ஐயம் : ஒளூ செய்வதற்கு முன் பல் விளக்குவது நபிவழி. ஒளூ செய்து சுத்தம் செய்த பிறகு தொழுகையில் நிற்கும்பொழுது மீண்டும் மிஸ்வாக் செய்கிறார்கள் சிலர்; செய்துவிட்டு நஜீஸான குச்சியை தன் சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு தொழுகி றார்கள். இதற்கு ஆதாரம் உண்டா? னி.அபூ நபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : நடைமுறையிலுள்ள சிலருடைய பழக்கத்தைப் பற்றி கேட்டுள்ளீர்கள். தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் : அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் படுக்கச் செல்லும் முன்பும், படுக் […]
ஐயமும்! தெளிவும்!!
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இயக்கங்கள் கூடாது, தனிப்பள்ளிகள் கூடாது அது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயல் என்றால் தனிப் பெருநாளும் கூடாதல்லவா? அதில் கலந்து கொள்வதும் தவறல்லவா? அதுவும் சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலல்லவா? அதை எப்படி சரி காண்கிறீர்கள்? அபூ நபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : பெருநாள், பெருநாள் அல்லாத நாளில் கொண்டாடுவதை நாம் சரிகாணவில்லையே! பிரிவினர்களின் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதைப் பற்றி தங்களுக்கு ஐயம் இருப்பது போல் அடுத்த கேள்வியின் வாயிலாகத் தெரிகிறது. எனவே […]
ஐயம் : குளிப்பு கடமையான நிலையில் தண்ணீர் இருக்கும் போதே உடல்நிலை குறைவினால் அல்லது இயலாமையினால் தயம்மும் செய்யலாமா? அந்நஜாத் வாசகி. தெளிவு: குளிப்பு கடமையான நிலையில் உடல் நலக்குறைவு அல்லது இயலாமை போன்ற காரணங்களினால், மண் கொண்டு தயமம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் குர்ஆனில் 4:43, 5:6 வசனங்களில் தயமம் பற்றி விவரித்து உள்ளான். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது, நீங்கள் கூறுவது இன்னது என்று நீங்கள் அறிந்துகொள்ளும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள். அன்றியும், […]
ஐயம் : நாளின் ஆரம்பம் இரவா? பகலா? என்பதை விளங்கிக் கொள்வதற்கு கூட லைல் லயல் நஹார் யவ்ம் இவைகளை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும் மட்டுமல்ல அரபு இலக்கணம் அறிந்தாக வேண்டும் இந்நிலையில் பாமரர்களுக்கு குர்ஆன் விளங்கும் என்று அந்நஜாத் கூறுவதை ஏற்க கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. குர்ஆன் சுன்னாவிற்கு சுயவிளக்கம் புதுவிளக்கம் கொடுக்கிறார்கள் புரோகிதர்கள் என்கிறீர்கள் அவர்களின் மொழியாக்கம் இல்லாமல் குர்ஆனை விளங்க முடியாதே! என்ன சொல்கிறீர்கள்? M.அபூநபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : நாளின் ஆரம்பம் […]
ஐயம் : மூன்றாம் பாலினம் பற்றி இஸ்லாத்தின் பார்வை என்ன? அவர்களுக்கு பெற்றோர்களின் சொத்தில் பங்கு என்ன? அவர்களை இறந்தால் குளிப்பாட்டுவது யார்? S.M. நாசர், நாகர்கோவில் தெளிவு : மூன்றாம் பாலினம் கிடையாது. அவர்கள் ஆண்தான், அவர்களுக்கு ஆண் களுக்குரிய அனைத்து சொத்துரிமைச் சட்டங்களும் செல்லுபடியாகும். மேலும் அவர்கள் ஆண்களாக இருப்பதால் இறந்துவிட்டால், ஆண்களே குளிப்பாட்டுவதற்கு அனுமதி உண்டு. இஸ்லாம் இவர்களை ஆண்களாகத் தான் முடிவெடுக்கிறது. இவர்கள் எந்த விதத்திலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்கப்பட முடியாதவர்கள். […]
ஐயம் : நான் ‘T சர்ட் அணிந்து தொழுகிறேன். அவ்வாறு தொழலாமா? முழுக்கை சட்டை அல்லது ஜிப்பா அணிந்து தான் தொழ வேண்டுமா? R.முஹம்மது பாரூக், திருநெல்வேலி பேட்டை. தெளிவு : ‘ கீழ் ஆடையுடன் ‘T சர்ட் அல்லது, அரைக்கை சட்டை அல்லது முன்டா பனியன் அணிந்து தொழலாம். இவைகளுக்கு தடை ஏதும் இல்லை. ஜூப்பா அணிந்தும் தொழலாம். தடை ஏதும் இல்லை. ஒரே ஆடையுடனும் தொழலாம். தடை ஏதும் இல்லை. ஒரே ஆடையுடன் தொழலாம். […]
ஐயம் : இரவு நேரத்தில் துஆ கேட்டால் அல்லாஹ் கொடுப்பான் என்று சொல்கிறார் களே உண்மையா? சபூரா பேகம், தஞ்சை. தெளிவு : இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ நிறைவேற்றித் தரப்படும் என்று ஹதீஃதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஹதீஃதை பார்ப்போம். “”நிச்சயமாக இரவில் ஒரு நேரம் இருக் கிறது. அந்த நேரத்தை எந்த முஸ்லிமாவது அடைந்து, அதில் ஈருலக விஷயங்களிலும் எந்த நன்மையையாவது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பாராயின் அதனை அவன் அவருக்குக் கொடுத்து விடுகிறான். இதன் […]
ஐயம் : இறந்துபோன என் பெற்றோர் ஹஜ் போனதில்லை. இவர்களுக்காக நாங்கள் ஹஜ் செய்யலாமா? செய்வது கடமையா? விரும்பத் தக்கதா? வேறு நபர்களை அனுப்பி வைக் கலாமா? தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.ஐயம் : இறந்துபோன என் பெற்றோர் ஹஜ் போனதில்லை. இவர்களுக்காக நாங்கள் ஹஜ் செய்யலாமா? செய்வது கடமையா? விரும்பத் தக்கதா? வேறு நபர்களை அனுப்பி வைக் கலாமா? தயவு செய்து விளக்கம் அளிக்கவும். ஆத்தூர் சுல்தான்ஜி. தெளிவு : தங்கள் […]
ஐயம் : 55:29 வசனத்தில் “”வானங்களிலும் பூமியில் உள்ளோர் (அனைவரும் தங்களுக்கு வேண்டியதை) அவனிடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கிறான்” என்று அல்லாஹ் கூறுகிறான். உண்மையில் காபிர்கள் அல்லாஹ்வை இறைவனாக ஏற்கவில்லை; எப்படி அவர்கள் அல்லாஹ்விடம் கேட்பதாக கூற முடியும்? விளக்கமாக பதில் சொல்லவும். அஜ்மல், வாணியம்பாடி தெளிவு : இறைவேதத்தை தாங்கள் கவனமாக படிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. சிறந்த வினாவை கேட்டு இருக்கிறீர்கள். அல்லாஹ்வை இறைவனாக ஏற்காதவர்கள், அல்லாஹ்விடம் கேட்க மாட்டார்கள்; மாறாக, […]
ஐயம் : இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் செய்ய இருக்கிறேன். (என்னுடன் என் மனைவியும் வருகிறார்) ஊரில் உள்ளபோது என் குடும்பத்திற்கு ஒரு குர்பானிதான் கொடுப்பது வழக்கம்; நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படி தான். ஹஜ் காலத்தில் நானும் என் மனைவியும் தனி தனியே குர்பானி கொடுக்க வேண்டுமா? ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா? வாசகர், போன் மூலம். தெளிவு: ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவர்கள் கணவன் மனைவியாக இருந்தா லும் தனித்தனியாக […]
ஐயம் : “ஜின்” இனத்தைப் பற்றி விவரிப்பதோடு, இப்லீஸுக்கும் ஷைத்தானுக்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்க! (முஷ்தக் அஹ்மத், பம்பாய்) தெளிவு : மனிதரைப் போல் ஜின்னும் ஓர் இனத்த வராவார். இப்லீஸ் இந்த இனத்தவனாவான். ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று நாம் மலக்கு களிடத்தில் கூறியதை (நபியே!) நீர் நினைத்துப் பாரும்) இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸஜ்தா செய்தார்கள். அவனோ ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அதனால் தன் இறைவனுடையக் கட்டளைக்கு மாறு செய்து விட்டான். (18:50) […]
ஐயம் : நான் இலங்கை வங்கியில் கொஞ்சம்பணம் முதலீடு செய்துள்ளேன். எனது பணத்திற்கு ஒரு சிறிய தொகையை வருட முடிவில் சேர்க்கிறார்கள். அப்படி சேர்த்த பணம் எனக்கு ஹலாலாகுமா? அதனை நான் என்ன செய்வது? .நிஸார், ரியாத். தெளிவு: இன்றைய நிலையில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்திற்கு மேல் அதிகமாகப் பெறும் பணம் வட்டியே ஆகும். வட்டி எந்த நிலையிலும், எப்படி வந்தாலும் ஹராமாகும் என்பது ஹதீஃத்களின் சாரமாகும். (ஆதாரம் […]
ஐயம் : தமக்கு நோய் ஏதுவுமின்றி தமது சொந்த வேலைக்காகச் செல்லக்கூடிய ஒருவர் டாக்டரிடம் சென்று குறிப்பிட்ட சில தினங்கள் தமக்கு நோயிருந் ததாகவும் அந்த தினங்களுக்குப் பின்னர் தாம் வேலையில் சேருவதற்காக நோய குணமாகிவிட்ட தாகவும் சான்றிதழ் பெற்று வேலைக்குச் செல்கிறார் களே! இதுப் பொய்யாகாதா? தாம் வேலை செய்யும் நிறுவனத்தை ஏமாற்றுவதாகாதா? ஷைக் முஹ்யித்தீன், திருநெல்வேலி. தெளிவு : நிச்சயமாக இவ்வாறு செய்வது மாபெறும் பாவமாகிய பொய்யாக இருப்பதோடு, தாம் வேலை செய்யும் நிறுவனத்தாருக்குச் […]
ஐயம் : ஷைத்தானை கழுதைகள் பார்க்க முடியும் என ஹதீஃதில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறுகிறார். அப்படி இருந்தால் தயவு செய்து அந்த ஹதீஃதை தெரிவிக்கவும். முகமது அன்சாரீ, திருச்செந்தூர். தெளிவு : இரவில் நாய் குலைப்பதையும் கழுதை கத்துவதையும் செவியேற்றால், அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டுப் பாதுகாவல் தேடுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவை நீங்கள் பார்க்காததை (ஷைத்தானை)ப் பார்க்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபீர்(ரழி), நூல் : அபூதாவூது.
ஐயம் : பெண்கள் பர்தா அணிவதில் முகத்தை மூட வேண்டுமா? அல்குர்ஆன் அத்:33, வசனம்59ல் தமது முந்தானைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு கூறுவீராக என்று இருக்கிறது. விளக்கம் தேவை. யூ. மரியம் பீ, குண்டூர், திருச்சி. தெளிவு : உங்களின் இந்த ஐயத்திற்கு விளக்கமாக இந்த இதழில் இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் ஹதீஃத்கள் அனைத்தையும் நீங்கள் நேரடியாகப் படித்து விளங்கினால் உங்களின் ஐயம் தீர்ந்துவிடும்.
ஐயம் : புத்தாண்டு வாழ்த்துக் கூறலாமா? அன் பளிப்புகள், இனிப்புகள், உணவுகள் பரிமாறலாமா? M. அபூ நபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : முஸ்லிம்கள் ஹிஜ்ரி புத்தாண்டையே கொண்டாட அனுமதி இல்லை! முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு கொண்டாட்டத் தினங்கள் மட் டும்தான். ஒன்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டம். இரண்டாவது ஹஜ்ஜு பெருநாள் கொண் டாட்டம். இந்த இரண்டு கொண்டாட்டங்கள் அன்றி இதர கொண்டாட்டங்கள் அனைத்தும் பித்அத்-வழிகேடு நரகில்-கொண்டு சேர்க்கும். மீலாது கொண்டாட்டம் பித்அத்-வழிகேடு நரகில்-சேர்க்கும். நபி(ஸல்) அவர்களின் மீலாதைக் […]
ஐயம் : நபி(ஸல்) எந்த சந்தர்ப்பத்திலாவது எந்த ஒரு நபி தோழரையாவது சபித்ததுண்டா? றீ.னி.யஹ்யா, காரைக்கால் தெளிவு : (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக-அருட்கொடையாகவே யன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் : 21:107). இவ் இறை வசனத்தை நிரூபிக்கும் நபிமொழியையும் பாரீர் : அல்லாஹ்வின் இவ்வருள் வாக்குப்படி நபி (ஸல்) அருட்கொடையாக இருந்தார்களேயன்றி சபிப்பவராக இருந்ததில்லை. தமது நபித்தோழர் களில் எவரும் தவறு செய்துவிட்டால், அதனை பலர் அறிய, அல்லது தவறு செய்தவர் மனம் வருந்தும்படிக் […]
ஐயம் : சுப்ஹு தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும்போது, சுன்னத்து தொழலாமா? ஜைனுல் ஆபிதீன், இளங்காகுறிச்சி தெளிவு : அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) அறி வித்துள்ளார்கள். சுப்ஹு தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்பொழுது சுன்னத்துத் தொழுகை இரண்டு ரகாஅத்துகளைத் தொழ ஒருவர் ஆரம்பித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரது ஆடையைப் பிடித்திழுத்து, சுப்ஹு தொழு கையை நான்கு ரகாஅத்துகளாக்க நீர் கருதுகிறீரோ? என்று கேட்டார்கள். (அஹ்மத்) கைஸ் பின் உமர்(ரழி) கூறுகிறார்கள். நான் சுப்ஹு தொழச் சென்றேன். […]
ஐயம் : 60 வயதுப் பெண் தூரத்து உறவுக்கார ஆண் (அண்ணன் உறவு) உடன் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? M. ஜலாலுதீன், சென்னை. தெளிவு : செல்லக்கூடாது. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் கொண்டு ஈமான் கொண்ட பெண் அவளுக்கு மஹ்ரமான (திருமணம் முடிப்பதற்குத் தகுதியற்ற தகப்பன், உடன் பிறந்தவன்) துணையில் லாமல் ஓர் இரவு, ஒரு பகல் தூரம் பயணம் செய்வது ஹலால் ஆகாது. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி.
ஐயம் : இஸ்லாமி ஷரீஅத் சட்டப்படி முஸ்லிம்கள் வியாபாரத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து ஒரு பொருளை விற்கலாம்? பிஷ்ரூல் ஹாஃபி, சென்னை. தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை, நாணயம், உள்ள (நல்ல) வியாபாரி, நபிமார்கள், சிந்திக்கீன்கள் ஸாலிஹீன்களுடன் (மறுமையில்) இருப்பார். அபூ ஸயீத், இப்னு உமர்(ரழி) திர்மிதீ, தாரமீ, தாரகுத்னீ, இப்னு மாஜ்ஜா, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர்கள். (எவர் தமது வியாபாரத்தில்) இறையச்சம், பயபக்தி, பரோபகாரம், […]