நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்தல்!

in 2024 அக்டோபர்

நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்தல்!

K.M. காஜா மொஹிதீன்

மறு பதிப்பு :

அகிலத்துக்கோர் அருட்கொடையாக (பார்க்க: அல்குர்ஆன் 21:107) அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது ஒவ்வொரு மூஃமின் மீதும் கடமையாகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான் இந்த நபி மூஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களை விட மேலானவராக இருக்கின்றார்.      (அல்குர்ஆன் 33:6)

எனது உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அந்த இறைவன் மீது ஆணையாக உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பான வனாக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக ஆகமாட்டார்என நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்.  அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரி(ஹதீத் எண் 13)

உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை அவரது குழந்தைகள் ஏனைய மக்கள் அனை வரையும் விட நாள் மிக்க அன்பானவனாக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் கொண்டவராக ஆகமாட்டார்  அறிவிப்பாளர் : அனஸ்(ரழி),  நூல்:புகாரி  (ஹதீத் எண் 14)

மேற்கண்ட நபி மொழிகளிலிருந்து நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்த வேண் டும்; அப்போது தான் நமது ஈமான் முழுமை பெற்றதாக ஆகும். சல்மான் ருஷ்டி, தஸ்லீமாநஸ்ரீன், ராமகோபாலன், ஸ்ரீதரன் போன்றவர்கள் நபி(ஸல்) அவர்களை தரக் குறைவாக பேசியும், எழுதியும் வரும் போது, கொதித்தெழுந்து எதிர்ப்புக்குரல் கொடுப்பது முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர் கள் மீது வைத்துள்ள கலப்படமற்ற  அன்பிற்கு  எடுத்துக்காட்டாகும்.

நபி(ஸல்) அவர்கள் மீது, அன்பு காட்டுவது என்பது எவ்வாறு? அபூதாலிப் காட்டிய அன்பை போன்றா? அல்லதுஉங்கள் தம்பிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதுஎன செய்தி சொன்ன தனது அடிமை துவை பாவை விடுதலை செய்தானே அபூலஹப் அதுபோன்ற அன்பா? நபி(ஸல்) அவர்களை அல்அமீன், அஸ்ஸாதிக் என பட்டம் சூட்டி அழைத்தனரே மக்கா காஃபிர்கள், அது போன்ற அன்பா? என்றால் நிச்சயமாக இதுபோன்ற அன்பாக மட்டும் இருந்து விடக்கூடாது. 

நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது ஈமான் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும். அதன் மூலம்தான் நாம் ஈடேற்றம் பெறமுடியும்.

இன்னும் சிலர் நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம் என்ற பெயரில் அவர்களுக்காக மெளலூது, மீலாது விழாக்கள், புர்தா ஓதுவது, சலாத்நாரியா போன்றவை ஓதுதல் போன்றவைகளை செய்கிறார்கள். இவைகள் நபி(ஸல்) அவர்களுடைய அன்புக்குப் பதிலாக அவர்களுடைய சாபத்தை பெற்றுத்தரக் கூடியவையாகும். நம்மை நரகிற்கு அழைத்துச் செல்லும்  நாசச்  செயல்களாகும்.

எனக்குப் பின்னால் உருவாக்கப்படும் அமல்கள் யாவும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் நரகில் கொண்டு போய் சேர்க்கும்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இது புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களிலே பதிவாகி உள்ளது.

எனக்குப் பின்னால் உருவாக்கப்படும் அமல்கள் அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பாளர்: ஆயிஷா(ரழி), நூல்:முஸ்லிம்

எனவே மேற்கண்டவைகளிலிருந்து நாம் தவிர்ந்துக்கொள்ள வேண்டும். மேலும் இச்செயல்கள் யாவும் கொடிய சிர்க்‘ (இணை வைத்தல்)  ஆகும்.

அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் மீது எப்படித்தான் அன்பு வைப்பது எனக் கேட்டால் அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்வின் பிரகாரம் வாழ்வதுதான் அவர்கள் மீது நாம் செலுத்தும் உண்மையான அன்பு  ஆகும்.

அன்னை ஆயிஷா சித்தீகா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் வாழ்வு குர்ஆனாக இருந்தது என்ற செய்தி புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களிலே காணப்படுகிறது.

நாம் குர்ஆனில் காணப்படுகிற போதனைகளை ஏற்று, நன்மையை ஏவி, தீமைகளைத் தடுக்கவேண்டும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை அவர்கள் காட்டிய சுன்னத்தின் (நடைமுறை) அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

நமது வியாபாரத்தில் நேர்மை, சகோதர வாஞ்சனையோடு பழகுதல், மாற்று மத சகோதரர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைத் தல் போன்ற நன்மைகளைச் செய்வதன் மூலமே நாம் நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது உறுதிப்படும்.

வட்டி, பொய், மோசடி, செய்தல், இலஞ்சம், அநாதைகளின் சொத்தை அபகரித்தல், கலப்படம் செய்தல், புறம் பேசுதல், தற்பெருமை கொள்ளுதல், மது, விபச்சாரம், சூதாட்டம் போன்ற தீமைகள் நம் வாழ்வில் ஏற்படாமலும், அவைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும் நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவதாகும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக கொடிய சிர்க்(இணைவைத்தல்)க்கு எதிராகப் போராட வேண்டும். எவை எவை சிர்க் என்பதை இனம் காட்டவேண்டும். ஏனெ னில் சிர்க்நிரந்தர நரகில் கொண்டு போய் சேர்த்துவிடும். ஹலால், ஹராம் பேணுதல் நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

மறுமையைக் கொண்டும், கப்ருடைய வாழ்க்கையைக் கொண்டும் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்க வேண்டும். இவை யாவும் நபி(ஸல்) அவர்கள் மீது நாம் செலுத் தக்கூடிய உண்மையான அன்பை வெளிப்படுத்தும் செயல்களாகும்.

எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ்! அவன் அருளிய குர்ஆனை ஏற்று, அதற்கு விளக்கவுரையாகவும், விரிவுரையாகும் ஒரு நடமாடும் குர்ஆனாக வாழ்ந்த நபி(ஸல்) அவர்களின் வாழ்வின் அனைத்து அம்சங் களையும் கூடுதல், குறைவின்றி பின்பற்றி நபி(ஸல்) அவர்களின் அன்பையும், இறைத் திருப்தியையும் பெற்ற சமுதாயமாக நம்மை ஆக்குவானாக!

மறுமையில் நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும் அடியார்களாகவும் நம்மை ஆக்குவானாக! வஸ்ஸலாம்.

Previous post:

Next post: