“ரபியுல் அவ்வல் மாத சிறப்பு கட்டுரை”
(WORLD’S THE MOST IMPRESSED MAN)
உலக மக்களை கவர்ந்த முன்மாதிரியான மாமனிதர்
உலக வரலாற்றில் சில மனிதர்கள் பல்வேறான காரணங்களால் மக்களால் ஈர்க்கப்பட்டு அவரை பின் தொடரக் கூடியவர்கள் (FOLLOWERS) பல லட்சம் பேர், அல்லது பல ஆயிரக்கணக்கான பேர் இருப்பவர்கள்/ இருக்கின்றார்கள்.
உதாரணமாக:
அமெரிக்க அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் சுமார் 150 ஆண்டுகளில் சுமார் 150 ஆண்டுகளில் ஆப்ரஹாம் லிங்கனும், ஜான் கென்னடியும் அந்நாட்டு மக்களை கவர்ந்த அளவிஙற்கு வேறு எந்தவொரு நபரும் இன்று வரை கவரவில்லை.
இங்கிலாந்து நாட்டு வரலாற்றில் பிரிட்டிஷ் மகாராணி (எலிசபெத்) மற்றும் மார்ட்டின் லூதர்கிங் அந்நாட்டு மக்களை கவர்ந்த அளவிற்கு வேறு எந்தவொரு நபரும் இன்றுவரை கவரவில்லை.
ஆப்பிரிக்க நாட்டு வரலாற்றில் நெல்சன் மண்டேலா அந்நாட்டு மக்களை கவர்ந்த அளவிற்கு வேறு எந்தவொரு நபரும் இன்று வரை கவரவில்லை.
நமது இந்திய நாட்டு வரலாற்றில் மகாத்மா காந்தியும், அப்துல் கலாமும் நம் நாட்டு மக்களை கவர்ந்த அளவிற்கு வேறு எந்தவொரு நபரும் மக்களை பெருவாரியாக இன்றுவரை கவரவில்லை.
அதுபோல் உலக வரலாற்றில் பல்வேறு துறைகளில் பல்வேறான நபர்கள் சிலரால் கவரப்பட்டுள்ளார்கள். ஆனால் மனித வரலாற்றில் இறைவனால் கவரப்பட்ட தோழராக ஒரு மனிதர் இருந்தார் என்றால் அவர் நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் மட்டுமே.
அதற்கு காரணம் :
1. இறைவனின் சோதனையில் அனைத்திலும் நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் வென்றார்கள். பார்க்க வசனம் 2:124, 2:131
2. கொடுங்கோல் மன்னனிடம் அறிவுப்பூர்வமாக வாதிட்டு வென்றார். பார்க்க வசனம் 2:258
3. சிலை வணக்கத்திற்கு எதிராகக் அறிவுபூர்வமான பிரச்சாரம் செய்தார்கள். பார்க்க வசனம் 2:152167, 37:9196, 60:4
4. இறைக் கட்டளையை ஏற்று மகனையும் நபி இஸ்மாயில்(அலை) அவர்களை அறுக்கத் துணிந்தார். பார்க்க வசனம் : 37:102-108
5. காஅபா ஆலயத்தை மறு நிர்மாணம் செய்து ஹஜ் செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்தார். பார்க்க வசனம்: 2:127, 14:35, 22:26, 22:27
இன்னும் பல்வேறு சிறப்புக்குரியவர்களாக நபி இப்ராஹிம்(அலை) திகழ்ந்தார்கள். எனவேதான் ஏனைய நபிமார்களை விட இறைவனால் கவரப்பட்ட தோழராக ஆனார்கள்.
பெண்கள் :
உலக மரபில் பெண்கள்தான் கவரக் கூடியவர்கள் (அழகானவர்கள்) என்று பெரும்பாலோர் நினைக்கின்றார்கள். அதற்கு காரணம் பெண்களின் முக அழகு, உடல் அமைப்பு முதலியவற்றில் ஒரு கவர்ச்சி (IMPRESSION இருப்பதால், கவிஞர்கள் பலரும் கூட பெண்களை வர்ணிப்பது போல் ஆண்களை வர்ணிப்பதில்லை.
