பல்சமயச் சிந்தனை!
ஆசிரியர் குழு
அக்டோபர் தொடர்ச்சி…
கள்ள நோட்டு செல்லாத நோட்டு :
100 ரூபாய் நோட்டைப் போலவே, எவ் வித வேறுபாடும் இல்லாமல், ஒருவன் ஒரு 100 ரூபாய் நோட்டைத் தயார் செய்தால் அதை நாம் சரி காண மாட்டோம். அதைக் கள்ள நோட்டு என்றே சொல்லித் தயார் செய்தவனை அரசாங்கம் தண்டிக்கும். அது நல்ல நோட்டைப் போல்தானே இருக்கிறது என்று எவரும் வாதிடமுடியாது.
அளவைகளுக்கு வியாபாரிகள் முத்திரை இட்டுக் கொள்ள வேண்டும். இது அரசாங்க ஆணை; காரணம் வியாபாரிகள் மக்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதே ஆகும்.; ஒரு வியாபாரி, நான் எடைகளைச் சரியாக வைத்திருக்கிறேன். யாரும் பரிசோதித்துக் கொள்ளலாம்; நான் முத்திரையிட்டுக் கொள்ளமாட்டேன் என்றால், அரசு ஏற்குமா? நோக்கம் நிçறுவேறினாலும், அரசின் ஒப் புதல் இல்லை என்பதால் தண்டிக்கப்படு வான். நாம் அமைத்த அரசுக்கே இந்த அளவு அடங்கி நடக்கவேண்டும் என்றால், இறை வனுக்கும் இறை ஆட்சிக்கும், எந்த அளவு அஞ்சிக் கட்டுப்பட்டு நடப்பது நம் கடமை என்பதை, நீங்களே யூகித்துக் கொள்ள லாம். ஆக இறை சம்மதம் இல்லாத எந்தச் செயலும், அது நல்லதாக இருந்தாலும், அது மார்க்கமாக முடியாது; அதுவே மதமாகும்.
கள்ள நோட்டைப் போல் செல்லாத நோட்டைப் பற்றியும் சிறிது சிந்தியுங்கள். ஒரு காலத்தில் அரசால் வெளியிடப்பட்டது தான். அன்றைய மக்கள் அதைக் கொண்டு தாம் விரும்பும் பொருள்களை வாங்கவே செய்தார்கள். ஆனால் அது, எந்த நாளில் அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட் டதோ, அன்றிலிருந்து அதற்கும் கள்ள நோட்டிற்குரிய கதியே ஏற்பட்டு விடுகின் றது. அரசால் அது வெளியிடப் பட்டது தானே? புதிய நோட்டிற்கும் அதற்கும் எல்லா வகையிலும் ஒற்றுமைகள் இருக்கின் றனவே என்று யாரும் வாதிடமுடியாது.
இன்று மக்களுக்கு மத்தியில் இருக்கும் மதங்கள் அனைத்தும் கள்ள நோட்டு, செல்லாத நோட்டு, செல்லாத நோட்டிலும், நல்ல நோட்டிலும் மனிதன் தன் விருப்பத் திற்குக் கண்டபடி கிறுக்கி வைத்துள்ள நோட்டுக்கள் போன்றே காணப்படுகின் றன. இறைவனால் இறுதியாகக் கொடுக்கப் பட்ட மார்க்கம் மட்டுமே அரசால் வெளி யிடப்பட்டு மனிதனால் கிறுக்கப்படாது, புழக்கத்தில் இருக்கும் நோட்டைப் போன்றதாகும்.
ஆதி மனிதர் ஆதம்(அலை) முதல் முஹம்மது(ஸல்) வரை ஒரே மார்க்கம் !
ஆதி பிதா ஆதம்(அலை) முதல் மோஸஸ் (அலை), தாவீது(அலை), ஜீஸஸ்(அலை), முஹம்மது(ஸல்) வரை பல்லாயிரம் இறைத் தூதர்களும் மக்களுக்குப் போதித்தது. ஒரே மார்க்கத்தையே ஆகும். ஆதம் (அலை) குழந்தைப் பிராய மார்க்கத்தையும், ஆப்ர ஹாம்(அலை) சிறு பிராய மார்க்கத்தையும் மோஸஸ் (அலை) வாலிபப் பருவ மார்க்கத் தையும் ஜீஸஸ்(அலை) பூரணத்தை நெருங் கிக் கொண்டிருந்த மார்க்கத்தையும், இறுதி யாக முஹம்மது(ஸல்) சம்பூரணமாக நிறைவு பெற்ற மார்க்கத்தையும் போதித் தார்கள் என்று நாம் விளங்கிக் கொள்வதற் காகச் சொல்லிக் கொள்ளலாம். முதல் தூதர் ஆதம்(அலை) அவர்களுக்கே நிறைவைப் பெற்ற மார்க்கத்தைக் கொடுத்து, அடுத்து வந்த அனைத்துத் தூதர்களும் அதையே போதித்திருந்தால் இத்தனை மதங்கள் தோன்றியிருக்காதே என்று வினவலாம். பிறந்த குழந்தைக்குப் பால் மட்டும் தேவைப்படுகின்றது. வளர வளரத்தானே தேவைகளும் அதிகரிக்கின்றன. வயதில் வளர்ச்சி நிறைந்தவுடன், தேவைகளும் நிறைவாகி, வாழும் வரை அதுவே நிலைத்திருப்பதைப் பார்க்கிறோம்.
சகோதரியை மணமுடிக்கக் கூடாது என்ற சட்டம் ஆதம்(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அது சாத்தியப் பட்டிருக்குமா? சகோதரியை மணமுடிக்க லாம் என்று ஆதம்(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டம், சகோதரியை அல்ல, சகோதரி மகளை மணமுடிக்கலாம் என்று அடுத்த இறைத் தூதருக்குக் கொடுக் கப்பட்ட சட்டம் மூலம் மாற்றப்பட்டுள் ளது. இப்பழக்கத்தை இன்றும் நாம் இந்துச் சகோதரர்களிடம் பார்க்கிறோம். இவ்வாறு மனித வளர்ச்சிக்கு ஏற்ப சட்டங்கள் மாற் றப்பட்டுத் தன் இறதித் தூதர் மூலம் மார்க் கத்தை இறைவன் நிறைவு செய்திருக் கிறான்.
இதை, இறைவனது இறுதி நெறிநூலில் காணப்படும். “இன்றைய தினம் மார்க்கத் தைச் சம்பூரணமாக்கி, எனது அருட் கொடைகளை நிறைவு செய்து, இஸ் லாத்தை மார்க்கமாகச் சம்மதம் கொண் டேன்‘; “இறைவனிடம் ஒப்புதல் பெற்ற மார்க்கம் இஸ்லாம்தானே!’ “இஸ்லாம் அல் லாததை ஒருவன் கொண்டு வந்தால், அது அவனிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; மறுமையில் அவன்‘ நஷ்ட மடைவான்‘ (தனக்கு) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக் குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எவ் விதப் பலகீனத்தைக் கொண்டு எந்த உதவி யாளனின் (தேவை) இல்லாமலும் இருக்கி றானே அந்த இறைவனுக்கே புகழ் அனைத் தும் என்று நீர் கூறுவீராக இன்னும் (அவனை பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப்படுத்துவீராக. (17:111) போன்ற இறைவசனங்கள் உண்மைப் படுத்துகின்றன. முன்னைய எந்த நெறிநூலி லும் இப்படிப்பட்ட இறைவசனங்கள் இல்லை. மாறாக “மார்க்கத்தை நிறைவு செய்யப் பின்னர் ஒரு தூதர் வருவார்‘ என்ற முன் அறிவிப்பே காணக் கிடைக்கின்றன. “இன்றைய தினம் மார்க்கத்தை.. என்ற இறைவசனம் இறக்கப்பட்ட வுடன் யூதத் தலைவர்களில் முக்கியமான ஒருவர், இறுதித் தூதரின் தோழர்களிடம், “இந்த வசனம், எங்களது தூதர் மோஸஸ் (அலை) அவர்களுக்கு இறக்கப்பட்டிருந் தால், அந்த நாளைப் பெருநாளாகக் கொண்டாடி வருவோம்‘ என்று சொன் னது, இங்கு நாம் நன்கு சிந்தித்து விளங்கிக் கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும்.
முன்னைய இறைத் தூதர்கள் ஒரு குறிப் பிட்ட நாட்டு மக்களுக்கு என்றும், இன மக்களுக்கு என்றும், குடும்ப மக்களுக்கு என்றும் அனுப்பப்பட்டுள்ளார்கள். ஆனால் இறுதித் தூதரோ அனைத்துலக மக்களுக் கும், வழிகாட்டியாக, இறைத் தூதராக இறைவனால் அனுப்பப்பட்டுள்ளார்கள். (21:107). முன்னைய நெறிநூல்களில் இதற் குரிய சான்றுகள் கிடைக்கின்றன.
இறைத் தூதர்கள் அவதாரமாக முடியுமா?
இன்று பல மக்களிடம் இருந்து வரும் ஒரு நம்பிக்கையை ஆராய்வோம். இறைத் தூதர்கள் அந்த மக்களால் இறை அவதாரங் களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இறை வன் மக்களுக்கு வழிகாட்ட அவதாரம் எடுத்ததாக அவர்கள் கூறுகிறார்கள். இறைத்தூதர்களை அவதாரமாகவோ, மகனாகவோ கூறுகிறார்கள். நன்கு சிந்தித் துப் பார்த்தால், இறைவனது மாற்ற முடி யாத தனித்தன்மைக்கு இது மாசு கற்பிப்ப தாகும். இதை இறைவன் தன் இறுதி நெறி நூலில் மிக வன்மையாகக் கண்டிக்கிறான். (2:116, 6:100, 10:68, 16:62, 17:111, 19:88, 23:91, 25:2, 37:149, 39:4, 112:1-4) இவ்வாறு சொல்பவர்கள், “இறைவன் ஆற்றல் அற்ற வன்‘ என்று சொல்லாமல் சொல்கிறார்கள், என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அனைத்து ஆற்றலும் நிறைவாக உள்ள வனே இறைவன் என்பது நேர்வழி நடப்பவ னின் நீங்காத உறுதியான நம்பிக்கை ஆகும். தூதர்கள் மூலம் இறைவனுக்குச் சாதிக்க முடியவில்லை. அதனாலே இறைவன் அவ தாரம் எடுத்து வந்தான் என்றே தவறாகச் சொல்ல முடியும்.
தனது அலுவலக அறையில் இருந்து கொண்டே மற்ற நாடுகளின் ஜனாதிபதி கள், பிரதம மந்திரிகள் அனைவரையும் சந்தித்துப் பேசிப் பல பெருஞ்செயல்களை முடிக்கத் தனது மந்திரிகளையும், பிரதிநிதி களையும் அனுப்பிச் செய்து முடிப்பவர் பெரும்பாலான நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள் அவர் கேவலம் பல அறைக்குத் தானே சென்று அந்தக் கேவலமான காரியத்தைத் தானே செய்து முடிக்கிறார். இது அவரது இயலாமையால் ஏற்பட்ட விளைவாகும். முடியுமானால் அதற்கும் நிச்சயம் பிரதிநிதியை அனுப்பிச் செய்து முடித்திருப்பார். அவர் தானே ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்றால், அதற்குப் பின்னே ஒரு இயலாமை அல்லது தனக்கு மேல் உள்ள ஒரு சக்திக்குக் கட்டுப் படும் நிலை இருந்தே ஆகவேண்டும். இது இறைவனுக்குப் பொருந்துமா? சிந்தித்துப் பாருங்கள். எந்த வகையிலும் இறைவனுக் குப் பொருந்தாது. இந்த நிலை இருந்தால், அவன் இறைவனாக இருக்க முடியாது. மூப் பையும், இறப்பையும் எதிர் பார்க்கும் மனி தன் சந்ததியை விரும்புகின்றான். சந்ததி யைக் கற்பிக்கும் அவர்கள் இறைவனுக்கும் மூப்பும், இறப்பும் உண்டு என்று நினைக்கி றார்களா? ஒருபோதும் இல்லை, இவை அனைத்தையும் கடந்து இறைவன் பெருந் தூய்மையானவன்.
அடுத்து, இறைவன் அவதாரம் எடுத்து உலகில் வந்து வாழ்ந்து காட்டினால், அது போல் மனிதன் வாழ முடியுமா? அப்படி மனிதன் வாழ எதிர்பார்ப்பது நியாயந் தானா? வாழாவிட்டால் தண்டிப்பது பெரும் அநீதியல்லவா? பெரும்பாலும் இறைத் தூதர்களைச் செல்வந்தர்களா கவோ, அதிகா ரம் உள்ளவர்களாகவோ தேர்ந்தெடுக்கா மல், ஏழைகளாகவும், உலகியல் நோக்கில் சாதாரண நிலையுடையவர்களாகவுமே இறைவன் தேர்ந்தெடுத்தான். மக்கள் தூதர்கள் பெருஞ் செல்வர்களாகவும் ஆட்சி அதிகாரம் பெற்றவர்களாக இருந்திருந் தால், நாங்கள் அவர்களைப் பின்பற்ற எளி தாக இருந்திருக்கும் என்று சொல்லவும் செய்தார்கள். ஆனால் நாளை மனிதன், “இறைத் தூதர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தார்கள். ஆகவே அவர்களால் உன் கட்டளைப்படி நடக்க முடிந்தது. நாங் களோ இல்லாதவர்கள்; எங்களால் எப்படி உனது கட்டளைப்படி நடக்க முடியும்?’ என்று வாதம் செய்ய இடம் ஏற்பட்டு விடா திருக்கவே இறைவன் அவ்வாறு செய்ய வில்லை. இப்போது சொல்லுங்கள், இறை வன் அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டி, அதைப் போலவே மனிதன் வாழவேண்டு மென்று எதிர்பார்க்க முடியுமா? மனித னைப் போல் மலத்தையும், மூத்திரத்தை யும், நாற்ற உடலையும் இறைவனும் சுமந் தால், அவன் இறைவனாக இருக்க முடி யுமா? ஒருபோதும் இருக்க முடியாது.