கல்வி! கல்வி!! கல்வி!!!
இஞ்சினியர் பசீர் அஹமத்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!
ஒரு முக்கியமான நோக்கத்திற்காக உங் களுடன் சில வியங்களை பகிர்ந்து கொள் ளலாம் என நாடியதால் இந்த கட்டுரை.
உலகெங்கும் சுமார் 250 கோடி முஸ்லிம் கள் வாழ்வதாக ஒரு கணக்கு சொல்கிறார் கள். அதாவது உலகில் கால்வாசி பேர் முஸ்லிம்கள் இந்தியாவில் சுமார் 20 கோடி தமிழகத்தில் 1 கோடி முஸ்லிம்கள் இதுவும் அநேக சகோதரர்கள் அறிந்திருக்கக்கூடும்.
கடந்த 14 நூற்றாண்டுகளாக இஸ்லாம் அரேபியாவில் தோன்றி உலகெங்கும் பரவி இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகிறோம். இதற்கு சஹாபா பெருமக்கள் தொடங்கி எண்ணற்ற வீரர்கள், கல்விமான் கள், அழைப்புப்பணியாளர்கள் செய்த மகத்தான தியாகங்கள் காரணமாகின்றன.
வருங்காலம்? இனிமேலும் நம் சந்ததிகள் இஸ்லாத்தில் இருப்பது சாத்தியமா? இந்த கட்டுரையின் நோக்கமே அதை விவாதிப் பதுதான்!
கல்வியின் முக்கியத்துவம் :
ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு சமு தாயமோ உயர்வதும் தாழ்வதும் கல்வியால் மட்டுமே கல்விக்கு அதிபதி அல்லாஹ்தான் அவன்தான் முதல் மனிதனாகிய நம் தந்தை ஆதம்(அலை) அவர்களுக்கு எல்லாவற்றுக் கும் முதலாக கல்வியை கற்றுத்தந்தான். அவர் கல்வி கற்றதனால் வானவர்களை விட வும் உயர்ந்தவர் ஆனார். மனிதன் கற்றதன் பின் அதை மறப்பதும் அல்லது அதிலிருந்து சருகுவதும் அவனை தோல்வியுற செய்து தாழ்ந்தவனினும் தாழ்ந்தவனாக ஆக்கி விடும். இதுதான் நம் தந்தை ஆதம்(அலை) அவர்களுக்கும் ஷைத்தானுக்கு நடந்ததும் நமக்கு தெரியும். அவன் மனித சமுதாயத் திற்கு பகிரங்க விரோதியாக உள்ளான். அவன் மனிதனை வீழ்த்த தன் முக்கியமான ஆயுதமாக பயன்படுத்துவது கல்வியைத் தான். கல்வியை தடுப்பதன் மூலம் அவன் ஒரு பெறும் சமுதாயத்தை வழிகெடுப்பது டன் அதன் வழித்தோன்றல்களையும் நிரந்தரமாக வழிகெடுக்கிறான். கல்வியை இழந்த அந்தந்த சமுதாயங்கள் விடாப்பிடி யாக வழிகேட்டில் மூழ்கி திளைத்து தாம் நேர்வழியில் இருப்பதாக இறுமாப்புடன் திரிந்து கொண்டு இருக்கின்றனர். பின்பு ஆதிக்க சக்திகளுக்கு அடிமையாகி கேவல மான ஒரு வாழ்க்கைக்கு சொந்தக்காரர் ஆகிறார்கள். மறுமை வாழ்வும் நஷ்டமாகி றது. அவர்களுக்கு கல்வி அல்லது நேர்வழி நிரந்தரமாக மறுக்கப்பட்டதாக ஆகின்றது. இதுதான் உலகம் தோன்றியதிலிருந்து இது நாள்வரை சமுதாயங்களின் வாழ்வும் வீழ்ச் சியும் அடங்கிய சரித்திரம் முஸ்லிம்களின் குறிப்பாக இந்திய முஸ்லிம்களின் வீழ்ச்சி குர்ஆனை தம்மை விட்டு தூரமாக்கியத்தில் இருந்து தொடங்குகிறது. இன்று உள்ள பிர பலமான எந்த இறைநூல்களும் வலியுறுத் தாத வியங்களான கல்வி சிந்தனை, ஆராய்ச்சி போன்றவற்றை குர்ஆன் திரும்ப திரும்ப ஆணித்தரமாக வலியுறுத்துகிறது. உதாரணமாக:
குர்ஆனின் முதல் வாக்கியமே “படிப் பீராக!’ என்றுதான் தொடங்குகிறது.
எழுதுகோலின் மீது சத்தியமாக என்று ஒரு அத்தியாயம் பேசுகிறது.
மனிதன் சிந்திக்கமாட்டானா?
சிந்திப்பவனும் சிந்திக்காதவனும் சமமாக ஆவார்களா?
குருடனும் பார்வையுடையவனும் சமமாவாக ஆவார்களா?
இவர்கள் பார்வை இருந்தும் குருடர் கள், இதயம் இருந்தும் சிந்திக்காதவர்கள்.
இதுபோன்ற ஏராளமான வசனங்களை நாம் குர்ஆனில் மட்டுமே காணமுடியும். முஸ்லிம் சமுதாயம் குர்ஆனை பொருள் விளங்காமல் படித்தாலே போதும் என்று தூக்கி தூரமாக வைத்து விட்டார்கள். அது என்ன மையக்கருத்தை வலியுறுத்தி தன் வாதங்களை வைக்கிறது. அது மனித சமுதாயத்திடம் என்ன எதிர்பார்க்கிறது என்ற எந்த புரிதலும் இல்லாமல் முஸ் லிம்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த லட்சணத்தில் இதை மற்றவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பும் அல்லாஹ்வால் நமக்கு சுமத்தப்பட்டு உள் ளது. தீர்ப்பு நாள் என்ற ஒரு வியத்தை சுற் றித்தான் குர்ஆன் பல்வேறு வியங்களை விவரிக்கிறது. பிரபஞ்சம் முடிவுக்கு கொண்டு வரப்படும். மனிதர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். போலியான கற் பனை தெய்வங்கள் மறைந்து ஏக இறைவ னான அல்லாஹ் மட்டும்தான் தீர்ப்பு நாளின் அதிபதியாக இருப்பான், தீர்ப்பு வழங்கப்படும். இதை ஒவ்வொரு மனிதனும் சந்தேகமற நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குர்ஆன் திரும்ப திரும்ப ஆணித்தர மாக வலியுறுத்துகிறது.
ஈமானில் (இறை நம்பிக்கையில்) 70க்கும் அதிகமான கிளைகள் உள்ளன என்று சொல்லப்பட்டாலும் ஈமானின் ஆணிவேர் என்று கருதப்படும் வியம் இந்த தீர்ப்பு நாள் தான். மற்றவர்களை விட்டு விடு வோம் முஸ்லம்களாகிய நாம் இந்த தீர்ப்பு நாளை முன் வைத்து நம்முடைய உலக காரியங்களில் முடிவு எடுக்கிறோமா? அல் லது அப்படியயான்று இருப்பதாக நினைப் பில்லாமலே முடிவுகள் எடுக்கிறோமா? சஹாபாக்கள் (நபித் தோழர்கள்) பெற்ற வெற்றிகளின் ரகசியம். இந்த வியத்தில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள் என்பது தான் நாம் பெற்று வரும் தொடர் தோல்வி களின் ரகசியமும் இந்த ஈமான் அல்லது நம்பிக்கையில் நம்மிடம் உள்ள படுமோச மான கோளாறு தான். ஈமான் அல்லது நம்பிக்கைக்கும் குர்ஆனுக்கும் மிக நெருங் கிய தொடர்பு உள்ளது. ஒரு மனிதன் குர் ஆனை பொருள் அறிந்து படிக்கும்போது அது அவனுடைய சிந்தனையை தூண்டு கிறது. அதன் வசனங்களுக்கு உள்ளத்தை ஈர்க்கும் மந்திர சக்தி நிச்சயமாக இருக்கிறது. அது ஈமானில் பேட்டரி ரீசார்ஜ் செய்வது போன்ற செய்கையை செய்கிறது. ஆகையால்தான் நாம் குர்ஆனை தூரமாக்கி தொடர் தோல்விகளுக்கு ஆளாகி நிற்கி றோம் என குறிப்பிட்டேன். நமது இன் றைய உடனடியான தேவை குர்ஆனுடன் தொடர்புதான்.
சமுதாயங்களுக்கு கல்வியை அல்லது நேர்வழியை கற்றுக்கொடுக்க அல்லாஹ் நபி மார்களையும் அவர்களுக்கு வஹியின் மூலம் தன்னுடைய சொந்த வார்த்தைகளை கொண்ட இறை வசனங்களையும் தந்தான். இவைகள் தான் ஞானத்தின் அல்லது கல்வியில் அல்லது நேர்வழியின் ஊற்றுக் கண் ஷைத்தான் கல்வியை தடுப்பதன் மூலம் ஒரு பெரும் சமுதாயத்தை வழி கெடுக்கிறான் என பார்த்தோம். அதற்காக அவன் பயன்படுத்தும் அநேக தொழில் நுட்பங்களில் முக்கியமானது பிரிவினை களை ஏற்படுத்துவது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழி ஒன்றே ஒன்றுதான் என்று இருக்க இவன் பல வழிகள் என்றாக்கி விடுவான். பின்பு நேர்வழி என்பது மறைந்தே போகும்.
இந்தியாவிலும் ஷைத்தானின் வாரிசு களான ஆதிக்க சக்திகளும் மக்களுக்கு கல்வி போய் சேர்வதை எப்பாடுபட்டாவது தடுத்தே தீரவேண்டும் என கங்கணம் கட் டிக்கொண்டு வேலை செய்வதை பார்க் கிறோம். கல்வியை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களை தங்களின் நிரந்தர அடிமை களாக்கி பின் நிரந்தரமாக மண்ணில் சுகபோக வாழ்க்கை வாழலாம் என அவர் கள் திட்டமிடுகின்றனர்.
இன்று யூத சமுதாயத்தை பாருங்கள்! ஜனத் தொகையில் ஒரு மைக்ரோ மைனா ரிட்டி ஆக இருந்தும் அவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்தி பெற்றது எப்படி? அவர்களிடம் கல்வி உள்ளது. உலகில் உள்ள விஞ்ஞானிகளில் கணிசமானவர்கள் யூதர் கள் உலக பணக்காரர்களில் அநேகரும் இவர்களே. இன்று உலகில் எந்த அரசாங்க மும் இவர்களுக்கு எதிராக கைகள் என்ன விரலைக்கூட உயர்த்த முடியாது. ஆனால் இவர்கள் அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட வர்கள்: மறுமையில் நஷ்டத்திலும் நஷ்ட மடைந்தவர்கள் என்பது தனி வியம்.
இப்போது புரிகிறதா கல்வியின் முக்கியத்துவம் :
சரி… இப்போது நம் சமுதாயத்தின் கல்வி நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்! கடந்த 10 நூற்றாண்டுகளாக முஸ்லிம் ஆட்சியாளர்கள் பலர் மக்களின் கல்வியைப் பற்றி குறிப்பாக முஸ்லிம்களின் கல்வியைப் பற்றி கவனமின்றி இருந்தாலும் பல கல்வி மான்கள் ஷா ஒலியுல்லாஹ், அபுல் கலாம் ஆசாத், சர். செயித் அஹமத் கான் போன் றோர் தங்கள் வாழ்நாளை முஸ்லிம் சமூகத் தின் கல்விக்காகவே அற்பணித்துள்ளார்கள்.
அரசியல் கொந்தளிப்புக்கள், ஆங்கிலேய கொடுங்கோன்மை ஆட்சி மற்றும் பொரு ளாதார இழப்புக்கள் இவைகளுக்கு மத்தியி லும் இந்திய முஸ்லிம் சமுதாயம் உயிர் துடிப்புடனேயே இயங்கி வந்தது. தேவ்பந்த், சாஹரன்பூர், வேலூர் போன்ற நகரங்களில் மதரசாக்கள் இயங்கின; உஸ் மானியா பல்கலைக்கழகம், ஜாமியா இஸ்லாமியா (டெல்லி), அலிகர் பல்கலைக் கழகம் இன்னும் நியூ காலேஜ்(சென்னை), ஜமால் முஹமது கல்லூரி(திருச்சி) போன்ற சில கல்லூரிகளும் தொடங்கப்பட்டன.
ஆனாலும் ஆங்கில இந்தியாவிலும், சுதந் திர இந்தியாவிலும் முஸ்லிம்கள் மார்க்க கல்வியிலும் உலக கல்வியிலும் பெறும் பின்னடைவை சந்தித்தார்கள். 2006ம் ஆண்டுவாக்கில் அப்போதைய மத்திய அரசு ராஜேந்திர சச்சார் என்ற ஒரு நீதியரசரை முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக நிலை மையை ஆராய்ந்து ஒரு அறிக்கை தர ஏற்பாடு செய்தது. அதன் அறிக்கை இந்திய முஸ்லிம்களின் நிலையை துல்லியமாக வெளிச்சம் போட்டு காட்டியது. அவர்களு டைய இன்றைய நிலை, கல்வியிலும், வாழ்க்கை தரத்திலும் பட்டியல் இன, பழங் குடி இன சமுதாயங்களை விடவும் மிக தாழ்ந்த நிலையில் உள்ளதாக புள்ளி விவரங் களுடன் வெளிவந்தது. வெளிவந்து என்ன பயன்? கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டு வரும் மதவாத, பேரினவாத, பாசிச அரசு அதை நடைமுறை படுத்தவா போகிறது? முஸ்லிம்களின் இன்றைய நிலை மோசத்தி லும் மோசமாக போய்விட்டது. தலைப்பு வேறாக இருப்பதால் இதற்குள் ஆழமாக செல்லாமல் நாம் விவாதிக்கும் தலைப்புக்கு வருவோம்.
1990க்கு பிறகு ஒன்றிய அரசின் தாராள பொருளாதாரக் கொள்கை காரணமாக ஆங்கில கல்வி பள்ளிகள் புற்றீசல்கள் போல நாடெங்கும் பரவின. காலம் கடந்தது என் றாலும் கல்வியின் முக்கியத்துவம் சிறிதள வாவது முஸ்லிம்களுக்கு புரிய ஆரம்பித்தது. ஆனாலும் என்ன பயன்? தனியார் பள்ளி களின் கட்டண கொள்ளைக்கு ஆளாகி கடனும், வறுமை நிலையுமே மிச்சம் இந்தப் பள்ளிகளுக்கு தினமும் 10 மணி நேரம் பிள்ளைகள் செலவிடுகிறார்கள். இதன் காரணமாக முன்பு பெயரளவிலாவது இயங்கி வந்த காலை மாலை மக்தப் மதர சாக்கள் பிள்ளைகளின்றி மூடும் நிலை! தமிழகத்தில் இயங்கி வந்த ஆலிம் 7ஆண்டு பட்டப்படிப்பு மதரசாக்கள் உணவு, உறை விடம் இலவசம் என்ற நிலையில் கூட 70 அல்லது 90 சதவீத மதரசாக்கள் மூடியாகி விட்டது. இந்த மதரஸாக்களால் சமுதாயத் திற்கு என்ன பயன் ஏற்பட்டது? என்பதும் சரியான கேள்விதான்! ஆனாலும் அதற்குள் ளும் நாம் சென்று அலசப் போவது இல்லை நம் தலைப்புக்கே மீண்டு வருவோம்.
முஸ்லிம் குழந்தைகளின் இன்றைய நிலை:
இன்று நம் குழந்தைகளின் நிலை மிக பயங்கரமாக உள்ளது. லட்சோபலட்சம் குழந்தைகள் நம் வாரிசுகளாக நம் வீடுகளி லேயே வளர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் உணவு, தங்குமிடம், உடை, கல்வி போன்றவற்றிற்காக பெற்றோர்கள் பெறும் தியாகங்களுக்கும், கஷ்டங்களுக் கும் மத்தியில் செலவை ஈடுகட்ட பெறும் பாடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் வீடு களில் பெரும்பாலும் தீனுடைய சூழ்நிலை யில்லை. வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஐங்கால தொழுகை, குர்ஆன் திலாவத் போன்றவைகளை பிள்ளைகளிடமும் காணமுடிவதில்லை. மேலும் இருக்கவே இருக்கிறது. டி.வி.யும், மொபைல் போன் களும் வீட்டில் தான் இப்படி பள்ளியில்? படிக்கும் பாடங்கள், ஆசிரியர்கள், நண்பர் கள் என தீனுக்கு சம்பந்தமே இல்லாத சூழ்நிலை! இந்த நிலையிலேயே ஒரு பையனோ, பெண்ணோ ஸிலுறூஇல் இருந்து படித்து, வளர்ந்து வாலிப வயதை அடையும் போது அவர்களிடம் தீனுடைய வாடையே இல்லாமல் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக வந்து சேர்கிறார்கள். சுருக்கமாக சொல்வதா னால் நாம் கஷ்டப்பட்டு உழைத்து நம் வீடுகளிலேயே இஸ்லாமிய கல்வி அறிவு அற்றவர்களை உருவாக்குகிறோம். இந்தப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு எதிர் திசையில் நம் பயணம் இருக்க வேண்டும்.
இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன?
நம்முடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் நாம் இஸ்லாத்தின் அடிப்படைகளையும் குர்ஆனையும் அவர்களின் பள்ளி வகுப்பி லேயே கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குர்ஆனையும், நபிகளாரின் (ஸல்) போதனைகளையும் நம் குழந்தை செல்வங்களுக்கு வகுப்பறையிலேயே அறி முகம் செய்திடல் வேண்டும். அவர்களுக்கு அரபி மொழியில் ஓரளாவாவது சரளமாக வாசிக்கவும் அதன் பொருளை உணர்ந்து கொள்ளவும் பயிற்சி அளிக்க வேண்டும். அதேசமயம் தாய்மொழி, ஆங்கிலம், கணி தம், விஞ்ஞானம், சரித்திரம் போன்ற பாடங்களிலும் அவர்கள் தேர்ச்சி பெற்றாக வேண்டும். தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையையும் தடுத்தாக வேண்டும். முஸ்லிம்கள் கணிசமான ஜனத் தொகையில் வாழும் ஊர்களை பட்டியலிட்டு அவைக ளில் ஒவ்வொன்றிலும் குறைந்தது இரண்டு பள்ளிகள் இந்த முறையிலான பள்ளிகளாக உருவாக்க வேண்டும்.
ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளை இலக்காக வைத்து வாரம் மூன்று வகுப்புகளே போதுமானது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உல கக் கல்வியுடன் அடிப்படை மார்க்கக் கல்வி யும் நம் பிள்ளைகளுக்கு கிடைத்துவிடும். நம் இலக்கும் அதுதான். அதற்காக நம்மு டைய அனைத்து செல்வங்களையும், சேமிப் புகளையும் கூட செலவிடுவதில் தப்பொன் றும் இல்லை. நம்முடைய வக்ஃபு இடங்க ளும், பள்ளிவாசல்களுக்கு சொந்தமான காலியிடங்களும் இன்றும் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். பல கோடிகள் ஜகாத் / நன்கொடை செலுத்த கடமையான பணக்காரர்களும் சில பேர் இன்றும் நம் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். சில தனிப்பட்ட கல்வியாளர்கள் ஆங்காங்கே பள்ளிகள் வைத்து நடத்தி வருகிறார்கள். முஸ்லிம் மைனாரிட்டி பள்ளிகளும் உள்ளன. இவர்கள் அனைவரையும் இந்த உன்னத பணியில் இணைக்கலாம்.
ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் தொடங்குவது ஒன்றும் இலகுவான காரியம் இல்லைதான். ஆனாலும் நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்து கூட்டு முயற்சி செய்தால் முடியாதது அல்ல. அல்லாஹ்வின் உதவியை நாடி துஆ செய்வதுடன் முயற்சியில் உடனடியாக இறங்குவோம். அல்லாஹ் போதுமானவன்.