பெண்களின் ஈர்ப்பு (கவர்ச்சி)எனும் போலியான கவர்ச்சியினால் சாம்ராஜியங் களை இழந்த மன்னர்கள் பலர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் மனித வர்க்கத்திலும் சரி, இறைவனின் இதர படைப்பினர்களிலும் சரி ஆணே கவர்ச்சிகரமானவன் /கவர்ச்சிகரமான
(இந்த உண்மை பெரும்பாலான ஆண்களுக்கு கூட தெரியவில்லை என்பது வேதனைக் குரிய விசயம்)
உதாரணமாக :
ஒரு நாட்டின் மகாராணியாக இருந்த (மன்னரின் மனைவி) அவளுடைய நாட்டிற்கு வந்த ஒரு ஆணின் நபி யூசுப்(அலை) அவர்களின் அழகினால் கவரப்பட்டு அவரை தவறான முறையில் அடைய முயன்ற வரலாற்றை அல்குர்ஆன் அத்தியாயம் 12ல் முழுவற்றை யும் படித்தால் காணலாம். இவை எல்லாம் கடந்த கால வரலாறு.
நிகழ்கால வரலாற்றில் சுமார் 200 கோடி மக்களுக்கு மேற்பட்ட மனிதர்களால் கவரப்பட்ட ஒரு மாமனிதர் இருக்கின்றார் என்றால் அவர் முகமது நபி(ஸல்) அவர்கள் மட்டுமே.
என்ன காரணம் :
1. அவர் பெரும் அரண்மனைக்கு சொந்தக்காரராக இருந்தார் என்பதாலா?…. இல்லை.
2. அவரும், அவருடைய குடும்பத்தாரும் வாழ்க்கையில் பெரும் செல்வத்தில் திகழ்ந்தார்கள் என்பதாலா? இல்லை.
(அவர் வாழ்நாளில் ஒரு நாளில் கூட வயிரார சாப்பிட்டதில்லை என்பதே உண்மை)
3. தோழர்கள் (சஹாபாக்களால்) எதிரிகளுக்கு பதிலளிப்பதற்காக அவரை புகழ்ந்து கவிதை பாடினார்கள் என்பதினாலா? இல்லை, இல்லவே இல்லை,
(அவர் ஒரு சாதாரண மனிதர் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர் விரும்பவில்லை என்பதே உண்மை)
4. இறைவனின் ஆற்றலில் தனக்கு எந்தவொரு பங்கும் இருப்பதாக அவர் ஒருமுறை கூட வாழ்நாளில் கூறவில்லை. தானும் இறைவனின் அடிமையே என்று தான் கூறினார்.
5. ஒரு மனிதரின் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தது என்றால் அது முகம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மட்டுமே.
நீர் போரில் கலந்து கொண்டால் காயப்படுவாய் (இறந்துவிடுவாய்) என மறைமுக தெரிவித்தும் அந்த மனிதரின் சொல் பொய் ஆகாது என்று தெரிந்தே போரில் கலந்து கொண்டு உயிர்நீத்த (ஸஹீதான) பல உத்தம தோழர்கள் அவருக்கு இருந்தார்கள் என்பதே காரணமாகும்.
அது மட்டுமல்ல;
உலகில் பிரபலமாக வாழ்ந்து மக்களால் சிலர் கவரப்பட்டிருந்தாலும் அத்தகைய மனிதருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி முழுமையாக எவரும் தெரிந்து கொண்டதில்லை, தெரிந்து கொள்ளவும் முடியாது.
ஏன் என்றால்; அந்தரங்கத்தில் ஒரு வாழ்வும், வெளி அரங்கத்தில் வேறு ஒரு வாழ்வும் வாழ்வார்கள்.
ஆனால் உலக வரலாற்றிலேயே ஒரே ஒரு மனிதரைப் பற்றித்தான் (அந்தரங்கமும், வெளி அரங்கமும்) மிக நுணுக்கமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆன்மீகத் தலைவராக, ஜனாதிபதியாக, போர்ப்படை தளபதியாக, கணவராக, தந்தையாக, தோழராக அவர் வாழ்ந்த அவரது வாழ்க்கை மிக நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய சொல்லும், செயலும் இஸ்லாமிய மார்க்க சட்டங்களுக்கு பல அடிப்படை யாக இருக்கின்றன.
