வாழ்வு மேம்பட வாசிப்போம் புத்தகங்களை!
M. சையத் முபாரக், நாகை.
நிகழ்காலத்தில் நாம் நமக்கு அருகில் நடக்கும் சில சம்பவங்களை நேரிலும், டி.வி மூலமும் மட்டுமே பார்க்க முடியும். தொலைவில் நடக்கும் நிகழ்வுகளை, வரலாற்றுச் சம்பவங்களை, முன்னோர்களின் பண்பாட்டுக் கலாச்சாரங்களை நம் கண் முன் கொண்டு வருவது புத்தகங்களே. அதை நாம் வாசித்து அறிகிறோம் அல்லது கதை சொல்வது மூலம் தகவலைப் பெறுகி றோம். முன்பு தாத்தா, பாட்டி கதை சொல்பவராக இருந்தனர். ஆனால், இன்று கதை சொல்பராக சிலர் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.
தனி மனிதனோ, சமுதாயமோ சீர் பெற, மேன்மையுற முக்கியமானது கல்வி யறிவு. வேதங்களைப் படிக்காதே என்று மதங்களும், வாசிப்பதற்கு ஊக்கம் தராத இயக்கங்களும் இருக்கும்போது, அனைத் தையும் விட படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தது இஸ்லாம்; முன்னுரிமை கொடுத்தது அல்குர்ஆன். இதற்கு முதன் முதலாக இறக்கப்பட்ட அல்குர்ஆன் வச னமே சாட்சியாக இருக்கிறது.
“படைத்த உம் இறைவன் பெயரால் வாசிப்பீராக!” (96:1)
பல இடங்களில் இறைநூல் (அல்குர் ஆனின்) வசனங்கள் படைத்தவனைச் சிந் தித்து, படைப்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்! என்று மனித மனங்களைத் தூண் டிக் கொண்டிருக்கிறது. அது சிந்தனைச் செய்! ஆராய்ச்சியில் ஈடுபடு!! என்று மனி தர்களின் அறிவுப் பசியைத் தூண்டியதால் அல்குர்ஆன் இறக்கப்பட்ட முதல் நூற் றாண்டிலேயே உலகம் புதிய மாற்றத்தை, பெரும் மறுமலர்ச்சியை பகுத்தறிவு மூல மாக, அறிவியல் பூர்வமாக சந்தித்தது.
நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து பள்ளிவாசல்கள் தொழுகைக்காக மட்டு மின்றி, கல்வி கூடமாகவும் ஆலோச னைகள் செய்யவும், நூலகம். ஆராய்ச்சிக் கூடம் இணைந்த சர்வகலாச்சாலைகளாக, பல்கலைக்கழகங்களாக, மிளிர்ந்தன. இஸ் லாமிய கலாச்சாரத்தில் நூல்கள், நூலகங்க ளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. அதன் மிச்சம் சொச்சம்தான் தற்போது பள்ளிவாசல்களில் இருக்கும் சில புத்தகங் களின் சேகரிப்பு.
அன்று ஸ்பெயினிலுள்ள முஸ்லிம் பெண்கள் தங்கள் வீட்டின் நூலகத்தி லுள்ள புத்தகங்களைக் காட்டி பெருமை கொண்டனர். ஆனால், அந்தக் கலாச் சாரத்தில் வந்த நாமும், நமது பெண்களும், பைக்கை, காரை, வீட்டை, உடைகளை, நகைகளைக் காட்டி பெருமிதம் கொள்கி றோம். வாழ்வுக்கு வழிகாட்டும் புத்தகங் களை மறந்து விட்டோம்.
“இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் முஸ்லிம்கள் என்ற அடிப்படை உண்மையை இனியும் ஐரோப்பியர்களால் மூடி மறைக்க முடி யாது. உண்மை நெடுங்காலம் உறங்காது” இது இங்கிலாந்து இளவரசராக சார்லஸ் இருந்தபோது கூறியது.
வாசிப்பின் அவசியம் :
“… அறிவு, தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களும்; அறிவோ, தொலை நோக்கப் பார்வை இல்லாதவர்களும் சமமாவார்களா? அறிவுடையோர் தாம் நல்லுபதேசம் பெறுவர்.” (39:9)
“…உங்களில் நம்பிக்கை ஊறிப்போன வர்களை, அறிவு எனும் அருட்கொடை வழங்கப்பட்டவர் களை அல்லாஹ் மேலும் உயர்த்தி, பல படித்தரங்களை வழங்கு வான்” (58:11)
…”கல்வியைத் தேடுவது அனைத்து (ஆண், பெண்) முஸ்லிமின் மீதும் கடமை யாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)
“அறிவைத்தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சொர்க்கத் திற்குச் செல்லும் வழியாக அதை ஆக்கு கிறான். வானவர்கள் அறிவை தேடுப வனை திருப்தியுற்று தங்களின் இறக்கை களை (பணிவாக) தாழ்த்துகின்றனர். நிச்சயமாக ஒரு அறிஞனுக்காக வானில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும் தண் ணீரில் உள்ள மீன்கள் உட்பட அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோருகின்றனர். வணக்கசாலியை விட அறிஞரின் சிறப்பு என்பது நட்சத்திரங்களை விட சந்திர னுக்கு (பெளர்ணமி நிலவிற்கு) உரிய சிறப்பு போன்றது. நிச்சயமாக அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நிச்சயமாக நபிமார்கள் தங்க, வெள்ளி நாணயங்க ளுக்கோ அவர்களை வாரிசாக்கவில்லை. கல்விக்கே வாரிசாக்கியுள்ளனர். ஒருவர் அறிவை (கல்வியை) எடுத்துக் கொண் டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத் துக் கொண்டவராவார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதி 3641, 2682)
“அறிவில்லாதவன்‘, “முட்டாள்‘ என்று யாரையாவது நாம் திட்டினால் அவர்க ளுக்கு எவ்வளவு கோபம் வரும்? அவர்கள் முட்டாளாக, அறிவற்றவர்களாக இருந் தாலும் தன்னை மற்றவர்கள் “அறிவாளி‘ என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். இது ஒன்றே போதும் அறிவின் முக்கியத்துவத்தை உணர்த்த, அறிவைப் பெற வாசிப்போம்.
வாசிப்பு தரும் பலன்கள் :
வாசிப்பினால் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதில் ஒருசில மட்டும் இங்கு பார்ப்போம்.
1. அறியாமையைப் போக்குகிறது, அறிவை விசாலமாக்குகிறது, புத்திக் கூர்மையாக்குகிறது.
2. நல்ல எண்ணங்களை உருவாக்கி, உன்னதமான நற்பண்புகளை பெறச் செய்கிறது.
3. மனதை ஒருமுகப்படுத்தி, கவனச் சிதறலை தவிர்க்கிறது.
4. தன்னம்பிக்கை ஏற்படுத்தி, ஆளுமைத் திறனை உயர்த்துகிறது.
5. மூளை சுறுசுறுப்பாகிறது; உற்சாகம் பெறுகிறது. மூளைக்கு சிறந்த பயிற்சி யாக அமைவதால் நரம்பு நோய்கள் தவிர்க்கப்படுகிறது.
6. மொழி ஆற்றல் வளர்க்கிறது; பேச்சாற் றல் அதிகரிக்கிறது.
7. பிரச்சனைகளை, சவால்களை எதிர் கொள்ளும் மனதை உறுதிப்படுத்தி, தீர்வுகளைத் தேட வழி அமைக்கிறது.
8. தனிமை போக்கும்; வாழ்வின் திசையை மாற்றும்; வாழ்வை மேம்படுத்தும்.
கற்பனைக் குதிரையில் பறக்க:
புத்தகம் படிக்கும்போது, அந்தக் காட்சி கற்பனையுடன் உள்ளத்தில் விரி யும்.
உதாரணமாக: நந்தவனத்தில் நடுவில் அமைந்த மாளிகையைப் பற்றி படிக்கும் போது நந்தவனத்தில் என்னென்ன பூச் செடிகள், மரங்கள் இருந்தன? அதில் ஓடும் ஓடை எப்படி இருந்தது? அதில் மீன்கள் எவ்வாறு துள்ளிக் குதித்தன? மாளிகையில் அமைப்பு இப்படி இப்படி இருந்தது என்று நம் உள்ளத்தில் கற்பனைத் தோன் றும். ஆனால், திரையில் காணொளியாக அதை நாம் காணும்போது எந்த கற்பனை யும் நம் உள்ளத்தில் எழாது; அப்படியே கடந்து சென்றுவிடும். கற்பனைத் திறனு டன் சிந்திக்கும், ஆராயும் ஆற்றல் புத்தகம் வாசிப்பதால் மட்டுமே நமக்குக் கிடைக்கும்.
நிதானமாக முடிவெடுக்க :
மேலை நாட்டினர் கண்டுபிடித்த செல் ஃபோனை நாம் எல்லா இடங்களிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் மேலை நாட்டினரோ விமான, இரயில் நிலையத்தில் ஓய்வெடுக்கும் போது கூட புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரம் விமானத்தால் (?) தகர்க்கப்பட்டபோதும், இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படம் வெளியான போதும், பாதிரியாரால் அல்குர்ஆன் பிரதியை பொது வெளியில் எரிக்கப்பட்ட போதும் செல்ஃபோனை நோண்டிக் கொண்டிருக்கும் நம்மால் செய்யமுடிந் தது உணர்ச்சிவசப்பட்டு போராட்டம் நடத்தியதே. ஆனால், புத்தகம் வாசிப்பின் மூலம் பண்பட்ட உள்ளத்துடன், பிரச்ச னையை பதட்டமின்றி நிதானமாக அணு கியவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். அல்குர்ஆன் பிரதியை விநியோகித்தும், தவறாக நம்பிக் கொண்டிருந்தவர்களை நேரில் சந்தித்து நபி(ஸல்) அவர்களின் உன்னத வாழ்வைச் சொல்லி அவர்களின் வரலாற்று நூலைக் கொடுத்தும் பலரின் மனதை வென்றனர்.
தேர்ந்தெடுத்து படிக்க:
நம் நாட்டை, நாட்டு மக்களை நேசித்த, நல்ல புத்தகங்களைப் படித்த பகத்சிங் தூக்குமேடைக்குப் போகும் வரை புத்தகம் படித்தவர் அவர் ஆங்கில அரசுக்கு “தூக்கில் போடாதீர்; துப்பாக்கி யால் சுடுங்கள். எங்களைக் கொல்லும் இராணுவ அதிகாரி எப்போது வருவார்?’ என்று கடிதம் எழுதினார். இப்படி அவர் வீராவேசமாக கடிதம் எழுதக் காரணம் வாசிப்பு தந்த தன்னம்பிக்கை, மன வலிமை. ஆனால், வெறுப்பு நிறைந்த சாவர்க்கரோ சிறையிலிருந்து என்னை விடுவித்து விடுங்கள் என்று கோழைத்தன மாக ஆங்கில அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார். ஆகவே, நாம் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.
கவனம் சிதறாதிருக்க :
வாசிக்குமபோது கவனம் வேறு எங் கும் திசை மாறாமல் மனதில் பதிய நாம் வாய் அசைய படிக்கவேண்டும். நபி(ஸல்) அவர்கள் சப்தமின்றி ஓதுவதை அவர்க ளின் தாடி அசைவதன் மூலம் தெரிந்து கொள்வோம் என்று நபித்தோழர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஹதீதில் படித்ததை மற்றவர்களிடம் பகிரலாம். இவைகள் ஞாபகத்தில் இருப் பதற்கான வழிகள். ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது, அது சம்பந்தமாக முன்பு படித்தது ஞாபகத்தில் வரும் வாய்ப்பும் உண்டு. இவற்றையயல்லாம் விட நமது மனம் தூய்மையடையும்.
புத்தகங்களோ நம்மை கீழிருந்து மேலே தூக்கிவிடும். தலை குனிந்து வாசிப்பவர்களை தலை நிமிரச் செய்வது புத்தகங்களே வரலாற்றில் ஒளிர்கின்ற பல தலைவர்களை அவர்கள் வாசித்த புத்தகங்களே செதுக்கி உன்னத தலைவர் களாக மாற்றியிருக்கின்றன. வாசிப்பின் மூலம் அவர்கள் ஆளுமைத் திறன் பெற்று தலைமைத்து வத்தை அடைந்தார்கள். நாமும் நம்மைப் பண்படுத்திக் கொள்ள புத்தகங்களை வாசிப்போம்!
“இறைவா! என் அறிவை அதிகப் படுத்துவாயாக!” (அல்குர்ஆன் 20:114)