உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும் –
அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்….
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.
2024 அக்டோபர் தொடர்ச்சி…
இரத்தபந்த உறவினர்களுக்கும் உபகாரம் செய்தல் :
“அல்லாஹ்வையே‘ வழிபடுங்கள்; அவ னுக்கு எதனையும் இணை கற்பிக்காதீர்கள் என்று சொன்ன அல்லாஹ் அடுத்து இந்த வசனத்தில்; பெற்றோருக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறுகின்றான். அடுத்ததாக, உறவினர்களுக் கும் உபகாரம் செய்யுங்கள் என்று சொல் கின்றான்.
இது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர் கள் கூறினார்கள்: ஏழைகளுக்கு தர்மம் வழங்கினால் தர்மத்திற்கான நன்மை (மட் டுமே) கிடைக்கும். ஆனால் (ஏழைகளான) உறவினர்களுக்கு தர்மம் செய்தால் தர்மத் திற்கான நன்மையும் உறவை மதித்ததிற் கான நன்மையும் கிடைக்கும்.
அறிவிப்பவர். (சல்மான் பின் ஆமிர்(ரழி), இப்னுமாஜா, நஸயீ, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் 2:515-523)
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரழி) உடைய மனைவி ஸைனப்(ரழி) அறிவித்தார்:
நான் பள்ளி வாயிலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய் யுங்கள்‘ எனக் கூறினார்கள். நான் என் (கண வர்) அப்துல்லாஹ்(ரழி)வுக்கும், மற்றும் எனது அரவணைப்பிலுள்ள அனாதைகளுக் கும், செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக் காகவும், என்னுடைய அரவணைப்பில் வள ரும் அனாதைகளுக்காகவும், என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவா குமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரழி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார்.
எனவே நான் நபி(ஸல்) அவர்கள் வீட் டிற்குச் சென்றேன். அவர்கள் வீட்டு வாயி லில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவ ரின் நோக்கமும் என்னுடைய நோக்கமா கவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரழி) வந்தார். அவரிடம் நான் என் னுடைய கணவருக்கும் என்னுடைய பரா மரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் “ஸைனப்‘ எனக் கூறி னார். நபி(ஸல்) அவர்கள் “எந்த ஸைனப்?’ எனக் கேட்டதும் பிலால்(ரழி), “அப்துல் லாஹ்வின் மனைவி‘ எனக் கூறினார். உடனே நபி(ஸல்) “ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங் கிய உறவினரை அரவணைத்ததிற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது‘ எனக் கூறினார்கள். (புகாரி : 1466, முஸ்லிம்)
அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உப காரம் செய்தல் குறித்துப் பேசுகின்றான். அநாதைகள் தமக்காகச் செலவு செய்யக் கூடிய, தமது நலன்களில் அக்கறை காட்டக் கூடிய தந்தையரை இழந்துவிட்ட காரணத் தால் அவர்களுக்கும் உதவி செய்து அவர் களிடம் அன்பு காட்டவேண்டும் என அல் லாஹ் கட்டளையிடுகின்றான். பின்னர் “ஏழைகளுக்கும் (நன்மை செய்யுங்கள்) என்று அல்லாஹ் கூறுகின்றான். ஏழைகள் என்போர் தம்முடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழி கிடைக்காதவர்கள் ஆவர். எனவே அவர்க ளின் தேவைகள் பூர்த்தியாகி துன்பங்கள் நீங்கும் அளவிற்கு ஏழைகளுக்கு உதவ வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடு கின்றான். அடுத்து;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள்: கணவனை இழந்த கைம்பெண்ணுக்கா கவும், ஏழைக்காகவும் பாடுபடுபவர் “இறை வழியில் அறப்போர் புரிபவரைப் போன்ற வராவார்‘
அப்துல்லாஹ் அல்கஅனபீ(ரஹ்) கூறினார். அல்லது “சோர்ந்துவிடாமல் இரவு முழுவ தும் நின்று வணங்கி பகல் முழுவதும் விடாது நோன்பு நோற்பவர் போன்றவரா வர்‘ என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மாலிக்(ரஹ்) அறிவித்தார் என்றே கருதுகிறேன். (புகாரி: 6007, 6006, 5353) மேலும் இவற்றில்;
அநாதைகளைப் பராமரித்து வளர்ப்பவரின் சிறப்புகள் :
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரழி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “நானும் அநா தையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப் படி இருப்போம் என்று கூறியபடி தமது சுட்டுவிரலையும், நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார் கள். (புகாரி: 5304, 6005)
ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரிச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன் :
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: “ஓரிரு கவளம் உணவுக்காக அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெ னில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள எச்செல்வத்தையும் பெற்றி ருக்கமாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்யமாட்டார் கள். தானும் வலியச் சென்று மக்களிடம் எதையும் கேட்கமாட்டான்‘ (இத்தகை யவனே உண்மையான ஏழையாவான்)
அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். (புகாரி: 1479,1476,4539, முஸ்லிம்: 1879, தஃப்சீர் இப்னு கஸீர்: 4:305-314, 1:871-878) மேலும்;
பூமியில் நடமாடித் (திரித்து தமது வாழ் வாதாரத் தேவைகளை நிறைவேற்ற) எது வும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ் வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்ககுத்தான் (உங்களு டைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர் களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையா ளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ள லாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகை யோருக்காக) நல்லது என்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல் லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 2:273) அதாவது; சொல், செயல், உடை அனைத்தி லும் அவர்கள் காட்டும் தன்னடக்கத்தை யும் தன்மான உணர்வையும் கண்டு அவர் களைப் பற்றி அறியாத மக்கள் அவர்களைச் செல்வந்தர்கள் என எண்ணிவிடுவர். இதே கருத்தில் ஓர் ஆதாரபூர்வமான நபிமொழி யும் காணப்படுகிறது.
அண்டை வீட்டாருக்கும் உபகாரம் செய்தல் :
“உறவினரான அண்டை வீட்டாருக்கும், அந்நியரான அண்டை வீட்டாருக்கும், நன்மை செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். இங்கு “உறவினரான அண்டை வீட்டார்‘ என்பதைக் குறிக்க மூலத்தில் “வல்ஜாரி தில்குர்பா‘ எனும் சொற் றொடரும், அந்நியரான அண்டை வீட் டார் என்பதைக் குறிக்க “வல்ஜாரில் ஜுனுபி‘ எனும் சொற்றொடரும் பயன் படுத்தப்பட்டுள்ளன. இதில் அந்நியர் என் றால், உறவினரல்லாதவர் என்பது பொருள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர் களும், இக்ரிமா மற்றும் முஜாஹித்(ரஹ்) ஆகியோரும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர் களான அண்டை வீட்டாரையும் குறிக்கும் என்பதாக நவ்ஃபல் அல்பிகாலீ(ரஹ்) அவர் களும் பொருள் கூறியுள்ளார்கள்.
(தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்: 2:515-523)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார் கள்: அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வப்போது) அறிவு றுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற் கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கிவிடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என இப்னு உமர்(ரழி), ஆயிஷா(ரழி) ஆகியோர் அறிவித்துள்ளனர். (புகாரி: 6014,6015, முஸ்லிம், திர்மிதி, அபூதா வூத், இப்னு மாஜா, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்: 2:515-523)
அண்டை வீட்டார் என்பது முஸ்லிம், முஸ்லிமல்லாதவர், நல்லவர், கெட்டவர், நண்பர், பகைவர், உள்ளூர்காரர், வெளியூர் காரர், உறவினர், அந்நியர் ஆகிய எல்லா வகையினரையும் குறிக்கும் அண்டை வீட்டார் மூன்று வகைப்படுவர்.
1. ஒரேயயாரு உரிமையுள்ள அண்டை வீட்டார்=முஸ்லிமல்லாத அண்டை வீட்டார் தாம் அவர். அவருக்கு அண்டை வீட்டு உரிமை மாத்திரமே உள்ளது.
2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டை வீட்டார் = முஸ்லிமாகவுள்ள அண்டை வீட்டாரான இவருக்கு அண்டை வீட்டு உரிமையும், இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு.
3. மூன்று உரிமைகளைப் பெற்ற அண்டை வீட்டார் = முஸ்லிமாகவும், உறவினராக வும் உள்ள இவருக்கு, அண்டை வீட்டு உரிமை, இஸ்லாமிய மார்க்க உரிமை, உறவுக்காரர் என்ற உரிமை ஆகிய மூன்று உரிமைகளும் உள்ளன. (தப்ரானீ)
அவரவர் சக்திக்கேற்ப அண்டை வீட்டா ருக்கு நன்மைகள் புரிந்திட வேண்டும் அன்பளிப்பு வழங்குதல், ஸலாம் கூறுதல், சந்திக்கும்போது முகம் மலர்தல், இன்ப துன்பங்களில் பங்கெடுத்தல் வேண்டிய உதவிகளைச் செய்தல் (குறைந்தபட்சம்) தொல்லை தராமல் இருத்தல் உள்ளிட்ட நன்மைகளைச் செய்திட வேண்டும். முஸ்லி மல்லாதவராக இருந்தால் அவரிடம் இஸ் லாம் பற்றி எடுத்துரைப்பது அதன் அற போதனைகளை விளக்கிக் கூறிட வேண் டும். தீயவராக இருந்தால் அவருடைய குற்றங்குறைகளைப் பலரிடமும் சொல்லிக் கொண்டிராமல் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவரைச் சீர்திருத்த முயலவேண் டும். (ஃபத்ஹுல் பாரீ)
அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. அந்நூர் அத்தியாயம் எத்தனை வசனங் களை கொண்டது.
64 வசனங்கள் அல்குர்ஆன் அத். 24
2. அந்நூர் அத்தியாயத்தில் நபி(ஸல்) அவர் களின் எந்த மனைவி சம்பந்தமாக வச னங்கள் உள்ளன?
ஆயிஷா(ரழி) அவர்கள்.
3. யாருடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர் கள் என்று அல்லாஹ் கூறுகிறான்?
ஷைத்தானின். அல்குர்ஆன் 24:21
4. இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப் பட்டவர்கள் யார் என்று அல்லாஹ் கூறுகிறான்?
இறைநம்பிக்கைகொண்டஒழுக்கமுள்ளபெண்கள்மீதுஅவதூறுகூறுபவர்களை.
அல்குர்ஆன் 24:23
5. இறை நம்பிக்கை கொண்டவர்களை எதனை பேணிக்கொள்ள அல்லாஹ் கூறுகிறான்?
பார்வைகளைதாழ்த்தியும், வெட்கத் தலங்களை பேணிக் கொள்ளவும். அ.கு.அத். 24:30,31
6. கற்புள்ள பெண்கள் மீது பழி சுமத்து பவர்கள் எத்தனை சாட்சிகள் கொண்டு நிருபிக்க அல்லாஹ் கூறுகிறான்?
நான்கு. அல்குர்ஆன் 24:4
7. வானங்கள் மற்றும் பூமியின் ஒளி யார் என அல்லாஹ் கூறுகிறான்?
அல்லாஹ். அல்குர்ஆன் 24:35
8. எவை அல்லாஹ்வை துதிக்கின்றன என அல்லாஹ் கூறுகிறான்?
வானங்களில்இருப்பவையும், பூமியில் இருப்பவையும். அல்குர்ஆன் 24:41
9. இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ் எதை தடை செய்துள்ளான்?
விபச்சாரம். அல்குர்ஆன் 17:32
10. ஆலங்கட்டி மழையை எங்கிருந்து இறக் குவதாக அல்லாஹ் கூறுகிறான்?
மேகமலைகளிலிருந்து. அல்குர்ஆன் 24:43
11. நபி(ஸல்) அவர்கள் தன்னை எப்படி அழைக்க வேண்டாம் என கூறினார்கள்?
அபுல் காஸிம் எனும் குறிப்பு பெயரை. புகாரி: 3114
12. எதற்காக பெண்கள் பூமியை தட்டி நடக்கவேண்டாம் என்று அல்லாஹ் கூறுகிறான்?
அலங்காரங்களை வெளிப்படுத்தாதிருக்க. அல்குர்ஆன் 24:31
13. வெற்றியாளர்கள் என அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?
அல்லாஹ்வுக்கும்அவனுடையதூதருக்கும்கீழ்ப்படிந்துஅல்லாஹ்விற்குஅஞ்சிநடப்பவர்களை வெற்றியாளர்கள் என்று கூறுகிறான். அல்குர்ஆன் 24:52
14. அவதூறு செய்திகளை கேட்டால் எதை சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
நீயேதூயவன், ஸுபஹானல்லாஹ் என்று கூறவேண்டும். அல்குர்ஆன் 24:16
15. தங்கள் மேலாடையை கழட்டி வைப்பதில் யார் மீது குற்றமில்லை என அல்லாஹ் கூறுகிறான்?
திருமண ஆசை இல்லாத மூதாட்டிகள். அல்குர்ஆன் 24:24
16. மனிதர்களுக்கு மறுமை நாளில் எதிராக எதெல்லாம் சாட்சி சொல்லும்?
அவர்களுடையநாவு, கைகள், கால்கள். 24:24
17. மக்காவில் உணவிலும், பானத்திலும் வளம் ஏற்பட யார் துஆ செய்தார்கள்?
இப்றாஹிம்(அலை). புகாரி: 3115
18. ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாதிருந்தால் முஹம்மத்(ஸல்) அவர்கள் யாராக இருந்திருப்பேன் என்று கூறினார்கள்?
அன்சாரிகளில் ஒருவனாக. புகாரி: 3779
19. மதீனாவாசிகள் இஹ்ராம் அணியும் இடம் எது என்று கூறினார்கள்?
துல் ஹுலைஃபா. புகாரி : 1522
20. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி என்ன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சொர்க்கம். புகாரி : 1773