அவரது வரலாற்றிலேயே அற்புத (HIGHLIGHT)மான விசயம் என்னவென்றால் அவருடைய சொல்லும், செயலும் வெறும் ஏடுகளில் மட்டுமல்ல. அவரை முன்மாதிரி யாக கருதி வாழ்ந்த/வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் அவை பிரதிபலிப்பதை கண்முன்னே இன்றும் காணமுடியும்.
எனவேதான் இறைவன் தன் வழிகாட்டி நூலில் (அல்குர்ஆனில்) இந்த ஒரு மனிதரிடம் மட்டுமே உங்களுக்கு முன்மாதிரி இருக்கின்றது என்று சிறப்பித்து கூறியுள்ளான்.
(வேறு எந்தவொரு ஆன்மீக தலை வரையோ, இமாம்களையோ இறைவன் கூறவில்லை)
“அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டு அதிகம் நினைக்கும் மக்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது” (அ.கு.33:21)
முகமது நபி(ஸல்) அவர்களை முன் மாதிரி என்று இறைவன் ஏன் குறிப்பிட வேண்டும்?
உலகில் தோன்றி வாழ்ந்த மறைந்த எந்தவொரு சீர்திருத்தவாதிகளும், மக்களால் கவரப்பட்ட தலைவர்களும், ஆன்மீகவாதிகளும் எந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்தார்களோ அந்த கொள்கையின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியவில்லை.
ஆனால் முகம்மது நபி(ஸல்) அவர்கள் மட்டுமே சுமார் 23 ஆண்டுகளில் அதை சாதித்துக் காட்டினார்கள். அதற்காக முகம்மது நபி(ஸல்) அவர்கள் பட்ட துன்பங்கள், அவமானங்கள், சந்தித்தப் போர்களங்கள் அவை அனைத்திலும் முன்மாதிரி உள்ளது.
அதுமட்டுமல்ல இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையைச் சொல்லி தரும் வசனமும் இதுவாகும்.
அதாவது இறை வழிகாட்டி நூல் (குர்ஆன்) மட்டும் போதும், முகம்மது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட ஹதீத்களை ஏற்கமாட்டோம் என சிலர் கூறுகின்றனர்.
காரணம் : ஹதீத்களில் பல இட்டுக்கட்டப்பட்டவைகளும் உள்ளன என்பதால் இவ்வாறு கூறுவது மூலம் அவர்கள் இறைநூலை (குர்ஆனை) மறுக்கிறார்கள் என்பதே உண்மை. முகம்மது நபி(ஸல்) அவர்களது சொல், செயல் மற்றும் அங்கீகாரம் பெற்றவையை ஏற்று செய்யப்பட்டால்தான் முன்மாதிரி என்பது சாத்தியமாகும். ஏனெனில் முகம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய முன்மாதிரியான வாழ்க்கையை ஹதீத்களிலிருமந்து தான் பெறமுடியும்.
உதாரணமாக: அவரால் கவரப்பட்ட தோழர் ஒருவர் “வருகின்ற எல்லா நாட்களிலும் நோன்பு நோற்பேன்‘ என ஒருவர் நேர்ந்திருக்க,
ஏதேச்சையாக அது ஹஜ்ஜுப் பெருநாளாகவோ, அல்லது நோன்பு பெருநாளாகவோ அமைந்துவிட்டால் என்ன செய்வது என்று இப்னு உமர்(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள்,
உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது என்ற மேற்கண்ட வசனத்தை கூறிவிட்டு,
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளன்றும், நோன்பு பெருநாளன்றும் நோன்பு நோற்பவர்களாக இருக்கவுமில்லை. இரு பெருநாட்களில் நோன்பு நோற்பதை அவர்கள் அனுமதிக்கவுமில்லை என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஹகீம் பின் அபீஹுர்ரா நூல்கள் : புகாரி 6705, முஸ்லிம் 2097
ஆயினும் அவருடைய (FOLLOWERS) சொல், செயலை பின்பற்றுவதாக கூறும் பலரும் (முஸ்லிம் சமுதாய மக்கள்) பல பிரிவுகளாகவும், அவர் காட்டிதராத வழிமுறைகளையும், மற்றும் அவர் பெயரில் இட்டுக்கட்டி சொல்லாததையும், செய்யாததையும் அவர் செய்ததாக நினைத்து அவருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.