உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும்

in 2024 அக்டோபர்

உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும்  அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும்அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்….

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2024  செப்டம்பர்  தொடர்ச்சி

தந்தையின் நண்பரை மகன் ஆதரிப்பதும் நன்மைகளில்  மிகப்  பெரிய  நன்மையாகும் :

ஒரு மனிதன் தனது தந்தையின் நண்பரை ஆதரிப்பது நன்மைகளில் மிகப்பெரிய நன்மையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள், (முஸ்லிம் :2552, ரியாளுஸ்ஸாலிஹீன் : 341)

அப்துல்லாஹ் பின் தீனார்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்களை, கிராமவாசிகளில் ஒருவர் மக்கா செல்லும் சாலையில் சந்தித்தபோது, அவருக்கு அப்துல்லாஹ் முகமன்(சலாம்) கூறி, அவரைத் தாம் பயணம் செய்து வந்த கழுதையில் ஏற்றிக் கொண்டார்கள். மேலும், அவருக்குத் தமது தலை மீதிருந்த தலைப்பாகையை (கழற்றி)க் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம், “அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும்! இவர்கள் கிராமவாசிகள். இவர்களுக்குச் சொற்ப அளவு கொடுத்தாலே திருப்தியடைந்து விடுவார்கள்என்று கூறினோம். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்கள், “இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப்(ரழி) அவர்களின் அன்புக்குரியவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “நல்லறங்களில் மிகவும் சிறந்தது. ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்எனக் கூறினார்கள். (முஸ்லிம்:4989,2552, ரியாளுஸ்ஸாலிஹீன்:342) மற்றுமோர் அறிவிப்பில்;

அப்துல்லாஹ் பின் தீனார்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்கள் மக்காவுக்குப் பயணம் மேற்கொண்டால், அவர்களுடன் கழுதை ஒன்று இருக்கும். ஒட்டக வாகனத்தில் பயணம் செய்து களைத்து விட்டால், அக்கழுதை மீது ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.  கழுதையை இதில் எதிர் கொள்ளுங்கள் என்றார்கள்.

ஐந்தாவதாக மிகவும் நெருக்கமான உறவினர்கள்:

முஆவியா பின் ஹைதா(ரழி, அபூ ஹுரைரா(ரழி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்உனது தாய்என்றார்கள். அவர்பிறகு யார்?’ என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்உனது தாய்என்றார்கள். அவர்பிறகு யார்?’ என்று கேட்டார். அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள்உனது தாய்என்றார்கள். அவர் (நான்காவது முறையாக) “பிறகு யார்?’ என்று கேட்டதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்உனது தந்தைபிறகு உனக்கு மிகவும் நெருக்கமான உறவினர். அடுத்து உனக்கு நெருக்கமான உறவினர் என்று விடையளித்தார்கள் என்றார்கள். (முஸ்லிம்: 4980, திர்மிதி, அபூதாவூத், முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 5:228-231) இதையே மற்றுமொரு வசனத்தில்;

நீதி செலுத்துமாறும் நன்மையே செய்யு மாறும் உறவுக்காரர்களுக்குக் கொடுத்து உதவுமாறும் நிச்சயமாக அல்லாஹ் கட்ட ளையிடுகின்றான்.”(16:90) 

இதன்மூலம் நெருக்கமான உறவுமுறைகளைப் பேணுமாறு உயர்ந்தோன் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். மற்றொரு வசனத்தில், (நபியே!) நெருங்கிய உறவுக்காரருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும், அவரவரின் உரிமைகளை வழங்குவீராக! (17:26, தஃப்சீர் இப்னு கஸீர்: 5:99-103) 

இரத்தபந்த உறவு முறைகளை முறிக்காதீர்:

மனிதர்களே! அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.”  (4:1) 

அதாவது; அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமும், உறவு முறைகளைத் துண்டிப்பதிலிருந்தும், அவனை அஞ்சுங்கள். உறவினர்களுக்கு உதவிகள் செய்து உறவைப் பேணி வாழுங்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்: 2:372-375)

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமீன் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவு மாட்டான்: அவனைப் பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி  கைவிட்டுவிடவுமாட்டான்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமீன் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்.  அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிற வரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகிறான் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்தார்.    (புகாரி: 6951, 2442)

உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும், அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்:

அனஸ் பின் மாலிக்(ரழி) அறிவித்தார்: (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள், “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும், அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்என்று கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், “அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)’ என்று கூறினார்கள். (புகாரி: 2443,2444,6952, திர்மிதி, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 3:3-19)

மக்களுடன் கலந்து வாழ்ந்து அவர்களால் ஏற்படும் தொல்லைகளைச் சகித்துக் கொள்கின்ற ஓர் இறை நம்பிக்கையாளரே சிறந்தவராவார் :

மக்களுடன் கலந்து வாழ்ந்து அவர்களால் ஏற்படும் தொல்லைகளைச் சகித்துக் கொள்கின்ற ஓர் இறை நம்பிக்கையாளர் மக்களுடன் கலந்து வாழாமல் அவர்களால் ஏற்படும் தொல்லைகளைச் சகித்துக் கொள்ளாமல் இருப்பவரை விட மகத்தான நன்மையுடையவர் ஆவார் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), திர்மிதி, இப்னு மாஜா, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் : 3:3-19)

அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார் :

அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித் தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீ(ரழி), “எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லைஎன்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள்அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்என்று  கூறினார்கள்.    (புகாரி: 5997, 6013) (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: