தலையங்கம்

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), அல்லாஹ்வின் அருளால், தீனில் ஆர்வமுள்ள சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பைக் கொண்டு, அந்நஜாத் தன் பணியை உற்சாகத்துடன் செய்து வருகின்றது. மலை போல் வரும் இடுக்கண்கள், இச்சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பைக் கொண்டு பனிபோல் கரைந்து விடுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும். மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.

  நாட்டின் பெரும்பான்மையினர் விரும்பி தேர்ந்தெடுக்கும் ஆட்சியே என பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் ஆட்சியில் அமரும். எவரும்,மக்கள் சொல்வது போல் நாட்டின் பெருன்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. தேர்தலில் பெரும்பாலும் மக்கள் தொகையில் 50% க்கும் குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளும் பல வேட்பாளர்களைக் கொண்டு சிதறடிக்கப்படுகிறது. M.L.A., M.P., பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பெறும் வாக்குகள், அவரை எதிர்த்த மற்ற வேட்பாளர்கள் அனைவரின் வாக்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிகக் குறைவாகவே இருக்கும். இறுதியில் […]

     1960லிருந்து 1982வரை சுமார் 23வருடங்களாக நாமும் மற்ற முஸ்லிம்களைப் போல் ஆலிம்கள், அல்லமாக்கள், மவ்லானாக்கள், மவ்லவிகள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் இந்த இடைத்தரகர்களிடம் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கத்தான் செய்தோம். அவர்கள் சொல்லுவதுதான் மார்க்கம் என்று உறுதியாக நம்பித்தான் இருந்தோம். ஆனால் அல்லாஹ் அருள் புரிந்து அவனது இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனை பொருள் அறிந்து சுய சிந்தனையுடன் படிக்க ஆரம்பித்த பின்னரே பெரும் மனப்போராட்டத்திற்கு ஆளானோம்.

நம் தாய்த் திருநாடான இந்தியா இன்று ஜனநாயகம் என்ற பெயரால் கடைபிடித்து வரும் பணநாயக தேர்தல் நடைமுறை, நமது நாட்டை மிக மிக ஆபத்தான ஒரு நிலைக்குக் கொண்டு செல்கிறது. பாராளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் ஆரம்பித்த நாளிலிருந்து சபையில் என்ன நடக்கிறது என்பதை நம் நாடு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி! சமீபத்தில் நமது இந்திய நாட்டில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக் காக நமது நாடு 70 ஆயிரம் கோடி செலவிட்டதாக வும், அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகவும் ஊடகங்கள் செய்திகள் பரப்பி வருகின்றன. நடைபெற்ற ஊழல்களை விசாரித்துக் கண்டறிய சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன. பல நாடுகள் சம்பந்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் நடந்தேறியுள்ள இலஞ்சம், ஊழல், ஒழுங்கீனங்கள் அனைத்து நாடுகளின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி நமது நாட்டுக்குப் […]

தமிழகத்தைக் கண்ணீரற்றத் தமிழகமாகக் காண அவாவுறுவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஆசைப்படுவதாகவும், அதற்காகவே பாடுபடுவதாகவும் அறிவித்துள்ளார். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம். ஒரு முயற்சி வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்காகக் கடும் உழைப்பு, அதற்குரிய சரியான முறையான வழியில் அமைய வேண்டும். திருச்சியிலிருந்து சென்னை சென்று சாதிக்கப் போகிறேன் எனக் கூறும் ஒருவன் வடக்கே சென்னை செல்லும் தொடர் வண்டியில் ஏறாமல், தெற்கே நாகர் கோவில் செல்லும் தொடர் வண்டியில் ஏறி பிரயாணித்தால் அவன் தனது இலட்சிய […]

  இஸ்லாத்தில் இடையில் புகுந்து கொண்ட இடைத்தரகர்களான – புரோகிரதர்களான மவ்லவிகள் முன்னோர்களின் பெயரால் புகுத்தியுள்ள மூட நம்பிக்கைகள், அநாச்சாரங்கள் இவற்றில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் பெரும் முயற்சியில் விஷயம் தெரிந்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் அயராது பாடுபடுவது நீங்காத கடமையாக இருக்கிறது.

