அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. இரு ஒளிச்சுடர்கள் என்று எந்த அத்தியாயங்களை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
அல்பகரா, ஆலிஇம்ரான் ஆகிய சூராக்கள். முஸ்லிம் 1470
2. நோன்பு எதைப் போன்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பாவங்களிலிருந்துகாக்கின்றகேடயம்போன்றது. புகாரீ: 1894
3. ஜோசியம் பார்ப்பவரின் (கேட்பவரின்) எத்தனை நாள் தொழுகை அங்கீகரிக்கப்படாது என நபி(ஸல) அவர்கள் கூறினார்கள்?
நாற்பதுநாட்களின்தொழுகை. முஸ்லிம் 4488
4. வல்லமையுடைய (சக்தியுடைய) அடியார் என யாரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்?
தாவூத்(அலை) அவர்கள். அல்குர்ஆன் 38:17
5. மேட்டிலிருந்து கீழே இறங்கும்போது என்ன கூறவேண்டும்?
சுப்ஹானல்லாஹ். புகாரி: 2993
6. அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு யாருடையது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
தாவூது(அலை) அவர்களின் நோன்பு. புகாரி : 1131
7. ஹக்கல் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
பிளந்து. அல்குர்ஆன் 54:1
8. நபி(ஸல்) அவர்களின் பெயர்கள் எத்தனை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
ஐந்து. 1.முஹம்மத், 2.அஹ்மத், 3.மாஹீ, 4.ஹா´, 5. ஆகிப், புகாரி : 3532
9. யூசுப்(அலை) அவர்களுடன் சிறையில் எத்தனை பேர் இருந்ததாக அல்லாஹ் கூறினான்?
இரண்டு. அல்குர்ஆன் 12:36
10. கப்ருவாசிகள் எந்த செயலுக்காக வேதனை செய்யப்படுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
கோள்சொல்வதால். புகாரி : 1361
11. காணாத கனவை கண்டதாக சொல்பவர் மறுமையில் எவ்வாறு நிர்பந்திக்கப்படு வார்?
இரண்டுவாற்கோதுமைகளைஒன்றுடன்ஒன்றுமுடிச்சுபோட. புகாரி: 7042
12. ஜன்னத்துல் அத்னு எவ்வாறு இருக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
வெண்மேகம்போன்று. புகாரி : 7047
13. எந்த செயல் மூமினை கொலை செய்வது போன்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
சபிப்பது. புகாரி: 6047
14. மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்று எதன்மீது சத்தியம் செய்து அல்லாஹ் கூறினான்?
காலம். அல்குர்ஆன் : 103:1,2
15. யாருக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று அல்லாஹ் கூறினான்?
பொறுமையாளருக்கு. அல்குர்ஆன் 39:10
16. எந்த முஸ்லிம் சிறந்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
பிறருக்குதீங்கிழைக்காதவர். முஸ்லிம் : 64
17. மலைகளையும், பறவைகளையும் எந்த நபியுடன் சேர்ந்து தஸ்பீஹ் செய்ய அல்லாஹ் கூறினான்?
தாவூத்நபியுடன். அல்குர்ஆன் 21:79
18. அன்பளிப்பு செய்ததை திரும்பப் பெறுபவரை எதற்கு ஒப்பிட்டு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
நாயுடன் ஒப்பிட்டு. முஸ்லிம் : 33:13
19. நியாயத் தீர்ப்புக்குரிய ஞானம் யாரிடம் உள்ளது என அல்லாஹ் கூறுகிறான்?
தன்னிடம். அல்குர்ஆன் 33:63
20. அத்துகான் என்றால் என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?
புகை. அல்குர்ஆன் 44:10