நீங்கள் நல்லவரா?

in 2024 நவம்பர்

நீங்கள் நல்லவரா?

அய்யம்பேட்டை A. நஜ்முதீன்

பொதுவாக மக்களில் பெரும்பா லோர் நல்லவராக நடிக்கின்றார்கள். ஆனால் நல்லவராக வாழ்வதில்லை. அதனால்தான் எங்கு பார்த்தாலும் (ளீ.ளீ.வீ.V.) கண்காணிப்பு கேமிரா, பொருத்தப்பட்டுள்ளது. (ளீ.ளீ.வீ.V.) கேமிராவிற்கு பயப்படுகின்ற அளவிற்கு இறைவனுக்கு  பயப்படுவதில்லை.

ஒருவரைநல்லவர்எனதீர்மானிப்பதற்குமக்கள்வைத்துள்ளஅளவுகோல்:

1. அவர் மிகப்பெரிய ஆன்மிகவாதி,

2. அவர் நெருங்கிய உறவினர்,

3. அவர் பெரும் செல்வந்தர்,

4. அவர் பெரிய தொழில் அதிபர்,

5. அவர் ஆளும் கட்சிக்கு நெருக்க மானவர்,

6. அவர் நீண்டகால நெருங்கிய நண்பர்,

7. அவர் தொழில் பார்ட்னர் (பங்குதாரர்)

8. அவர் கைராசியான மருத்துவர்

9. அவர் பெரிய நீதிபதி

இன்னும் ஏராளம், ஏராளம்

ஒருவரை நம்புவதற்கு இதுவெல்லாம் அளவுகோலா? என்றால் இல்லை, அவ்வாறு என்றால் அவர் நடிக்கின்றாரா? நல்லவராக இருக்கின்றாரா? என்று தெரிந்துக் கொள்வது  எப்படி?

ஒருவரை நல்லவர் என்று நம்புவதற்கு மூலக் காரணம் அளவு கடந்த நம்பிக்கையே ஆகும். இத்தகைய நம்பிக்கையை மனதில் தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதை வெளிப்படுத்தக் கூடாது. ஏன் என்றால் மக்களில் பெரும் பாலோர் ஏமாறுவதும் / ஏமாற்றப்படு வதும் அளவு கடந்த நம்பிக்கையினாலே,

உதாரணமாக:

பிள்ளைகளிடம் தாய்/தந்தை பாசமாக இருப்பார்/ இருக்கவேண்டும். ஆனால் அந்த பாசத்தை முழுமையாக பிள்ளைகளிடம் வெளிக்காட்டக்கூடாது. ஏன் என்றால் பிள்ளைகள் செய்த ஏதேனும் ஒரு தவறுக்காக தந்தையாகிய நீங்கள் கண்டிக்க மாட்டீர்கள் என்ற எண்ணம் அந்த பிள்ளைகளுக்கு வந்துவிடகூடாது.

தவறு செய்தால் தந்தையோ/ தாயோ நம்மை கண்டிப்பார்கள் என்ற எண்ணம் அந்த பிள்ளைகளிடம் எப்பொழுதும் இருக்கவேண்டும். அது போலதான் ஒருவர் மீது வைத்துள்ள நல்ல எண்ணம்/ நம்பிக்கை சரியாக இருந்தாலும் அதை முழுமையாக  வெளிப்படுத்தக்கூடாது.

எனவேதான் கடனோ, ஒப்பந்தமோ செய்து கொண்டால் எழுதிக் கொள்ளுங்கள் என்று இறைநூலில் (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளது.

இறை நூலிலேயே (குர்ஆனிலேயே) மிகப்பெரிய வசனம் கடனைப் பற்றி தான்.

நம்பிக்கை  கொண்டோரே! ஒரு குறிப்பிட்ட தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக் கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும்; இன்னும், யார் மீது (திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத் தின்) வாசகத்தைச் சொல்லட்டும். அவன் தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். மேலும் அ(வன் வாங்கிய)தில் எதையும், குறைத்துவிடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது பலவீனமாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய பொறுப்பாளர் நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக்கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங் கள்;ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர் களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால், அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும் (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல், வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் காலவரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இருக்காதீர்கள்; இதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதமானதாகும். சாட்சியத்திற்கு உறுதியுண்டாக்குவதற்காகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும், உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாராகமாக இருந்தால் தவிர அதை எழுதிக்கொள்ளாமல் இருப்பது உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், (அவ்வாறு) நீங்கள் வியாபாரம் செய்யும் போதும் சாட்சிகளை வைத்துக்கொள்ளுங்கள். அன்றியும் எழுதுபவனுக்கும், சாட்சிக்கும் (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) எவ்வித இடையூறும் அளிக்கப்படக்கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள்மீது நிச்சயமாக பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்தான் உங்களுக்கு (நேரிய இவ்விதி முறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர, அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.  (அல்குர்ஆன் 2:282)

அதுபோல வாழ்க்கை ஒப்பந்தமாக (திருமணமாக) இருந்தாலும், தொழில் பங்குதாரராக  இருந்தாலும், கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல தவறான செயல்களுக்கு கூட சாட்சி இல்லாமல் தண்டனை வழங்கிவிட கூடாது என்பதையும் இஸ்லாம்  வலியுறுத்துகிறது.

மேலும் பெரும்பாலும் மக்களிடையே மற்றொரு  நம்பிக்கையும்  நிலவுகிறது. 

அது என்னவென்றால் ஆண்கள் தவறு செய்து விட்டு அல்லது பெண்ணை ஏமாற்றி விட்டு செய்யவில்லை என்று சொல்லுவார்கள் என்பதாக (இது ஓரளவு உண்மையும் கூட) ஆனால் பெண் அவதூறு சுமத்துவாள் என்பதும்  உண்மையான  ஒன்றாகும்.

உதாரணமாக: நபி யூசுப்(அலை) அவர்கள்  வரலாறு :  (பார்க்க : அத்தியாயம் 12)

எனவே ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எந்தவொரு மனிதரையும் முழுமையாக நம்ப மார்க்கத்தில் அனுமதியில்லை. அல்லாஹ்வின் தூதரை தவிர, ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்று தீர் மாணிக்கப்படுவது மறுமையில் மட்டுமே. அதுவரை அவர் நல்லவராக இருக்கலாம் என நம்பிக்கை மட்டுமே இருந்தால் போதும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக  பதிவான ஹதீத். 

உன் நண்பனையும் ஓர் அளவோடு நேசி, ஒரு நாள் அவனும் உன் பகைவனாகலாம்.

உன் பகைவனையும் ஓர் அளவோடு பகைமை கொள். ஏனெனில் அவனும் ஒரு நாள் உன்  நண்பனாகலாம்.  நூல்: திர்மிதி : 1989

Previous post:

Next post: