கோழி முதலா? முட்டை முதலா? A.N. Trichy கோழி முதலா? முட்டை முதலா? என்ற கேள்விக்கு விடை தெரிஞ்சால் என்ன? தெரியாமல் போனால் என்ன? இதுவொன்றும் அவ்வளவு முக்கியமான விசயமில்லையே என பலர் நினைக்கலாம் அல்லது அலட்சியப்படுத்தலாம். பொதுவாக எல்லோருக்கும் எல்லாமே தெரியுமா? என்றால் தெரியாது. சிலருக்கு தெரிந்த சில சாதாரண விசயங்கள் வேறு சிலருக்கு தெரியாமல் இருப்பது நிஜம்; அது எதார்த்தமும் கூட. ஆனால் மனிதர்களில் சிலர் தெரியாததை தெரிந்தமாதிரி நடித்து பல விசயங்களை தெரிந்து […]
annajaath
மனிதனும்! மண்ணும்! அபூ அஹமத் நாம் வாழ்கின்ற இந்த பூமியானது உலகம் படைக்கப்பட்டபோது இருந்ததை விட பல மாற்றங்களை அடைந்துள்ளது. ஆதம் – ஹவ்வா என்ற இரண்டு பேர் மட் டுமே இருந்த இந்த பூமியில், பல ஆயிரக் கணக்கான கோடி மனிதர்கள் பெருகி வாழ்ந்து மறைந்துள்ளார்கள். இப்போது இருப்பவர்களும் மறைவார்கள், இன்னும் வருவார்கள், வாழ்வார்கள், மறைவார்கள். மனிதனின் தோற்றத்தைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும் முடிவைப் பற்றியும் அல்லாஹ் கூறுவது : “அவனே உங்களை ஓர் ஆத்மாவிலி […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறுதி இறைநெறிநுலை! ரஹ் அலி, உடன்குடி கருணையாளன் கிருபையாளன் அந்த இறைவனின் பெயரால்….. மக்கள் உலக வாழ்வின் புறத்தோற் றத்தை மட்டுமே அறிகின்றனர். மறுமை யைப் பற்றி அவர்கள் அலட்சியமாக இருக் கின்றனர். என்ன அவர்கள் தங்களைப் பற்றி என்றைக்கேனும் சிந்தித்ததில்லையா? (இறைநூல்:30:7,8) இறை நம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும், கற்களும் எரிபொருளாகக் கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். (இறைநூல் : 66:6) உங்கள் […]
இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட இறைநூல்! S.H. அப்துர் ரஹ்மான் அந்த ஒரே இறைவனின் பெயரால்… இந்த இறைநூல், யாவரையும் மிகைத் தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அந்த இறைவனிடமிருந்தே இறக்கியருளப்பட்டது. நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்ச யமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட் சிகள் இருக்கின்றன. இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணி களைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதி லும், வானத்திலிருந்து அருள் மாரியை அந்த இறைவன் இறக்கி […]
இஸ்லாத்திற்காக இரு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்…! கலீல், கோட்டூர். நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக இருந்த ஆரம்ப காலப் பிரிவு அப்போது ஏழு நபர்கள் மட்டுமே இஸ்லாத்தை ஏற்றிருந் தனர். எட்டாவதாக அபூபக்கர் அஸ்ஸித்தீக் (ரழி) அவர்களின் கரத்தைப் பற்றி ஏறத்தாழ முப்பது வயதுடைய அப்து அம்ர் என்பவர். இஸ்லாத்தைத் தழுவினார். அபூபக்கர்(ரழி) அவர்களின் கரத்தில் இஸ்லாத்தை ஏற்ற 5 பேரில் இவரும் ஒருவர் ஆவார். அப்து அம்ருக்கு நபி (ஸல்) அவர் களே அப்துர் ரஹ்மான் எனப் […]
திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்… அபூ இஸ்ஸாத், இலங்கை நபி(ஸல்) அவர்கள் செப்டம்பர் மாத தொடர்ச்சி…. கல்வியாளர்கள் கைப்பற்றப்படுதல் : (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நிலநடுக்கங்கள் அதிக மாகும். காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமை நாள் வராது. புகாரி: 7121. மேலும், காலம் சுருங்கி, அமல்கள் குறைந்து, கஞ்சத் தனம் பெருகி, குழப்பங்கள் தோன்றுவது: அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் (மறுமை நாள் நெருங்கும் போது) […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. மற்ற நபிமார்களுக்கு அனுமதிக்காததை நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதித்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறியது என்ன? பூமி முழுவதும் சுத்தமாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டது. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரழி), புகாரி:335 2. யாருடைய செயலால் தயம்மம் வசனம் இறக்கப்பட்டது? ஆயிஷா(ரழி) தொலைந்து போன கழுத்தானிக்கான செயலுக்காக. உர்வா என்ற அறிவிப்பாளர். புகாரி : 336 3. திருமணம் செய்ய சக்தி பெறாதோர் எதைச் செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்? நோன்பு நோற்க கூறினார்கள். […]
மார்க்க அறிஞர்களால் பூதாகரமாக்கப்படும் “பிறை” எம். சையத் முபாரக், நாகை செப்டம்பர் மாத தொடர்ச்சி….. “அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு?’ என்று ஒருவர் கேட்டபோது “இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (நேரம் வந்துவிடும் என) நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ர் தொழுவீராக!’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ( புகாரி : 1137 ) “எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். […]
ஐயமும்! தெளிவும்! ஐயம் : அல்லாஹ் மனிதர்களிடம் இறுதித் தீர்ப்பு நாள் வரை பேசவே மாட்டானா? அறியத் தாருங்கள். ஆத்தூர் சுல்தான்ஜீ தெளிவு : இறுதி நாள் வரை மட்டுமல்ல, எந்தவொரு நபிமார்களிடமும் கூட அல்லாஹ் நேரிடையாக பேசவில்லை. மனிதரிடத்தில் வஹீ மூலமாகவோ, திரைக்கு அப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தான் விரும்பியதை அறிவிப்பதன் மூலமோ தவிர வேறு வழிகளில் எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்த வன், ஞானமிக்கவன். […]
தலையங்கம் : சுதந்திர நாள்! உலக நாடுகளில் சுதந்திரம் வழங்கப்பட்ட நாடுகளை விட வாங்கப்பட்ட நாடுகளே அதிகம். இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டதா? அல்லது வாங்கப்பட்டதா? என்றால் வாங்கப் பட்டது. வழங்கப்பட்டதற்கும், வாங்கப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்? ஒரு பொருளோ, இடமோ எதுவாக இருந்தாலும் விலை பேசாது கொடுக்கப்படுவதற்கு வழங்கப்பட்டது என்று பொருள். அதுவே விலைபேசி கொடுக்கப்பட்டிருந்தால் வாங்கப்பட்டது என்று பொருள். இந்தியாவின் சுதந்திரம் வாங்குவதற்காக கொடுக்கப்பட்டது பல நூற்றுக்கணக்கான தலைவர் களின் உயிர், பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர், […]
இஸ்லாம் மார்க்கம் ஏன் எதிர்க்கப்படுகிறது? அய்யம்பேட்டை – நஜ்முதீன் உலகில் பல நூற்றுக்கணக்கான மதங்கள் உள்ளன. அதில் ஒருசில மதங்கள் மட்டும் பெரும்பாலோரால் பின்பற்றப்படுகிறது. அவற்றுல் கிருஸ்த்தவ மதம், யூத மதம், புத்த மதம், இந்து மதம், சீக்கிய மதம் ஆகியவை பரவலாக எல்லோராலும் அறியப்பட்டவையாகும். இவைகளுக்கு வேத நூல்களும் உள்ளன. அவை அனைத்தும் மனித கரங்களால் உருவாக்கப்பட்டு குறைபாடுகளுடன் இருக்கின்றது. இருப்பினும் அவைகள் அதிகமாக விமர்சனத்திற்கு ஆளாகுவதில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டும் எதிர்க்கப்படுகிறது. இஸ்லாம் […]
இறைவனுக்கு எதிராகவே சூழ்ச்சி செய்ய நினைக்கும் இறைமறுப்பாளர்கள்! பிரித்தாளும் சூழ்ச்சி கொண்டு, மக்களை பல பிரிவுகளாக பிரித்து அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஃபிர்அவ்ன் தன்னுடைய ஆளுமைக்குட்பட்ட நிலத்தில் பிறக்கப்போகும் ஆண் குழந்தையால்தான் தனக்கு முடிவு காத்திருக்கிறது என்பதை ஜோதிடர்கள் சொல்லக் கேட்டு, அதைத் தடுப்பதற்கு அவன் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் விழலுக்கிறைத்த நீராகி போன சரித்திரம் இவர்களுக்கு தெரியாதா? சிந்தித்து பார்க்க வேண்டாமா? இறை நிராகரிப்பாளர்கள் உங்களை ஒழித்துக் கட்டுவதற்காக எப்படியயல்லாம் சூழ்ச்சி பண்ணிக் […]
இஸ்லாமியர்கள் சாத்தானின் (ஷைத்தானின்) குழந்தைகளா? A.N. மிக சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது சீமான் என்பவர் பேசியபோது இஸ்லாமியர்களும், கிருஸ்த்தவர்களும் சாத்தானின் குழந்தைகள் இவர்கள் இருவரும் என குறிப்பிட்டார். மேற்கண்ட பேச்சுக்கு கிருஸ்த்தவ சமுதாய தலைவர்களோ! அதை சார்ந்தவர்களோ பொங்கி எழவில்லை. ஆனால் இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் என்று மக்கள் மத்தியில் தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு முன்னிலைப்படுத்துகின்ற சிலர் பொங்கி எழுந்தனர். பல கண்டன குரல்கள், சீமானே! மன்னிப்பு கேள்! என் றெல்லாம் முழங்கினர். “சீமான்‘ என்பவர் சொன்னதைப் போல […]
பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஆகஸ்ட் மாத தொடர்ச்சி… இருமுறை நற்கூலி கொடுக்கப்படும் : இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தான தருமங்களில் செலவும் செய்வார்கள். (28:54) அதாவது முந்தைய “தவ்ராத்‘ வேதத்தையும், பிந்தைய “குர்ஆன்‘ வேதத்தையும் நம்பிக்கை கொள்வதெனும் இருவகையான இப்பண்பைப் பெற்ற இவர்களே இருமுறை பிரதிபலன் வழங்கப்படுவர். முந்தைய தூதர் மூஸா(அலை) அவர்கள் பிந்தைய தூதர் […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறுதி இறைநுலை! சரஹ் அலி, உடன்குடி கருணையாளன் கிருபையாளன் அந்த இறைவனின் பெயரால்….. தம் இறைவனிடம் இருந்து வந்த தெளிவான சான்றில் இருப்பவர், யாருக்கு தமது தீய செயல் அலங்கரித்துக் காட்டப்பட்டுத் தம் மனவிருப்பங்களைப் பின்பற்றினார்களோ அவர்களைப் போன்றவரா (என்ன)? (இறைநூல் : 47:14) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு : மக்களுக்கு ஒரு மோசமான காலம் வரும். அக்காலத்திலே உண்மை பேசுபவர்களை பொய்யர்களாக கருதுவார்கள். பொய் பேசுபவர்களை உண்மையாளர்களாக கருதுவார்கள். துரோகியை […]
அல்குர்ஆனின் வழியில் அறிவியல்… நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா? K.S.H. அபூ அப்துர்ரஹ்மான் மறு பதிப்பு : அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமை யாதது தண்ணீர். எனவேதான் “நீரின்றி அமையாது உலகம்‘ என்றான் வள்ளுவன். ஒரு ஊரில் ஆறு ஓடாவிட்டால் அந்த ஊரில் வளமில்லை என்பதைக் குறிக்க “ஆறில்லா ஊர் பாழ்‘ என்ற பழமொழியும் நாமறிந்ததே. இதை இன்னும் விரிவாகக் கூறினால், “நீரில்லா கோள் பாழ்‘ இது உண்மை! விண்வெளியில் எத்தனையோ கோள்கள் சுழல்கின்றன. இவை அனைத்தையும் விட […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. எந்த சமுதாயத்தின் மீது அல்லாஹ் கல் மழை பொழிந்தான்? லூத் நபி சமுதாயத்தின் மீது. (அல்குர்ஆன் 27:52) 2. பூமியில் பணிவுடன் நடப்பவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்? அர்ரஹ்மானின் அடியார்கள்தான். (அல்குர்ஆன் 25:63) 3. நூஹ் நபியின் மகனைப் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்? நிச்சயமாக அவன் உனது குடும்பத்தை சேர்ந்தவனில்லை. (அல்குர்ஆன் 11:4) 4. உம்மி என்று யாரை அல்லாஹ் கூறுகிறான்? எழுத்தறிவற்றவர்களை. (அல்குர்ஆன் 2:78) 5. […]
புரோகிதத்திற்குக் கூலி நரகமே! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : எமது பிரசாரத்தின் ஆரம்பத்திலிருந்தே மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கிக் கொண்ட ஹஜ்ரத்(?)களை, மவ்லவிகளை, லெப்பைகளை மிகக் கடுமையாகச் சாடி வருவதாக எம்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஏதோ சொந்தக் காரணங் கொண்டு அல்லது பொறாமையினால் அவர்களை நாம் வெறுப்பதாகப் பரவலாகப் பேசிக் கொள்கின்றனர். செய்திகள் பரப்பி வருகின்றனர். அல்லாஹ் பாதுகாப்பானாக. அவர்கள் மீது எமக்குச் சொந்த வெறுப்போ, பொறாமையோ அணுவத்தனையும் இல்லை. ஒரு காலத்தில் நாமும் மற்றவர்களைப் […]
நான் அவன் இல்லை… A.N. மேற்கண்ட தலைப்பு எங்கேயோ கேட்டதாகவோ, படித்ததாகவோ நினைவு இருக்கலாம். ஆம்! உண்மைதான். நம் கட்டுரையில் வரும் கதாநாயகன் படித்து, பட்டமும் வாங்கிவிட்டு மக்களை ஏமாற்றுவார். அந்த படத்தின் கதாநாயகன் பல பெண்களை காதலித்து ஏமாற்றியது உண்மையே. ஆயினும் நமது இந்திய சட்டத்தின் உள்ள ஓட்டைகளின் (குறைகளின்) காரணமாக சாதுரியமாக நீதிமன்றத்தின் (ணூPளீ) தண்டனை யிலிருந்து தப்பித்து விடுவார். ஆயினும், “நான் அவன் இல்லை‘ என்பார். அதுபோல் நம் கதாநாயகன் தப்பித்து விடுவாரா? […]
திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்… அபூ இஸ்ஸத், இலங்கை ஆகஸ்ட் தொடர்ச்சி…. ரோமானியர்கள் : கிழக்கு ரோமானியர்கள் பாரசீகர்களால்முதலில் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆனால் மீண்டும் வெற்றி பெற்றார்கள் என்பதாகும். (கிழக்கு) ரோமாபுரி வெற்றி கொள்ளப்பட்டது. அண்மையிலுள்ள பிரதேசத்தில் (வெற்றி கொள்ளப்பட்டது இருப்பினும்) அவர்கள் தாம் தோல்வி கண்ட பின்னர் விரைவில் வெற்றி பெறவுள்ளனர். (அதுவும்) சில ஆண்டுகளுக்குள்ளாகவே (அவர்கள் வெற்றி பெறவுள்ளனர் இதற்கு) முன்னரும் (இதன்) பின்னரும் (ஆட்சி) அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. (அவர்கள் வெல்லும்) அந்நாளில் […]