சாந்தி! மண்ணிலா? விண்ணிலா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
மனித மனம் ஏதோ ஒன்றை எப்போதும் தேடிக் கொண்டேயிருக்கும். ஏன் என்றால் வாழ்வின் அர்த்தமே தேடலில் (Search-ல்) தான் இருக்கிறது. (Mobileலில்) சர்ச்(Search) செய்வது போல,
தேடலில் மூன்று வகை இருக்கிறது :
1. அறிவது
2. ஆராய்வது
3. அடைவது
என்று தேடலில் மனிதனது வாழ்க்கை இயங்கிக் கொண்டேயிருக்கிறது.
இது ஒன்றும் தவறு அல்ல,
ஏன் என்றால்,
தேடல்தான் உயிரோட்டமுள்ள மனிதனின் அடையாளமாகும்.
ஆனால் இந்த தேடல் மனிதர்களுக்கு இடையில் வேறுபடும்.
அதாவது தேடல்,
உடல் சார்ந்ததாகவோ அல்லது மனம் சார்ந்ததாகவோ… வெவ்வேறாக இருக்கும்.
ஆதி மனிதன் இரையை தேடி அலைந்தான். அதுதான் அவனுக்கு அன்று தேடலில் போதுமானதாக இருந்தது.
ஆனால் நாகரீகம் பெற்ற மனிதன் இருந்ததை பலவற்றையும் தொலைத்துவிட்டு இப்போது இழந்ததையே தேடிக் கொண்டிருக்கிறான்.
அதாவது சாந்தியை, ஆனந்தத்தை, பேரின்பத்தை வெளியே தேடுகிறான்.
என்ன காரணம் :
மனிதனின் போக்கு (செயல்) விசித்திரமானது; அவன் தன்னை அறிவதை விடவும், அடுத்தவர்களை அறிவதிலும், ஆராய்வதிலும் தான் ஆர்வம் காட்டுகிறான். எதிராளியின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் கவனம் செலுத்துகிறான்.
அதுவே தனக்கு தேவையான சாந்தியை அடைய முடியாமலேயே வாழ்கிறான், மடிகிறான், போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இவ்வுலகில் சாந்தி இல்லை. மனச் சங்கடங்களே அதிகமாக உள்ளது.
சாந்தி கிடைக்க என்ன செய்யவேண்டும்:
உடல் நலமும், மன நலமும் இணைந்ததே வாழ்க்கை. அதுவே சாந்தி கிடைக்க அடிப்படை, அந்த சாந்தி முறையாக தேடுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
“தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம்
தெரியாமல் போனால் அது வேதாந்தம்‘
தெளிவாக தெரிகின்ற சித்தாந்தத்தை (இறைநூலை / குர்ஆனை) விட்டுவிட்டு விளங்காத வேதாந்தத்தில் சாந்தியை தேடுகிறார்கள்.
ஏனென்றால் ஆன்மீகத்தின் பேரால் உலா வரும் பல கட்டுக்கதைகளை நம்புகிறார்கள். உலகிலேயே அதிகமான மோசடிகள் நடப்பது ஆன்மீகத்தில்தான்.
ஆன்மீகத்தில் மோசடி எவ்வாறு என்றால் மனித சஞ்சாரமற்ற காடுகளிலோ, குகையிலோ, மலைகளிலோ, மரத்தின் நிழலிலோ கண்களை மூடி அமர்ந்திருப்பது என போலியான சித்தாந்தத்தை கூறுகிறார்கள்/ நம்புகிறார்கள்.
அல்லது கண்களை திறவாமல் எல்லா நேரங்களிலும் (கோயில்களில், சர்ச்சில், பள்ளி வாசலில், தர்ஹாக்களில்) தியானத்தில் மூழ்கியிருக்க வேண்டும் என கூறுகிறார்கள்.
இவை எல்லாம் கட்டுக்கதைகள், எல்லா மதங்களிலும் உள்ள போலி மதகுருமார்களால் கூறப்படும் பொய்யான சித்தாத்தங்கள்.
இத்தகைய போலி மதகுருமார்களின் பின்னே போகிறவர்கள் ஆண்களாக இருந்தால் பொருளை (செல்வத்தை) இழக்கிறார்கள். அதுவே பெண்களாக இருந்தால் கற்பையும் இழந்து களங்கப்பட்டு சிலர் நிற்கிறார்கள்.
மேற்கண்ட ஆன்மீக பேரால் பலர் ஏமாறுவது போல் இப்போது மீடியாக்களால் அதிகமான மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
அதாவது கார்ப்பரேட்டுகளின் கைகூலிகளாக செயல்படும் மீடியாக்கள் செய்யும் பரபரப்பான போலி செய்திகளாலும், மோசடியான விளம்பரத்தில் மயங்கியும், மற்றும் அரசியல் கட்சிகளின் நலனுக்காக செய்யப்படும் செய்திகளாலும் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.
யாரெல்லாம் மேற்கண்ட இரண்டையும் முழுமையாக நம்புகிறார்களோ அவர்களுக்கு சாந்தி கிடைக்காது மாறாக சங்கட மிகுந்த வாழ்வே இம்மண்ணில் கிடைக்கும்.
எவ்வாறு என்றால், இந்த நவீன உலகில் “சாந்தி‘ கிடைக்க வழியே இல்லையா?
நிச்சயமாக உண்டு.
ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சியும், பயிற்சியும் தேவைப்படும்.
அது என்ன? (இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் தொடரும்….)