிடித்துச் சென்று சிலுவையில் அறைந்து தலையில் முள் கிரீடம் சூட்டி சித்திரவதை செய்து கொன்றார்கள். சிலுவையில் அறையப்படுவதற்குத் தாங்களே முக்கிய காரணம் என்று கூறி யூதர்கள் பெருமைப்பட்டார்கள். சுருக்கம்: (இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு இஸ்ஹாக்(ரஹ்), முஜாஹித்(ரஹ்), இப்னு ஜரீர்(ரஹ்) தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் தபரீ, நஸயீ, பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 26:48, மேலதிக விபங்களுக்கு பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர்: 2:787-820) அத்துடன்,
ஈஸா(அலை) அவர்களை நாங்கள்தான் கொன்றோம் என்றார்கள்:
“ஈஸா(அலை) அவர்களை நாங்கள் தான் கொன்றோம் என்றும் அவர்கள் கூறினார்கள்:” (4:157)
“அது மட்டுமன்றி முள்கிரீடத்துடன் அறையப்பட்ட அந்தச் சிலுவைக்குக் கீழே அமர்ந்து அன்னை மர்யம்(அலை) அவர்கள் அழுதார்கள். அப்போது அன்னையுடன் அவர் உரையாடினார், அதன் பின்னர் அவரை நாங்கள் கொன்றோம் என்றெல்லாம் அவர்கள் கூறினார்கள். இதையே அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை அவரைச் சிலுவையில் அறையவுமில்லை மாறாக அவர்களுக்கு (ஒருவரில் ஈஸாவின்) சாயல்தான் காட்டப்பட்டது.” (4:157) என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான். (தஃப்ஸீர் இப்னு கஸீர் : 2:787-820)