அத்துமீறும்  சுதந்திரம்!

in 2024 நவம்பர்

அத்துமீறும்  சுதந்திரம்!

ரேஷ்மா யாஸின்,  திருச்சி

இந்த உலகத்தில் ஒரே முகம் கொண்ட மனிதர்கள் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பழக்க வழக்கம், ஏன் ஒரே உணவு முறை கூட இல்லை. 

இன்னும் எத்தனையோ விசயங்களில் மனிதர்களாகிய நாம் மாறுபட்டு தான் இருக்கிறோம்.

ஆனால் எல்லா மொழிகளிலும் எல்லா கலாச்சாரங்களிலும் எல்லா மனிதர்களிடத் திலும் எதிர்பார்க்கின்ற ஒரு பொதுவான பண்பு தான்  ஒழுக்கம்.

இதற்கு மதம், மொழி, இனம், நிறம் ஏற் றத்தாழ்வு என்ற எந்த பாகுபாடும் இல்லை.

இந்தப் பண்பு எந்த மனிதர்களிடத்தில் இருக்கிறதோ அவர்களை அது தனித்து வமான அந்தஸ்தில் வைக்கிறது. மற்றவர்கள் பார்வையில் சொன்னால் முதலில் உங்கள் தோற்றம், நடந்து கொள்ளும் விதம், பேசும் விதம், உங்கள் ஆடை பற்றிய ஆலோசனை தான்  கூறுவார்கள். 

இதில் முதலில் வருவது தோற்றமும் நாம் அணியும் ஆடையும். அழுக்கான ஆடையுடன் ஒரு விருந்தோ அல்லது ஒரு திருமணத்திற்கு போகும்போது ஏன் இப் படி வந்திருக்கிறீர்கள் முதலில் உங்கள் ஆடையை மாற்றுங்கள் என்றுதான் சொல்லுவோம்.

இன்றைய சமூகம் ஆடையின் கண்ணியத்தை மட்டும் குறைக்கவில்லை ஆடை அணிபவர்களின் கண்ணியத்தையும் சேர்ந்தே  குறைத்துள்ளது.

இன்று தலைவிரித்து ஆடும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இந்த அரைகுறை ஆடை அலங்காரங்களும் ஒரு முக்கிய காரணி  என்பது  கசப்பான  உண்மை.

ஆடை சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் தங்களை தாங்களே இழிவுபடுத்தும் அவல நிலையை தான் பார்க்கிறோம். ஆடை என்ற பெயரில் பெண்களே முகம் சுழிக்கும் அளவுக்கு நிலைமை தரம் தாழ்ந்து இருக்கிறது  நமது  சமூகம்.

ஆண்கள் இதுபோன்ற ஆடைகளை அணிந்து நாம் பார்த்து இருக்கிறோமா? இல்லை அவர்கள் எப்போதும் தங்களை கண்ணியமான மரியாதைக்குரிய இடத்தில் தான்  வைத்துக் கொள்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் சமம் என்றால் ஆடை மட்டும் விதிவிலக்கா? என்ன? பெண் சுதந்திரம் ஆடையில் மட்டுமா உள்ளது?

இன்று சமூக ஊடகங்கள் பெண்களை எவ்வளவு தூரம் இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி சீரியலில் பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக சித்தரிப்பதும் ஒழுக்கக்கேடான காட்சிகளும் இடம்  பிடிக்கிறது  இதுவா  சுதந்திரம்?

வலைதளங்களில் பல பெண்கள் தங்களை பின்தொடர வேண்டும் என்று எவ்வளவு தூரம் ஆபாசமாக காட்ட முடியுமோ அவ்வளவு தூரம் காட்டுகிறார்கள். இதுவா நம்  சுதந்திரம்?

ஆணும், பெண்ணும் பழகும் முறைகள் ஒழுங்கற்ற முறையிலும் ஆணும், ஆணும் பெண்ணும், பெண்ணும் என்ற ஒழுக்கக் கேடான முறையும் இப்போது அதிகமாக நடந்து வருகிறது. என் வாழ்க்கை என் சுதந்திரம் என்ற புதுக் கொள்கை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒத்துப் போகாத விசயம்.

சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடற்ற ஒழுக்க சீர்கேடுகளும் ஒழுக்கம் என்றால் என்ன? என்று கேட்கும் ஒரு சமூகம் நம் கண் முன்னே உருவாகிக் கொண்டு  இருக்கிறது.

இந்த ஒழுக்க சீர்கேட்டில் இருந்து நம்முடைய சந்ததிகளை எவ்வாறு பாதுகாக்க  போகிறோம்? 

பெற்றோர்களாகிய நாம் நம்முடை.ய கடமைகளை சரிவர செய்யாமல் போனது தான் இந்த ஒழுக்க சீர்கேடான சமுதாயம் உருவாவதற்கு காரணம். தனி மனிதர்களின் ஒழுக்கம்  தான்  சமூகத்தின்  ஒழுக்கம். 

ஒழுக்கம் தான் நாம் யார் என்று மற்றவர்களுக்கு புரியவைக்கும் உன்னத பண்பு, ஒழுக்கம் ஒரு கண்ணாடி குடுவை, அதை பாதுகாப்பது நம் கடமை. இறைவன் எதிர்பார்க்கும்  பண்பும்  இதுவே.

இன்று பெண் பிள்ளைகளிடத்தில் குட்டச் (றூலிலிd வீலிற்உஜு), பேட்டச் (யழிd வீலிற்உஜு) என்று சொல்லித் தரும் நாம் ஆண் பிள்ளைகளிடம் ஏன்  சொல்லித் தர  தயங்குகிறோம்.

இது ஆணாதிக்கத்தின் ஒரு வெளிப்பாடாக பெண்ணே ஆணுக்கு ஆதரவாக இருக்கும்  ஒரு  செயலும்  ஆகும்.

பெண்களை பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்லும் சமூகம் ஆண்களிடத்தில் அந்த விழிப்புணர்வை கொண்டு வர முயற்சி  செய்யாதது  ஏன்?

ஒரு ஆண் தவறு செய்வதும், செய்யாமல் இருப்பதும் பெண்களாகிய நம்முடைய கையில்தான் உள்ளது.

பெண்ணே பெண்ணுக்கு ஆதரவாக மாறும் காலம் எப்போது வரும். மனித மனங்கள் மாறட்டும், மாண்புகள் மலரட்டும்.

Previous post:

Next post: