மனிதனுக்கு இறுதி விசாரணை உண்டா?
S.H. அப்துர் ரஹ்மான்
இதற்கு பதில் ஆமாம் என்பதுதான். இறுதி இறைநூல்படி மனிதனுக்கு உலக இறுதி நாளில் விசாரணை இருக்கிறது. இறுதி இறைநூல் பல இடங்களில் இந்த விசாரணையை குறிப்பிடு கிறது. அதை “இறுதி நாள்‘ அல்லது “நியாயத் தீர்ப்பு நாள்‘ எனவும் குறிப்பிடுகிறது.
அன்று ஒவ்வொருவரின் செய்கைகள், அதாவது நன்மைகள் மற்றும் தீமைகள், விவரமாக கணக்கெடுக்கப்படும். அவர்களின் செயல்களின் அடிப்படையில், அந்த இறைவன் அவர் களுக்கு வெகுமதி அல்லது தண்டனை வழங்குவான்.
உதாரணமாக, இறுதி இறைநூல் (வசனம் 23:115ல்) “உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா? என்று கூறப்படுகின்றது.
இது மனிதனின் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தருவதோடு, அவருடைய செயல்களின் பொறுப்பும் குறிப்பிடுகிறது.
இறுதி இறைநூலில் மனிதனின் விசாரணை பற்றிய குறிப்புகள் பல்வேறு இடங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மனிதன் தனது இந்த உலக வாழ்க்கையில் செய்த செயல் களுக்காக ஒவ்வொருவரும் இறுதி நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனின் முன் நிறுத்தப்படுவார். மேலும் அவருடைய செயல்கள் விவரமாக கணக்கெடுக்கப்படும்.
அதில் நற்குணங்கள், இறைவன் கூறிய கடமைகளை நிறைவேற்றுவதால், தீமை செய்யாதிருத்தல் ஆகியவையும் சரிபார்க்கப்படும். குற்றச் செயல்களுக்கு தண்டனை அல்லது நற்குணங்களுக்கு வெகுமதி வழங்கப்படும். இதனை இறுதி இறைநூல்(வசனம் 17:13, 14)இல் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப் பட்டதாக அவன் காண்பான்.
“உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்‘ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் (வசனம் 18:49)இல் “அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! “இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்றுவிடாமல் பதிவு செய்துள்ளதே!’ எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்கமாட்டான் என்று கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து, மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் சரியான மதிப்பீடுகள் வழங்கப்பட்டு, நல்லவைகள் வெகுமதியும் பெற்றுக்கொள்ளும், தீமைகள் அநியாயங்கள் நியாயமான தண்டனையையும் பெறும் என்பதும் அறிய முடிகிறது.
இறுதி இறைநூலில் மனிதனின் இறுதித் தீர்ப்புக்கான விசாரணை மிக முக்கியமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் பொறுப் புள்ளவனாகக் கருதப்பட்டுள்ளான். மேலும் நியாயத் தீர்ப்பு நாளில் அவனுடைய செயல்கள் முறையாக ஆய்வு செய்யப்படும் என்று இறுதி இறைநூலில் அறிவுறுத்துகிறது.
இறுதி இறைநூல் (வசனம் 6:160)ல் “”நன்மை செய்தவருக்கு அதுபோன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமையின் அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி. இழைக்கப்படமாட்டார்கள் என்று கூறப்படு கிறது.”
மேலும் (வசனம் 3:30)இல்: “ஒவ்வொரு வரும், தாம் செய்த நன்மையையும், தீமையை யும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில் “தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும்‘ என ஆசைப்படுவார். அந்த இறைவன் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். அடியார்கள் மீது அந்த இறைவன் இரக்கமுள்ளவன்.
இந்த வசனங்கள் மனிதனுக்கு கண்டிப்பாக இறுதி விசாரணையும் உண்டு. தண்டனை யும் உண்டு என்பது உறுதியாகிறது. இந்த நினைவுடன் மனிதர்கள் வாழ்வது நல்லது.