  21-ம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், உலகளாவிய அளவில் முஸ்லிம்களுடைய நிலை கவலை தரத்தக்கதாக இருக்கிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவதும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதும் தினசரி நிகழ்ச்சியாக இருப்பது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொண்டு இரத்தம் சிந்திக் கொண்டிருப்பதும் அன்றாடம் செய்தித்தாள்கள் மூலம் அறியும் அவலங்களாகும்.

   இஸ்லாத்தில் இடையில் புகுந்து கொண்ட இடைத்தரகர்களான – புரோகிதர்களான மவ்லவிகள் முன்னோர்களின் பெயரால் புகுத்தியுள்ள  மூட நம்பிக்கைகள், அனாச்சாரங்கள் இவற்றில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் பெரும் முயற்சியில் விஷயம் தெரிந்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் அயராது பாடுபடுவது நீங்காத கடமையாக இருக்கிறது.

உலகின் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஜனநாயக ஆட்சி முறை என்றால் மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பப்படி ஆட்சி நடத்துவதாகும். மக்களில் பெரும்பான்மையினர் கல்வியறிவற்றவர்களாகவும், மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு வாழ்பவர்களாகவும், எளிதில் ஏமாறுகிறவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இல்லை என்றால் தங்களின் விலை மதிப்பற்ற பொன்னான வாக்குகளை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் இழக்க முன் வருவார்களா?

மீண்டும் வெள்ளையனுக்கு அடிமையாகும் இந்தியா! நீண்ட காலமாக நமது இந்திய நாட்டை ஹிந்து, முஸ்லிம் மன்னர்கள் ஆண்டு வந்ததாக வரலாறு. வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் இந்தியா வந்த வெள்ளையன் இங்குள்ள கனிம வளங்கள், நீராதாரம், மனிதவளம் இவை அனைத்தையும் பார்த்துப் பொறாமைப்பட்டு, இந்தியாவை தனது அடிமை நாடாக்கத் திட்ட மிட்டான். சூழ்ச்சி செய்தான். அவனது சூழ்ச்சிக்கு மேல் ஜாதியினரில் பலர் இரையாகினர். இந்திய ஆட்சியாளர்களைக் காட்டிக் கொடுத்து இந்தியாவை வெள்ளையருக்கு அடிமைப் படுத்தினர். அவனிடம் கையூட்டுப் பெற்றனர்.

10 அறிஞர்கள்+11 மூடர்கள்   =21 மூடர்கள்    =ஜனநாயகம்!

இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளின் முஸ்லிம்கள் அங்கத்தினர்களாக இருக்கலாமா? [PDF]

  மாண்புமிகு முதல்வரின் முக்கிய கவனத்திற்கு!

கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்! ஒரு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதாகியுள்ளார். இதற்கு முன்னரும் ஒரு முறை பிடி பட்டுள்ளார். அந்த ஆத்திரத்தில் என்னையே விரட்டி விரட்டி பிடிக்கிறீர்களே! இன்னும் என்னைவிட பிரபலமான வசதியான நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்களே! அவர்களைக் கைது செய்வதில்லையே என படபடத்து அவர்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

சாடல் போக்கு தேவையா? அந்நஜாத் அழகிய, நளினமான உபதேசங்களை விட்டு, குற்றம் குறைகளை நாசுக்காக எடுத்துக் காட்டுவதை விட்டு சாடல் போக்கைக் கடைபிடிக்கிறது. இதனால் வாசகர்கள் முகம் சுளிக்கிறார்கள். காணும் சகோதரர்கள் எல்லாம் இதையே குறையாகச் சொல்லுகிறார்கள். இந்த சாடல் போக்கு மட்டுமில்லை என்றால் அதிகமான மக்கள் அந்நஜாத்தைப் படிப்பார்கள். அந்நஜாத் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சிந்தனைத்திறன் மிக்கவர்கள் பலர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

Visit link: வீடியோ – Video ஏழை எளியர்வர்களின் பங்கு ஜகாத் பரிட்சை வாழ்க்கை படைத்தவனை மறந்துவிட்ட சமுதாயம் மாமனிதரின் ஆன்மீக வாழ்க்கை ஒன்றுபட்ட சமுதாயம் தவ்ஹீத் பிரிவுகள் கூடுமா? குர்ஆன் புரோகிதரர்களுக்கு அல்ல இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புரோகிதம் வழிகேட்டை போதிப்போர் யார்? தலைப்பிறை விளக்கம்