அறிந்து கொள்வோம்!

in 2024 அக்டோபர்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

1. நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?

அப்துல்முத்தலீப். ஆதாரம்: அர்ரஹுகுல் மக்தூம். நூல். பக்கம்  72

2. அப்துல் முத்தலீப் அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?

10 ஆண் பிள்ளைகள், 6 பெண் பிள்ளைகள்.

3. நபி(ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன?

அப்துல்லாஹ்.  பக்கம் 72

4. அப்துல் முத்தலீப் அவர்களுக்கு அப்துல்லாஹ் எத்தனையாவது பிள்ளை?

4ஆவது பிள்ளை. 

5. அபூதாலிப் என்பவர் யார்?

நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை

6. ஹம்ஜா(ரழி) என்பவர் யார்?

நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை.

7. ஸஃபியா(ரழி) அவர்கள் யார்?

நபி(ஸல்) அவர்களின் அத்தை.

8. அபூபக்கர் சித்திக்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு என்ன உறவு முறை?

மாமனார்.

9. ஆயிஷா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எத்தனையாவது மனைவி? 

3ஆவது மனைவி. 

10. அப்பாஸ்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு என்ன உறவு முறை?

சிறியதந்தை.  பக்கம் 72

11. கதீஜா(ரழி) அவர்களுக்கு மஹராக என்ன கொடுத்தார்கள்?

20 மாடுகள். 

12. கதீஜா(ரழி) அவர்களின் தோழியின் பெயர் என்ன?

நஃபீஸாபின்த்முநப்பிஹ்.

13. அபூலஹப் நபி(ஸல்) அவர்களுக்கு என்ன உறவு முறை?

சிறியதந்தை. 

14. அபூலஹபின் மகன்கள் பெயர் என்ன?

உத்பா, உதய்பா. 

15. நபி(ஸல்) அவர்களின் மகள்கள் பெயர் என்ன?

ஜைனப்(ரழி), ரொகையா(ரழி), உம்மு குல்சும்(ரழி), ஃபாத்திமா(ரழி)

16. நபி(ஸல்) அவர்களுக்கு அபூலஹப் வேறொரு உறவு முறை என்ன?

சம்பந்தி. 

17. நபித்துவத்துக்கு முன் அபூலஹபின் மகன்களுக்கு நபி(ஸல்) அவர்கள் மணமுடித்து கொடுத்த நபி(ஸல்) அவர்களின் பெண் பிள்ளைகள் பெயர் என்ன?

ரொகையா(ரழி), உம்மு குல்சும்(ரழி).

18. அபூலஹபின் மனைவி பெயர் என்ன?

உம்முஜமீல். 

19. உம்மு ஜமில் அவர்களின் சகோதரர் யார்?

அபூசுப்யான்.

Previous post:

Next post: