சுய ஒழுக்கம் தான் அவசியம் தேவை!

in 2024 நவம்பர்

சுய ஒழுக்கம் தான் அவசியம் தேவை!

R. அமீருன்னிஷா, திருச்சி

இன்று ஒரு மனிதன் தான் தனித்தோ, ஒரு குடும்பமாகவோ, சமூகமாகவோ, ஒரு நாடாகவோ வாழ்கின்ற சூழ்நிலையில் சந்தித்து வரும் கஷ்டங்களுக்கும், தோல்வி களுக்கும், சவால்களுக்கும் முக்கிய கார ணம் ஒழுக்கமின்மையே. புற்றுநோய் போல் பல இடங்களில் ஒழுக்க கேடு பரவி இருக்கிறது இவற்றை நாம் கண்டும் காணா மலும் இருந்தால் அழிவை தரும் சந்ததி களை நம் கண் முன்னே  பார்க்க நேரிடும்.

மக்கள் தங்கள் மனித நேயத்தை கைவிட்டதால் சமூகத்தில் ஒழுக்கம் சீர்கெட்டு போய்விட்டது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் ஒழுக்க வி­யத்தில் பலகீனமாக இருப்பது அவனது குடும்பம், சமூகம், நாடு என அனைத்தையும் தாண்டி ஒட்டுமொத்த மனித இனத்தையும் பாதிக்கிறது.

நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்ததாலோ என்னவோ நம்மில் பலருக்கும் எது சுதந்தி ரம் என்றே தெரிவதில்லை, ஒழுக்க வி­யங் களில் முறைகேடாக நடப்பதும், விதிமீறல் செய்வதும், சதி செய்து பிழைப்பதுமே சுதந் திரம் என்று பலரும் நினைத்துக் கொண்டி ருக்கின்றனர். கட்டுப்பாடற்ற சுதந்திரமே அழிவைத் தரும் என்று மனிதர்களில் பலரும்  சிந்தித்து  பார்ப்பதில்லை.

நல்லவர்களால் வளர்க்கப்பட்ட இந்த உலகம் சக மனிதனை நரபலி கொடுக்கும் நன்றி கெட்ட மனிதர்களின் தாலாட்டில் வளர்ந்து  வருகிறது.

செல்வமோ, திறமையோ, ஆளுமையோ, அதிகாரமோ, வீரமோ, புகழோ நமக்கு குறிப்பிட்ட காலம் தான் பயனளிக்கும். ஒழுக்கம்தான் நிலையானது. ஒழுக்கம் தான் உலகை சுழல வைக்கிறது. ஒழுக்கம் வேறு வாழ்க்கை வேறு என்று பிரிந்து பார்க்க முடி யாது. ஒழுக்கம் என்பது ஒரு தசை போன் றது நீங்கள் அதை எவ்வளவு அதிகமாக உடற்பயிற்சி செய்கிறீர்களோ அவ்வளவு வலிமை பெறுகிறது. இதனால் மட்டுமே சுய கட்டுப்பாட்டை நாம் வளர்த்துக் கொள்ளமுடியும்.

அறம் சார்ந்த வி­யங்கள் பற்றி அறி யாமல் சமூகத்தின் தீமைகளை அறவே களைய முடியாது

இருட்டை வைத்துக்கொண்டு ஓட் டையை அடைக்க முடியாதுஎன்று நாம் சொல்வதுண்டு. அதே போன்று ஒரு தீமைக்கு இன்னொரு தீமை தீர்வாகாது! ஒரு வெளிச்சம் தேவை. அந்த வெளிச்சம் ஒவ்வொரு மனிதனின் சுய ஒழுக்கம்தான்.

எனவே ஒழுக்கத்தை வளர்த்துக் கொள் ளவும், நமது மன ஆரோக்கியத்தை வளர்த் துக் கொள்ளவும். நாம் சிறந்த செயல்கள் செய்வதிலிருந்து நம்மை தடுக்கும் கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடவும் ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை நாம் மேற் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக் கின்றோம்.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின் றானோ அப்படி எல்லோரிடமும் தான் நடந்து கொள்வதே  ஒழுக்கமாகும்.

ஒவ்வொரு மனிதரிடமும் காணப்பட வேண்டிய மிக முக்கிய பண்பு சுய ஒழுக்கம், இந்த வார்த்தைக்கு பல வரையறைகள் உள்ளன. ஆனால் ஒன்று நிச்சயம் சுய ஒழுக் கம் நம் மன உறுதியுடன் இணைக்கப்பட் டுள்ளது.

நமது வெற்றியின் நிலை நாம் எவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது. வேறு வார்த்தைகளில் கூறுவ தானால் வெற்றிக்கு சுய ஒழுக்கம் மிக மிக அவசியம். நமது இலக்குகளை பிடிவாத மாக தொடர ஒழுக்கம் என்பது அவசிய தேவை.

நம்மில் சிலர், பலரை விட சிறப்பாக நடப்பதற்கு அவரது ஒழுக்கமே காரணம். இறை நம்பிக்கை, பிறருக்கு உதவும் குணம், நேர்மறை சிந்தனை, இவ்வுலகினை பாது காக்க நாம் எடுக்கும் நடவடிக்கை, பிறர் நலனில் அக்கறை கொள்ளுதல், மற்றவர் கண்ணியம் காத்தல், பொறுப்பை உணர்ந்து நடத்தல், கற்று தெளிவு பெறுதல், தவறை திருத்திக் கொள்ளும் உன்னத பண்பு, நேர மேலாண்மை, போதுமென்ற மனம், சொல் செயல் நடவடிக்கையால் மற்றவருக்கு தீமை தராமல் தவிர்த்தல், உயர்ந்த இலக்கு மரணத்தை குறித்த அச்சம், புண்ணியம் செய்யும் சிந்தனை, இலக்கை அடைய செய்யும் தொடரும் முயற்சி, நாணயம், பரிவு, சுயகட்டுப்பாடு, உடனடி இன்பங் களை துறக்கும் திறன். ஆரோக்கியமான சூழல், தீய பழக்கங்களில் இருந்து விடுபடுதல், சுய மதிப்பீடு போன்ற பண்பு களை நம்மில் கொண்டு வரும்பொழுது தான் நாம் ஒழுக்கமிக்கவர்களாக இருப் போம். இத்தகைய உணர்வுகள் யாராலும் நம்முள் ஏற்படுத்த முடியாது. மனிதன் தனக் குத்தானே வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள்  தான்  இவை.

எவ்வளவு சோதனைகள், குழப்பங்கள், தோல்விகள் இருந்தபோதிலும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும், இலக்கை அடைவதற்கும் சுய ஒழுக்கம் மிக மிக அவசி யம். நம்முடைய சில பண்புகளும் சில பழக்கங்களும் நம்மை உருவாக்கவும் செய்யும் அல்லது அழிக்கவும் செய்யும். நம் மிடையே உள்ள நல்ல பண்புகளும், பழக் கங்களும் தான் வெற்றியை திறக்கும் கதவை அடையவும்  வழிநடத்துகிறது.

நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தினை மீறி செயல்படுவது தான் ஒழுக்கம் என மனிதர்களில் பெரும்பாலானோர் நினைக் கின்றார்கள். நாம் நம்மை படைத்த இறை வனுக்கு கட்டுப்பட்டு அவன் விதித்த எல் லைகளுக்குள் வாழ்ந்து வெற்றி பெறுவதே சுதந்திரம்.

சுதந்திரத்தை நமக்கு கிடைத்த கூடுதல் வாய்ப்பாக பலரும் தவறாக நினைப்பதால் தான் எல்லை கடந்த விபரீதங்களை நாம் சந்திக்க நேரிடுகிறது. அத்து மீறும் ஒழுக்கத் தினால் சுதந்திரம் பறிபோவது தான் உறுதி.

நமது பழக்கவழக்கத்தாலும் பண்பாடு களினாலும் பண்பு நலன்களினாலும் ஒரு எல்லையை வகுத்து வாழ்வது தான்ஒழுக்கமே சுதந்திரம்  என்பதன்  பொருள்.

கட்டுப்பாடற்ற சுதந்திரம் நம்மை ஒழுக்க சீர்கேட்டில் வீழ்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நமது வாழ்க்கை யில் ஆடம்பரம் அதிகரிக்க அதிகரிக்க ஒழுக் கம் மறைய தொடங்குகிறது. ஆகவே ஆடம் பரம் என்பது எப்போதும் ஆபத்து தான். எளிமையான வாழ்க்கையை உண்மையான வாழ்க்கையாகும்.

அனைத்திலும் உயரத்தில் இருக்க ஆசைப்படுகின்ற மனிதன் ஒழுக்க வி­யத் தில் உயரே செல்ல மறுக்கின்றான் என்பதே நிதர்சனமான உண்மை. சமூகம் மாற நம்மில் மாற்றம் வரவேண்டும். மனிதன் உயிர் வாழ நீர், காற்று, உணவு எப்படி அத்தியாவசியமோ அதேபோல ஒழுக்கமும் மிக மிக அவசியம். மாற்றத்தில் எதிர்நோக்கி யிருக்கும் உங்கள் வீட்டுப் பெண்களில் ஒருத்தி.

Previous post:

Next post: