இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் மக்கிய பின்பும்
உயிருடன் எழுப்பப்படும் மனிதன்!
S.H. அப்துர் ரஹ்மான்
அணி அணியாய் நிற்போர் மீது சாத்தியமாக!
கடுமையாக விரட்டுவோர் மீது சத்தியமாக!
அறிவுறையைக் கூறுவோர் மீது சத்தியமாக!
உங்கள் இறைவன் ஒருவன் மட்டுமே!
(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன், உதிக்கும் திசைகளுக்கும் இறைவன் முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் (இறைவனாகிய) நாம் அலங்கரித்துள்ளோம்.
வரம்பு மீறிய ஒவ்வொரு சாத்தானிட மிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்).
(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும் பிரகாசமான தீக்கதிர்கள் அவர்களை விரட்டும் அவர்களுக்கு நிலையான வேதனையும் உண்டு.
இவர்கள் வலிமையான படைப்பா? அல்லது (இறைவனாகிய) நாம் படைத்த (மற்ற)வைகளா? என்பதை இவர்களிடம் கேட்பீராக! இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் நாம் படைத்தோம்.
உண்மையில்(இறைவனின் ஆற்றலை எண்ணி) நீர் ஆச்சரியப்படுகிறீர். இவர்களோ கேலி செய்கின்றனர். இவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் படிப்பினை பெறுவதில்லை. ஆதாரங்களை இவர்கள் கண்டபோதும் கேலி செய்கின் றனர்.
“இது தெளிவான சூனியம் தவிர வேறில்லை‘ என்று இவர்கள் கூறுகின்றனர்.
“நாங்கள் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது நாங்களும், முந்தைய எங்கள் முன்னோர்களும் உயிர்ப்பிக்கப்படுவோமா?’ (என்று கேட்கின்றனர்)
ஆம்! நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக (உயிர்ப்பிக்கப்படுவீர்கள்) எனக் கூறுவீராக!
அது ஒரே ஒரு பெரும் சப்தம் தான். உடனே அவர்கள் மறுமை நாளை காண்பார்கள்.
“எங்களுக்குக் கேடு தான்; இது தீர்ப்பு நாள்‘ என அப்போது கூறுவார்கள்.
“நீங்கள் பொய்யயனக் கருதிக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுவே‘ (எனக் கூறப்படும்)
அநீதி இழைத்தோரையும், அவர்களுக்கு துணை நின்றவர்களையும், அந்த இறைவனையன்றி அவர்கள் வணங்கி வந்ததையும் ஒன்றுதிரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்!
“அவர்கள் விசாரிக்கப்படுபவர்கள்; அவர்களைப் பிடித்து நிறுத்துங்கள்!’ (என்று வானவர்களுக்குக் கூறப்படும்)
“உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள்?’ (என்று கேட்கப்படும்)
அவ்வாறு நடக்காது. இன்றைய தினம் அவர்கள் சரணடைந்தவர்கள்.
அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
“நீங்களே எங்கள் மீது ஆதிக்கம் செய்வோராக இருந்தீர்கள்‘ என்று (சிலர்) கூறுவார்கள்.
“இல்லை. நீங்கள் தான் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை‘ என்று (மற்றும் சிலர்) பதிலளிப்பார்கள்.
உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. மாறாக நீங்களே வழிகெட்ட கூட்டமாக இருந்தீர்கள்.
எனவே எங்கள் இறைவனின் கட்டளை எங்களுக்கு எதிராக உறுதியாகி விட்டது. (அதன் பலனை) நாங்கள் அனுபவிக்கிறோம்.
“நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நாங்கள் வழிகெட்டவர்களாக இருந்தோம்‘ (என்றும் கூறுவார்கள்)
அந்நாளில் அவர்கள் வேதனையில் பங்காளிகளாக இருப்பார்கள்.
குற்றவாளிகளை இப்படித்தான் நாம் நடத்துவோம்.
“அந்த ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை‘ என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெரு மையடிப்போராக அவர்கள் இருந்தனர்.
“பைத்தியக்காரக் கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா?’ என்று கேட்கின்றனர்.
அவ்வாறில்லை! அவர் உண்மையையே கொண்டுவந்துள்ளார். (முன்னர் வந்த) தூதர்களை உண்மைப்படுத்துகிறார்.
(மறுக்கும்) நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிப்பவர்கள்.
நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்படமாட்டீர்கள். (37:1-39)