வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி!
அய்யம்பேட்டை A நஜ்முதீன்
பிப்ரவரி மாத தொடர்ச்சி….
நோயே, என்னை நெருங்காதே!
சென்ற இதழில் சித்தவைத்தியம், ஹோமியோபதி வைத்தியம் பற்றி பார்த்தோம்.
இந்த இதழில் “அக்குபஞ்சர்‘ வைத்தியம் அறிவோம்.
“அக்குபஞ்சர் எனும் அறிய கலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பழமை வாய்ந்த வைத்தியத்தில் இதுவும் ஒன்றாகும்.
அதிசயம், அற்புதம் நிறைந்த அக்குபஞ்சர் எனும் வைத்திய கலையை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். நம்பிக்கையும், ஆர்வமும் இருந்தால் நிச்சயமாக எளிதாக கற்றுக் கொள்ளலாம்.
“நம் கையே நமக்கு உதவி‘ என்பதுதான் இந்த வைத்திய முறையின் மூலமே. அக்குபஞ்சர் வைத்தியத்தின் சிறப்பு என்னவென்றால் மருந்தே கிடையாது. சிறு மயிரிழைப் போன்ற ஊசிகளை உபயோகப்படுத்தி நோய் தீர்க்கப்படுகிறது. மேலும் வெறும் விரல்களின் அழுத்தத்தாலேயே நோய்களிலிருந்தும் விடுபடலாம்.
சில நோய்களுக்கு சில மருத்துவ முறை தான் சிறப்பாக செயல்படும். அதனை அறிந்து நோய்களுக்கு ஏற்றவாறு வைத்தியம் செய்து கொள்வதுதான் புத்திசாலிதனம். எல்லாவகை யான நோய்களுக்கும் அலோபதி மருத்துவ முறையை நாடுவது தவறாகும்.
நம் உடல் ஒரு பொக்கிசமாகும். அதனை அறிந்தவர்களுக்குத் தான் தெரியும். இறைவனின் எண்ணிக்கையில் அடங்காத அருட்கொடைகளில் மாபெரும் அருட்கொடை ஆரோக்கியமும் ஒன்றாகும். அக்குபஞ்சர் வைத்தியம் என்பது சீனாவில் தோன்றியது என்ற எண்ணம் பரவலாக நம்பப்படுகிறது. அது உண்மை அல்ல.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் வர்மக்கலை எனும் வைத்தியத்தில் ஒரு பிரிவாக ஊசி குத்துதல் என்ற பெயரில் இருந்து வந்ததுதான் பிற்காலத்தில் அக்குபஞ்சர் என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது.
உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கவும், நோய் அண்டாமல் இருக்கவும் பெரிதும் உதவுவது பிளீடிங் பிராசஸ் எனும் அக்குபஞ்சர் முறையே, இது வேறு ஒன்றும் இல்லை. கை, கால்களில் உள்ள எல்லா விரல்களிலும் (கட்டை விரலைத் தவிர) சிறிய பஞ்சை ஸ்பிரிட்டால் நனைத்து சுத்தம் செய்துவிட்டு பின்னர் ஊசியை கொண்டு குத்துவதாகும். இதன்மூலம் 3 அல்லது 4 சொட்டு இரத்தத்தை வெளியேற்றி விடவேண்டும்.
மருத்துவம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்ற ஹதீத்கள்:
“அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை”. (புகாரி : 5678)
2. தோழர் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீத்.
மூன்று வகை (நோய்க்கு) நிவாரணம் உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.
அவை : 1. (இயற்கை வைத்தியம்) தேன் அருந்துவது. (பார்க்க வசனம் : 16:69)
2. இரத்தம் வெளியேற்றம் “ஹிஜாமா‘ என்னும் மருத்துவம்.
ஹிஜாமா என்றால்: உடம்பில் இரத்தம் தேங்கி விடும்போது அதனால் ஏற்படும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறையை கையாண்டு வந்தனர்.
3. கருவியால் உடலில் கீறுவது, (அலோபதி ஆப்ரேசன்) அல்லது தீயால் சூடிட்டுக் கொள்வது என்று சொல்லிவிட்டு தீயால் சூடிட்டுக்கொள்ள வேண்டாமென என் சமுதாயத்திற்கு நான் தடை விதிக்கிறேன் என்று கூறினார்கள். (புகாரி: 5680)
உடல் உறுப்புகளில் முக்கியமானதான மூளையைப் பற்றி அறிவோம் :
இறைவனின் அரிய படைப்புகளில் (உடல் உறுப்புகளில்) விந்தையானது நமது மூளையாகும். உடல் உறுப்புகளில் மூளையைப் போல் வேறு எந்தவொரு உறுப்பும் செயல்படுவதில்லை. அது தலையாய உறுப்பு என்பதால் மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக இறைவன் அமைத்துள்ளான்.
அரியணையில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செய்யும் ஒரு அறிய உறுப்பு. அது சீராக இல்லை என்றால் எதுவுமே சீராக செயல்படாது.
மனிதனின் வாழ்க்கை முழுவதும் போராடச் செய்வது மூளையில் தோன்றும் சிந்தனையாகும். மனிதனை ஆட்டிப் படைப்பதும், அமைதிப்படுத்துவதும், அவசரப்படுத்துவதும், ஆட்சி புரிவதும் மூளையே.
எவரையும் மூளை இல்லாமல் இறைவன் படைக்கவில்லை. அதுபோல் எவருக்கும் இரண்டு மூளையையும் இறைவன் வைக்கவில்லை. (பல உறுப்புக்களை ஜோடியாக படைத்த இறைவன் மூளையை மட்டும் ஒற்றையாக படைத்துள்ளான். எனவேதான் அது மோதிக் கொள்ளாமல் (குழப்பம் அடையாமல்) மனநிலை பாதிக்காமல் ஒருங்கே இணைந்து செயல்படும் வரை அது மனிதனை “மாமனிதனாக வாழச் செய்கிறது. அதுவே குழம்பிவிட்டால் மதிப்பற்ற மனிதனாக மாற்றிவிடுகிறது‘.
அதாவது உனக்கு மூளை(அறிவு) இருக்கா என்று யாரும் கேட்காத அளவிற்கு மூளையைக் கொண்டு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும். அத்தகைய மூளையின் வழியாகத்தான் அனைத்தும் திணிக்கப்படுகிறது.
உதாரணமாக :
இருக்கின்ற நோயை பூதகரமாக காட்டுவது, அல்லது இல்லாத நோயை இருப்பது போல காட்டுவது, எனவே எவ்வாறு இதை அலோபதி மருத்துவம் கையாளுகிறது என்பதைப் பார்ப்போம்.
அலோபதி மருத்துவமும், அவலமும் :
ஒருவர் தவறுதலாக விசம் சாப்பிட்டுவிட்டால் அது தொண்டை வழி இரைப்பைக்கு சென்றுவிடும். அவர் உள்ளே சென்ற விசத்தை வெளியேற்ற மூளை இரைப்பைக்கு உத்தர விடும். இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும்போது அலோபதி மருத்துவர் அவருக்கு வாந்தி என்ற மாத்திரையை கொடுத்து வாந்தி வருவதை நிறுத்தி விடுவார்.
மூளை என்ன செய்யும் தெரியுமா? ஏன் விசத்தை வெளியேற்றவில்லை என இரைப்பையை கேட்கும். அதற்கு இரைப்பை அவன் மாத்திரை சாப்பிட்டு என்னை வெளியேற்ற விடாமல் தடுத்துவிட்டான் என்று கூறும். ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலை உத்தரவிடும்.
உடனே மூளையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அதை வெளியேற்ற முயற்சிக்கும். ஆனால் அலோபதி மருத்துவர் வயிற்று போக்கு அதிகமாக இருப்பதால் அவருக்கு வயிற்றுப்போக்கு மாத்திரை கொடுத்து நிறுத்திவிடுவார். விசம் வெளியேற்றாமல் இருப்பதை அறிந்த மூளை குடலை ஏன் வெளியேற்றவில்லை என கேட்கும். அதற்கு இரைப்பை சொன்ன பதிலையே குடலும் சொல்லும்.
ஆனால் மூளை சும்மாவிடாது சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை கட்டளையிடும். அப்போது அவருக்கு இருமல் வரவே நமது வைத்தியர் இருமல் மாத்திரை ஒன்றை கொடுத்து சளி வெளியேறாமல் தடுத்துவிடுவார்.
இறுதியாக மூளை தோலுக்கு உத்தரவிடும். ஆனால் தோல் சொறிந்து அதை வெளியேற்ற முயலும்போது தோல் மருந்து கொடுத்து அதையும் நிறுத்திவிடுவார். அடைப்பட்ட நஞ்சை வெளியேற்றாத வரை மூளை ஓயாது. அது உடம்புக்குள் ஒரு கட்டியை (குப்பை தொட்டிப் போன்று) உருவாக்கி அதில் விசத்தை சேமிக்கும்.
வயிற்றில் கட்டி உருவானதை SCAN மூலம் அறிந்த மருத்துவர் அதை ஆப்ரேசன் செய்து அகற்றி விடுவார்.
இனி யாரையும் (எந்த உறுப்பையும்) நம்பி பிரயோஜனம் இல்லை என்று விசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யும்போது அதை என கருதப்பட்டு அதுவரை ICUவில் வைப்பார்கள். உயிரோடு இருந்தவர் மருத்துவரின் தவறான முடிவால் உயிரற்றவராக வெளியே வருவார். மருத்துவர் சொல்லுவார்.
நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம் என்பதாக. உண்மை என்ன தெரியுமா? விசத்தை சாப்பிட்ட அந்த நோயாளியை கொன்றது இந்த மருத்துவரே. எனவே மூளை பேசுவதை, சொல்வதை தயவு செய்து கேளுங்கள்.
அதாவது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற மொழியில் (பாஷையில்) உங்களோடு பேசும்.
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் “பசி‘ என்னும் உணர்வு மூலம் மூளை பேசும். குளிர் வந்தால் போர்த்த சொல்லும், வெப்பமாக இருந்தால் குளிக்க சொல்லும். இப்படி உடலுக்குத் தேவையானவற்றை உணர்வு மொழியாக அனைத்தையும் மூளை பேசும். பசி வந்தால் வைத்திய சாலைக்கு மருத்துவமனைக்கு யாரும் போவதில்லை.
ஹோட்டலுக்குதான் போவோம். எனவே மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல், இருமல், காய்ச்சல், வயிற்றுபோக்கு இவைகளை நோய் என்று நினைப்பது அறியாமை இரசாயன தடுப்பு மருந்துகளை உண்பதுதான் அறியாமையில் உச்சம். இந்த அறிகுறிகள் எல்லாம் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதை காட்டுகிறது. அதாவது நம் உடல் கழிவுகளை வெளியேற்ற இறைவன் செய்த அற்புத செயல்.
அலோபதி மருத்துவம் உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து, கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து நோயை வளர்த்து அதை பெரிதாக்கி (காசு பார்க்கும் கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளின் சூழ்ச்சிகளுக்கு அலோபதி மருத்துவர்கள் துணை போகிறார்கள்) மனிதர்களை உயிரற்ற நிலைக்கு கொண்டு செல்கிறார்கள். எனவே உடல்மொழியை புரிந்து கொள்ளுங்கள், ஆரோக்கியத்தை அனுபவியுங்கள்.